Saturday, December 14, 2019

உண்மைப் பாரதியார் - பாவேந்தர்

உண்மைப் பாரதியார் - பாவேந்தர்


சென்னை பச்சையப்பன் கல்லூரியில்கல்லூரி மண்டபத்தில் 6.9.49 மாலை 5 மணிக்குப் ‘பாரதி விழா’ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்அவர்கள் தலைமை உரையில் ‘என்னை பாரதி விழாவிற்கு தலைமை தாங்க அழைத்ததற்காக உங்கட்குப் பெரிதும் நன்றி செலுத்துகிறேன்என்னை யாரும் பாரதி பற்றிப் பேச அழைப்பதில்லை. ‘பாரதி’, ‘பாரதி’ என்று கும்மாளமடிக்கும் கூட்டம் என்னைக் கூப்பிடுவதில்லை ஏன்நான் வந்தால் உண்மைப் பாரதியாரைப் பற்றிக் கூறிவிடுவேன்அவர்கள் காட்டிவரும்பேசிவரும் வர்ணம் தீட்டப்பட்ட பாரதியார் மறைவார் என்ற பயம்தான்நான் பாரதியாரைப் பற்றிச் சொல்கிறேன்


‘1906 இல் தான் பாரதியார் புதுச்சேரிக்கு வந்தார்இன்னும் .வெ.சு அய்யர்திருவல்லிக்கேணி சீனிவாசாச்சாரியார்அரவிந்த கோ முதலியோரும் வந்தனர்இவர்களுக்கெல்லாம் `சுதேசிகள்’ என்று பாண்டியில் பெயர்அரவிந்தர்-.வெ.சுஅய்யர் முதலியோர் ஒரு குழுபாரதி-நான் முதலியோர் ஒரு குழுசீனிவாசாச்சாரியார் எதிலும் இருப்பார்மூன்று குழுக்களும் வெவ்வேறாக இருந்தனஅரவிந்தர் முதலியோர்-தமிழ் என்று ஒரு மொழி இருப்பதையோஅதைப் பற்றி நினைப்பதையோஅறியாதவர்.வெ.சுஅய்யர் வர்ணாஸ்ரமம் உண்டு என்றால் தமிழைப் போற்றத் தயார்பாரதியார் தமிழிலே வாழ்ந்தார்அன்றைய நிலை அப்படி  பாரதியார் பார்ப்பனராக இருந்தாலும் தமிழைப்போற்றினார்.


பாரதியார் முதலில் பாட ஆரம்பித்தது காவடிச்சிந்துதான்புரியும்படி காவடிச்சிந்து அமைவதே காரணம்அரவிந்தர் ஆங்கிலத்தில் ‘ASIA’ பத்திரிகையை ஆரம்பித்தார்ஆனால் பாரதியோ தமிழில் ‘இந்தியா’ பத்திரிக்கையை ஆரம்பித்தார்தமிழை பாரதி இப்படிப் போற்றினார்அங்கே-அரவிந்தர் குழுவிலே என்ன சங்கதி BENGALI /வங்காளம் சிறந்த மொழி அடுத்தாற்போல்தெரிவது ஆங்கிலம்தான்ஆங்கிலப் புத்தகத்தைப் பாஷனாக வெளியே தெரியும்படி வைத்துக் கொண்டு உலாவுவார்கள்நான் பாரதியிடம் என்ன கண்டேன்அவர் வாழ்க்கை எப்படிஎன்பவற்றைப் பின்னுரையில் கூறுகிறேன்’.


பாரதிதாசன் பின்னுரையில் பேசியதாவது:


நண்பர் ராஜமாணிக்கம் அவர்கள் என்னைப் பாரதியாரைப் பற்றி ‘நான் கண்ட பாரதி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதும்படி கேட்டார்இதேபோல் முன்பே ‘தினசரி’ ஆசிரியர் சொக்கலிங்கமும் கேட்டார்நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்அது ஆயிரம் பக்கங்கள் வரும்இன்று பாரதி பாட்டைப் புகழ்பவர்கள்உண்மைப் பாரதியை மறைத்துவிட்டதாக நினைத்து மனப்பால் குடிக்கிறார்கள்ஆனால் அவர்களையும் தப்பி, ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ முதலிய பாடல்கள் வந்துவிட்டன பதிப்பில். ஜாதியே இல்லை என்ற பிறகு இவர்கள்ஏன் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார் மட்டும்அதிலும் குறிப்பிட்ட ஒரு சில மடையர்கள்ஏனோ இப்படிப்பட்ட வீண்வேலைகளிலீடுபடுகிறார்கள்பாரதியார் தமிழ்ப் பற்றுடையவர் தமிழுக்கு உயிர் உண்டாக்கி னார் எல்லோருக்கும் புரியும்படி எழுதினார்பாடினார்அதற்குப் பிறகுதான் அரவிந்தகோஷஷக்கு ‘தமிழ்’ என்று ஒன்று இருப்பதாகப் புரிந்தது.


.ரா முதலானோர் தமிழ்ப் புத்தகங்களை தேடிபிடித்தனர்பாரதியாருடைய முக்கியக் கொள்கை, ‘சாதி ஒழிப்பு’ அதுதான் அவரிட மிருந்த சிறந்த கொள்கைகுறிப்பிட்டுப் பேச வேண்டியக் கொள்கை. ‘சூத்திரனுக்கு ஒரு நீதிதண்டச் சோற்றுப் பார்ப்புக்கு ஒரு நீதி’ என்றுஇது எங்கேஅவர் புத்தகத்தில் இல்லை என்னிடம் இருக்கிறதுமறைத்து விட்டனர் சுயநலம் கருதி.


பாரதியார் செத்ததற்கே இதுதானே காரணம்அவர் பழிவாங்கப் பட்டார் என்று தான் நான் கருதுகிறேன்இப்போது ஜாதி சேபங்கட்டி இருக்கிறதுசீக்கிரம் இறந்து படும்சந்தேகமில்லைபாரதியார்/பார்ப்பனர்தெரிந்து சொன்னார், ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்றுதமிழில்நல்லஎளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படி இதைச் சொன்னார்எனக்கு மிகவும் பிடித்திருந்ததுசந்தோம் கூட.

 நான் அப்போது பாண்டிச்சேரியில் வாத்தியார் வேலையில் இருந்தேன்அப்போதே சில பத்திரிக்கைகளில் கட்டுரைகளும் பாட்டுக்களும் எழுதியனுப்புவது வழக்கம்அப்போது நான் உத்தியோகத்திலிருந்து கொண்டு இக்காரியம் செய்வது உத்தியோகத்திற்குத் தொல்லை தரும்யாராவது செய்வார்கள் என்று கருதி நான் ஒரு புனைபெயர் வைத்துக் கொள்ள விரும்பினேன்அப்போது என் கண்முன்னேசூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோற்றுப் பார்ப்புக்கு ஒரு நீதி என்று கேட்ட பாரதியார்-பார்ப்பானா யிருந்தும்பயப்படாதுதீமை வரும் என்று தெரிந்திருந்தும் திகைக்காதுதமிழில்புரியும்படி சொல்லிய பாரதியார்தான்நின்றார்.

உடனே ‘பாரதிதாசன்’ என்று புனைபெயர் வைத்துக் கொண்டேன்நான் அவனுக்குஅந்தப் புண்ணியவானுக்குதன் குலத்தார் எதிர்ப்பையும் பொருட்படுத்தாத புண்ணியவான் பாரதிக்குத்தாசனாக இருப்பதில் ஒன்றும் தவறில்லைஎன்று கருதுகிறேன்பலர் பாரதியார் மிகவும் அவஸ்தைப்பட்டார் -என்றெல்லாம் கூறுகிறார்கள்வருத்தப்படுகிறார்கள்பெரிய பிரச்சாரம் வேறு நடக்கிறதுநான் சொல்கிறேன் பாரதியார் கொஞ்சம் கூட ஷ்டப்படவில்லைஅவர் புதுவை யில் 13 வருடங்கள் இருந்தார்அவரோடு நானும் கூடவே இருந்தேன்தெரியாதவர்கள் கூறும் சங்கதிதான் அதுஅவர் ஷ்டப்படவில்லைஅவர் சுருட்டுப் பிடிக்கும் பழக்கமுடையவர்பாண்டிச்சேரியில்சுருட்டிய சுருட்டு (இங்குப் போல்விற்கமாட்டார்கள்புகையிலையாக வாங்கி அதை சுருட்டாகச் சுருட்டித்தான் பிடிக்க வேண்டும்இப்படிச் சுருட்டுப் பிடிக்க பாரதியாருக்குத் தெரியாதுஆனால் அவர் பாண்டியை விட்டு வெளிவரும்வரை அவர் முன் சுருட்டி வைப்பார் பக்கத்திலுருப்ப வர்அவ்வளவு சவுகரியம் இருந்தது, அவருக்கு அங்கே

அது மட்டுமா அவர் ஈஸ்வரன் கோயில் தெருவில் குடியிருந்தார்அப்போது அவர் மகளுக்கு காய்ச்சல் வந்ததுடாக்டர் அம்பு வந்தார்விஷக்காய்ச்சல் என்று கூறினார்அவர்கள் வீட்டில் ஒரு கேணி இருந்ததுஅதில் சூரிய ஒளி படரவில்லை என்றார்வேறு வீடு வேண்டும் என்ன செய்வதுஎன்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்சுமார் 1 1/2 மணி நேரத்திற் குள்ளாகவேஅவர் வீட்டிற்கு எதிர்த்த வீடுகுடியிருந்தவர்கள் காலி செய்யப்பட்டுபாரதியார் குடும்பத்தோடு குடியேறினார்எப்படி முடிந்ததுயார் வீடு அது தெரியுமா?அது பெத்தாச்சி செட்டியார் வீடுஅவருக்குப் பாரதியார் அளித்த பெயர் விளக்கெண்ணெய் செட்டியார் என்பதுஅதில் குடியிருந்தவர் ஒரு C.I.D. அவர்களைக் காலி செய்து பாரதியாரைக் குடியேற்றினோம்யார்நானும் என் போன்ற தோழர்களும்எப்படிஎங்களுக்கு இருந்த எண்ணமெல்லாம் பாரதி வருத்தப்படக்ககூடாதுஅவர் மகளுக்கு காய்ச்சல்கேணி நல்லதல்ல வீடு மாற வேண்டும்உடனே சென்றோம் காலி செய்ய சொன்னோம்பயந்தே காலி செய்தனர்இப்படியும் இருக்குமாநடக்குமாஎன்று திகைக்கலாம்நம்ப வேண்டிய சேதி ஏன்நான் சொல்லுகிறேன் என்பதால்அவருடைய சாப்பாட்டிற்கோ குடும்ப சவுகரியத்துக்கோ ஒன்றும் குறைவில்லைஷ்டமும் இல்லைகஷ்டப்பட்டார் என்று சொல்வது வெறும் பொய்

பின் எப்படி இந்த வதந்தி ‘பாரதி கஷ்டப்பட்டார்’ என்று பரவிற்றுசொல்கிறேன் கேளுங்கள்வைரத்தோடு இல்லை அதுதான் கஷ்டம்எதைக் கொண்டு பாரதியார் கஷ்டப்பட்டார் என்று சொல்லுகிறார்கள்அவருக்கு சோறில்லையாஇருந்ததுவசதியாக

பாண்டியிலே அப்போது இருந்த சீனிவாசாச்சாரியார் வீட்டுப் பெண்கள் எல்லாம் வைர நகைகள் அணிந்து விளங்கினார்.வெ.சுஅய்யர் வீட்டிலும் அவ்வாறேஆனால் பாரதியார் கால வீட்டிலோ சிகப்புக்கல் தோடு தான்அதுவும் அப்பாஜி காலத்ததுஇதுதான் நிலைஅவர் வீட்டில் சதா ‘அவர் வீட்டில் அந்த நகை இருக்கு இவர் வீட்டில் இப்படிஇந்த நகைநம்ம வீட்டில் என்ன இருக்கு’ என்று தொல்லைப் படுத்துவார்கள் என்று பாரதியார் அடிக்கடி கூறி வருத்தப்படுவார்அவர் வீட்டில் வாழவழி இருந்ததுஆனால் வைரத்தோடு தான் இல்லைஉண்மை சாப்பிடக் கஷ்டம் இல்லைசரியான நகைகள் இல்லைஇது வறுமையாகஷ்டமாநகையில்லாத குறைதான்டாம்பீகம் வேண்டுமாபல முறை அவர் குடும்பத்தார் பிறந்த வீட்டிற்குச் செல்வர் அப்போதெல்லாம் கூட அவருக்கு ஒரு குறைவுமின்றித்தான் எல்லாம் நடந்ததுவறுமை கஷ்டம் என்று கூறுவது சுத்தப்பொய்.


பாண்டியிலே பாரதியார் பலரும் பார்க்க வேண்டும் என்றே கடைவீதி நடுவே முஸ்லிம் கடையில் நேநீர் வாங்கி அருந்துவார்அவர் ஒரு சமயம் என்ன சுப்புரத்தினம்என் பெண்பேறு ஒரு தாழ்ந்த சாதியானோடு ரங்கூனுக்கு ஓடிப்போய்அங்கிருந்து எனக்கு ‘அப்பா நான் இன்னாரோடு இங்கு சுகமேஇருக்கிறேன்அவரைத்தான் நான் விரும்புகிறேன்மணம் செய்துக் கொள்ளப்போகிறேன் என்று எழுத வேண்டும் அதைக் கேட்டு நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்றார்.


அவர் இங்கு வந்ததும் அவருக்கும் பூர்ணாதிலேகியம் நிறையக் கொடுத்தனர். Opium என்னும் அபினியை அளவு மீறிக் கொடுத்தனர்செத்தார்சீர்திருத்தக் கருத்துக்களுக்காகவே அவர் பழி வாங்கப் பட்டார் என்றே கூறுகிறேன்இன்று அவரைப் போற்றுபவர் அன்று அவரைத் தூற்றினர். ‘கல்கி’ கிரூணமூர்த்தி ‘ஆனந்த விகடனில்’ ஆபாசம்ஆபாசம் என்று இவர் பாடலைக் கிண்டல் செய்தார்பெண்கள் மார்பகத்தைக் குறிக்கும் பொதுப்பெயரைக் கவிதையில் எழுதியதற்காக ‘மகா மோசம்’ என்று எழுதினார்இன்று புகழ்கிறார் என்றால் அது அவர்கள் வழக்கம்வாடிக்கை. ‘கல்கி’ ஆனந்த விகடனில் அவரை ‘மட்டகவி’ என்று எழுதியரைக் கண்டித்து நான் ‘கவிதா மண்டலத்தில்’ பாரதி உலகக் கவிதானப்பாஎன்று தீட்டினேன்அது எனது ‘கவிதைகள் 2 ம் பகுதியில்’ இக்குறிப்போடு வெளியிடப்பட்டிருக்கிறதுகண்டு கொள்க.


அவர் எழுதிய நூல்களை வெளியிட ‘திருப்புகழ் மணி’ யைக் கேட்டாராம்முடியாது என்றாராம். ‘புரட்சி தேவை’ என வெளியேறினேன் என்று கூறியிருக்கிறார்சுதேசமித்திரனில் பாரதியை ‘ஒழுக்க ஈனன்பூணூல் போடுவது இல்லைசுருட்டுப் பிடிப்பவன்ஆசாரமற்றவன் என்றெல்லாம் கண்டித்துக் கட்டுரைகள் வந்தன.  பாரதி சொல்வார் பூணூல்தான் ஆசாரமாஉச்சிக் குடுமிநான்கைந்து மயிர்கள்தான் ஒழுக்கத்திற்கு அறிகுறியாஇல்லை என்றுஅவர் சாதி ஒழிப்புக் கொள்கை தலை சிறந்ததுகுறிப்பிட்ட எவரும் கூறாத நேரத்தில் தைரியமாகஎளிய தமிழில் சொன்னார் அதை பின்பற்றுவோமாக’ என்று பேசினார்

(`இளந்தமிழன்’ மே 1998 இதழிலிருந்து). (இதழ்க் குறிப்புஏடு/ 8)


No comments:

Post a Comment