Saturday, December 14, 2019

திராவிடத் தேசியம், தமிழ்த் தேசியம் - தந்தை பெரியார்

திராவிடத் தேசியம்தமிழ்த் தேசியம் - தந்தை பெரியார்


தமிழ் மொழியை செம்மொழியாக்குவதற்கு நடுவண் அரசு தடை யாக இருப்பதற்கு காரணம் பார்ப்பனர்கள் இன்றும் ஆதிக்கச் சக்தியாக இருக்கின்றனர் என்பதேயாகும்ஆனால் தமிழ்ப் புலவர்களும் தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும் வழக்கம் போல் இந்த சிக்கலுக்கான வேர் என்ன என்று தெரியாமல் உள்ளனர்மேலும் பார்ப்பனர்கள் முன் மாதிரி இல்லை என்றும் சொல்லித்திரிகின்றனர்.

இவர்களுக்கு தமிழ்த்தேசியமும் தெரியவில்லைதிராவிடத் தேசிய மும் தெரியவில்லைபெரியார் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர் என்றும் திராவிடத்தேசியத்தை முன்னிறுத்தினார் என்றும் கூறுகின் றனர்திராவிடத்தேசியத்தை வலியுறுத்தியவர் பேரறிஞர் அண்ணாபெரியாரைவிட்டு அண்ணா அவர்கள் பிரிந்தபோது திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வைக்கும் போது பல சிக்கல்கள் ஆராயப்பட்டனஅதில் ஒன்று திராவிடர் முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைப்பதாஅல்லது திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் வைப்பதாஎன்று.
`திராவிடர்’ மற்றும் `திராவிடம்’ என்ற சொல்லுக்கு பொருள் புரிந் தால் பெரியாரின் கொள்கைக்கும் அண்ணாவின் கொள்கைக்கும் உள்ள இடைவெளி தெளிவாகப்புரியும்திராவிடர் என்பது இனத்தைக் குறிக்கும் சொல்திராவிடம் என்பது புவியியலை (இடத்தைஅடிப்படை யாகக் கொண்ட சொல்பெரியார் திராவிடர் என்று குறிப்பிட்டது இந்தியாவில் உள்ளவடக்கு மாநிலங்களில் உள்ள பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரையும் உள்ளடக்கித்தான்மேலும் திராவிடர் என்று தமிழர்களைக் குறிப்பதுகூட பார்ப்பனரல்லாத தமிழர்களைத்தான்.

`தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னை தமிழன் என்று கூறித் தமிழையும் தமிழனையும் அழிக்கப்பார்ப்பர்திராவிடர் என்றால் எந்த பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று சொல்லிக்கொள்ள முன்வர மாட்டான்என்றார் பெரியார்பெரியார் இறந்த 30 ஆண்டு களுக்கு மேலாக ஆகியும் இன்றும் அதுதானே உண்மை நிலைஎந்தப் பார்ப்பானாவது தமிழை செம்மொழியாக்குவதற்கும் அர்ச்சனை மொழியாக்குவதற்கும் முன்வருகின்றானா?

அறிஞர் அண்ணா அவர்கள் மலையாளம்கன்னடம்ஆந்திரம் மற்றும் தமிழகம் இணைந்த பகுதிகளை ‘திராவிடம்’ என்று கூறினார்இதைதான் திராவிட நாடு என்றார்திராவிட நாட்டில் மலையாளம்கன்னடம்தெலுங்கு  மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் ஆட்சி மொழி களாகவும் பிரிந்து போகக்கூடிய உரிமை உடைய மாநிலங்களாகவும் இருக்கும் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

மேலும் பெரியார், ‘நமக்கு பகுத்தறிவு தான் பிரதானமே ஒழிய சுயராஜ்யம் பிரதானமல்லநம் திராவிட நாட்டைப் பொறுத்தவரையில் சுயராஜ்யம் பேச்சு ஒரு ஏமாற்றுப் பேச்சுஒரு பித்தலாட்டப் பேச்சுவெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய பேச்சு என்றுதான் நான் கூறுவேன்நம் நாட்டுக்கு ஒரு நல்லாட்சி வேண்டுமென்று கேட்பதுதான் பொருத்த மான கோரிக்கையாகும்அதைவிட்டு சுயராஜ்யம் கேட்பது ஒரு கடைந் தெடுத்த முட்டாள்தனம் என்றுதான் நான் கூறுகிறேன்’ என்றார். (விடுதலை 19.1.48).

 மேலும் இந்தியா விடுதலையடைந்தபின் மொழிவழி மாநிலங்கள் ஏற்பட்டு ஆந்திராவும் கர்னாடகாவும் கேரளமும் பிரிந்தபோது சனியன் தொலைந்தது என்று பெரியார் கூறுகிறார்எனவே பெரியார் கூறிய திராவிட நாடு என்பது தமிழ்நாடுதான் என்றும் திராவிடர் என்பது தமிழர்களைத்தான் என்றும் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் தமிழ்த்தேசியம் பேசுகின்றவர்கள் பெரியாரை இகழ்வதாக நினைத்துக்கொண்டு திராவிடத்தேசியம் நீர்த்துப்போய்விட்டது என்றும் தமிழ்த்தேசியம்தான் உண்மையானது என்றும் கூறிவரு கின்றனர்.

பேரறிஞர் அண்ணா கூறிய திராவிட நாடு கூட பொருள் பதிந்ததுதற்போது தன்னுரிமை கோரும் தமிழ்த்தேசியவாதிகள் திராவிடநாடு குறித்து அண்ணா கூறிவற்றையும் ஆழ்ந்து படிக்க வேண்டும்இவர்கள் தமிழ்த்தேசியம் என்று பேசுவதுகூட கூட்டாட்சித்தத்துவத்தின் அடிப் படையில்தான்தமிழ்நாடு தனிநாடு எனக்கோருவதில்லை.

No comments:

Post a Comment