Wednesday, December 1, 2021

மலேசியத் திராவிடர் கழக வரலாறு

 மலேசியத் திராவிடர் கழக வரலாறு

- கவி, ஆசிரியர், பெரியார் பார்வை

மலேசியத் திராவிடர் கழக வெள்ளி விழா மலரில் (1971) ‘துணைவன்என்ற புனைப்பெயரில் செந்தமிழ்ச் செல்வர் சி.வீ.குப்பு சாமி அவர்கள் எழுதியமலேசியத் திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்என்ற கட்டுரையில் திராவிடர் கழகம் தோன்றுவதற்கு 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 நாள் மலாயா நாட்டிற்கு வந்த பெரியாரின் வருகை ஒரு தாக்கமாக இருந்தது என்று எழுதுகிறார். சி.வீ. குப்புசாமி அவர்கள் 1939 இல்பெரியார் .வெ.ரா.’ என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈப்போ ரெ.ரா. அய்யாறு தலைமையில் சீர்திருத்த திருமணம் செய்துகொண்டவர்.

மலேசியத் திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்என்ற அக்கட்டுரையில், சி.வீ.குப்புசாமி அவர்கள்,

 பெரியார் .வெ.ரா. அவர்கள் இந் நாட்டுக்கு முதன் முதலில் வருகை தந்த 1929 ம் ஆண்டுக்கு பிறகுதான் அது மேற்க மலேசியாவின் பல பகுதிகளிலும் சிங்கப்பூரிலும் நிறுவன முறையில் அமைந்தது. அதற்கு முன் ஒரு சிலரே குடிஅரசு ஏட்டின் படிஞர்களாக இருந்து சீர்திருத்த சுய மரியாதைக் கொள்கைகளைப் பின்பற்றியும் பரப்பியும் வந்தனர்என்ற எழுதுகிறார்.

1929 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் ஈப்போவில் கானல்லி  சாலையில் சிலோன் அசோசியேசன் மண்டபத்தில் அகில மலாயா தமிழர் மாநாட்டில் சிறப்புரை ஆற்ற பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். அம் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவில் காந்தரசம் .சி.சுப்பையா, ஈப்போ அய்யாரு, முன்னேற்றம் ஆசிரியர் கோ.சாரங்கபாணி, ..பு. ஹமீது, சுவாமி அற்புதானந்தா, திரு. கா. தாமோதரனார் மற்றும் மலாக்கா .சு.மு.பெருமாள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஈப்போ மாநாட்டிலும் அதற்கு பின் பினாங்கு, ஈப்போ, கோலா லம்பூர், செரம்பான், மலாக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய  நகரங்களில் பல்வேறு இடங்களில் பெரியார் ஆற்றிய உரைகள் மலாயா நாட்டு மக்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

பெரியாரின் வருகைக்கு முன்பு பெரியாரின் அண்ணன் .வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மலாயா நாட்டில் ஒரு மாதம் தங்கியிருந்து குடிஅரசு இதழுக்கு ஆதரவு திரட்டியுள்ளார். அதனால் குடிஅரசு இதழ் படிக்கும் வாசகர்களின் எண்ணக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக செந்தூல் மூங்கில் குத்து கம்பம் பகுதியில்  குடி அரசு வாசக சாலை 1930 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது. இது குறித்து சி.வீ. குப்புசாமி அவர்கள், தனது கட்டுரையில்,

1931 ஆம் ஆண்டு வாக்கில் செந்தூல் மூங்கில் குத்துக் கம்பத்தில் குடிஅரசு வாசக சாலை அமைக்கப்பட்டது. அதற்கு ஆணிவேராக இருந்தவர்களில் திருவாளர்களாகிய மா.செ.பரிமணம், கூ.மா.சி. மாரிமுத்து, சி.வீ.குபபுசாமி, .இராசகோபால், தா.சு. குருசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்த வாசக சாலையின் பெயர் பிறகு செலாங்கூர் இந்திய சுயமரியாதை சங்கம், செந்தூல் (பிறகு இது சுயமரியாதைச் சங்கம், கோலாலம்பூர் என்ற பெயரில் வழங்கியது) என்று மாற்றப்பட்டு 1931  ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பெற்றது.

செலாங்கூரில் 1936 ஆம் ஆண்டில் திரு.எஸ்.எம்.சுப்பையா அவர்கள் தலைமையின் கீழ்பகுத்தறிவுச் சங்கம் (கோலாலம்பூர்)’ அமைக்கப்பட்டது. அதே போல் காப்பாரில் திரு.சு.முனுசாமி அவர்களின் தலைமையின் கீழும் காலஞ்சென்ற திரு. பி..முனியாண்டி (இவர் 1947 ஆம் பெரியாரின் வருகைக்காக காப்பார் தமிழ் மக்களால்  வசூலிக்கப்பட்ட தொகை 214 வெள்ளி 15 காசை பெரியார்அவர்களிடம் 1954 இல் பெரியாரிடம் வழங்கினார்கவி) அவர்களது பேராதரவின் கீழும் பகுத்தறிவுச் சங்கம் அமைக்கப்பட்டது. இவர்களுக்குத் துணையாக திரு. இரா.சங்கப் பிள்ளை, திரு.இரா.மணிமுத்து ஆகியோர் இருந்தனர்.

செலாங்கூரில் சீர்திருத்தக் கொள்கைகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று உணரப்பட்டதால் 1938 ஆம் ஆண்டுவாக்கில்தமிழர் சீர்திருத்தச் சங்கம்கோலாலம்பூர் செராஸ் ரோட்டில் அமைக்கப்பட்டு அதற்கென ஒரு கட்டடமும் நிறுவப் பெற்றது. அதுதான் இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு (1946 இல்) திராவிடர் கழகம் ஆகியதுஎன்று எழுதுகிறார்.

1930 இல் சிங்கப்பூரிலும் தமிழர் சீர்திருத்தச் சங்கம் தொடங்கப்பட்டது. வள்ளல் .இராமசாமி நாடார், காந்தரசம் .சி.சுப்பையா, தமிழவேள் கோ.சாரங்கபாணி, கா.தாமோதரனார் ஆகியோர் இச்சங்கம் அமைக்கப்பாடுபட்டனர்.

பினாங்கில் ஐக்கிய இந்தியர் சங்கம் என்ற அமைப்பு இயங்கி வந்தது. அது மேட்டுக்குடி மக்களுக்கான சங்கமாக இருந்தது. சீர்திருத்தக்காரர்கள் சிலர் ஒன்று கூடி ஒரு பகுத்தறிவுச் சங்கம் அமைக்க முயன்றார்கள்.   ஆனால் அவர்கள் அனைவரும் ஏழைகளாக இருந்ததால் தனியாக அமைப்பு தொடங்க முடியாத  நிலையில் ஐக்கிய இந்தியர் சங்கத்தில் ஒரு துணைக் குழுவாக ஐக்கிய இந்தியர் சங்க பசனைக் குழு தொடங்கி சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பி வந்தனர்.

இது குறித்து முன்னாள் பினாங்கு இந்து வாலிபர் சங்கம் மற்றும் தமிழர் சீர்திருத்தச் சங்க செயலாளர் வி.ஜி.சுவாமி அவர்கள் தனது கட்டுரையில்,

மலாயா திராவிடர் சமுதாயத்தில் பகுத்தறிவென்ற ஞானசூரியன் உதயமாக வேணுமென்று விரும்பிய அன்பர்களுக்கு, 1929 ஆம் ஆண்டு பெரும் மகிழ்ச்சிக்குரிய ஆண்டாகும். அந்நாளில், தமிழ்நாட்டில் உதயமாகிக் கொண்டிருந்த பகுத்தறிவு பகலன் தந்தை பெரியார் அவர்கள், அவ்வாண்டுதான் தனது அன்பு துணைவியார் நாகம்மையாருடனும், குழுவினருடனும் மலாயாவுக்கு வருகை தந்தார்கள். ‘பெரியார் வருகிறார். அவர் பெரிய நாத்திகர், மலாயா நாட் டுத் தமிழர்களிடையே கலவரங்கள் விளையக்கூடும். அவரை வரவொட்டா மல் மலாயா அரசு தடை செய்ய வேண்டும்என்றெல்லாம் ஆங்காங் குள்ள வைதீக இந்துப் பிரமுகர்களும், சாதி பித்துப்பிடித்த பழமை விரும்பிகளும் பற்பல முயற்சிகளைச் செய்தார்கள்என்று எழுதி யிருக்கிறார்.

மேலும் அவர் தனது கட்டுரையில்,

பினாங்கில் இந்துப் பிரமுகர்களாகிய ஜே.பி. நடேசப்பிள்ளை, ஜே.பி. ஏகாம்பரம் பிள்ளை, ஜே.பி.வீரப்பாப் பிள்ளை, சாதுக்கள் மடாலயம் சாமிப் பிள்ளை மற்றும் சிலர் இந்து சபாவில் கூட்டம் கூட்டி, பெரியாரை வரவொட்டாமல் செய்ய ஆலோசனை நடத்தினார்கள். அச்சமயம் பெரியார் வரத்தான் வேண்டுமென எங்கள் குழுவினர் சொல்லவும், உடனே ஒரு கலகம் மூண்டு, எங்களில் துணிந்து பேசக்கூடிய நண்பர் டி.வி.செல்லையா என்பவரை மண்டையில் தாக்கிக் குருதி கொட்டச் செய்தார்கள்என்று அன்றிருந்த கலவரச் சூழலை விளக்குகிறார்.

திரு.வி.ஜி. சுவாமி அவர்கள் அக்கட்டுரையில் பல செய்திகளைக் குறிப்பிடுகிறார்,

பின்னர், பெரியாரின் குழு புறப்பட்டு தைப்பிங், ஈப்போ, கோலா லம்பூர், ஜோகூர் முதலிய இடங்களுக்கும் சென்று தனது ஆணித்தர மான கருத்துக்களை பொதுக் கூட்டங்களில் விளக்கினார்கள். சில கூட்டங்களில் பெரியாரிடம் கேள்விக் கணைகளையும் தொடுத்தார்கள். அவைகளுக்கு எல்லாம் ஆதாரத் துடனும், சந்தேகம் தெளிவுறும் முறையிலும் பதிலளித்து, மெளடீகர்கள் மனமாற்றங் கொள்ளச் செய்தார்கள்.

 பெரியாரின் பதிலும் உண்மைக் கருத்துக்களும் மலாயா வாழ் தமிழ்க்குடி மக்களுக்கு இந்து சமுதா யத்தில் உள்ள ஊழல்களையும், ‘ஒரு குலத்துக்கொரு நீதி (மனோன்மணியம்) பேசும்மநு () நீதியின் விளக்கங்களையும், ‘சூத்திரர்கள்என்னும் பெயராலும் சாதியின் பெயராலும், தமிழர்களை இழித்தும் பிளவுபடுத்தப்பட்டும் இருப்பதை உணர்ந்து தெளிவும் பெற்றனர்.

இன்றைய மலாயா திராவிடர் கழகம் அமைவதற்கும் பொதுவாக அங்கு சீர்திருத்த இயக்கம் பரவுவதற்கும், முதன் முதலாக வித்தூன்றப் பட்டதே பினாங்கு மாநகரில்தான்.

அச்சமயம் (1929) பினாங்கில்ஐக்கிய இந்தியர் சங்கம் (யுனைடட் இந்தியன் அசோசியேசன்) என்றொரு நிறுவனம் பெரும்பாலும் ஆங்கிலம் படித்த உயர் பதவியாளர்கள் (கிராணிமார்கள்) அங்கத்தினர் களாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தது. அதில் சாதாரணப் பதவியாளர்களோ, தொழிலாளர்களோ அங்கத்தினர்களாக முடியாது.

 எனினும் நல்ல மனம் படைத்த வழக்கறிஞர் திரு. குமாரசாமி, திரு. சேவியர் அருள், திரு.கே.பலராம் போன்ற சில பிரமுகர்கள் இருந்தார் கள். அவர்களின் துணைகொண்டு அவர்கள் எடுத்திருந்த கட்டடத்தின் பின்பகுதியில் ஒரு சிறு இடத்தை வாடகையில்லாமல், அந்த நிறுவனத் தின் கிளை போலவேஐக்கிய இந்தியர் சங்க பசனைக் குழுஎன்ற பெயரால், ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டோம். எங்கள் குழு ஏறக் குறைய 25 பேர்களைக் கொண்டது.

நண்பர் .என்.இராமசாமி, பொதுநலனுக்கு சலியாது உழைக்கும் உத்தமர். பினாங்கில் சுயமரியாதை இயக்கம் பரவுவதற்கு முதன் முதலில் முயற்சி எடுத்துக் கொண்டவர் அவரே. ஏழ்மை நிலையில் பல எதிர்ப்புக் கிடையில், பல இடங்களுக்கும் கால்நடையாகவே நடந்து, என் போன்ற பல நண்பர்களைத் திரட்டி, எங்களுடைய சந்தேகக் கேள்வி களுக்கெல்லாம் அன்பு முறையில் பதில் தந்து, எங்களை ஒரு அமைப்பு அடிப்படையில் உருவாக்கியதும் அவரே.

 பசனைக் குழு என்றால் அரிபசனை, கதாகாலட்சேபம் போன்று நடத்துவார்கள் என்று நினைத்திருந்த, இடமளித்த ஐக்கிய இந்தியர் சங்கத்தார்களுக்கு, நாங்கள் வாராவாரம் கூட்டங்கள் கூட்டி, சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதும், ‘இருளோட்டப்பா, .வெ.ராமா, கல்லுருவைத் தெய்வமென்று கடனாளி யாகினோம். பலவித புராண மோசம், பாரில் பார்க்கவே ஆபாசம்என்பன போன்ற சீர்திருத்தஉருவக் கடவுள் எதிர்ப்பும்,  புராண எதிர்ப்புப் பாடல்களைப் பாடுவதும், ஐக்கிய இந்தியர் சங்கத்தார்களுக்குப் பிள்ளையார் பிடிக்க குரங்காக அமைந்த கதை போலிருந்ததால், சில மாதங்களுக்கு மேல் நாங்கள் அங்கு இருக்க முடியாமல், எங்கள் ஏட்டைக் கிழித்து விரைவில் வேறு இடம் பார்த்துக் கொண்டு இடத்தைக் காலி பண்ணச் சொல்லி விட்டார்கள்.

புதியஅமைப்பை என்ன பெயரால் பதிவு செய்வது என்பது பற்றி எங்களுக் குள் வாதம் எழுந்த சமயம் வழக்கறிஞர் உயர்திரு. குமாரசாமி அவர்கள். ‘நீங்கள் இந்து சமயத்தைச் சீர்திருத்த முனைவதால், எந்தப் பெயரை வைத்துக் கொண்டாலும் அதில் இந்து என்ற ஒரு சொல்லும் சேர்ந்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் மதத்தினைக் கண்டிக்கவோ, அதன் ஊழலை எடுத்துச் சொல்லவோ, உங்களுக்கு உரிமையுண்டுஎன ஆலோசனை கூறினார்கள். அதன்படியேஇந்து வாலிபர் சங்கம்என்ற பெயரால் எங்கள் குழுவைப் பதிவு செய்துகொண்டு அங்கத்தினர் களிடையேயும், பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி வந்தோம்என்று மலாயா வில் திராவிடர் இயக்கம் தோன்றிய வரலாற்றை எழுதுகிறார்.

.தி.. கோலாலம்பூர் கிளை

.தி.. கோலாலம்பூர் கிளை தோற்றம் பற்றி .மு.திருநாவுக்கரசு அவர்கள் தனது கட்டுரையில்,

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் பகுத்தறிவுக் கொள்கையில் பற்றுள்ளவர்கள், ஆங்காங்கு பல பட்டணங்களில் வெவ்வேறு பெயர் களில் சீர்திருத்தக் கொள்கையைப் பரப்பி வந்தார்கள். குறிப்பாக கோலாலம்பூரில் தமிழர் சீர்திருத்தச் சங்கம், சிலாங்கூர் சுயமரியாதைச் சங்கம், கோலாலம்பூர் பகுத்தறிவுச் சங்கம் என்ற பெயர்களில் சீர்திருத்த கொள்கையுள்ள அமைப்புகள் இயங்கி வந்தன. போருக்குப் பின்னர் மலாயா பகுத்தறிவுவாதிகளிடையே ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்பட்டு திராவிடர் இன அடிப்படையில் ஒரு அமைப்பு இருப்பது மேன்மை என்று கருதி, கோலாலம்பூரில் அப்பொழுது இயங்கி வந்த சிலாங்கூர் தமிழர் சீர்திருத்தச் சங்கம், கோலாலம்பூர் திராவிடர் கழகமாக 4.8.1946 ம் ஆண்டில் மாற்றப்பட்டது. தலைவராக திரு. . அங்கமுத்து அவர் களும், செயலாளராகத் திரு. .மருதமுத்து அவர்களும் பொருளா ளராக திரு. பெ. பெரியய்யா அவர்களும் பொறுப்பேற்றிருந்தனர்.

கோலாலம்பூரில் திராவிடர் கழகம் தோன்றியதைப் போன்று மலாயாவின் பல நகரங்களிலும் திராவிடர் கழகம் அமைப்பதற்கு முயற்சி செய்வதென்றும், அமையும் கழகங்கள் கட்டுப்பாட்டுடன் செய லாற்ற ஒரு தலைமைக் கழகத்தை யும் துவக்க வேண்டுமெனவும் முடிவெடுத்து மலாயாவின் பல நகரங்களிலுள்ளஇயக்கத்தில் ஆர்வமுள்ள தோழர்களிடம் தொடர்பு கொண்டு 1947 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் கோலாலம்பூரில் ஆலோசனை மாநாட்டைக் கூட்டி அகில மலாயா திராவிடர் மத்தியக் கழகம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

திராவிடர் கழகமும், மத்திய கழகமும் அமைக்க பெரு முயற்சி எடுத்துக் கொண்டவர்கள் திரு. . அங்கமுத்து, திரு. .மருதமுத்து, திரு. நா. பள்ளிக் கொண்டான் அவர்களும், அவர்களுக்கு உறுதுணை யாக இருந்து செயல்பட்டவர்கள் திரு.ரெ.ரா.அய்யாறு, திரு..வி. ஆண்டியப்பா, திரு.கூ.மா.சி.மாரி முத்து, திரு.பி. பிச்சைமுத்து, திரு. பெ. பெரியசாமி, திரு..மணியரசு, திரு..மு. திருநாவுக்கரசு, திரு.எஸ். அழகப்பா, திரு.மா.செ.பரிமணம், திரு...துரைசாமி, திரு. சு.சுதர்மன், திரு.கு.வீரப்பன், திரு.வெ.செல்லமுத்து, திரு..அழகேசு, திரு.சி.வீ.குப்பு சாமி ஆகியோராவார்கள்என்று வரலாற்றையும் அதற்குக் காரணமாக இருந்த முன்னோடிகளையும் நினைவுப்படுத்துகிறார்.

.தி.. கோலக்கிள்ளான் கிளை

.தி.. கோலக்கிள்ளான் கிளை அமைக்கப்பட்டது பற்றி திரு. பெ.நாரா ணன் அவர்கள் தனது கட்டுரையில்,

1946 ஆம் ஆண்டு! கோலக்கிள்ளானில் (35, கேம்ப் ரோடு) திரு. மணியம் அவர்கள் கடை மேல்மாடியில் தமிழர்களுக்கென ஓர் அமைப்பு வேண்டு மென்று பலர் கூடி ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட்டினார்கள். அக்கூட்டத்தில்இந்தியர் சங்கமா?’ அல்லதுதமிழர் சங்கமா?’ என்ற இரண்டு வகை கருத்துக் கள் எழுந்தன. இவ்விரு கருத்துக்களையும் ஒதுக்கி தென்னிந்திர்களை பிரதி நிதிக்கும் வகையில் திராவிடர் கழகம் என்றிருக்க வேண்டுமென திரு.பா. நாராய ணசாமி அவர்களின் பரிந்துரையின் பேரில் தன்மானக் கொள்கைப் பற்றுடை யவர்கள் பலர் உறுதியுடன் அக்கருத்தை ஏற்று கருத்துரைத்தார்கள். முடிவுபெரும்பான்மையான சீர்திருத்தக் கருத்துடையோருக்கே வெற்றியாக முடிந்தது. திராவிடர் கழகம் அமைக்கப்பட்டது.

கழகம் ஆரம்பத்தில் எண் 35, கேம்ப் ரோட்டில் சிறிது காலமும் அதன்பின் அதே சாலையில் திரு. கண்ணையா கடையில் சிறிது காலமும் இயங்கியது. இரண்டு இடங்களிலும் எதிர்ப்பு வலுத்தன் காரண மாக கழக இல்லம் அமைக்க பெரும் சிக்கல் ஏற்பட்டது. இறுதியாக 1947 இல் எண்.87, கேம்ப் ரோட்டில் கழக இல்லம் அமைக்கப்பட்டு அதிலே நிலைத்தும் நிற்கின்றது. இந்த சமயத்தில்தான் பொறாமை கொண்ட சிலரின் தூண்டுதலின் பேரில் சமுதாயத் தொண்டர் இரா. தேவராசன், இராமச்சந்திரன், இராசரத்தினம் ஆகியோர் 18 நாட்கள் சிறை யிலிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுஎன்று விவரிக்கிறார்.

ஈப்போ கிளை

மலேசிய திராவிடர் கழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருப்பது ஈப்போ மாநகரமாகும். இக் கிளையின் உருவாக்கம் பற்றி திரு. .கு.சுப்பையா அவர்கள் ஒரு கட்டுரையில்,

1945 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் திரு..மு. சண்முகம், திரு.சா.சி.சுப்பையா, திரு.நா.காளிமுத்து, திரு..மெ.ஆதி மூலம், .கு.சுப்பையா ஆகிய ஐவர் கொண்ட குழுபெரியார் விழாக் கொண்டாடுவதென எண்.3, கெனிஸ் ஸ்திரீட் கட்டிடத்தில் அமைக்கப் பட்டது. இக்குழு விழாவுக்கென 350 வெள்ளி நிதி திரட்டியது. அடுத்து மே திங்கள் மூன்றாம் நாள் மீண்டும் கூடிய இக்குழுவில் நமக்கென ஒரு சங்கம் இருந்தால் நலமாக இருக்கும் என நான் தெரிவித்த கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டு சங்கம் அமைக்கும் பொறுப்பையும்  என்னிடமே ஒப்படைத்தனர். அதன்பின் ஜூன் திங்கள் 26 ஆம் நாள் கொனாலி ரோட்டிலுள்ளபேர்ச் பள்ளிக்கூட மண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. ஏறக்குறைய 90 பேர் கலந்துகொண்டனர். மலாயா பெரியார் உயர்திரு ரெ.ரா. அய்யாறு அவர்கள் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் பல பெயர்கள் முன்மொழியப்பட்டாலும் பெரும் பான்மை வாக்குகள் பெற்றுபேராக் தமிழர் சங்கம்என்ற பெயர் தேர்ந் தெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் பல பகுத்தறிவாளர்கள் தமிழர் சங்கத்தை திராவிடர் கழகமாக மாற்றம் செய்ய வேண்டுமென நேரிடையாகவும், நாளிதழ் களிலும் அறிக்கைகள் வெளியிட்டார்கள். அதன் பேரில் சங்கத்தின் பெயரை மறு ஆய்வு செய்ய 1946 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 23 ஆம் நாள், பேர்ச் பள்ளிக் கூட மண்டபத்தில் உறுப்பினர் பொதுக் கூட்டம் கூட்டப் பட்டது. (இப் பள்ளி மண்டபத்தை கழக நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் கட்டணமில்லாமல் தந்துதவியவர் அப்பள்ளி ஆசிரியர் திரு. கிருட்டிண சாமி அவர்கள் என்பதை மறுக்க முடியாத ஒன்று). அந்தப் பொதுக் கூட்டத்தில் பெயர் பற்றி ஆய்வு செய்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, பெரும்பான்மை வாக்குகளால்அகில மலாயா திராவிடர் கழகம்என்னும் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கழக சட்டதிட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பையும் தமிழ்ப் பெருங் கிழார் சி.சுப்பையா அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

அவ்வாண்டு மார்ச்சுத் திங்கள் 4 ஆம் நாள் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கழக சட்டதிட்டங்கள் படிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் கீழ்க்கண்டவர்கள் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப் பெற்றனர்.

தலைவர் திரு.ரெ.ரா.அய்யாறு (ஆங்கிலப் பள்ளி ஆசிரியர்), துணைத் தலைவர் திரு.இரத்தினசாமி, செயலாளர் திரு.அழகேசன் (முன்னாள் சேவிகா ஆசிரியர்), துணைச் செயலாளர் .கு.சுப்பையா, பொருளாளர் திரு. முத்து காமாட்சி, செயலவையினர் திருவாளர்கள்: தா.சா.கணபதி (தமிழ்ப்பள்ளி ஆய்வாளர்), தங்கராசு, சி.சுப்பையா, நா.காளிமுத்து, நாராயணசாமி, கா. காளிமுத்து ஆகியோர்.

இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகமாக மாற்ற வேண்டாம், தமிழர் சங்கமாகவே இருக்கட்டும் என தமிழ் முரசு ஆசிரியர் கோ.சாரங்கபாணி பலமுறை கடிதங்கள் எழுதியிருந்தார். எனினும் மக்களின் ஒருமித்த முடிவே நிலை பெற்றதுஎன்று எழுதியிருக்கிறார்.

கொள்கை முரசு

மலேசியத் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான கொள்கை முரசு 1969 இல் வெளியிடப்பட்டது. இவ் வரலாறு குறித்து மணிமாறன் அவர்கள் எழுதிய கட்டுரையில், 

தந்தை பெரியார் 1929 இல் மலாயாவிற்கு வருவதற்குச் சில பல ஆண்டு களுக்கு முன்னே இந்நாட்டில் பகுத்தறிவு எண்ணக் கிளர்ச்சி முகிழ்த்தெழுந்து விட்டது. அதன் எதிரொலியாக 1928 இல் மலாயாவில் முதல் பகுத்தறிவு நூல்ஆரியரின் கூற்றுஎனும் பெயரில் ஆரிய சமய கோட்பாடுகளால் விளைந்த தீமைகளை விளக்கும் வகையில் சிங்கையில் உருவெடுத்தது.

1947 இல் நடைபெற்ற முதல் கழக மாநாட்டில் மலாயா திராவிடர் மத்தியக் கழகம் அமைத்த போது கழகத்திற்கென ஓர் ஏடு தொடங்கப்பட வேண்டுமென அன்றைய பெரியோர் திட்டமிட்டிருந்தனர். எனினும், கழகத்தின் பொது ஏடாக அன்று முழுப் பொறுப்புடன் வெளியிட இயலாமற் போனாலும், கழக ஏடு எனும் அளவில் அன்று கழகத்தின் முக்கியப் பொறுப்பாளராக பணி ஏற்றிருந்த ஈப்போஸ்டார்அச்சக உரிமையாளர் திரு. ..மு. மகாலிங்கம் அவர்கள் தம் பொறுப்பில் தனி முயற்சியில் 1949 இல்இனமணிஎன்ற பெயரில் கழக ஏட்டை வெளியிட்டார்.

இப்படிப் பல ஏடுகள் தோன்றிய போதிலும் கழகத்தின் அதிகாரம் பெற்றமுழு பொறுப்பும் கொண்ட ஏடாக முதன் முதலில் 1969 இல் தலைமைக் கழகம் வெளியிட்ட ஏடுகொள்கை முரசுஒன்றேயாகும்.

கழகத்திற்கென தனி ஏடு வெளியிட வேண்டுமென்ற எண்ணம் பல்லாண்டுகளாக கழகத்தவரிடையே இருந்த போதிலும் அதற்கென உருப்படியான திட்டம் 14 ‡ 15.4.1967 இல் பினாங்கில் நடைபெற்ற 14 ஆவது ஈராண்டுப் பேராளர் மாநாட்டில் உருவாக்கப்பட்டது.

இம்முயற்சிக்குப் பெரும் ஒத்துழைப்பாக இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குச் (சென்னைக்கு) சென்று வந்த கழகப் பேராளர்களின் நன்கொடையில் வாங்கி வரப்பட்ட ஏறத்தாழ 1500 வெள்ளி பெறுமான தமிழ் அச்செழுத்துக்களைப் பயன்படுத்தி கழகமே எழுத்துக் கோப்போரை வைத்து எழுத்துக் கோத்து தனியார் அச்சகத்தில் அச்சிடுவது பெரும் பயனளிக்கு மென்ற பேராளர்களின் ஒருமித்த கருத்தை ஏற்றுக் கொண்ட பின் கழக ஏட்டிற்கு பெயர் சூட்டுவது பற்றி கருத்துரைப்புகள் நிகழ்ந்தன.

சுங்கைப்பட்டாணி கிளைதிராவிடர் முரசு  எனும் பெயரையும் தெலுக்கான் சன் கிளைகொள்கை முரசுஎனும் பெயரையும், பினாங்கு கிளைகழகக் குரல்எனும் பெயரையும், பத்துக்காசா கிளைஇளஞ்சூரியன்எனும் பெயரையும் முன்மொழிந்தன. அத்தோடு 1949 இல் தொடங்கி தொடர்ந்து வெளியிடப்படா மல் மறைந்துவிட்டஇனமணிஎனும் முன்னாள் கழக ஏட்டின் பெயரிலேயே வெளியிடுவது சிறப்பானதென்ற கருத்தும் எழுந்தது. எனினும் பழைய பெயரைப் புதுப்பிப்பதைக் காட்டிலும் புதுப் பெயரில் வெளியிடுவதே நல்லது என்ற பேராளர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டதோடு, ‘திராவிடர் முரசுஎனும் பெயரில் ஈப்போ தோழர்கள் ஏடொன்றை வெளியிடவிருப்பதாக அறிவித்ததன் பேரில் எஞ்சிய மூன்று பெயர்களும் பேராளர்களின் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு பெரும்பான்மை வாக்குகள் பெற்றுகொள்கை முரசுஎனும் பெயரே தேர்வு செய்யப்பட்டது. இத்தோடு முதல்  கழக ஏட்டின் ஆசிரியனாக நான் தேர்வு செய்யப்பட்டேன். இது என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்என்று எழுதியிருக்கிறார்.

அகில மலாயா மத்திய திராவிடர் கழக முதல் மாநாடு

 14.3.1947 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டஅகில மலாயா மத்திய திராவிடர் கழகத்திற்கு தற்காலிக நிருவாகச் செயற் குழுவினராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் வருமாறு:

தலைவர்       :                               திரு. நா.பள்ளிக்கொண்டான் (பந்திங்)

துணைத்தலைவர்                :                               திரு. ஹாஜி கா. யாசின் சாகிப் (பினாங்கு)

                                                திரு. து. இலட்சுமணன் (சிங்கை)

பொதுச் செயலாளர்              :                               திரு. .அங்கமுத்து (கோலாலம்பூர்)

துணைப் பொதுச் செயலாளர் : திரு. மு.குணசேகரம் (தைப்பிங்)

பொருளாளர்               :                               திரு. பி.பிச்சமுத்து (கோலாலம்பூர்)

கணக்காயர்கள்        :                               திரு. . மணியரசு (கோலாலம்பூர்)

                                                திரு. மா.செ.பரிமணம் (கோலாலம்பூர்)

ஆலோசகர்கள்         :                               திரு. ரெ.ரா. அய்யாறு (ஈப்போ)

                                                திரு.இரா.. காலகண்டர்

                                                திரு. கோவிந்தசாமி (கோலாலம்பூர்)

பிரச்சார அதிபர்        :                               பண்டிதர் . ஆறுமுகம் (தைப்பிங்)

நிறுவன இலாகா அதிபர்                 :                               திரு. சு.முனுசாமி (கோலாலம்பூர்)

மாதர் பகுதித் தலைவி     :                               திருமதி அமுதவல்லியம்மை (கோலாலம்பூர்)

மலேசிய திராவிடர் தலைமைக் கழக ஆட்சிக் குழு (1947 முதல் 1971 வரை)

ஆண்டு            :               1947

கிளைகள்      :               6

தலைவர்       :               நா.பள்ளிகொண்டான்

துணைத்தலைவர்கள்       :               ஹாஜி யாசின் சாகிப், து.இலட்சுமணன்

பொதுச்செயலாளர்               :               .அங்கமுத்து

துணைப் பொதுச் செயலாளர் :    மு. குணசேகரன்

பொருளாளர்               :               பி. பிச்சைமுத்து

ஆண்டு            :               1948

கிளைகள்      :               6

தலைவர்       :               பழ. அம்பலவாணர்

துணைத்தலைவர்கள்       :               ஹாஜி யாசின் சாகிப்,

                                .சா.சின்னப்பனார்

பொதுச்செயலாளர்               :               ரெ. ரா. அய்யாறு

துணைப் பொதுச் செயலாளர் :    மு. குணசேகரன்

பொருளாளர்               :               ..மு. மகாலிங்கம்

இடைக்கால மாற்றம் :  பழ. அம்பலவாணர் இடையில் தமிழகம் சென்ற        தால் சீவி. இரத்தனசாமி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டு            :               1949

கிளைகள்      :               6

தலைவர்       :               பழ. அம்பலவாணர்

துணைத்தலைவர்கள்       :               .சா.சின்னப்பனார், . பாபு

பொதுச்செயலாளர்               :               ரெ. ரா. அய்யாறு

துணைப் பொதுச் செயலாளர் :    மு.சு.மணியம்

பொருளாளர்               :               ..மு. மகாலிங்கம்

ஆண்டு            :               1950

கிளைகள்      :               6

தலைவர்       :               ரெ.ரா. அய்யாறு

துணைத்தலைவர்கள்       :               .சா.சின்னப்பனார், . பாபு

பொதுச்செயலாளர்               :               ..மு. மகாலிங்கம்

துணைப் பொதுச் செயலாளர் :    மு.சு.மணியம்

பொருளாளர்               :               ..மு. மகாலிங்கம் (தற்காலிகம்)

 

ஆண்டு            :               1951

கிளைகள்      :               6

தலைவர்       :               ஜி. குமாரசாமி

துணைத்தலைவர்கள்       :               . பாபு, .மு. காசிம்

பொதுச்செயலாளர்               :               . மணியரசு

துணைப் பொதுச் செயலாளர் :    .மு. திருநாவுக்கரசு

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

ஆண்டு            :               1952 ‡ 54

கிளைகள்      :               7

தலைவர்       :               ஜி. குமாரசாமி

துணைத்தலைவர்கள்       :               . பாபு, இரா. தேவராசன்

பொதுச்செயலாளர்               :               . மணியரசு

துணைப் பொதுச் செயலாளர் :    .மு. திருநாவுக்கரசு

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

ஆண்டு            :               1955 ‡ 56

கிளைகள்      :               9

தலைவர்       :               கா..சாமி

துணைத்தலைவர்கள்       :               . பாபு, . சுப்பையா

பொதுச்செயலாளர்               :               . மணியரசு

துணைப் பொதுச் செயலாளர் :    .மு. திருநாவுக்கரசு

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

ஆண்டு            :               1957 ‡ 58

கிளைகள்      :               9

தலைவர்       :               . சுப்பையா

துணைத்தலைவர்கள்       :               . பாபு, கா..சாமி

பொதுச்செயலாளர்               :               சி.பி.லூயிஸ்

துணைப் பொதுச் செயலாளர் :    வே..வைரநாதன்

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

இடைக்கால மாற்றம்:

சி.பி.லூயிஸ் விலகலுக்குப் பின் கே. ஆர்.இராமசாமி பொதுச் செயலாள ராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டு            :               1959

கிளைகள்      :               9

தலைவர்       :               . மணியரசு

துணைத்தலைவர்கள்       :               தா.வை.முனியாண்டி, சி. குருசாமி

பொதுச்செயலாளர்               :               கே. ஆர். இராமசாமி

துணைப் பொதுச் செயலாளர் :    சி. பெரியசாமி

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

ஆண்டு            :               1960

கிளைகள்      :               9

தலைவர்       :               . மணியரசு

துணைத்தலைவர்கள்       :               தா.வை.முனியாண்டி, ஜி.குமாரசாமி

பொதுச்செயலாளர்               :               கே. ஆர். இராமசாமி

துணைப் பொதுச் செயலாளர் :    சி. பெரியசாமி

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

இடைக்கால மாற்றம்:

.வி. ஆண்டியப்பா ஓய்வில் தமிழகம் சென்றதால் பெ. மா. முத்து பொருளாளராகத்  தேர்வு செய்யப்பட்டார்.

 

ஆண்டு            :               1961

கிளைகள்      :               10

தலைவர்       :               ஜி. குமாரசாமி

துணைத்தலைவர்கள்       :               தா.வை.முனியாண்டி, வே.நடராசன்

பொதுச்செயலாளர்               :               கே. ஆர். இராமசாமி

துணைப் பொதுச் செயலாளர் :    மொ.சு.மணியம்

பொருளாளர்               :               .வி.ஆண்டியப்பா

ஆண்டு            :               1962‡64

கிளைகள்      :               12

தலைவர்       :               இரா.சு. மணியம்

துணைத்தலைவர்கள்       :               மு. நல்லதம்பி, மு.வீ.பெருமாள்

பொதுச்செயலாளர்               :               மொ.சு.மணியம்

துணைப் பொதுச் செயலாளர் :    சு.வெ.கு.கதிர்வேலு

பொருளாளர்               :               ரெ.சு.மணியம்

இடைக்கால மாற்றம்:

ரெ.சு.மணியம் விலகலுக்குப் பின் .சு. மணியம்  பொருளாளராகத்  தேர்வு செய்யப்பட்டார். கே.ஆர். இராமசாமி விளம்பரத் துறைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டு            :               1965‡66

கிளைகள்      :               13

தலைவர்       :               கே. ஆர். இராமசாமி

துணைத்தலைவர்கள்       :               . பாபு, பி..டெனிஸ்லாஸ்

பொதுச்செயலாளர்               :               சி. அருணாசலம்

துணைப் பொதுச் செயலாளர் :    இரா. பாண்டுரங்கன்

பொருளாளர்               :               வை. இராசாங்கம்

இடைக்கால மாற்றம்:

வை. இராசாங்கம் விலகலுக்குப் பின்கு.. வேலு  பொருளாளராகத்  தேர்வு செய்யப்பட்டார். கே.ஆர். இராமசாமி விளம்பரத் துறைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்டு            :               1967‡68

கிளைகள்      :               18

தலைவர்       :               கே. ஆர். இராமசாமி

துணைத்தலைவர்கள்       :               முத்துசின்னையா, இரா. பாண்டுரங்கன்

பொதுச்செயலாளர்               :               சி. அருணாசலம்

துணைப் பொதுச் செயலாளர் :    இரா. மணிமாறன்

பொருளாளர்               :               கு..வேலு

ஆண்டு            :               1969‡70

கிளைகள்      :               18

தலைவர்       :               கே. ஆர். இராமசாமி

துணைத்தலைவர்கள்       :               முத்துசின்னையா,இரா. பாண்டுரங்கன்,

                                .ஜி. வாசன்

பொதுச்செயலாளர்               :               சி. அருணாசலம்

துணைப் பொதுச் செயலாளர் :    இரா. பெரியசாமி

பொருளாளர்               :               வீ. கண்ணையா

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment