இராசாசியின் அரசியல் நுழைவுப் பற்றி தந்தை பெரியார்
அய்யங்கார்களுக்கு காங்கிரசிலும் செல்வாக்கில்லை என்பதோடு பிரம்மஞhன சங்கத்திலும் செல்வாக்கில்லாமல் போய்விட்டது. ஜஸ்டிஸ் கட்சியும் பலம்பெறும் போக்கில் இருந்ததையும் உணர்ந்த இராஜhஜி, பார்ப்பனர் நலத்தையும் அய்யங்கார் நலத்தையும் கருதி, பொது வாழ்வில் அரசியலில் இறங்க முன்வந்தார். அவரை எனக்கு 1910 ஆம் ஆண்டுவாக்கிலிருந்து தெரியும். அக்காலத்தில் அவரை மக்கள் ஒரு உண்மையான நல்ல மனிதர் என்றே கருதினார்கள். சர்.பி.தியாகராய செட்டியார் கூட ஒரு சமயத்தில் ‘இராஜகோபாலாச்சாரியார் போன்ற பார்ப்பனர்களிடம் ஜஸ்டிஸ் கட்சிக்கு வெறுப் பில்லை’ என்று சொல்லி இருக்கிறார். அவர் (இராஜாஜி)
1912 வாக்கில் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிடுவார். இதனாலும் அவரிடம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அப்போது அவர் ஒரு பகுத்தறிவு வாதியாகவே நடந்துகொண்டார்.
அய்யங்கார் உணர்ச்சியும், ஜஸ்டிஸ் கட்சி எதிர்ப்பு உணர்ச்சியும் அவரை அரசியலில் இறங்க செய்தது என்றாலும், வரதராஜஷலு நாயுடு, பெசண்ட் அம்மையையும் ஜஸ்டிஸ் கட்சியையும் எதிர்த்துப் பொதுக்கூட்டங்களில் ஆபாசமாகப் பேசி வந்ததால், சென்னை ‘சுதேச மித்திரன்’,
‘இந்து’ பத்திரிகை ஆதரவு கொடுத்து அவரை மிகத் தூக்கி விட்டன. அந்த சமயத்தில் மதுரையில் அவர்மீது அரசியல் வழக்கு ஏற்பட்டது. அந்த வழக்குக்கு இராஜாஜி வலிய ஆஜராகி விவாதித்து அய்க்கோர்ட்டில் ஒரு சட்ட ஓட்டை காரணமாக விடுதலை கிடைத்தது. அதனால் இராஜாஜிக்கும் வரதராஜஷலு நாயுடுவுக்கும் ஒரு நல்ல பிரபலம் ஏற்பட்டது.
இந்த பிரபலத்தால் இவர்கள் இருவருக்கும் அரசியலில், ஒரு நல்ல இடம் கிடைத்தது. அப்போது அரசியல் பத்திரிகைக்காரர்களிடமும் பார்ப்பனர்களிடமும் மாத்திரமே இருந்ததால் ஜஸ்டிஸ் கட்சியை முன்னிட்டு இவர்களுக்குப் பார்ப்பனரல்லாதார் நபர்கள் தேவைப்பட்டது. இதற்கு ஒரு நபர் டாக்டர் வரதராஜஷலு கிடைத்தார். அந்த சமயம் நான் ஈரோட்டில் ‘பெரிய’ வியாபாரி; முனிசிபல் சேர்மென். ஜில்லாவில் ஒரு அளவுக்கு முக்கியமானவர்களின் ஒருவன்; ஊரில் நாட்டாண்மைக்காரன் போல் இருந்து வந்தவன். எனக்கு இருவரும் வலை வீசினார்கள். நானும் அந்த வலையில் சிக்கிவிட்டேன். இவர்கள் முயற்சிக்கு என்னை ஒரு முக்கியமானவனாகக் கருதிக் கொண்டார்கள், இராஜாஜிக்கு வரதராஜலு நாயுடுவிடம் அந்தரங்கமான நம்பிக்கை இல்லை. அவரை சூதாகவே தூக்கிப் பேசுவார்கள். எனக்கு இராஜாஜி உண்மையான நம்பிக்கையாளராகவும், நண்பராகவும் ஆகவேண்டும் என்பதும் இராஜாஜியின் ஆசை. அதனால் நான் அவர் நடப்பில் முழுகிவிட்டேன்.
நானும், நாயுடுவும் இராஜாஜிக்கு பக்கபலமாக இருந்ததால் இராஜாஜிக்கு தமிழ்நாட்டில் மாத்திரம் அல்லாமல், வெளியிலும் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டதால் இராஜாஜி மீது சென்னை பார்ப்பனர் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், கஸ்தூரிரங்க அய்யங்கார், சீனிவாசய்யங்கார் ஆகியவர்களுக்கு பொறாமை ஏற்பட்டு இராஜாஜி செல்வாக்கை ஒழிக்க முயற்சி செய்தார்கள். இராஜாஜி, காந்தியை ஆதரித்து அவரை தன் வயப்படுத்த முயன்று வேலைசெய்து வந்தார். சென்னை பார்ப்பனர்கள் திலகரைப் பிடித்து தன் வசப்படுத்தி இராஜாஜியை ஒழிக்க முயற்சித்தார்கள் அமிர்தசரஸ் காங்கிரசில் எங்கள் ஆதரவால் காந்தி வெற்றி பெற்றார். திலகர் தோல்வி அடைந்தார். ஒரு ஆண்டுக்குள் அந்த கவலையால் திலகர் செத்தார்.
காந்தி, எதிர்ப்பில்லாத ஏக தலைவர் ஆனார். அவரை சர்வாதிகாரி ஆக்கி விட்டோம். இதற்கு இராஜாஜிக்கு முக்கிய பங்கு உண்டு. காந்திக்கு இராஜாஜிதான் முக்கிய ஆதரவாளராக இருந்தார். அதன் பயனாக காந்தி சுத்த மூடநம்பிக்கைப் பிண்டமாக ஆக்கப்பட்டுவிட்டார். காந்தியை இராஜாஜி கெடுத்துவிட்டார் என்று கருதி, ஜவகர்லால் நேரு முதலியவர்களுக்கு இராஜாஜி மீது ஆத்திரம்/துவேஷம். என்னையும் வரதராஜஷலு நாயுடுவையும் இராஜாஜியிடமிருந்து பிரிக்கப் பார்த்தார்கள். சரோஜினி அம்மை என்னோடு தெலுங்கில் பேசி மயக்கப் பார்த்தார். வரதராஜஷலு நாயுடுவுக்கு இராஜாஜி மீது சிறிது வெறுப்பு இருந்ததால், அவர் கலைந்துவிட்டார். உடனே அவருக்கு காரியக் கமிட்டியில் ஒரு இடம் கொடுத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். இதனால் இராஜாஜிக்கு என் மீது வெகுபிரியம். வெகுநம்பிக்கை. நான் தலைமைப் பதவியில் இருந்தபோது ஒரு சர்வாதிகாரியாகவே நடந்து கொள்ளுவேன்.
டாக்டர் இராஜன், சந்தானம், வரதாச்சாரி ஆகியவர்கள் இராஜாஜியிடம் என்மீது புகார் கூறுவார்கள். அதற்கு இராஜாஜி ‘நாயக்கரைப் போல் ஒரு உண்மையான மனிதரைக் காணவே முடியாது’ என்று சொல்வதோடு,
‘நாயக்கரின் உயிரின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியாது’ (You don’t know the important of Mr. Naicker’s life) என்று சொல்லுவார்கள்.
பார்ப்பனர்களில் மிக விஷமத்தன பார்ப்பனீய பார்ப்பனர் வ.வே.சு. அய்யர். அவரை எனக்குப் பிடிக்காது. இராஜாஜிக்கும் பிடிக்காது. சீனிவாசய்யங்கார் பேச்சைக் கேட்டுக் கொண்டு என் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இராஜாஜி ஓட்டு சேகரம் செய்து அத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். அதுமுதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கட்சி ஏற்பட்டுவிட்டது.
அப்படி எல்லாம் இருந்த இராஜாஜி, ஜஸ்டிஸ் கட்சி பலவீனப்பட்டுவிட்டது, காங்கிரசுக்கு செல்வாக்கு ஏற்பட்டுவிட்டது என்ற நிலையைப் பார்த்தவுடன் என்னை அலட்சியமாக நினைக்க ஆரம்பித்தவுடன் நான் போனால் போகட்டும் என்று கருதி தந்திரமுறையிலேயே நட்புக் காட்டிவந்தார். இதைத் தெரிந்து கொண்டு நானும் தோழர் எஸ். ராமநாதனும் மாத்திரமே சற்று ஜாக்கிரதையாக இருந்தோம் என்றாலும் தமிழ்நாட்டில் என்னைத் தவிர தோழர் ராமநாதனைத் தவிர, மற்றபடி வரதராஜஷலு நாயுடு, திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் முதலிய எல்லா பார்ப்பனரல்லாதார், பார்ப்பனர்களின் இராஜாஜியின் கையாட்களாகவே ஆகிவிட்டார்கள். காரணம் ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்தால் இவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும் என்கின்ற தைரியம்தான்.
காங்கிரசால் இராஜாஜி அடைந்த பதவி சுகங்கள்
காங்கிரசினாலே இராஜாஜிக்கு என்ன குறை? எடுத்ததும் கவர்னர்; கவர்னர் ஜெனரல்; இரண்டு தடவை முதல் மந்திரி; ஒரு தடவை டெல்லி மந்திரி காங்கிரசில் (பஜாஜ் ஃபண்டில்) மாதம் ரூ 250 பெற்று வாழ்க்கை நடத்தியவருக்கு சுமார் 10 லட்சம் செல்வம், இன்னும் மாதம் ரூ.1000 பென்ஷன். பார்லிமெண்ட் பதவியில் இருக்கிறார். மற்றும் சில சவுகரியம், இப்படிப்பட்ட நிலை, காங்கிரசு இல்லாவிட்டால் இவருக்குக் கிடைத்து இருக்குமா?
இராசாசியின் ஊழல்
1947 இல் இராஜாஜி இந்திய சர்காரில் கைத்தொழில் சப்ளை மந்திரியாக இருந்தாரல்லவா? அப்போது அவர் இலாக்காவில் நடந்த ஊழல், டில்லியிலும் வெளியிலும் சிரிப்பாய்ச் சிரிக்க வைத்துவிட்டது.
1947இல் இந்தியாவில் கடுமையான ஜவுளிமுடை இருந்ததல்லவா? இந்த முடையைத் தீர்க்க வெளியிலிருந்து ஜவுளி இறக்குமதி செய்வதென முடிவாகியது. இராஜாஜி மந்திரியாக இருந்த இலாக்காதான் இந்தப் பொறுப்பை நிறைவேற்றி வைக்கவேண்டும். அப்போது ஜப்பானில் ஏராளமான துணிகளிலிருப்பதாகவும் அமெரிக்க டாலராகக் கொடுத்தால் அவர்கள் இந்தியாவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாகவும் செய்திவந்தது. வாஷிங்டனில் உள்ள இந்திய ஸ்தானிகர் இதைச் சப்ளை மந்திரிக்குத் தந்தி மூலம் தெரிவித்தார். திரு. இராஜாஜி இந்தத் தந்தி வந்ததும், பம்பாயிலுள்ள ஜவுளிக் கமிஷனருக்குத் தந்தி கொடுத்து இத்துணிகளை வாங்கலாமா என்று கேட்டார்.
7 ரக துணிகள் வாங்கலாமென்றும் சுமார் 10.5 கோடி கெஜத்துக்கு மேல் வாங்கலாமென்றும் கூறினார்.
இப்பதிலைப் பெற்ற இராஜாஜி இலாகா என்ன செய்தது தெரியுமா? விலையைப்பற்றிப் பதில் வரவில்லையே என்று கவலைப்படாமல் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதருக்கு வாங்குங்கள் எனத் தந்தி கொடுத்துவிட்டது. இந்தத் தந்தியைப் பெற்றதும் 28.3.1947 இல் காண்டிராக்டில் கையெழுத்திட்டு 8 கோடி கெஜம் துணி வாங்கி விட்டார். அதாவது 6 கோடி ரூபாய்க்கு. இந்தக் காண்டிராக்ட் கையெழுத்தானதும் பம்பாயிலுள்ள கமிஷனர் இராஜாஜி இலாக்காவுக்கு ஒரு தந்தி கொடுத்தார். ஜப்பானியர் கூறுகிற விலை இந்தியாவின் விலையை விட ஒன்றுக்கு முக்கால் பங்கு அதிகமாக இருக்கிறது என்றும் விலையைக் குறைத்தால் ஒழிய வாங்குவதற்கில்லை எனவும் தந்தி கொடுத்தார். கைத்தொழில் சப்ளை மந்திரியின் ஆஃபீசர்களுக்கு விலையைப் பற்றிப் பதில் வரவில்லையென்பது தெரியும். அப்படியிருந்தும் அவர்கள் பதிலுக்காக எழுத வில்லை. எழுதாமலேயே பேரத்தை முடித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் 55 இலட்சம் ரூபாய் அனாவசியமாக நஷ்டமாகி விட்டது.
இந்த ஊழலை விசாரணை செய்த கமிட்டியார் பக்கம் பக்கமாக எழுதி யிருக்கிறார்கள். மேலும் டாலர் பஞ்சம் தலைவிரித்தாடுகிற சமயத்தில் இந்தியா 6 கோடி ரூபாய் பெறுமானமுள்ள டாலரை இப்படி வீணடித்தது. இராஜாஜி இலாக்காவின் ஊழலால்தான் இந்த விரயம் என்பதை ஞாபகப்படுத்த வேண்டியதில்லை.
டில்லியிலுள்ள பார்லிமெண்ட் மெம்பர்கள் எல்லாம் இந்த ஊழலை அறிந்ததும் கொதிப்படைந்தார்கள். நேருஜிக்கே மனம் தாளாமல் நிரந்தர நிதிக்கமிட்டியிடம் விசாரிக்கவிட்டார். அக் கமிட்டி இராஜாஜியின் இலாக்காவினர் ஒரு நெஞ்சாரப் பொய்யைக் கூறித் தப்பிக்கப் பார்த்தனர். ஆனால் இதுவும் வெளிப்பட்டுவிட்டது. இப்படியாக இந்த ஊழல் ஜகப்பிரசித்தம் அடையவே ராஜாஜி மீது மெம்பர்களுக்கு அதிருப்தியும் அவர் திறமையில் அவநம்பிக்கையும் ஏற்பட்டன. இந்தக் காரணத்தால் அவர் ராஷடிரபதியாக வருவதை அவர்கள் விரும்பவில்லை.
(திராவிடர் கழக வெளியீடு:
‘ஆச்சாரியாரின் ஆட்சியின் கொடுமைகள்’ என்னும் நூலிலிருந்து)
இதழ்க் குறிப்பு: ஏடு/ 9
No comments:
Post a Comment