Wednesday, December 1, 2021

பத்தாங் பெர்சுந்தை ம.தி.க. கிளை சார்பில் 9.10.2016 அன்று நடைபெற்ற பெரியார் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கவி ஆற்றிய உரை

 பத்தாங் பெர்சுந்தை ம.தி.க. கிளை சார்பில் 9.10.2016 அன்று நடைபெற்ற பெரியார் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கவி ஆற்றிய உரை


பத்தாங் பெர்சுந்தை ம.தி.க. கிளை சார்பில் நடைபெறும் பெரியார் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவின் தலைவர், அய்யா தமிழ்வேந்தன் அவர்களே, ம.தி.க. தேசியத் தலைவர் அய்யா காந்தராஜ் அவர்களே, வரவேற்புரை ஆற்றிய மோகன் அவர்களே, சிலாங்கூர் மாநில ம.தி.க. தலைவர் அய்யா த.பரமசிவம் அவர்களே, பத்தாங் பெர்சுந்தை கிளை உறுப்பினர்களே, சான்றோர்களே வணக்கம்.

பெரியாரும் தமிழும் என்ற தலைப்பிற்குள் போவதற்கு முன் இக்கிளைப் பற்றிய சில செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

பத்தாங் பர்சுந்தையில் 70 ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதைக் கொள்கைப் பிடிப்போடு இருந்தவர்கள் அய்யா திராவிட மணி நல்லதம்பி, இரும்பு மனிதர்என்று அழைக்கப்பட்ட நா.மாணிக்கம் மற்றும் டி.சவரிமுத்து, ரத்தனம் போன்றவர்கள்.

அய்யா மாணிக்கம் அவர்கள் தான் மட்டுமல்லாது, தனது தங்கைகளுக்கும் சுயமரியாதை திருமணம் செய்து வைத்தவர். 

17.7.1955 இல் இக்கிளை தொடங்கப்பட்ட போது திராவிடமணி நல்லதம்பி அவர்கள் தலைவராகவும் நா.மாணிக்கம் செயலாளராகவும் இருந்திருக்கிறார்கள். அப்போதய தேசியத் தலைவர் ஜி.குமாரசாமி அவர்கள் தலைமையில் இக்கிளை திறப்புவிழா கண்டது.  ப.மணியரசு, கா.ப.சாமி, கோலக்கிள்ளான் ஆ. சுப்பையா, அ.மு. திருநாவுக்கரசு போன்ற தலைவர்கள் எல்லாம் கலந்துகொண்டுள்ளார்கள்.

இந்தப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் இருந்த ஈச்ச மரத் தோட்டம், ஒமுடு தோட்டம், ரிவர்சைடு தோட்டம் மற்றும் புக்கிட் ரோத்தான் ஆகிய பகுதிகளில் சுயமரியாதைக் கொள்கைகளை இக்கிளை பரப்பியது.

சாதியின் பெயரால் தொழில் செய்வதை இழிவு என்று கூறிய காரணத்தால் அய்யா திராவிட மணி நல்லதம்பி அவர்கள் பத்தாங் பெர்சுந்தையிலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வுகளும் நடந்திருக்கிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொண்டு பெரியாரும் தமிழும் என்ற தலைப்பிற்குள் செல்கிறேன்.

பெரியார் அவர்கள் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் மலாயாப் பெரியார் அ.சி.சுப்பையா அவர்கள் கோ. சாரங்கபாணி துணை ஆசிரியராக இருந்த முன்னேற்றம் இதழில் 1933 இல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற தொடர்கட்டுரையை எழுதி வந்தார். அதை பெரியார் அவர்கள் தனது பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில்  நூலாக 1935 ஆகஸ்டில் வெளியிட்டார். ஆனால் 1935 ஜனவரி 15 குடிஅரசு இதழிலேயே தமிழ்ச் சீர்திருத்த எழுத்துக்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். 

அதே 1935 இல் மறைமலையடிகள் எழுதிய அறிவுரைக் கொத்து என்னும் நூலிலிருந்து தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும் என்ற கட்டுரை பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பாடப்பகுதியாக இருந்தது. அதை அவர்கள் எடுத்துவிட்டார்கள். இதை எதிர்த்து பெரியாரும் அவருடைய குடிஅரசு இதழும் போராட்டம் நடத்தியது. நாடு முழுவதும் மறைமலையடிகளுக்கு ஆதரவாக நடந்த கூட்டங்களுக்கு ஆதரவளித்தது. இப்படி பெரியார் அவர்கள் தமிழுக்குத் துணையாக நின்றார்.

1938 இல் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம். அது தமிழ் மொழியைக் காப்பதற்கான போராட்டம். நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலைஅடிகள் போன்ற பல தமிழறிஞர்கள் பங்கேற்ற போராட்டம். அதில் பெரியாருக்கு ஒன்றை ஆண்டுகாலம் சிறைத்தண்டனை கிடைத்தது. 1938 இறுதியில் கைது செய்யப்பட்டவர் 1939 மே மாதத்தில் 6 மாதத்தில் விடுவிக்கப்படுகிறார். அந்த போராட்டத்தின் இறுதியில்தான் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார் பெரியார்.

சிறையில் இருந்த அந்த காலக்கட்டதில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தன. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறைமலையடிகள் மகள் நீலாம்பிகையார் தலைமையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் தரப்பட்டது. சிறையில் இருக்கும் பெரியாருக்கு ஒரு வரலாறு இல்லையே என்ற கவலையோடு அய்யா சாமி.சிதம்பரனார் அவர்கள் குறுகிய காலத்தில் பெரியார் வரலாற்றை எழுதி பெரியாரிடமே காட்டி, ஒவ்வொன்றுக்கும் ஒப்புதல் பெற்று தமிழர் தலைவர் பெரியார் என்ற நூலை வெளியிட்டார்.

1941 இல் தமிழிசை மாநாடு ஒன்றை அண்ணாமலை அரசர் கூட்டினார். நான்குநாட்கள் தமிழிசைக்காவே நடந்த மாநாடு. வழக்கம் போல பார்ப்பனர்களும் அதில் கலந்து கொண்டார்கள். தமிழிசையிலேயே பாடல்கள் பாடினாலும் சில பாடல்கள் பிற மொழிகளிலும் பாட வேண்டும் என்று டைகர் வரதாச்சாரி கூறினார். எம்.எஸ். இராமசாமி அய்யர் தெலுங்கு மொழியிலும் பாடல்கள் பாட வேண்டும் என்றார். 

தமிழிசை மாநாடு குறித்த கட்டுரையையும் ஆசிரிய வுரையும் இந்து நாளிதழ் எழுதியது. அதில், தமிழிசை இயக்கம் இசைக்கலை வளர்ச்சிக்கு இடையூறாய் பொது மக்களின் கலை உணர்ச்சியை தாழ்த்தக் கூடும் என்று நஞ்சைக் கக்கியது.

அதன்பிறகு பெரியார் தலைமையில் திருச்சியில் நடந்த கூட்டத்தில் இளவரசர் முத்தையவேள் அவர்கள் தமிழிசை இயக்கத்தின் நோக்கத்தை விரிவாக கூறினார், அவர் கருத்தை வரவேற்ற பெரியார், இந்து நாளிதழுக்கு கண்டனம் தெரிவித்து உரைநிகழச்தினார். இப்படி தமிழ் இசைக்கும் பெரியார் ஆதரவாக நின்றார்.

1949 இல் பெரியார் அவர்கள் திருக்குறள் மாநாடு நடத்தினார். பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு.

 அதில்  திரு. சி. இலக்குவனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், திரு.வி.கல் யாணசுந்தரனார்,  நாவலர் சோமசுந்தர பாரதியார், திருக்குறள் முனுசாமி, கா.அப்பாதுரையார், சக்கரவர்த்தி நாயனார், புலவர் குழந்தை,  பெரும்புலவர் டி.எஸ். கந்தசாமி முதலியார், எஸ். முத்தையா முதலியார், கலைவாணர் என்.எஸ். கிருட்டிணன், அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்ற அறிவாய்ந்த தமிழ்ப் பெருமக்களைப் பங்கு பெறச் செய்தார். 

இப்படி புலவர்களிடம் மட்டுமே உலவிக் கொண்டிருந்த திருக்குறளை பொதுமக்களிடையே கொண்டு சென்றவர் பெரியார்.

தனித் தமிழ் குறித்தும் தமிழ் பண்பாடு குறித்தும் பெரியார் கூறுகிறார்,

சாதி என்ற வட மொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்க¼eன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தையில்லையே! ஆதலால் நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும் இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதி பேத உணர்ச்சி அற்றுப் போகுமா, இல்லையா? கூறுங்க¼eன். 

இதே போல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள்‡வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால்  நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்

கன்னிகாதானம் என்பதற்குத் தமிழ் வார்த்தை ஒன்று கண்டு பிடியுங்க¼eன். திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை என்றுதானே கூறுகிறார். அதாவது புரு­னும் மனைவியும் சிநேகிதர்கள், நண்பர்கள் என்றுதானே அதற்கு பொருள். 

மோட்சம் என்பதற்குத் தமிழ் வார்தை ஏது? மோட்சத்தை நாடி எத்தனை தமிழர் காலத்தையும் கருத்தையும் பொருçeயும் வீணாக்குகிறார்கள். கவனியுங்கள். மதம் என்பதற்குத் தமிழில் மொழியேது? மதம் என்ற வார்த்தையால் ஏற்பட்டதுதானே மதவெறி? . ஆத்மா என்ற வார்த்தைக்குத் தமிழில் மொழியேது? 

 நம் நாட்டுச் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தும் கருத்துக்களின் செழுமையைப் பொறுத்தும் நமக்குத் தமிழ்தான் உயர்ந்த மொழியாகும். வடநாட்டானுடைய ஆச்சாரங்கள், தர்மங்கள், ஆசாபாசங்கள் முற்றிலும் நமக்கு மாறுபட்டவை.

தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பெரியார், 

அது என் தாய் மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவ பெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்ட தென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது. எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? 

தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்eது. இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விeங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்கçe நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்e இழிவுகள் நீங்கு வதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழி யமைப்பிலுள்e நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால் தான் அதையும் கூடாதென்கிறேன். 

நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி‡ தமிழை விட மேலான ஒரு மொழி இந் நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்கçe விçeவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல என்று கூறுகிறார்.

இவ்வeவு ஆழ்ந்த விeக்கத்தை தமிழ் மொழிக்குக் கொடுத்த பெரியார்,  தமிழிலிருந்து சிதைந்தவைதான் மலையாeம், தெலுங்கு  மற்றும் கன்னடம் என்று வலியுறுத்திய பெரியார் மேலும் விeக்குகிறார்,

என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாeம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகயeன்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகயeன்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது  தமிழ் தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப் பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன்

நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்கçeக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்e வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை.

மொழிக் கொள்கை என்றால் தனி நாடு பெற்றால் நாட்டில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக எந்த மொழி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது ஆகும். இது தொடர்பாக இங்கு பெரியார் கூறி பதிவு செய்துள்eதை அவர் கூர்ந்து கவனிக்க வேண்டும்,

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு‡தமிழ் நாட்டைப் பற்றி நினைத்துக் கொண்டு தமிழ் நாட்டுக்கு அரசியலுக் கானாலும், இலக்கியத்திற் கானாலும் போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது தமிழ் மொழி தான் 

இவ்வளவு கூறிய பெரியார் பின் ஏன் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்? அதற்கு காரணம் தமிழ்ப்புலவர்கள் மீது அவர் கொண்டிருந்த கோபம். தமிழ்ப் புலவர்களைப் பற்றிச் சொல்கிறார் பெரியார்,

வள்ளுவரை மன்னிக் கலாம். மற்ற எந்த புலவனையும், எந்த இலக்கியத்தையும் மன்னிக்க முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை வரை யில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள் 

 “சுமார் 50. 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் புலவர்கள் யாரா யிருந்தாலும் பிச்சை எடுத்தே தீருவார்கள்.  அவர்கள் தகுதி எல்லாம் இலக்கியங்கçe உருப்போட்டு ஒரு சொல்லுக்குப் பல பொருள் சொல்லி, மக்கçe மருeச் செய்து, காசு வாங்குவதுதான் உயர்ந்த தொழிலாகும். 

புலவரைப் பற்றி என் கருத்து புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் உரை கூறுவேன். நா.கதிரைவேற்பிள்çe என்கின்ற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்த போது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடமும் கண்டேன் என்று சொன்னதற்கு உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்து விட்டார்.

இது வரை நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு இந்த நாட்டில் எந்தப் புலவனாலும் வeர்ச்சி, அபிவிருத்தி காரியமும் ஆனது கிடையாது. அதற்கு தகுதியான புலவன் இன்று இங்கு யாரும் இல்லை. எந்த புலவனாலும் இதுவரை நமது நாட்டுக்கு சிறு மதிப்பிற்குரிய முன்னேற்ற நூல் கூட உண்டாக்கப்பட்டதில்லையே! கம்பராமா யணத்திற்கும் பெரிய புராணத்திற்கும் புதிய பொருள் எழுதிப் பணம் சம்பாதிப்பார்கள்”.

“இன்று தமிழில் மேதாவிகள் டாக்டர்கள் ஏராeமாக ஆகி விட்டார் கள். பூச்சும் பொட்டும் நாமமும் தான். அவர்கள் தலையில் இருக்க வேண்டியது அறவே இல்லை. புலவரை இடித்துரைக்க இந்த நாட்டில் என்னைத் தவிர வேறு எவரும் முன்வரப் பயப்படுகிறார்கள்.

இதனால் தமிழ்ப்புலவர்கள் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்கிறார் பெரியார் என்று திசை திருப்பிவிட்டார்கள். பார்ப்பனர்கள் தங்களை பெரியார் எதிர்ப்பதை கடவுள் இல்லை என்கிறார் என்று திசை திருப்பியது போலவே தமிழ்ப் புலவர்கள் செய்தார்கள், செய்து வருகிறார்கள் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment