செம்மொழியாக இருப்பதற்குரிய 12 தன்மைகளும் தமிழுக்கு இருப்ப தாக மேனாட்டு அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த பன்னி ரண்டு தன்மைகளில் இல்லாத செத்தமொழி என்ற புதிய தன்மையை பாரதீய ஜனதா தலைமையிலான இந்திய நடுவண் அரசு கண்டறிந்து, அதனால் தமிழுக்கு செம்மொழி என்ற தகுதியை அரசு வழங்கவில்லை என்று கூறியுள்ளது.
தமிழின் தொன்மைக் குறித்து பாவாணர்
`கி.மு.
1000 ஆண்டுகட்கு முன் எபிரேயத்தில் எழுதப்பட்ட யூத அரசர் வரலாற்றிலும் நாட் பொத்தகத்திலும் (ஊhசடிniஉடநள) உள்ள துகி (தோகை) என்னுஞ் சொல்லை, தமிழின் தொன்மையைக் குறிக்கும் முதலிலக்கியச் சான்றாக எடுத்துக்காட்டினார் கால்டுவெல்லார்’.
`ஆயின் கி.மு.
1200 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட ஆரிய வேதத்தில் நூற்றுக்கணக்கான தென்சொற்கள் உள்ளமையே தமிழின் தொன்மைக்கு அதனினும் சிறந்த இலக்கியச் சான்றாம்’.
‘கிறித்துவிற்கு முன் பாண்டி நாட்டு முத்து மேனாடுகட்கு ஏராள மாய் ஏற்றுமதியானதும், உரோம் நகரப் பெருமாட்டியார்அளவற்ற பொன்னை அதற்குச் செலவிட்டதும் வரலாறறிந்த உண்மையாகும்’.
‘பாண்டிய கவாடம்’ என்னும் பருமுத்து வகை சாணக்கியரின் அர்த்தசாத்திரம் என்னும் பொருள் நூலிற் சிறப்பித்துக் கூறப்பட் டுள்ளது. வேத ஆரியர் நாவலந்தேயத்திற்குள் (இந்தியாவிற்குள்) கால் வைப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முந்திய பாபிலோனிய மொழி யிலும் ஆரியம் என்னும் பேரே தோன்றுவதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முந்திய எகிப்து மொழியிலும் மறுக்கமுடியாத தமிழ்ச் சொற்கள் அடிப் படையாயுள்ளன. ஆகவே மேலையுலகில் (தோரா. கி.மு.
5000) முதன் முதலாக நாகரிகமடைந்த எகிப்து நாட்டு மொழியில் ஒரு சொல் இரு சொல் அல்ல, பல சொற்கள் அவையும் அடிப்படைச் சொற்கள் தமிழா யிருந்ததே தமிழின் தொன்மைக்குத் தலைச்சிறந்த இலக்கியச் சான்றாகும்’.
(பாவாணர்
/ தமிழ் வரலாறு).
No comments:
Post a Comment