Wednesday, January 29, 2020

வ.ரா. பற்றி அண்ணா


.ரா. பற்றி அண்ணா

பாட்டுக்குப் பாரதி. வசனத்துக்கு .ரா. என்று அக்காலத்தவர் புகழ்ந்து பேசுவர். அத்தகைய சிறப்பினைப் பெற்ற அறிஞர் .ராவுக்கு (.ராமசாமி அய்யங்காருக்கு) நூற்றாண்டு விழா நடைபெறும் தருணமிது. நூற்றாண்டு விழா நாயகரான புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போலவே அறிஞர் .ராவும் மகாகவி பாரதியாரின் பிரதம சீடராக விளங்கினார்.

.ரா. புரட்சி எழுத்தாளராக மட்டுமின்றி புரட்சிக்காரராகவும் திகழ்ந்தார். இதனால் பலரின் உள்ளத்தைக் கவர்ந்தார். அறிஞர் அண்ணா பாரதி வழிவந்த மிகப் பெரிய சீர்திருத்தக் காரரான அறிஞர் .ரா அவர்களைப் பற்றி திராவிடர் கழகத் தளபதி என்ற நிலையில் பிராமண எதிர்ப்பு அதிதீவிரமாக இருந்த காலக் கட்டத்தில், 18.5.47 திராவிட நாடு வார இதழில் எழுதிய கட்டுரையே, ‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்என்னும் இக் கட்டுரையாகும்.

இக்கட்டுரையில் அறிஞர் அண்ணா .ராவை வியந்து, ‘புரட்சி யைத் தட்டி எழுப்புகிறார் வசன நடையிலேஎன்று கூறுகிறார். ‘.ரா. நம்மோடு இருக்க வேண்டியவர்என்று புன்னகையும் பெருமூச்சும் கலந்த குரலிலே கூறுகிறார். 1917 இல் வெளியான .ரா. எழுதியசுந்தரிஎன்னும் புதினத்தையும் ஏனைய படைப்பு களையும் விமர்சிக்கிறார்.

அண்ணா புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், காண்டேகர் பற்றி யெல்லாம் எழுதியுள்ளார்.

இவர்களுடைய அரிய படைப்புகளால் அண்ணா பெரிதும் கவர்ச்சிக்கப்பட்டிருந்தார்.

இக்கட்டுரையில் அண்ணா (.ராவின்) ‘சுந்தரி’ (என்னும் புதினம்) 1917 இல் பிறந்தவள். சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் தவழ்வதற்குத் தொடங்கும் நாட்கள் என்று கூறலாம்என்று எழுது கிறார். 1916 நவம்பர் 20 இல் பிறந்த நீதிக்கட்சியையே அவர்சுய மரியாதை இயக்கம்என்று குறிப்பிடுகிறார்.

சுயமரியாதை இயக்கம் பிறந்தது எப்போது? குடிஅரசு பிறந்த 1925 ஆண்டிலா அல்லது அதற்குப் பின்னரா? என்பது குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதுண்டு.

அண்ணா நீதிக் கட்சி (1916 ஆவது) ஆண்டையே சுயமரியாதை இயக்கம் தவழத் தொடங்கிய காலம் என்று குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது. அண்ணாவின் எழுத்தாற்றலுக்கு இவ்விமர்சனக் கட்டுரை சிறந்ததோர் உதாரணமாகும். - தி.. மெய்கண்டார்.

அக்ரகாரத்து அதிசய மனிதர்!

பாருமே! இவ்வளவு பெரிய ஞானஸ்தனாக இருந்து கேவலம் நிரீஸ்வரவாதி போலன்னோ ஆய்விட்டான். நம்ம .ராமசாமி. அய்யங்கார்னுகூடப் போட்டுக்கறதில்லை ஓய், அவன்!’ -ஆரியர்.

தீவிரமான சுயமரியாதைக்காரராகவன்றோ இருக்கிறார். எவ்வளவு அறிவு! ஆராய்ச்சி! அஞ்சாநெஞ்சுடன் பழமையைச் சாடுகிறாரே. கலையின் பேரால் நடக்கும் கபடத்தை உடைக்கிறார். மதத்தின் பேரால் நடக்கும் அக்ரமத்தை ஓங்கி அடிக்கிறார். .ரா. பெரிய சீர்திருத்த வாதி! ஆனால் .ரா. யார் தெரியுமோ? ஒரு பார்ப்பனர்’ - திராவிடர்
வைதீகப் பிச்சுகளோ எனக்கு வேம்பு! சுயமரியாதைக் காரர் களோ, வெடிகுண்டுகள்! நானோ, புது சமுதாயத்தைப் போர், புகையின்றி அமைக்க விரும்புகிறேன்’ -.ரா.

.ரா. அக்கரகாரத்து அதிசயப்பிறவி! அந்த இடத்து அறிவாளி என்றால் சாமத்துக்கு அர்த்தமும், சந்தியா வந்தனத்துக்குத் தத்துவமும், சஹஸ்ரநாமத்துக்கு வியாக்யானமும், சந்திரகுரிய கிரஹாதிகளின் உச்சஸ்தானம், பிரயாணம் ஆகியவற்றின் குணதோஷ உபதேசமும் செய்து கொண்டிருப்பவர். அல்லது அலகாபாத் தீர்ப்புக்கும் ஆமதாபாத் வாதத்துக்கும் சென்னை ஹைகோர்ட் தெரிவித்த விளக்கத்தையோ, இந்தியன் பினல் கோட் செக்ஷன்களில் இருக்கும் சந்து பொந்துகளில் நுழைய வழி கூறும் வேலையையோ அல்லது இண்டபெண்டென்சுக்கும் இண்டர் டிபெண்டென்சுக்கும் உள்ள தாரதம்மியம், அமெரிக்க செனட்டுக் கும் ஆஸ்ட்ரேலிய பார்லிமெண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஆகிய வற்றை விளக்கும் வேலையையோ, செய்பவர் என்று பொருள். .ரா. இதிலே எங்கேயும் இல்லை! அதிசயம்! குளத்தங்கரை, தவறினால், கோர்ட், இல்லையானால் தேசீய மேடை. உச்சிக் குடுமி, தலைப்பாகை, குல்லாய், முகாரி, புன்னாக வராளி, அடாணா, ருத்திராட்சப்பூனை, வரிக்குதிரை, சீறும் சிறுத்தை இப்படி இருக்க வேண்டும், அக்ரகார அறிவாளிகள், அங்கு உழன்று உபயோகத்திலே இருக்கும் அகராதியின் படி .ரா. இந்த ரகத்திலே எதிலும் இல்லை! அவர் உண்மையிலேயே அக்ர காரத்தின் அதிசயப் பிறவிதான். தேசீயக் கவி பாரதியாரின் சூழ் நிலை, இவரை ஓரளவுக்குத் தயாராக்கிற்று என்ற போதிலும் கூட்டை விட்டுப் பறந்து நெடுந்தூரம் சென்று இரைதேடி உண்டு, இடையே இனிய குரலால் பலரை மகிழ்வித்து, திசைபற்றிக் கவலை யின்றி, தங்கும் இடத்தைத் தன் இடமாகக் கொள்ளும், பாடும் பறவையானார் .ரா. பிறந்த இடம் அக்ரகாரம், இருப்பிடமோ போர்க்களம்- போர்க்களம் மட்டுமல்ல, இருதரப்புப் படையினரும் வீசும் கணைகள் விழும் இடம். அவர் மீதும் சில பல தைக்கும்.

.ராமஸ்வாமி அய்யங்கார், புரட்சிக் கருத்துக்களைப் பரப்பும் படையிலே உள்ளார். ஆனால் அணிவகுக்கப்பட்ட படையிலே அல்ல, இன்றையப் போர்முறை மொழிப்படி, ‘கொரில்லா யுத்தம்புரிபவர். அக்ரகாரம், ஒருவேளை அவரை உடன்பிறந்து கெடுப்பவர் என்று கருதக்கூடும்! நாம், அவரை இன்று தென் ஆப்பிரிக்காவிலே, சட்டமறுப்பாளருடன் சேர்ந்து கஷ்டப்படும் சில பரங்கியர் போன்ற நிலையிலே இருப்பவராகக் கொள்வோம். ஆனால் அவரை தள்ளிவிட முடியாது, இரு தரப்பும். அவர் இரண்டு பக்கத்தவரும் தம்மீது பார்வையைச் செலுத்தும் நிலையை உண்டாக்கிக் கொண்டார். அவருடன் வேறு சிலரும் உளர். உருவங்கள் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை. தெரிய வொட்டாதபடி உள்ளனரோ என்னவோ! நமக்கு இருக்கும் ஒரு வசதி, .ரா.வுக்கு இருக்க முடியாது. நாறிப்போன கொள்கைகளை நாம் சமுதாயத்திலே காணும்போது இப்படிப்பட்டவைகள் ஏன் புகுந்தன, எவர் புகுத்தினர் என்பதை விரைவிலே கண்டுபிடித்து, இவையாவும் ஆரிய சூழ்ச்சி என்று கூறுகிறோம். இதனால் விளக்க மும் பிறக்கிறது. இந்நிலையை ஒழித்தாக வேண்டும் என்ற உறுதியும்உத்வேகமும்உண்டாக்க முடிகிறது. .ரா.ஆரிய சூழ்ச்சியே இன்றுள்ள அனர்த்தங்களுக்கு மூலகாரணம் என்ற முடிவுக்கு வர முடியாது. எனவே, அவர் காலம் பூராவும் மூலத்தைக் கண்டு பிடிக்கவே செலவிட்டாகவே வேண்டும். துருவிதுருவிப்பார்த்தாக வேண்டும். அவரால் ஆரியர் செய்த சூதே சமுதாயத்தைக் கெடுத்து விட்டது என்ற முடிவுக்கு வர முடியும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நமக்கு இருக்கும் ஒரு வசதி அவருக்கு இல்லை. .ரா.வுக்கு இருக்கும் ஒரு வசதி நமக்குக் கிடையாது! என்னதான் காரணம் காட்டினாலும், ஆராய்ச்சிகளைக் கொட்டினாலும் நமது வாதங்களைச் சுலபத்திலே அலட்சியப்படுத்திவிட முடியும். ‘வகுப்புத் துவேஷிஎன்ற வார்த்தையை வீசி.
.ரா. பேசினால் அவரைவகுப்புவாதிஎன்று தூற்றி, அழித்து விட முடியாது. கோபம் தலைக்கேறினால் கூட, அவரைவிதண்டாவாதிஎன்று கூறமுடியுமே தவிர, வகுப்புத் துவேஷி என்று கண்டித்து விட முடியாது. அவருக்குக் கேடயம் இருக்கிறது!. நமக்கு அந்த வசதி இல்லை. நமக்கு வாளை எங்கே வீச வேண்டும் என்றகுறிதெரிந்துவிட்ட வசதி இருக்கிறது. அவருக்கு அந்த வசதி இல்லை! அவர், போராடுகிறார். கேடயம் தாங்கி கொண்டு அறிவு எனும் வாள் ஏந்தி. ஆனால் குறி எது? களத்திலே, அவருக்கு ஏற்படும் கவலை, அது! நமக்குள்ள கவலை, கேடயமில்லை என்பது. ஆனால் நாம் அவர் ஓர் போர் வீரர் என்பதை மறக்கவில்லை. அவர் ஓர் அதிசயப் பிறவி என்பதைக் கூறாமலிருக்கவும் முடியாது

அவருடைய ஆற்றலையும் குறைத்து மதிப்பிடவில்லை. நிலைமை யையே விளக்கினோம்.
.ரா. புரட்சிக் கருத்துக்களைக் கவிதையாக்கித் தரும் நமது கவிஞரைப் போலவே, புரட்சியைத் தான் தட்டி எழுப்புகிறார், வசன நடையிலே! நல்ல மாடி வீட்டிலே, அழகான பூந்தொட்டி களை அலங்கார மாக வரிசையாக வைத்துக் காட்டுகிறார் .ரா.

அழகிய, உயர்தரமான கோட்! அதிலே பூச்செண்டு செருகி விடுகிறார காண்டேர்கார்.
பாரதிதாசன், பூங்காவையே அமைத்துத் தருகிறார்.

காகிதப் பூஞ்சோலை, தழைமாலை, இவைகளையே தயாரிப்பவர்களும் உண்டல்லவா!! அவர்கள் போலல்ல, .ரா.வும் காண்டேர்காரும். ஆனால், அவர்கள் செய்யாததைப் புரட்சிக் கவிஞர் செய்தார். பூங்கா அமைப்பது, பூச்செண்டு செருகுவதை விட, பூந்தொட்டிகளை அடுக்கிக் காட்டுவதைவிட சிரமமான காரியம். ஆனால் சிலாக்கியமானதல்ல!! 

பூந்தொட்டிகளை எடுத்துவிடலாம். மாடிவீடு இருக்கும். எத்தனையோ மாடிவீடுகள் போல! பூச்செண்டை எடுத்து விடலாம். உடை இருக்கும்!! ஆனால் பூங்காவிருந்து மலர்ச் செடிகளை எடுக்க முடியாது. பெயரும் உருவும் அழகும் பயனும் இருக்க முடியாது! மலர்ச் செடிகளின் வாழ்விடம் பூந்தோட்டம்! அந்தத் தோட்டத்தின் உழவர் பாரதி தாசன்!! சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்து ஆண்டு இருபது ஆகிறது என்று பெருமையுடன் கூறிக் கொண்டு, அந்த இயக்கம் சமூகப் புரட்சி இயக்கம், புத்துலக அமைப்புக்கான கருவி என்பதைச் சரியாக அறிந்து கொள்ளாமல் சுயமரியாதை இயக்க மென்றால், பார்ப்பனின் உச்சிக்குடுமியையும் பிச்சுக் கொள்கை யையும் நச்சு நினைப்பையும் தவளை நடையையும் கேலி செய்வ தொன்றையே பெரு நோக்கமாக, முழு நோக்கமாகக் கொண்டது, வேறெதுவுமில்லை என்று கருதும், தோழர்கள் இருக்கக் கண்டு, மன வேதனைப்பட்டதுண்டு. .ரா. இந்த இயக்கத்தவரல்ல. ஆனால் இதிலே நாம் எதை எதை முக்கியமாக வலியுறுத்து கிறோமோ எந்த உயிர்ப்பிரச்சினையின் மீது இந்த இயக்கம் கட்டப் பட்டு இருக்கிறதோ அதனை உணர்ந்து கடந்த 30ஆண்டுகளாக எழுதியும் பேசியும் நடந்தும் வருபவர் என்பதைத் தெரிந்த கொள்ளும்போது, மகிழ்ச்சி மலரத்தான் செய்யும்.

பழைய கோட்பாடுகள் எனும் குரங்குப் பிடியிலே சிக்கிச் சமுதாயம் சீரழிகிறது. மாயாவாதம் பேசி, மக்களை மயக்கி செய லற்றவராக்கி விட்டனர் மூதாதையர். ஜாதி பேசிப் பேசி, பேதத்தை யும் பேதமையையும் வளர்த்து விட்டனர். விதவைகளையும் பொதுவாகவே மாதர்குலத்தையும் கொடுமைக்கு ஆளாக்கி விட்டனர்’.

இவையாவும் இவைகட்குத் துணையாக உள்ள எண்ணங்களுக்கு முன்னரே புகுந்திருந்தால்கூட நாம் ஆச்சரியப்படத் தேவையிராது. அவருடைய கோதைத் தீவு நாம் கண்டு அதிசயிக்கத்தக்கதாக இருப்பதற்குக் காரணம் அக்ரகார அச்சகத்திலே இப்படி ஒரு பதிப்பு வெளிவந்ததே என்பதற்கேயன்றி, இந்தக் கருத்துகளை இவர் கொண்டிருக்கிறாரே என்பதற்காக அல்ல. ஏனெனில்கோதைத் தீவுபார்க்கும் போது அது நமக்குப் பழக்கமான ஏன் ஏறக்குறைய நாம் அமைத்த இடம் போலவே தோன்றுகிறது. எனவே .ரா. நமது முகாமில் இருக்க வேண்டியவர் என்று புன்னகையும் பெரு மூச்சும் கலந்த குரலிலே கூறுவதற்குக் காரணம் கோதைத் தீவு கண்டதால் அல்ல. அவருடைய சுந்தரி நமக்கு அவரிடம் மதிப்பும், அன்பும் பிறக்கச் செய்கிறது. ஏனெனில், சுயமரியாதைச் சூறாவளிக்குப் பிறகு, உதிர்ந்த மலர் என்றுகோதைத் தீவு  கூறப் படலாம். சுந்தரி நமக்கு, அவரிடம் மதிப்பும், அன்பும் பிறக்கச் செய்கிறது. ஏனெனில், சுயமரியாதைச் சூறாவளிக்குப் பிறகு, உதிர்ந்த மலர் என்று கோதைத் தீவு கூறப்படலாம். சுந்தரி அவ்வித மல்ல! ஏறக்குறைய சுந்தரிக்கும் சுயமரியாதை வீரனுக்கும் சம வயது! நம் இயக்கம் பிறந்து வளர்கிற போது, சுந்தரியை .ரா. பெற்றெடுத்து வளர்த்துக் கொண்டு வருகிறார். இருபது ஆண்டு களுக்கு முன்பே இருந்து, வளர்ந்து வந்திருக்கிறது என்பதற்கு மறுக்க முடியாத எடுத்துக் காட்டு.

.ரா. வின் கதை அமைப்புத் திறம் கூடசுந்தரிபிறந்த போது , அவ்வளவு மெருகும் உயிரும் பெறவில்லை எண்ணலாம். ஆனால் கருத்துகள் மிக மகித் தாராளமாக அன்றே நடமாடத் தொடங்கி விட்டன. மாடி வீட்டின் அமைப்பு நம்மைக் கவர்ச்சியில் ஆழ்த்து வதைவிட நான் முன்னே சொன்னபடி அங்கு ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டிகள் நமக்குக் கவர்ச்சி தருகின்றன. சுந்தரி ஒரு மறுப்பதிப்பான காரியம் மட்டுமல்ல, பலரின் சந்தேகத்தையும் கோபத்தையும் மட்டுமல்லபரிசாகஎதிர்ப்பார்க்க முடியும் அந்தக் காரியத்துக்கு ஈடாக.

சுந்தரி’ 1917 இல் பிறந்தவள். சுயமமரியாதை இயக்கம், தமிழகத்தில் தவழ்வதற்கு தொடங்கும் நாட்கள் என்று கூறலாம். அந்த நாளிலே வெளிவந்தசுந்தரியில், காணப்படும் கருத்துக்கள் எப்படிப்பட்டவை என்பதைக் காணும்போதுதான் .ரா. அக்ரகாரத்து அதிசயப்பிறவி என்று நாம் கூற முடிகிறது. இன்று சீர்திருத்தம் பேசுவது, சுலபம்-சுவையுடையதுங்கூட. மன்மத லீலை பாடும் மாட்டுக்காரச் சிறுவனின் மதுர இசை கண்டு நாம் மகிழ லாம். ஆனால் மதிப்புத் தர வேண்டியது அதனை மலரச் செய்த இசைமணி பாகவதருக்குத்தானே!

கந்தன்: தோன்றியழிவது இந்த யாக்கை! இந்த உயிர் நீரின் மேல் குமிழி! இந்த மண்ணின் மேல் இன்பம் ஊமையன் கனவு கண்டதை யொக்கும்! சுந்தரியில் காணப்படும் ஒரு பாத்திரம் பேசுவது. 1917 இக்கு இதுதான், ‘நியாயமானதேவையானதென்று கருதப்படும் கருத்து. இந்தக் கருத்தைப் பரப்புவதே அறிஞர்கள் கடமை. கல்வி, கேள்வி இதற்கே பயன்பட வேண்டும். இந்தக் கருத்தினையே காவிய முதற்கொண்டு கதை வரையிலே புகுத்தியாக வேண்டுமென்ற நியதி இருந்த நேரம். ஆனால் .ரா. கந்தனின் பேச்சைத் தட்டிப் பேசி அவனுடைய மந்த மதியை மட்டந்தட்டி விடுகிறார். வேறொர் பேச்சின் மூலம் கந்தன் இங்ஙனம் பேசியதும் வேதாந்தம் பதில் கூறுகிறான். ‘ஆளைக் கொல்லும் தத்துவம் வி¬ளாயட்டிலே கூட என்னிடம் இனிமேல் பேசாதே. புத்தன் பாலம் முதல் இந்த தத்துவம் இந்தத் தேசத்தைப் பாழாக்கி விட்டது. இரத்தம் சுண்டிப் போய் விட்டது. தாமதம் அதிகரித்து விட்டது. விதி வலுத்துவிட்டது. பொய்ச் சன்னியாசிகள் கூட்டம் மலிந்து விட்டது. சுயநலம் மேலிட்டு விட்டது. ஆண் மக்கள் பேடிகளாகி விட்டனர். தோட்டத்தைக் காக்க வேலி கட்டுவது வழக்கம். இந்து நாகரீகம் என்ற தோட்டத்தைக் காக்க நான்கு ஜாதிகளாகிய வேலியைக் கட்டினார்கள். இந்த வேலிக்குள் நாற்பதினாயிரம் வேலிகள் முளைக்கத்தலைப்பட்டன. இந்து நாகரீகம் என்ற தோட்டத்தையே காணோம்

வேதாந்தம் இந்து மத விஷயமாகத் தரும் வியாக்யானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. வேதாந்தமோ வேறுமாதிரி பேசி யிருக்க முடியாது. .ரா.வும் வேதாந்தத்தை வேறுவிதமாகப் பேச வைத்திருக்க முடியாது. ஏனெனில் வேதாந்தமும் .ரா.வும் அக்ரகாரம், அவர்கள் ஒரு அடியாக இந்து மதம் புகுத்தப் பட்டதனாலேயே தமிழர் சமுதாயம் சீரழிந்தது என்று கூற முடியாது. அதுபோலவே தமிழராகிய நாம் நாலு ஜாதியை இந்து மதத்துக் காகக் கட்டப்பட்ட வேலி என்று ஏற்றுக் கொள்ள முடியாது. வேதாந்தம், நம்முடன் ஒட்டி வருவது- அதாவது .ரா. நம்முடன் ஒட்டி வருவது-உலகம் மாயை என்று பேசுவது தவறு. கேடு பயப்பது என்ற அளவு வரையில் உண்மை. வேதாந்தத்தின் மூலமாக மேலு பல கருத்துக்களை வெளியிடுகிறார். ‘இடபேதம்என்ற இடருக்குள் சிக்கிக் கொண்டதால் முழுநிலவைக் காட்ட முடியாத நண்பர்.

இந்த உலகம் ஒரு பெரும் சுடுகாடு. இதைவிட்டு விரைவிலே அகல வேண்டும் என்பதனாலேதான் எல்லா முயற்சிக்கும் ஊக்கம் குறைந்துவிட்டது. முயற்சி குறையச் சோம்பேறிகளாகி அறிவு குன்றி ஆத்மாவைப் பற்றிய பேச்சு மாத்திரம் அதிகரித்து யோக்யர் களாய்ப் பலர் உழைத்துச் சம்பாதித்து வைத்திருந்த பொருள்களைச் சிலர் கபடத்தினால் அபகரித்துக் கொள்ள சுய நலம் மேலிட்டு பொய் வேடம் பலபட்டு சுகம் குறைந்து மனதிலே அமைதி அற்ப மாகி, சுகம் குறைந்து மனதிலே அமைதி அற்பமாகி புழுக்களென வாழ்கிறோம்.’
அருணாசலமய்யர்- விதவா விவாகம் ஏற்பட்டுவிட்டால் இப்பொகுதிருக்கிற அத்தனை சாத்திரங்களையும் மாற்ற வேண்டும். எல்லா ஜாதிகளும் கட்டுக்கு மீறி ஒன்றாய் போய்விடும்.
வேதாந்தம்- அப்படியாகிவிட்டால் பிரளயகாலம் வந்து விடுமோ? சீமையிலே நாலு ஜாதிகள் இல்லையே. அவர்கள் செத்துவிட்டார்களா?

அருணாசலமய்யர்- அங்கேயும் மனிதர்களுக்குள்ளே வித்தியாசமில்லையா?
வேதாந்தம்- உண்டு. ஒருவன் கவி. ஒருவன் வைத்தியன். ஒருவன் வியாபாரி. வித்யாசமான குணங்கள் உள்ளவர்கள்.

சுந்தரியில் இது போன்ற சீர்திருத்தக் கருத்துத் துவையல் நிரம்ப இருக்கிறது.
மற்றொரிடத்தில் .ரா., ராமர் மீது வழக்குத் தொடுக்கிறார்.

சீதையிடம் ராமனுக்கு இருந்த காதல் சிறந்ததே. பிள்ளை களுக்குப் பெண்களிடமிருக்க வேண்டிய காதலின் ஒரு மாதிரி. ஆனால் ராமன், வண்ணான் பேச்சைக் கேட்டுச் சீதையைக் காட்டுக்கு அனுப்பினதை எதையோ எண்ணிக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் எழுதிவிட்டார். ராமனை நல்ல அரசனாக்க   எண்ணி மனிதனுடைய சாதாரண அன்பு அவரிடம் இல்லாமல் அடித்துவிட்டார். கர்ப்ப சமயத்திலே சீதையைக் காட்டுக்கனுப் புதல் அவளுக்குச் சாவையுண்டாக்கவும் கூடும் என்று ராமன் எண்ணினதில்லை போலும். பிறர் வம்புப் பேச்சு, சிறிய மனிதர் களின் சோதனைக் கருவி. இராமன் இதைக் கைக்கொண்டு ஸ்திரிக்க உயிர்தோழன் என்று காட்டிக் கொள்ளத் தவறினார்அச்சமும் தைரியமும் போட்டியிட்டு, .ரா.வை அலைக்கழிக்கிறது இங்கே. இராமன் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்று தைரிய மாகத்தான் கிளம்புகிறார். மறுபடி அஞ்சுகிறார். சுற்று முற்றும் பார்க்கிறார். ஒரு அடி எடுத்து வைக்கிறார்.  முடிவில் தவறிவிட்டார் என்று தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சொல்லி யும் விடுகிறார். ஆனால் இது 1917 இல்!

இந்த எண்ணத்துடன் இன்றைய சேதுபிள்ளைகளின் எண்ணத்தை ஒப்பிடும் போது என்ன எண்ணம் நமக்கு வரும். சுந்தரியில் சில இடங்களிலே .ரா. சிரமப்பட்டிருக்கிறார்

காலத்தையும் மீற வேண்டும். கட்டுத் திட்டத்தையும் மீற வேண்டும். குலத்¬யும் உதாசீனம் செய்துவிடக் கூடாது. இவ்வளவு இடையூறகளுக்கிடையேசுந்தரியைத் தீட்டி இருக்கிறார். ஆனால் கூடுமான வரையில் முற்போக்குக் கொள்கைகளைப் பச்சையாகச் சொல்வதைவிட ஒரு பெண்ணின்- சுந்தரியின் அதிலும் ஒரு விதவையின் கதை மூலமாக சொல்வோம் என்று திட்டமிட்டுச் சொல்லியிருக்கிறார். இதற்கே அவருக்கு எதிர்ப்பு இருந்தது. இன்றும் எதிர்ப்பு இருக்கிறது என்று .ரா. என்னிடம் கூறினார் ஓர் ஆண்டுக்கு முன்பு இருக்கும்.

ஆனால் அந்த எதிர்ப்புக்கும் அதேவிதமான கருத்துக்களைப் பரப்பும் 
சுயமரியாதைக்காரர்களுக்குள்ள எதிர்ப்புக்கும் பெரிய பயங்கரமான வித்யாசம். அவர் மீதுரப்பர் பாம்புவீசப்படுகிறது. சுயமரியாதைக்காரன் மீது நாகம் வீசப்படுகிறது! ‘சுந்தரியில் காணப்படும் முற்போக்கான கருத்துக்களைவிடத் தீவிரமான கருத்துக்கள், மூலக் கருத்துக்கள், அச்சமின்றி, தெளிவாக, குடிஅரசுப் பதிப்பகத்தின் எந்த ஏட்டிலும் கிடைக்கும். எட்டணா செலவு போதும். சுந்தரியின்  விலை ஐந்து ரூபாய். நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஐந்து ரூபாய் கொடுத்து நண்பர்கள்சுந்தரியை வாங்கும் போது! சுயமரியாதை இயக்கத்தை வீணாக எதிர்த்த குற்றத்துக்காக அறிவு உலகம், விதிக்கும் அபராதத் தொகை 4-8-0 என்றே நான் கருதிக் களிக்கிறேன்.

சுந்தரியில் 1917 இல் அன்பர் .ரா. விதைத்த கருத்துகளின் மலர்கள் கனிகள் அவருடைய புதிய புதிய ஏடுகளிலே எழிலுடன் விளங்குகின்றன. தன்னந்தனியாக நின்று அக்ரகாரத்திலேயே இருந்த வண்ணம் அறிவுக்காகப் போராடிய இந்த அதிசய மனிதர் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பும் பெரும்படையிலே ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்குகிறார் (18.5.47 திராவிட நாடு).

No comments:

Post a Comment