Saturday, December 14, 2019

தமிழிசை விழா – பேரறிஞர் அண்ணா



தமிழ் வளர்ச்சிதமிழர் முன்னேற்றம் என்ற சொற்களைக் கேட்டால் போதும்உடனே ஒரு கூட்டத்தார் மற்ற மொழிகளுக்குக் கேடுமற்ற வகுப்பினருக்குத் தீங்கு என்று நினைத்துக் கொள்கிறார்கள்அதனால் உடனே இவைகளுக்கு எதிர்ப்பு வேலை செய்யத் தொடங்கி விடுகிறார் கள்அவர்களுடைய விபரீத உணர்ச்சி காரணமாகவே மொழிச் சண்டைவகுப்புச் சண்டை நமது நாட்டில் வலுத்து வருகின்றன

சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மகா நாடு நடைபெற்றதுதமிழ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற இசைவாணர் கள்இசைக்கலை அன்பர்கள்,தமிழன்பர்கள் அனைவரும் அங்கு கூடினர்

நான்கு நாட்கள் தமிழிசைச் கச்சேரிகள் நடத்தினர்தமிழிசையைப் பற்றிப் பலர் பேசினர்அம்மகாநாட்டில் ஒரு சிறந்த முடிவும் செய்யப்பட்டதுசங்கீதப் பள்ளிக்கூடங்களில் தமிழ்ப் பாட்டுக்களையே சொல்லிக் கொடுக்க வேண்டும்சபைகளில் தமிழ்ப்பாட்டுக் களையே பாட வேண்டும் என்று அம்மகாநாட்டினர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வைத்தனர்

தமிழில் இசைப் பாடல்கள் இயற்றியதற்குப் பரிசளிப்பதற்காகவும் செட்டிநாட்டு அரசர் அவர்கள் பெருந் தொகையை நன்கொடையாக அளித்துள்ளார்இச்சிறந்த வேலையைத் தனது செல்லப்பிள்ளையாகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மூலமே செய்வதற்கு முன்வந்தார்தமிழ் மொழியே இயற்றமிழ்இசைத் தமிழ்நாடகத்தமிழ் என்று முப்பிரிவையுடையதுஇவற்றுள் இசை யென்பது இயற்றமிழிலும் உண்டுநாடகத்தமிழிலும் உண்டுதமிழே இசையுருவாக அமைந்ததுஇசையே தமிழில்தான் முதன்முதலில் தோன்றியதென்பது பல தமிழாராய்ச்சியாளர்களின் முடிவு.

 தமிழா ராய்ச்சியுடையஇசைவாணர்களுடைய முடிவும் இதுதான்அண்ணா மலை நகரில்பல்கலைக் கழகத்தில் இசைவாணர்களின் கூட்டத்தில்தமிழன்பர்களின் ஒத்துழைப்பின் பேரில் செய்யப்பட்ட முடிவு இசை வாணர்களுக்கு ஊக்கமளிக்கும்இசைக்காதலர்களுக்கும் மகிழ்ச்சி யளிக்கும்இதில் ஐயமில்லை.
தமிழர்கள்தமிழின் உயிர்ப் பகுதியான இசைத் தமிழை வளர்க்கவே இம்முயற்சியில் தலையிட்டிருக்கின்றனர்இம்முயற்சி செட்டிநாட்டு அரசரின் அறச்சிந்தை யாலும்நன்கொடையாலும் நிறைவேறத் தொடங்கியிருக்கிறது.

 இனி மும்முயற்சியை யாரும் தடுக்க முடியாதுஇம்முயற்சியை பொது மக்களும் ஆதரிக்கின்றனர்இசைவாணர் களும் போற்றுகின்றனர்தமிழன்பர்களும் பாராட்டுகின்றனர்

ஆதலால் இசைத்தமிழ் இனி வளர்ச்சியடையும் என்பது உறுதிதமிழர்கள் தமிழ்ப் பாடல்கள் வேண்டுமென்று கேட்பது பிற மொழியின் மீது வெறுப் பாகுமாதமிழில் நல்ல பாடல்கள் இயற்ற முயல்வது பிற மொழிக்குச் செய்யும் கெடுதியாகுமாதமிழ்க்கலையை வளர்ப்பதற்குத் தமிழர்களும்தமிழன்பர்களும் செய்யும் முயற்சிக்குக் கூடவா தடை விளைவிக்க வேண்டும்தமிழ்க்கலை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறவர் களைத் தமிழ்ப் பகைவர்கள்தமிழ்க் கலை விரோதிகள்தமிழரின் எதிரிகள் என்று கூறத் தொடங்கினால் அதை இல்லை என்று கூற முடி யுமா?

சேரனுடைய கொலு மண்டபத்திலேகொண்டாட்டங்களின் போது இசைவாணர்கள்  ‘வாதாபி கண’ பாடவில்லைசோழன் களிக்க ‘சுனோ சுனோ’ பாடவில்லைபாண்டியன் பரிபாலனத்தின் போது,‘பலுகவே எமீனா’ என்று பாடவில்லைமூவரசர்கள் வாழ்ந்த நாட்களிலும் அதற்கு முன்பும் தியாகய்யர்சாஸ்திரிதீட்சிதர் கிருதிகள் பாடவில்லைஇசையே இல்லையோஉண்டுதமிழ் இசை பாடப்பட்டது.

அந்த இசை இன்று எங்கேசேர நன்னாட்டின் மங்கையர்வேழத்தை விரட்டிய தமது வீரக்காதலரை வாழ்த்திப் பாடியது தமிழில்தான்வெற்றிக்கொடி பறக்க எதிரியை விரட்டி அடித்துத் திரும்பிய சோழ மன்னர்கள் சிறப்பைத் தமிழில்தான் பாடினார்கள்பாண்டியனின் குமரிகளுக்குப் பாங்கிள் பாடியது தமிழ்ப்பாட்டுக்கள்தான்எங்கே அந்தத் தமிழ்ப்பாட்டுக்கள்?
தமிழர் இசையை வளர்த்தது போல்வேறு இனத்தினர் வளர்க்க வுமில்லைதமிழர் இசையை இழந்தது போல் வேறு  யாரும் இழக்கவு மில்லை.bஜர்மன் நாட்டு மாக்ஸ்முல்லர்ஆரிய வர்த்தம்ஆரிய மொழிஆரிய நாகரிகம்ஆரிய மதம் என்பவைகளையே ஐரோப்பியருக்கு எடுத்துக்கூறினர்தமிழர் என்ற உணர்ச்சி மங்கிற்றுஆரியரின் பிரசாரம் ஆங்கில நாட்டவரையும் மயக்கிற்று. 15, 16 வது நூற்றாண்டு களில் ஐரோப்பாவிலேபல்வேறு நாடுகளிலே மறுமலர்ச்சி ஏற்பட்டதுஅந்தக் காலத்திலே விளைந்த பலன்களே அந்நாடுகளை மேன்மைப் படுத்தின.

பிரிட்டனிலே டியூடிர் மன்னர் காலத்திலே மறுமலர்ச்சி ஏற்பட்டதுமதத்துறையிலே சீர்திருத்தம்மக்கள் மன்றத் துறையிலே மாறுதல்கள்கலையிலே ஓர் புதுமை தோன்றிற்றுசிறந்த இலக்கியங்கள் வெளிவந்தனதன்னாட்டுணர்ச்சிதன் மொழிப் பற்றுதன்மானம் ஆகியவைகள் தாண்டவமாடினபின்னரே பிரிட்டன் பலமுள்ளதாயிற்றுஐரோப் பாக் கண்டத்திலேஅறிவுலகமும் வீரர் உலகமும் அமளியில் ஈடுபடும்புரட்சிக்குக் காரணமாக இருந்த வால்டேர், %சோமார்டின் லூதர் போன்றவர்கள் இத்தகைய மறுமலர்ச்சித் தோட்டத்தின் உழவர்கள்அவர்களுக்கும் அவர்கள் புகுத்திய எண்ணங்களுக்கும் எதிர்ப்பு இருந்ததுஇறந்ததுஇங்கும் இன்று மறுமலர்ச்சி காண்கிறோம்.  இதற்கு எதிர்ப்பு காண்கிறோம்.

சங்கீதம் எந்தப் பாiஷயாக இருந்தாலென்னஎன்று கூறுபவர்கள், ‘ராக இலட்சணமே முக்கிய சாஹித்ய இலட்சணம் முக்கியமாகாது’ என்று கூறுபவர்கள் திருவாடுதுறை ராஜரத்தினம் அவர்களின் நாதஸ் வரமும்கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் பிடிலும் இருக்க வாய்ப்பாட்டு வேறு ஏன் தேடுகிறார்கள்?

அந்த நாதஸ்வரத்தில் ராக இலட்சணங்கள் போதும் என்கிற அளவுக்குக் கேட்கலாம்ஜிலுஜிலுப்பு வேண்டுமாகமகம் தேவையாஆலாபனத்தில் அலங்காரம் வேண்டுமாஎது நாதஸ்வரக்காரரால் முடியாதுதாள வரிசைகளிலே திறமைகள் கேட்க வேண்டுமாபக்கத்திலே நிற்கும் தவுல்காரரைப் பார்த்தால் போதுமேகோடை இடி கேட்கும் சங்கீதம்,
வெறும் ராக இலட்சணம்நாதம் என்று பேசுவோர்நாதத்தை நாதஸ்வரத்தில்பிடிலில் வீணையில்புல்லாங்குழலில் கேட்கின்றனர் என்றாலும் வாய்ப்பாட்டும் தேடுகின்றனர்காரணம் என்னவாய்ப் பாட்டில் நாதமும் நெஞ்சை அள்ளும் சாஹித்யமும் இருக்கின்றது என்பதற்காகத்தான்.

நெஞ்சை அள்ளும் சாஹித்யம் தமிழருக்குத் தமிழில் இருத்தலே முறைதோற்கருவிதுளைக்கருவிநரம்புக் கருவிகள் என இசைக் கருவி கள் எண்ணற்றன இருந்தனதோற்கருவிகளில் மட்டும் பாரிகைபடகம்இனக்கைஉடுக்கைமத்தளம்சல்லிகைகாடிகை முதலிய முப்பதுக்கு மேற்பட்டு இருந்தனஇசைக் கருவிகளுக்கு இயம் என்றோர் பெயருண்டுபலவகை இசைக் கருவிகளையும் வாசிக்கத் தெரிந்த ஒரு புலவருக்கு நெடும் பல்லியத்தனார் என்ற பெயரும் இருந்ததுபாடுவோர் பாணர் என்ற தனிக் கூட்டமாகவும் இருந்துதமது முதுகு களில் வகைவகையான இசைச் கருவிகளை ஏற்றிக் கொண்டும் பல நாடு சென்று பாடி மகிழ் வித்துப் பரிசுப் பெற்று வாழ்ந்தனர்இன்னின்ன காலத்துக்கு இன்னின்ன இசை பாடுதல் பொருத்தமென்றிருந்ததுகாலையில் மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப் பண்ணும் பாடுவராம்இசைத்தமிழின் இலட்சண விளக்கமாகவும் சிகண்டியார் என்பவர் இசை நுணுக்கம் என்ற நூலையும்நாடகத் தமிழக்குச் செயிற்றியன் என்ற நூலைச் செயிற்றியனார் என்பவரும் இயற்றினர்.

ஷட்ஜமம் ,ரிஷபம்காந்தாரம்மத்திமம்பஞ்சமம்தைவதம்நுஷhதம் என்று வடமொழிப் பெயர்களுடன் உள்ள சுரம் ஏமும்ஏழிசை என்ற பொதுப் பெயருடன் முறையே குரல்துத்தம்கைகிளைஉழைஇளிவிளரிதாரம் என்ற தமிழ்ப் பெயருடன் முன்னம் விளங்கினதமிழர் ஒரு சுரத்தை பதினாறாகப் பகுத்துணரும் பக்குவமும் பெற்றிருந் தனர்.இராகம் என்று கூறப்படுவதுதமிழரால் பண் என்று குறிக்கப் பட்டு வந்தது.
இராக இலட்சணங்கள் பொருந்திய தமிழ்ப்பாடல் இல்லை என்று கூறுவோருக்குக் கூறுகிறோம்தமிழரின் பண்கள் எண்ணற்று இருந்தனவடமொழியில் சுரசுப்பிரியா எனக் குறிப்பிடப்படுவதே படுமலைப் பாலைப்பண் என்றும்கல்யாணி எனும் ராகம் அருபாலைப் பண் என்றும் முன்னாளில் குறிப்பிடப்பட்டதுஅரிகாம் போதிக்கு தமிழர் அளித்த பெயர் கோடிப்பாலைப்பண்பைரவிக்கு விளரிப் பாலைப்பண்தோடிக்கு செவ்வழிப்பாலைப் பண் என இங்கணம் ராக லட்சணங்கள் எவ்வளவோ தமிழில் இருந்தனமறைந்தனஆரியத்தால் மங்கினஅழிந்தனவும் உண்டு.

ஆலாபனம் எனும் இசை நுணுக்கத்தைத் தமிழர் ஆலத்தி என்று அழைத்து வந்தனர்ஆரோகணம்அவரோகணம்கமகம் என்பன முறையே ஏற்றம்இறக்கம்அலுக்கு என்ற பெயருடன் விளங்கினதமிழர் அவைகளில் தேர்ச்சி பெற்று தேன் தமிழை உண்டு வாழ்ந்து வந்தனர்இன்று இரவல் இசை பெறும் நிலையில் உள்ளனர்.

எந்தப் பார்ப்பனர்மனு 4ஆம் அத்தியாயம், 15 ஆம் விதிப்படி இசை பயின்றுபொருள் ஈட்டக் கூடாது என்று தடுக்கப்பட்டு இருந்தனரோ அதே ஆரியர்களின் சொத்தாக இசை இன்று கருதப்பட்டு வரும் நிலைமை ஏற்பட்டது.

தமிழ் இசை மறைந்துவேற்று மொழியில் பாடல் பரவியதனால்நாம் இன்பத்தை மட்டுமே இழக்கவில்லைஇயற்கையின் அழகை உணரும் அறிவையும் பகுத்தறிவுத் திறனையும் இழந்தோம்புதுப்பாடல்கள்புதுக் கருத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும்வெறும் பக்திரசம் மட்டுமே ஊட்டக் கூடியதாக இருத்தல் போதாதுபக்தி ரசம் தமிழ் இசை யில் இன்றும் உண்டுஆனால் ஆரியருக்கு அது பிடிக்காது.

திருத்தாண்டகம் பிள்ளைத்தமிழ் போன்றவைகளைத் தோழர் சுந்தர மூர்த்தி ஓதுவார் எத்துணை இன்ப ரசத்துடன் பாடினார்தியாகய்யரின் ராமரசத்தைஅருணாசலக் கவிராயரின் தமிழ்க் கீர்த்தனங்களில் காண ஆரியர் மறுப்பர்கோபாலகிரூண பாரதியின் நந்தன் பாடல் களும் சித்தர்களின் பாடல்களும் சுப்பராமரின் தமிழப் பதங்களும் ஆரியருக்குப் பிடிக்கவில்லைஆகவேதான் தமிழிலே பாடல்கள் ஏது என்று கேட்கின்றனர்.
தோழர் மாரியப்பசாமி எனும் இசைச் செல்வர்தியாகய்யர் கீர்த்தனை மெட்டுகளிலேயே செந்தமிழில் கிருதிகள் அமைத்துஇனிய முறையில் பாடுகிறார்ஆரியருக்கு அது பிடிக்காதுஅவர்கள் அசல் ஆரிய ரசமே தேடுவர்பக்தி என்ற ரசத்தையும் ஆரியத்தோடு கலந்து பருகுவரேயன்றித் தமிழோடு கலந்து பருகச் சம்மதியார்காரணம் அந்த ஒரே மொழிதான் பரந்த இந்தியாவில் ஆரியப் படையெடுப்பைதாக்குதலைப் பொருட்படுத்தாமல்பணியாமல் சீரிளமைத் திறனோடு விளங்குகிறதுஅத்தகைய தமிழ்இசையில் மீண்டும் ஆதிக்கம் பெறு மானால்தமது கதி என்னாகுமோ என்று ஆரியர் பயப்படுகின்றனர்தமிழில் இசை வளரக் கூடாதெனத் தடுக்கின்றனர்தமிழனுக்குத் தமிழ் இசையைப் பெற உரிமை உண்டுஅதைத் தடுக்க ஆரியருக்கு உரிமை இல்லைஆயினும் ஆரியர் தடுக்கின்றனர்தமிழரேஉமது கருத்து என்னஎன்ன செய்யப் போகிறீர்என்று தமிழரைக் கேட்கிறோம்.
 (ஏடு/14)


No comments:

Post a Comment