Saturday, December 14, 2019

பாவாணர் நூற்றாண்டு விழா


பாவாணர் நூற்றாண்டு விழா

திருவள்ளுவர் ஆண்டு 1933(1902) சுறவம் (தை) திங்கள் 26 ஆம் நாள் (7.2.1902) திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள பெரும்புத்தூர் என்னும் ஊரில் தேவநேசன் பிறந்தார். தந்தையார் பெயர் ஞானமுத்து. தாயர் பெயர் பரிபூரணம். தமது அய்ந்தாம் வயதில் தந்தையை இழந்தார். அடுத்து அன்னையையும் இழந்தார். அதன்பின் மூத்த அக்காவின் பாதுகாப்பில் வளர்ந்தார்.
பாவாணரின் முதல் மனைவியின் பெயர் எசுதர். மணவாளதாசன் என்ற மகன் பிறந்த பின் எசுதர் இறந்துவிட்டார். அதன் பிறகு அக்காள் மகள் நேசமணியை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஆறு குழந்தை கள் பிறந்தன.
தமிழ் புலமைக்காக பல்வேறு கல்விப்பட்டங்களைப் பாவாணர் பெற்றிருந்தார். அவையாவன,
1. மதுரை தமிழ்ச் சங்கப் பண்டிதர்.
2. திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கப் புலவர்.
3. சென்னைப் பல்கலைக் கழக வித்துவான்.
4. பி.. எஸ் என்னும் கீழ்க்கலைத் தேர்வு.
5. கலை முதுவர்.
1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்விலும் 1926 ஆம் ஆண்டில் நடைபெற்ற திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கப் புலவர் தேர்விலும் வெற்றி பெற்றவர் பாவாணர் ஒருவரே.
1931 இல்செந்தமிழ்ச் செல்விஎன்னும் இதழில்தான் பாவாணரின்மொழி ஆராய்ச்சிஎன்னும் முதல் கட்டுரை வெளியிடப்பட்டது. தமிழ்ப் பற்றின் காரணமாக தனது தேவநேசன் என்னும் பெயரை தேவநேயப் பாவாணர் என மாற்றிக் கொண்டார்.
பாவாணர் தம் எழுத்து வல்லமையாலும் ஆய்வுத் திறத்தாலும் 35க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை வெளியிட்டார்.
கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சீனம், சமஸ்கிருதம், அரபு, ஆங்கிலம், செருமன், பிரஞ்சு, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம், மராட்டியம், இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் இலக்கண இலக்கியப் புலமையைப் பெற்றிருந்தார். அவருடைய ஆய்வுகளில் 58 மொழிகளில் இருந்து எடுத்துக் காட்டுகளைப் பயன்படுத்தி உள்ளார்.
இசைப் பாடல்கள் எழுதுவதிலும் அவற்றை வாய்விட்டுப் பாடு வதிலும் வல்லமை பெற்றவராகத் திகழ்ந்தார் பாவாணர்.  இந்தி எதிர்ப்புப் பாடல்களையும் தமிழ் உணர்வு ஊட்டும் பாடல்களையும் தெருதோறும் பாடிச் சென்று தமிழ் முழக்கம் செய்தார்.
மன்னார்குடியில் இருந்த யாழ் புலவர் கோபாலரிடம் முறையாக இசை பயின்றார். கின்னரம் (பிடில்), வீணை, இசைப்பெட்டி (ஆர்மோனி யம்) மத்தளம் ஆகிய இசைக் கருவிகளை நேர்த்தியாக இசைப்பதில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
பாவாணர் எழுதிய நூல்கள்
1932 இல்கிறித்துவக் கீர்த்தனைகள்என்னும் நூலை எழுதி வெளி யிட்டார். 1936 இல்கட்டுரை வரைவியல்என்னும் நூலையும் 1937 இல் கட்டாய இந்திக் கல்விக்கு கண்டனம் தெரிவித்துசெந்தமிழ்க் காஞ்சிஎன்னும் இசைப்பா நூலையும் வெளியிட்டார். ‘தேசாபிமானத் தமிழ்த் தொண்டன்என்ற புனைப் பெயரில் எழுதினார். 1940 இல்ஒப்பியன் மொழிநூலையும்இயற்றமிழ் இலக்கணம்என்னும் நூலையும் வெளி யிட்டார். 1944 இல்திரவிடத்தாய்என்னும் நூலையும், 1952 இல் பழந் தமிழாட்சி என்னும் நூலையும் 1953 இல் முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் என்னும் ஆய்வு நூலையும் வெளியிட்டார்.
1966 இல்பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்என்னும் நூலை யும்இசைத் தமிழ்க் கலம்பகம்என்னும் நூலையும் வெளியிட்டார். 1967 இல்தமிழ் வரலாறுமற்றும்வடமொழி வரலாறுஆகிய நூல்கள் வெளிவந்தன. 1972 இல்தமிழர் வரலாறு’, ‘தமிழர் மதம்ஆகிய நூல்கள் வெளிவந்தன.
பாவாணரின் இதர பணிகள்
பெரியார் தென்மொழிக் கல்லூரிஎன்னும் பெயரில் தமிழையும் பதினெண் திரவிட மொழிகளையும் தமிழ் வாயிலாகவும் ஆங்கில வாயிலாகவும் கற்பிக்கும் கல்லூரி ஒன்றைச் சென்னையில் தொடங்கும் படி பெரியாரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார் பாவாணர்.
பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழகத்தின் முதல் மாநாடு பறம்புக்குடியில் நடைபெற்றது. குன்றக்குடி அடிகளார், சி. இலக்குவனார், .சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை ஆகியோர் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
1970 இல் தமிழ்நாட்டுத் தாளவாடியைக் கருநாடகத்தோடு இணைக்க வேண்டிக் கிளர்ச்சி செய்த வட்டல் நாகராசனைத் தமிழ் நாடு அரசு சிறைப்படுத்தியதை ஒட்டி, கருநாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். எனவே கருநாடகத் தமிழர்க்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி அம்மாநில முதல்வர் வீரேந்திரபாட்டீலுக்குப் பாவாணர் ஒரு வெளிப்படைக் கடிதம் எழுதினார்.
தென்மொழியின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம்வகுக்கப்பெற்று அறிவிக்கப்பட்டது. 200 உறுப்பினர்களைச் சேர்க்கவும் அவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
1974 இல் தமிழ் நாடு அரசுசெந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர  முதலித்திட்ட இயக்ககத்தின்இயக்குநராகப் பாவாணர் அவர்கள் தமிழக முதல்வர் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, பந்தயத் திடலில் நிகழ்ந்த கருத்தரங்கில்மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அதுவே பாவாணரது இறுதி சொற்பொழிவாகும்.
அவரது இறுதிச் சொற்பொழிவிலிருந்து...
குமரிநாடு மிகப்பழைமையானது. இதைப்பற்றி மேனாட்டாரும் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். அதிலே கிளேற்றர் என்பவர் (ளுஉடயவநச) ஆங்கிலேயர், அந்த இலெமூரியாக் கண்டத்தை/இலெமூர் என்கிற தென்கண்டத்தை ஆய்ந்து அதற்கு அந்தப் பெயரிட்டார். `இலெமூர்என்றால் `மரநாய்என்று பொருள் அவ்வளவுதான். ஒருவகை மரநாய். அந்தக் குரங்கிற்கு முந்தின பிறப்பு அது. அங்கு இலெமூர் என்ற மரநாய் மிகுந்திருந்ததினாலே அதற்கு இலெமூரியா என்று பெயர் கொடுத்திருக் கிறார். நாம் இதைக் குமரியா என்று மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த குமரி நாட்டிலேதான் மாந்தன் தோன்றினான்.
இப்பொழுது முதலாவது, தமிழ் முதன் மொழி என்பதற்குப் பல சொற்களே போதுமானவையாக இருக்கின்றன.
இப்பொழுது மகன் என்ற சொல்லானது பெரும்பாலும் புதல்வன் அல்லது ளுடிn என்ற பொருளிலே வழங்கினாலும் (முன்)/ மன்/ மான் (ஆயn)/ மனிதன் என்ற பொருளிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
இப்பொழுது ஓர் ஆடவனும் ஒரு பெண்ணும் வந்தார்கள் என்று சொல்வதைப் பழங்காலத்தில் ஒரு மகனும் ஒரு மகளும் வந்தார்கள் என்று சொல்லி வந்தார்கள். அதில் இந்த மகன் என்ற சொல்லானது பிற்காலத்திலே மான்/மன்/என்று திரிந்திருக்கிறது.
பெருமகன் என்பது பெருமான் என்று திரியும். பெருமான் என்பது பெருமன் என்று குறுகும்.
ஆங்கிலம் என்று சொல்லும் பொழுது தனியாய் ஆங்கிலம் என்றே நாம் கருதி விடக்கூடாது. ஆங்கிலம் அய்ந்தாம் நுற்றாண்டில் தோன்றிய மொழி. அது இந்ததியூத்தானியம்என்ற பிரிவைச் (கூநரவடிni) சேர்ந்தது. உலகத்திலே உள்ள சிறந்த மொழிகள் எல்லாவற்றையும் மார்க்சு முல்லர் மூன்று பெரும் பிரிவாக வகுத்திருக்கின்றார். (). ஆரியக் குடும்பம் (Aசநலயn)  (). சித்தியக் குடும்பம் (ளுஉலவாயைn) எனப்படும் துரேனியக் குடும்பம் (கூரசயnயைn) (). சேமியக்குடும்பம் (ளுநஅவைi) என்றும் பிரித்திருக் கிறார்.  அதற்குள்ளே /தியூத்தானிக்கைச் சேர்ந்தது இந்த ஆங்கில மொழி.
இந்த மன் என்ற தமிழ்ச்சொல் ஆங்கிலத்திலே ஆயn என்று இருக்கிறது. அதைத்தான் சமற்கிருதத்தில் அவர்கள் மனு என்று விரித்தார்கள். இந்த மனுவிலிருந்துதான்மனுஷஎன்ற சொல் பிறகு திரிகின்றது. மொத்த ஐந்திணை நிலங்களிலும் மக்கள் நிலைத்து வாழ மாட்டார்கள். பெரும் பாலும் நாடோடிகளாக இருப்பார்கள். இந்த மருத நிலத்திலேதான் மக்கள் நிலைத்து வாழ்வார்கள். அதனாலே முதன் முதலாக நகரிகம் என்ற சொல்லிலிருந்துதான் நாகரிகம் என்று வருகிறது. (நகர்/நகரகம்/நகரிகம்/ நாகரிகம்)
நகரத்திலேதான் மக்கள் திருந்தியிருப்பார்கள். இலத்தீனில் கூட ஊiஎடைணையவiடிn என்பது ஊiஎடைடிச/ நகரத்தின் பெயரிலிருந்துதான் வருகிறது.
இந்த ஊர் என்கிறதும் அப்படித்தான். முதற்காலத்திலே பார்த்தாலும் மருத நிலத்து ஊரைத்தான் குறித்தது. பாடி அல்லது சேரி என்று இருந்தால் முல்லை நிலத்து ஊராக இருக்க வேண்டும். வேறுதுறைஅல்லதுபாக்கம்என்பது நகரம் உண்டான பிற்பாடு ஏற்பட்டது. ‘துறைஎன்பது காயல் என்பது போல இருந்தால் அது நெய்தல் நிலந்தான் என்பதைக் குறிக்கும்.
 இப்படி இந்தஊர்என்ற சொல் கிறித்துவிற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே, அப்பொழுதுதான் அந்த ஊர் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த ஊரிலேதான் ஆபிரகாம் என்ற ஒரு பெருந்தலைவன் இருந்தான். ஆப்ரகாம் என்று இருந்தாலும் சரி.
இப்போது தொல்காப்பியத்தைப் பற்றி ஒரு தவறான கருத்து இருக்கிறது. தொல்காப்பியம்தான் முதல் இலக்கணம் என்பது போலத் தவறாக/மிக மிகத் தவறாக/சொல்லப்படுகிறது. அப்படி அந்தக் கருத்தை வைத்துக் கொண்டு நாம் ஒருக்காலும் முன்னேறவே முடியாது என்று நான் நினைக்கின்றேன்/ சொல்கின்றேன்.
முதல் நூற்பாவில் எடுத்த அடியில் அவர் என்ன சொல்கிறார்,
எழுத்தெனப் படுப.. முப்பஃதென்பஎன்று சொல்வார்கள் அறிஞர்கள்/அவ்வளவுதான். நெடுகச் சொல்லிக் கொண்டே போகிறார், ‘என்மளார் புலவர்’, ‘மொழிப’, நெடுக எங்கெங்கே இடமிருக் கிறதோ அங்கங்கே எல்லாம் இந்த சொற்றொடரை ஆண்டு கொண்டே போகின்றார். ஓர் எழுத்திலக்கணத்தை எழுதக்கூட முடியாது.
எழுத்தென்றால் நான்கு நிலைகள் இருக்கின்றன. முதலாவது பட வெழுத்து, இரண்டாவது கருத்தெழுத்து, மூன்றாவது அசையெழுத்து, நான்காவது ஒலியெழுத்து. இந்த நான்கு எழுத்தும் தலைக்கழகக் காலத்திலேயே கடந்துவிட்டன. அந்த நிலையில் இத் தமிழ் தோன்றியது. முதலாவது இந்த நெடுங்கணக்கு ஏற்பட்டதே தமிழில்தான். எல்லாப் பொருள்களையும் அறிந்தாய்ந்து பார்த்தார்கள்.
மூன்று வகைப்பட்டிருக்கின்றன பொருள்கள்.
உயிர், மெய் மற்றும் உயிர்மெய். உயிர் எழுத்தானது தானே ஒலிக்கிறது. இயங்குகிறது. மெய்யெழுத்து உயிரின் உதவியின்றி இயங்குவதில்லை. இந்த உயிர்மெய் எழுத்தானது உயிரும்  மெய்யும் ஒன்றாகச் சேர்ந்தது. இதைக் கண்டுபிடித்து அந்த மூன்றுக்கும் தனிவடிவம் முதன் முதலாக அமைத்தவன் தமிழன்தான். அதனால்தான் அதற்கு நெடுங்கணக்கு என்று பெயர். முதலிலே, உயிரும், மெய்யும் சேர்ந்தது குறுங்கணக்கு. உயிர் மெய்யும் சேர்ந்ததால் நெடுங்கணக்கானது. இதற்குப் பின்னாலே தான் அந்த சமற்கிருதமோ மற்றவையோ வருகின்றன.
பண்டாரகர் கால்டுவெல் (Dr. Caldwell) ஓர் உண்மையை நன்றாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். எல்லா மொழி களிலும் சிறப்பாக, ஆரிய மொழிகள் எல்லாவற்றிற்கும் எந்தச் சுட்டுச் சொற்களுக்கும் மூலம் தமிழிலுள்ள ஆ(), (), () தாம். இந்த மூன்று சுட்டெழுத்துக்களிவிருந்துதான் எல்லாச் சுட்டெழுத்துச் சொற்களும் (Demonstrative pronouns) தோன்றின. எப்படி அந்தச் சொல் / அ/ விலிருந்து அவன், அங்கே இந்தச் சொற்களெல்லாம் எப்படி அகரத்தி லிருந்து உண்டாயினவோ அப்படிதான் என்பது இகரத்திலிருந்தும் உண்டு என்பது உகரத்தி லிருந்தும் வந்தன என்பது கருத்து.
இந்த மூன்று சுட்டு எழுத்துக்களிலிருந்துதான் ஆரிய மொழி களிலுள்ள அத்தனைச் சுட்டுச் சொற்களும் தோன்றியிருக்கின்றன என மிகத் திட்டவட்டமாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதை இப்போது நாம் ஆய்ந்து பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது.
இத்தகை அறிவாற்றல் வாய்ந்த பேச்சுக்குப் பின் பாவாணருக்கு உடல் நலங்கெட்டது. அன்றிரவே மதுரை அரசினர் இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப் பெற்றார்.
1981 ஆம் ஆண்டு சனவரி 16 ஆம் நாள் (சுறவம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2012) இரவு 12.30 மணிக்கு இறந்தார்.
(ஏடு/15)

No comments:

Post a Comment