Saturday, December 14, 2019

பெரியார் தலித் மக்களுக்குச் செய்ததென்ன? - இரவிக்குமார்



இரவிக்குமார்

தமிழ் அறிவுத்துறையினர்பெரியாரின் பங்களிப்பைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதையும் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவரது கொள்கைகளை உள்ளீடற்ற வெற்று வார்த்தைகளாககி மிதக்க விட்டுவிட்டதையும் இதற்கான முக்கய காரணங்களென்று கூறலாம்இந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய சமூக அக்கறையுள்ள அறிவு ஜீவிகள் இருவிதமான செயல்பாடுகளை உடனடியாக மேற்கொண்டாக வேண்டும்ஒன்று தமக்குக் கிடைத்துள்ள நவீன சிந்தனைகளின் பின்னணியில் வைத்து பெரியாரின் சிந்தனைகள் மறுவாசிப்பு செய்தல்மற்றது பெரியாரின் மாற்று அரசியல் எதிர் அரசியல் சிந்தனைகளைத் தொகுத்து அதை இன்று வெகுமக்கள் அரசியல் தளத்தில் செயல்படுபவர் கள் புறக்கணிக்க முடியாத அளவில் முன்வைப்பதுஇவை இரண்டும் வேறுவேறான நடவடிக்கைகளல்லஒன்றில் ஒன்று கலந்திருப்பவை.

பெரியார் தலித் ஆதரவாளரில்லையென்கிற கருத்தை தமிழ் நாட்டி லுள்ள தலித் தலைவர்கள் சிலரும் எதிரொலித்துள்ளனர்.

தமிழ் நாட்டில் சாதிக் கலவரங்களில் தலித் மக்கள் கொல்லப்பட்ட போது கலவரப்பகுதிகைளைப் பார்வையிடவோ அதைக் கண்டித்துப் போராடவோ பெரியார் முன்வரவில்லை என்று பா. பொதுச் செயல்ர் தலித் எழில்மலை குற்றம் சாட்டியுள்ளார்
பெரியாரை தலித் மக்களுக்காகப் போராடியவர் என்று கூறுவது அவரது வழி வந்தவர் களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் எங்களுக்கு உதவியாக இருக்காது’ என்று இன்னொரு தலித் தலைவரான சேப்பன் கூறியுள்ளார்.

தலித் பிரச்சனை என்பது அடிப்படையில் சாதிப்பிரச்சனையாகும்சாதி யமைப்பை முற்றாக ஒழிக்காமல் தலித்துகளின் பிரச்சனை தீராதுஇதனைத் தெளிவாக உணர்ந்திருந்த அம்பேத்கர் இதானல்தான் வர்ணாசிரமக் கோட்பாட்டைக் கைவிடாமல் காந்தி முன் வைத்த தீண்டாமை ஒழிப்புத் திட்டத்தை எதிர்த்தார்சாதியின் இயக்கம் இருப்பு சாதியை ஒழிப்பதற்கான செயல் திட்டங்கள் எல்லாவற்றிலும் அம்பேத் கருடன் முழுமையாக உடன்பட்டவர் பெரியார்இந்து மதத்தின் இருப்பை சாதியின் இருப்புக்கான ஆதாரமாகக் கண்டதிலும்இந்த மதத்தின் இயக்கம் அதன் குறியீட்டு செயல்பாடுகளில் தங்கியுள்ளது என உணர்ந்த திலும் மனுதர்மத்தை எதிர்த்ததிலும் பெரியாரும் அம்பேத்கரும் ஒன்று பட்டே நிற்கின்றனர்இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என உறுதி பூண்டதிலும் கூட அவர்கள் ஒன்றுபட்டே இருந்தனர்.

அம்பேத்கரின் பெயர் தென்னகத்தில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அறிமுகமாகவும் அவரது படைப்புகள் தமிழில் வெளிவரவும் பெரியாரே காரணமாக இருந்தார்சாதி ஒழிப்புக்கான நடவடிக்கை களில் அம்பேத்கரை விடவும் தீவிரமாக ஈடுபட்டவர் பெரியார் என்று கூட கூறலாம்கடவுள் சிலைகள் இராமாயணம் முதலியவற்றை எதிர்த்து அவர் மேற்கொண்ட நடைமுறைகள் வேறு எங்கும் இலலாத அளவுக்குத் தனித்தன்மை கொண்டவையாகும்.
எப்போதுமே அம்பேத்கர் குறித்து உயர்ந்த மதிப்பீட்டைக் கொண்டி ருந்தவர் பெரியார்அம்பேத்கர் மறைவின் போது பெரியார் எழுதிய இரங்கல் செய்தி ஒன்றே போதும் இதற்குச் சான்று கூறதனது தாயின் மறைவை மனைவியின் மறைவைப் பற்றற்ற நிலையில் நின்று அணுகி யவர் அவர்அளவிட முடியா அன்பு கொண்டிருந்த பனகல் அரசர் மறைந்தபோதும் கூட இதுவும் ஒரு நன்மைக்காக என்பது போல் கருதி நடந்துகொள்ள ஆலோசனை சொன்ன பெரியார்அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன் என்கிறார்அவரது மரணம் பிறரால் நேர்ந்திருக்கலா மென்று கூட சந்தேகிக்கிறார்.

பெரியார் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமே குரல் கொடுத்தா ரெனக் கூறுவதும் சரியானதல்லசூத்திரர்கள் என்ற பிரிவு களுக்குள்தான் அவர் தீண்டாப்படாத சாதிகளையும் சேர்க்கிறார்சூத்திரன் என்ற இழிவு நீங்க வேண்டுமென்றால் சாதி அமைப்பு ஒழிய வேண்டும்சாதி அமைப்பு ஒழிய மதத்தைக் கைவிட வேண்டும் என்பது பெரியாரின் கருத்து.
சாதி ஒழிப்பு வேலை என்பது எளிதானதல்ல.  அது செங்குத்தான மலை மீது தலை கீழாக ஏறுவது போன்றது’ அதிலும் ‘தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களுக்கு மற்றவர்கள் இழைத்துவரும் கொடுமையிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்பது ஒரு புரட்சி வேலையே ஆகும் ‘ என்று உணர்ந்திருந்தார் அவர்தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டி ருக்கின்றது’ அதை அடியோடு இடித்துத்தள்ள வேண்டும் என்று பாடுபட்டவர் அவர்.

சட்டத்தால் சாதியை ஒழிக்க முடியாதுஉங்கள் மதம் போகாமல் ஒருநாளும் உங்களது தீண்டாமைத் தன்மை ஒழியவே ஒழியாது என்பது கல்லுப் போன்ற உறுதி’ என்று அவர் குறிப்பிட்டார். ‘சாதியை ஒழிக்க விரும்புவோர் மேப்பிரசங்கம் மட்டும் செய்தால் போததுகலப்பு மணத்தைத் தவிர வேறு சுய சாதி மணம் செய்யவே கூடாது’ என்று வற்புறுத்திய பெரியார் தனது வாழ்நாளை சாதி ஒழிப்பு பற்றி பிரச்சாரத்திற் கென்றே அர்ப்பணித்தார்.

சாதிக் கலவரங்கள் நடந்தால் அந்த இடங்களுக்குச் சென்று ஆறுதல் கூறுவதைக் காட்டிலும் சாதி அமைப்பை முழுதாகத் தகர்த்தெறியும் வழிகளைக் கூறுகூதே அவருக்கு முக்கியம்.
என்ற போதிலும் கூட முதுகுளத்தூர் கலவரத்தைத் தொடர்ந்து முத்துராமலிங்கத்தேவர் கைது செய்யப்பட்டபோது அதை ஆதரித்து அறிக்கை விட்ட ஒரே தலைவர் பெரியார் மட்டுந்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்மற்ற சாதியினரது போராட்டத்துக்கும் தலித் மக்களுடைய போராட்டத்துக்குமிடையிலான வேறுபாட்டையும் பெரியார் உணர்ந்திருந்தார்.

மற்ற வகுப்பாருடைய அரசியல் கிளர்ச்சிகளில் நீங்கள் பட்டுக் கொள்ளாதீர்கள்அதெல்லாம் பணக்காரனும் மேல்சாதிக்கரானும் படித்த கூட்டமும் இன்னமும் அதிகமாய் ஆதிக்கம் செலுத்தவே பாடு படும் கிளர்ச்சியாகும்உங்களுக்கு அந்த மூன்றும் இல்லைநீங்கள் சம பதவியடைந்து பின்னால் வேண்டுமானால் கிளர்ச்சி செய்து மேல் பதவிக்கு வர முயலுங்கள்’ என்று தலித் மக்களிடம் அவர் சொன்னார்

 சாதியை ஒழிக்க அதனால் பாதிக்கப்பட்ட சாதிகளின் ஒற்றுமையின் தேவையை அவர் வற்புறுத்தி வந்த போதிலும் தலித்துகளின் பிரத்யேக மான பிரச்சினையும் புறந்தள்ளிவிடவில்லை.

(ஏடு/19)


No comments:

Post a Comment