திராவிடன்
‘திராவிடன்’ தினசரி இதழ் சென்னையிலிருந்து சவுத் இந்தியன் பீபில்ஸ் அசோசியேஷன்ஸ் (தென்னிந்தி மகாஜன சபை) சார்பில் (பிங்கல வருடம் வைகாசி மாதம்
19 ஆம் தேதி) 1917 ஜுன் முதல் வெளிவந்தது.
இவ்விதழின் வெளியிடுவோர் பகுதியில் Printed & published by
Rao Bahadur P.Thiagaraya Chetty for the Indian Peoples Association Ltd at the
Justice Printing Works. 16A Mount Road, Madras என்று காணப்படுகிறது.
இப்பத்திரிகை வருவதற்கு முன்னால், நீதிக்கட்சி தோன்றிய 1916 நவம்பர் 20 முதல் ‘ஜஸ்டிஸ்’ என்னும் பெயரில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளிவந்து கொண்டிருந்தது. திராவிடன் தோன்றிய நாளிலேயே ‘ஆந்திரப் பிரகாசினி’ என்ற பெயரில் தெலுங்குப் பத்திரிகை ஒன்றும் வெளிவந்தது.
இப்பத்திரிகைகளை நடத்துவதற்கு South Indian Peoples Association என்னும் பெயரில் கம்பெனி ஒன்று நிறுவப்பட்டு ரூ 100 வீதம்
1000 வாங்கப்பட்டன. அரசியல் விவகாரங்களைத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் South Indian Liberal Federation-SILF) கவனித்து வந்தது. இதுவே ஜஸ்டிஸ் பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் பார்டி என அழைக்கப்பட்டது. தமிழில் நீதிக் கட்சி எனக் கூறப்பட்டது.
திராவிடன் பத்திரிகைக்கு ஆசிரியராக பக்தவத்சலம் பிள்ளை பி.ஏ. அவர்களும், துணை ஆசிரியர்களாக சுவாமி மிருத்ர கோடீஸ் வரரும் பண்டித வில்வபதி செட்டியாரும் நியமிக்கப்பட்டனர். ஆந்திரப் பிரகாசினிக்கு ஆசிரியராக ஏ.சி.பார்த்தசாரதி நாயுடு அவர்களும் துணை ஆசிரியர்களாக பண்டித கானாலா ராகவைய நாயுடுவும் நரசிம்ம ராவ் நாயுடும் நியமிக்கப்பட்டனர்.
‘ஜஸ்டிஸ்’ ஆங்கிலப் பத்திரிகை தொடங்கியபோது கருணாகர மேனனை ஆசிரியராக ஏற்பாடு செய்திருந்தனர். பத்திரிகை வெளிவர ஆறுநாட்கள் இருக்கும் போது பெசண்டு அம்மையார், சர்.பி.இராமசாமி அய்யர், கேசவபிள்ளை ஆகியோர் தூண்டுதலால் அவர் அப்பொறுப்பை ஏற்க மறுத்தார். பத்திரிகைத் தொழிலிலும் ‘புலமை’ உடைய டி.எம்.நாயரே கௌரவ ஆசிரயராக ஆனார். ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ ஆசிரியர் பி.என்.இராமன் பிள்ளை துணை ஆசிரியராக ஆனார். பின்னர் சர்.பிட்டி தியாகராய செட்டியாரும், ஏ.இராமசாமி முதலியாரும், எ.ஏ.வி. நாதனும் ஆசிரியராக விளங்கினார்கள்.
திராவிடன் நாளிதழுக்கு அப்பெயர் சூட்டப்பட்ட காரணத்தைப் பிற்காலத்தில் அந்நாளிதழின் ஆசிரியர்களுள் ஒருவராகத் திகழ்ந்த பண்டிதர் எஸ்.எஸ். அருணகிரிநாதர் விவரிக்கிறார்:
‘சுமார் இரண்டு மூன்று நாட்கள் டாக்டர் நாயரும் மற்றத் தலைவர்களும் கூடி யோசித்த பின்னரே தமிழ் நாளிதழுக்குத் ‘திராவிடன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. பிராமணரல்லாதா ராகிய எல்லா சாதி வகுப்பாரையும் ஒரே குறியீட்டுப் பெயரால் அழைத்து வரும்படியான வழக்கம் ஏற்பட வேண்டும். அக்குறியீட் டுப் பெயரால் அவர்களுடைய இன உணர்ச்சியை எழுப்பிவிட வேண்டும் என்ற விருப்பமே எல்லாருடைய பேச்சிலும் தெரிவிக்கப் பட்டது. அப்பெயரே ஏற்கப்பட்டது’. இக்குறிப்பை திரு. குமார சாமி தம் தியாகராயர் பற்றிய நூலில் எழுதி உள்ளார்.
பிராமணரல்லாதாருக்கு இன உணர்ச்சியைத் தூண்டும் ‘திரா விடன்’ என்னும் சொல்லைத் தமிழ்நாளிதழான திராவிடனுக்குச் சூட்டியவர்கள் தெலுங்கு இதழான ஆந்திரப் பிரகாசினி இதழுக் கும், ஆங்கிலத்தில் தொடக்கம் முதல் வெளிவந்த ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகைக்கும் சூட்டாமற் போனதன் காரணம் தெரியவில்லை.
‘திராவிடன்’ தான் தோன்றிய தன் நோக்கத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
‘நமது தேச அபிவிர்த்தியைக் கோரி உழைக்கவும், பிராமண ரல்லாத இந்துக்களுக்கு உள்ள குறைகளை அவ்வப்போது எடுத்துக் காட்டி வரவும் ‘சவுத் இந்தியன் பீபில்ஸ் அசோசியேசன்ஸ் லிமிடெட்’ என்னும் கம்பெனியரால் ஜஸ்டிஸ் என்னும் ஆங்கில தினசரிப் பத்திரிகை நடத்தப்பட்டு வருகிறதென்பது அனைவரும் அறிந்த விஷயமே. மேற்கூறிய நோக்கங்களோடே நிகழும் 1917 வருடம் ஜுன் மாதம் 1 தேதியிலிருந்து தமிழ் தினசரிப் பத்திரிகை ஒன்றும் மேற்படி கம்பெனியரால் பிரசுரிக்கப்பட்டு வரும் இந்தக் கம்பெனியின் அரிய பெரிய நோக்கங்கள் யாவும் அதனால் பிரசுரிக் கப்பட்ட விஞ்ஞாபனத்தால் நன்கு விளங்கும்.
இத்தமிழ் தினசரிப் பத்திரிகையில் ராஜிய விஷயங்கள், விவசாய சமாசாரங்கள், வித்யா சம்பந்தமான சங்கதிகள், யுத்தங்கள் சம்பந்தமானவும், இதர விஷயங்கள் சம்பந்தமானவுமான சமா சாரங்கள், ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பொது சங்கதிகள், மனதைக் களிப்பிக்கும் மாண்புள்ள கதைகள் சம்பாஷணைகள் முதலிய பல பல விஷயங்களும் தக்க வித்வான்களால் எழுதப்பட்டு வரும். நமது தமிழ் நாட்டா ரொவ்வருவரும் இதை வாங்கி வாசித்து நமது நோக்கங்களை முன்னுக்குக் கொண்டு வர முயலுவார்களென நம்புகிறோம்.’
No comments:
Post a Comment