Friday, July 15, 2016

சர் தியாகராயரின் மறையயாட்டி அப்பொழுது இந்து நாளேடு வெளியிட்ட செய்தியில் ஒரு பகுதி...

சர் தியாகராயரின் மறையயாட்டி அப்பொழுது இந்து நாளேடு வெளியிட்ட செய்தியில் ஒரு பகுதி...

ஒப்பற்றத் தலைவர்

பேச்சு ஒன்றில் தியாகராயர் குறிப்பிட்டார், இந்த இயக்கத்தைத் தோற்றுவித்ததன் நோக்கம், பிராமணர்கள் மீது வெறுப்பைக் காட்டுவதற்கன்று; பிராமணர் அல்லாதவர்களை உயர்த்துவதற்குத் தான். எங்களுக்கும் பிராமணர்களுக்கு மிடையே எந்த வேறுபாடம் இல்லை. பிராமணர்களுக்கு எதிராக எந்த புகாரும் எங்களுக்கில்லை. அவர்கள் எப்போதும் எங்கள் நண்பர்கள். ஆனால், எங்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதிச் சமுதாயத்தில் கீழே மிதித்து அழிக்கும் ஆதிக்க பிராமணர்களுக்கு எதிராகத்தான் எங்கள் போராட்டம்.
உண்மையான குடிமகனாக சீரிய தொண்டராக வீரமுடன் போரிட்டுக் கொள்கையை நிலைநாட்டும் தீரராகக் கடந்த 40 ஆண்டுகளாகச் சென்னை நகருக்கும் இந்த நாட்டுக்கும் தொடர்ந்து பணியாற்றியவரின் மறைவிற்கு இம் மாகாண மக்கள் இரங்கலை தெரிவிக்கின்றனர்.
திரு.பி.தியாகராய செட்டியார் உறுதியான கொள்கைப் பற்றும் பழக்க வழக்கங்களும் கொண்டவர். அவரது எண்ணங்களை மறைத்துப் பசப்பாமல் தெளிவுடனும் திடமுடனும் உரைத்திடும் திண்மைப் பெற்றவர். நீண்டகாலம் அவர் சமயப் பற்று மிக்க இந்துவாக இருந்தார்.
ஆனால், பிராமணர் அல்லாதவர் நலம் காக்கும் இயக்கம் தொடங்கிய பின்னர், பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்து பிராமணர் அல்லாதாரை விடுவிப்பதென்றும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பிராமணர் அல்லாதார் நலம் காக்கும் இயக்கம் ஒப்பற்ற உறுதி படைத்த தலைவரை இழந்து விட்டது. அந்த இழப்பை நிரப்ப முடியாது. பொதுமக்கள், உண்மையான நாணயம் மிக்க குடிமகனை இழந்துவிட்டனர். (1925 இந்து நாளேட்டிலிருந்து) (இளந்தமிழன், ஏப்ரல் 2010).

No comments:

Post a Comment