இந்துசமய அறநிலையத்துறை
- அடிப்படை புரிதல்
முதலில் இந்து சமய அறநிலயத்துறையின் தர்கத்தை (logic) புரிந்து கொள்வோம்.
அறநிலயத்துறையின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோவில்களும் இல்லை.
பண்டைய காலம் முதல் இன்று வரை
1) ஒரு தனியாரால் கட்டப்பட்ட கோவில்கள் எதுவும் அறநிலயத்துறையின் கீழ் வருவதில்லை
(உதா: உங்கள் தெரு முக்கில் உள்ள பிள்ளையார் கோவில், சிலரின் முயற்ச்சியால் உருவான சாய்பாபா கோவில்கள், உங்கள் ஊரில் உள்ள குலதெய்வ கோவில், இப்படி).
2) அதே போல் ஒரு குழுவால், மடத்தால் கட்டப்பட்ட கோவில்களும் வருவதில்லை. (உதா: காஞ்சி மடம், மதுரை ஆதீனம் இப்படி).
3) எந்தெந்த கோவில்கள் எல்லாம் மன்னராட்சியில் அரசர்களால் கட்டப்பட்டு, அரசால் பராமரிக்கப்பட்டதோ அவைகள் மட்டுமே அந்த மன்னராட்ச்சி முடிந்து மக்களாட்சியிலும் அரசின் வசம் உள்ளது.
தமிழகம் முழுக்க இலட்சக்கணக்கான கோவில்கள் இருக்கும். அதில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் வெறும் 38ஆயிரத்து சொச்சம் தான்.
இதே தர்கத்தின் அடிப்படையில் தான் வக்ஃபு வாரியங்களும் அரசால் நடத்தப்படுகின்றன.
வக்ப்பு வாரியங்கள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசால் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, மேலான்மை செய்யப்பட்டு வரப்படுகின்றன.
இஸ்லாமிய மன்னர்களால் கட்டப்பட்ட மசூதிகளையும், அது சார்ந்த சொத்துக்களையும் மேலான்மை செய்வது அந்த வக்ஃபு வாரியங்கள் தான்.
ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் மன்னராட்சி இல்லை என்பதாலும், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அரசால் இங்கே சர்ச்சுகள் கட்டப்படவில்லை என்பதாலும் (பல மிசினரிகள் இங்கே வந்து அவரவர்கள் செலவில் கட்டப்பட்டவை, நமது மடங்கள் அவர்கள் செலவில் கட்டிய கோவில்கள் போல) சர்ச்சுகளுக்கு இப்படி அரசாங்க அமைப்பு இல்லை.
அறநிலையத்துறையின் கீழ் 17 சமண கோவில்களும் உள்ளன என்பது உபரி தகவல்.
++++++++++++++++++++++++++++++
"கோவில்களில் பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். அது அந்த கடவுளுக்கு சொந்தம். அதை அரசு எடுத்து கண்டபடி செலவு செய்வதா??"
இது அறநிலையத்துறையின் மேல் ஒரு சில பிற்போக்குவாதிகளால் வைக்கப்படும் ஒரு கேள்வி.
கோவில்களில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு ரூபாய் கூட அறநிலயத்துறைக்கு அப்பால், வேறு எதற்கும் செலவு செய்யப்படுவதில்லை.
இன்னும் சொல்லப்போனால் ஒரு கோவிலின் வருமானம் கூட மற்றொரு கோவிலுக்கு செல்லாது.
*Common good fund* என்று ஒரு பொது fund உருவாக்கப்பட்டு, அதிக வருவாய் உள்ள கோவில்களில் இருந்து ஒரு தொகை இதற்கு மாற்றப்படுகிறது.
அந்த தொகையில் இருந்து தான் குறைந்த வருவாய் உள்ள கோவில்களுக்கான செலவுகள் திட்டமிடப்படுகின்றன.
அதிக வருவாய், குறைந்த வருவாய் என எப்படி கணக்கெடுக்கிறார்கள்?
ஆண்டு வருமானம்
1) 10,000 ரூபாய்க்கும் குறைவு,
2) 10 ஆயிரம் - 2.5 லட்சம்
3) 2.5 லட்சம் - 10 லட்சம்
4) 10 லட்சத்துக்கும் மேல்
இதில் (4) இல் வரும் கோவில்களின் எண்ணிக்கை 331 மட்டுமே.
இந்த 331 கோவில்களின் வருமானத்தில் ஒரு சதவிகிதம் அந்த common good fundக்கு மாற்றப்பட்டு அதன் மூலம் மீதமுள்ள மூன்று categoryயிலும் வரும் 38,300+ கோவில்கள் பராமரிக்கப்படுகின்றன.
கோவில்களின் வருமானத்தில் 'assessible income' என்ற ஒரு குறப்பிட்ட தொகைக்கு 14% வருமான வரி உண்டு.
அந்த வரி மட்டுமே அரசாங்கத்திற்கு போகிறது.
அந்த வரியும் கூட அறநிலைய அதிகாரிகளுக்கு சம்பளம் போன்ற அறநிலையத்துறை சார்ந்த administrative செலவுகளுக்குத்தான் செலவு செய்யப்படுகின்றது.
எனவே கோவில் வருமானங்களை, அரசு ஏன் எடுத்துக்கொள்கிறது என்ற கேள்வி திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி....
■
No comments:
Post a Comment