Saturday, December 14, 2019

தாய்மொழிக் கல்வி சிறந்தது என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் இருக்கிறதா? - நரம்பியல் நிபுநர் டாக்டர் பி. இராமமூர்த்தி


 -  நரம்பியல் நிபுநர் டாக்டர் பிஇராமமூர்த்தி
நரம்பியல் நிபுநர் டாக்டர் பிஇராமமூர்த்தி (தினமணி 20.6.2000) என்ற அக்கிரகாரத்து அதிமேதாவிஇந்தப் பார்ப்பனத்தமிழன் ஏற்கனவே சொன்னார், ‘பொருளாதார ரீதியாகத் தமிழன் வளர்ந்தால்தமிழ் தன்னால் வளர்ந்துவிடும்.’ (தினமலர் 28.4.2000).
விஞ்ஞh ஆதாரம் கேட்கிறாயேகடவுள் உண்டு என்று சொல்லு கின்ற இனத்தைச் சேர்ந்த உனக்கு கடவுள் இருக்கிறார் என்று விஞ்ஞh பூர்வமாக ஆராய்ந்து பார்த்தது உண்டாபாமர மக்களுக்கு விளக்கியது உண்டாகாந்தியடிகளையும் மற்றோரையும் சாட்சியாக அழைக்க வேண்டாம் என்று கூறுகிறாய்பகவத் கீதை மற்றும் வேதங்கள் போன்ற குப்பைகளை ஆதராம் காட்டாமல் உன் இனம் பின்பற்றுகின்ற சடங்கு களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் விஞ்ஞh பூர்வமாக ஆதாரம் காட்டத் தயாராநீ அணிந்திருக்கும் பூணூலுக்கு பின் உள்ள விஞ்ஞh தத்துவத்தை விளக்குவாயாவாத விவாதங்களுக்கு நாங்கள் தயார்நீ சேர்ந்துள்ள இனம் போன்று உன் கேள்விக்கு  எதிர் கேள்வி போட விரும்பவில்லைஇதோ விடை தருகிறோம்.
கார்த்திகேசு சிவதம்பி எழுதிய, ‘தமிழ் கற்பித்தலில் உன்னதம்/ஆசிரியர் பங்கு’ என்னும் நூலில் தமிழைத் தாய்மொழியாகக் கற்பித்த லில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் பற்றிய ஓர் ஆய்வை மேற் கொண்டுள்ளார்அதில்லெவிஸ்ராஸ் (Levi Strauss) எனும் புகழ் பெற்ற மானிடவியலறிஞர்மொழியினை  பண்பாட்டின் பெரும்பேறு என்றும் பண்பாட்டின் ஓர் அங்கம் என்றும் பண்பாட்டு உருவாக்கத்துக்கான ஒரு நிபந்தனை என்றும் கூறுவார். (Davies,1976:36), இக்கண்ணோட்டத்தில் நோக்கும்போது தமிழ்ப்பயில்வு என்பது பண்பாட்டுத் தொடர்ச்சிக் கான ஓர் அத்தியாவசியத் தேவை என்பது புலனாகும்அதுவும் பல் பண்பாட்டுச் சூழலில் வளரும் குழந்தைகள் சிறாருக்கு இக்கல்வி மிக மிக அவசிய மாகிறதுதாய்மொழிக் கல்வி எவ்வகையில் பண்பாட்டுச் சக்தியாகவும் மனிதாயத உணர்ச்சிகளுக்கான கால்கோளாகவும் அமையலாம் என்பதை மேலே தரப்பட்டுள்ள தரவுகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றனஇதே கட்டுரையில் பிறம்ஃபிற் (Chirstopher Brumfit) அவர்கள்ஸ்ராற்றா (Stratta), டிக்சன் (Dixon) வில்கின்சன் (Wilkinson) என்போர் இது பற்றிக் கூறியனவற்றை மேற்கோளாகக் காட்டுகிறார்அக்கூற்று மிக முக்கியமானது.
ஆங்கிலத்தைப் (தாய்மொழிபயிற்றுவிக்கும் ஆசிரியர்சொற்களுட னும்அனுபவங்களுடனுமே ஆரம்பிப்பார்குறிப்பாக இவை யிரண்டுக்கும் இடையேயுள்ள அசைவியக்கம் நிறைந்த உறவினில் விசேட ஆர்வம் கொண்டவராக இருப்பார்இந்த நடைமுறையை இரு வேறுநோக்கு நிலையில் நின்று பார்க்கலாம்முதலாவதாக அது நமக்குள்ளேயும் ஏற்படும் அனுபவங்களை எடுத்துக் கூறுவதற்காக மொழியைத் தோற்றுவிப்பது (உண்டாக்குவதுபற்றியதாக இருக்கும்பேசுதலும் எழுதுதலும் இதற்குள் வரும்சொற்களில் கூறுதல்சொற் களின் மூலம் உருவாக்குதல்விளங்கிக் கொள்ளல் ஆகிய முயற்சிகள் மூலம் இந்தச் செயற்பாடு நிகழும்இதனை நாம் அனுபவத்தை வாய் மொழிப் படுத்தல் (Verbalising  experience) எனலாம்இரண்டாவது ‘மொழியைப் பெறுவது’  பற்றியதாகும்கேட்டலும்வாசிப்பும் இதற்குள் வரும்மற்றையோரின் சொற்களுக்கான கருத்தை அறிந்து கொள்ளல்அறிந்து அவை கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்துக்கேற்ப அவற்றைப்புரிந்து கொள்ளுதல்இதனை நாம் வாய்மொழிப்படுத்தலின் அனுபவம் என்கிறோம்குழந்தைகளுக்கும் சிறார்களுக்குமான மொழிக்கல்வி சீர்பெற அமைக்கப்பட வேண்டுவதற்காக காரணங்களை மொழியின் பயன்பாடுமுக்கியத்துவம் பற்றி அத்துறை அறிஞர்கள் கூற்றுகளினால் அறிந்து கொள்ளலாம்பியாஜே (Piaget) சப்பீர் (Sapir) வோர்ஃப் (Whorf), லெனபேர்க் (Lenneberg) லூறியா (Luria) விகொற்ஸ்கி (Vygotsky), பேர்ன்ஸ்ரயின் (Bernstein) ஆகியோரது ஆய்வு முடிவுகள் இவ்விடயத் தில் முக்கியமானதாகும்அவற்றுள் சிலவற்றை இங்கு நோக்குவோம்.
சிந்தனை வளர்ச்சி மொழியினால் தீர்மானிக்கப்படுவதாகும்அதாவது சிந்தனைக்கான மொழிக் கருவிகளாலும் குழந்தையின் சமூக பண்பாட்டு அனுபவத்தினாலும் தீர்மானிக்கப்படுவதாகும்பியோஜேயின் ஆய்வுகள் நமக்கு எடுத்துக்காட்டியவற்றுக்கேற்ப குழந்தையின் தர்க்க உணர்வு வளர்ச்சியானது அக்குழந்தையின் சமூக நிலைப்படுத்தப்ட்ட பேச்சின் நேரடிப்பயன்பாடாகும்குழந்தை யின் புலமை வளர்ச்சியானது சிந்தனைக்கான சமூக வழிமுறையில் அதாவது மொழி யாட்சியிலேயே தங்கியுள்ளது-விகொற்ஸ்கி
மொழிசமூக யதார்த்தத்துக்கான வழி காட்டியாகும்குழுமத்தின் மொழிப் பழக்கங்களின் அடிப்படையிலேயே அக்குழுமத்தின் நிஜ உலகு பெருமளவு கட்டியெழுப்பப்பட்டுள்ளது-சப்பீர்
ஒரு குறிப்பிட்ட  சமுக அமைப்பின் மொழியமைதியே அச்சமுகத் தின் குழந்தை கற்றுக் கொள்வனவற்றையும் எவ்வாறு கற்றுக் கொள்கின்றது என்பதையும் எதிர் காலத்திலும் எந்த வரையறை யினுள் அது தன் கற்றலைச் செய்யப்போகின்றது என்பதையும் தீர் மானிக்கிறது -பேர்ன்ஸ்பிள்
சுருங்கக் கூறுவதானால் குழந்தையின் எண்ணக்கருவளர்ச்சி மொழியினாலேயே தீர்மானிக்கப்படுகிறதுமொழிவளம் இல்லையேல் சிந்தனை வளம் இருக்காதுதாய்மொழி வழியாக அந்த வளம் வரும் பொழுது அது பண்பாட்டுப் பலத்தையும் ஆளுமை உறுதிப்பாட்டையும் வழங்குகின்றது’.
இந்த நூலில் அவர் இன்னும் விரிவாக விளக்குகிறார்நரம்பியல் இராமமூர்த்தி வேண்டுமானால் நியூ செஞ்சுரி புக் அவுஸ் வெளி யிட்டுள்ள நூலைப்படித்து அறிவை விஞ்ஞh பூர்வமாகப் பெறட்டும்.
 (ஏடு/5)

No comments:

Post a Comment