1948 இல் பாகிஸ்தானுக்கு சேர வேண்டிய 15 கோடி ருபாயை அவர்களுக்கு அளிக்கக் காந்தியார் வற்புறுத்தி உண்ணாவிரதம் இருந்ததை எதிர்த்தனர் ஆர்.எஸ். எஸ் இயக்கத்தினர்.
1948 இல் காந்தியார் கொலைக்குப் பிறகு 4.2.1948 இல் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை செய்யப் பட்டவுடன் கோல்வால்கர், பாலாசாகேப் தேவரஸ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். சில ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். காரர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். காந்தியார் கொலை வழக்கில் சதி செய்ததாக அந்த இருவரையும் பிடித்தனர். காந்தியைக் கென்றவன் முஸ்லிம் என்று சில இடங்களில் தவறான ஒரு பிரச்சாரத்தினைத் தமிழ்நாட்டில் கிளப்பி விட்டனர். தந்தை பெரியார் அவர்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.
கோட்சே மராத்திப் பார்ப்பனர் என்ற தகவல் அறிந்த நிலையில் மராத்திப் பகுதிப் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். அக்கிரகாரங்கள் சூறையாடப்பட்டன. எரிமலை வெடித்துக் கிளம்பும் என்று எதிர்பாராத கோல்வால்கர் உடனே ஆர்.எஸ்.எஸ் அமைப்புக் கலைக்கப்படுவதாகப் பிரகடனம் செய்தார். உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் போக்குக் குறித்து பிரதமர் நேரு வுக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது.குற்றவாளிக்குப் பின்னால் உள்ள சதியாளர்களின் சதி வேலைகள் சரிவரக் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை அவருக்கே சுட்டிக்காட்டி எழுதினார் .
1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்;
‘கோட்சேயினால் பாபு கொலையுண்டது பற்றிய புலனாய்வு இங்கேயும் (டில்லி) பம்பாயிலும் பிற இடங்களிலும் நடந்து கொண்டி ருக்கையில் இன்னும் அதிக அளவிலான சதியைத் துப்பறிந்து கண்டு பிடிப்பதில் உண்மையான முயற்சி போதாது என்று தோன்றுகிறது. பாபுவின் கொலையென்பது ஏதோவொரு தனிமைப்படுத்தப் பெற்ற செயல் அல்ல, அது முக்கியமாக ஆர்.எஸ்.எஸ் ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னும் விரிவான பிரசாரத்தின் ஒரு பகுதியே எனும் முடிவுக்கே நான் மேலும் வந்துள்ளேன். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பெருமளவு எண்ணிக்கையுள்ள மனிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கிட்டத்தட்ட ஒன்றும் அறியாதவர்களே. ஆனால் அதனை இயக்குகின்ற முக்கிய மனிதர்களில் கணிசமான எண்ணிக்கை யினர் இன்னும் வெளிப்படையில் செழிப்பாய் வளர்ந்து கொண்டு வருகின்றனர். இவர்களில் பலர் நம்முடைய அலுவலகங்களிலும் காவல் துறையிலும் இருக்கிறார்கள். ஒரு நாள் ஒரு பொறுப்புள்ள காவல் துறை அதிகாரி என்னிடம் இரகசியமாக இவர்களிடையே எந்தத் தேடல் நடவடிக்கையும் செய்ய முடியாது; காரணம் அது பற்றிய செய்தி சம்பந்தப்பட்டவர்கட்கு முன்கூட்டியே சேர்ந்துவிடுகிறது
டில்லி காவல்துறையில் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் நல்ல எண்ணிக்கையில் உள்ளனர் என்பது வெளிப்படை. அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கையெடுத்துச் சமாளிப்பது எளிதாயிராது. ஆனால், ஏற்கனவே செய்யப்பட்டிருப்பதைக் காட்டிலும் இன்னும் ஏதேனும் அதிகமாக மேற்கொள்ளப்பட முடியுமென நினைக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்னும் குறிப்பிடத்தக்க அளவுக்குச் சுறுசுறுப்பாக இயங்கு கிறது என்பதிலும் இனியும் முடியும் போது திருப்பித் தாக்கும் என்பதிலும் எனக்கு அய்யமில்லை’.
இவ்வளவு வெளிப்படையாக நேரு அவர்கள் காந்தியடிகளை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்று குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், உள்துறைச் செயலாளராக இருந்த எச்.வி.ஆர் அய்யங் கார் அவர்கள் சிறையிலிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கருக்கு எழுதிய கடிதத்தில் (1949 ஆம் மே மாதம் 3 ஆம் தேதி),
‘ஆர்.எஸ்.எஸ் தலைவரை நியமனம் செய்யும் முறை பற்றியும் அந்த அமைப்பில் உள்ள பெரும்பாலான பதவிகளைப் பெற்றுள்ளோர் ஒரு குறிப்பிட்ட சாதியினர்/அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே உள்ள அச்சாதியினர் என்பது வெளிப்படை’ என்று குறிப்பிட்டதன் மூலம் மராத்தியப் பார்ப்பனர்களே அப்பதவிகளை வகிக்கும் நிலையும் வாய்ப்பும் அந்த அமைப்பில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் என்பது பார்ப்பனர்களின் கூடாரம் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ் தடை நீக்கத்திற்காக சென்னையில் அட்வகேட் bஜனரலாக இருந்த டி.ஆர். வெங்கட்ரமண சாஸ்திரிதான் நேருவிடமும் மத்திய அரசிடமும் தூது சென்றார். ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச இயக்கம் அல்ல என்பதற்கு டி.ஆர் வெங்கட்ரமண சாஸ்திரி ஒரு விசித்திர விளக்கம் தந்தார்.
‘ஒரு நாட்டின் அரசை பாசீச அரசு என்று சொல்ல முடியும். ஆனால் ஒரு தனிப்பட்ட அமைப்பை பாசீச அமைப்பு என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் அதில் சேருமாறு எவரையும் எவரும் வற்புறுத்த முடியாது அல்லவா?’
இந்தச் சமூகத்தில் மதக் கலவரங்களை விதைக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மதக்கலவரங்கள் வரும்போது அவர்கள் துணிச்சலாக மற்றவர்களை நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். நீங்களே நின்று சமாளியுங்கள் எனறு அவர்கள் சொல்லுவார்கள். காந்தி யாரைக் கொன்ற கோட்சேயை இன்னமும் அவர்கள் வணக்கத்திற் குரியவராக மதிக்கிறார்கள். கோட்சே காந்தியின் மீது விரோதமாக சென்றார் என்பதால்தான்.
பார்ப்பன ஜாதி சமுகத்துக்கு விரோதமாக/பார்ப்பனருக்கு விரோத மாக கடைசிக் காலத்தில் கொஞ்சம் மாறினார் என்பதை வைத்துக் கொண்டுதான் அவர்கள் தீவிரமாக எதிர்த்தார்கள். அந்தக் கோட்சேயை வணக்கத்திற்குரியவராக, பூஜிக்கத் தக்கவராக இவர்கள் கொள்ளுகிறார்கள் என்பதிலிருந்தே இவர்கள் யார் என்பதை தெளிவாக திட்டவட்டமாக தெரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?
(ஏடு/15)
No comments:
Post a Comment