Wednesday, May 11, 2022

நாகம்மையார் மறைவு

 ''முதல் வரியை வாசித்ததும் இரண்டாம் வரியில் இருந்து அவர் அப்படியே திரும்பச் சொல்லத் தொடங்கினார்.''

“நாங்கள் சேர்த்துவைத்திருந்த பெரியாரின் கட்டுரைகளில் இரங்கல் கடிதங்கள் என்று ஒரு பகுதி உண்டு. அதில் நாகம்மை மறைவுக்கு எழுதியதைச் சேர்க்கலாமே என்றார் பெரியார்.  அது எப்படியோ விடுபட்டுப் போயிருந்தது.  மறுநாளே தேடி எடுத்து அந்தக் கட்டுரையைக் கொண்டு போனேன்; அதை வாசிக்கச் சொன்னார்.    

முதல் வரியை வாசித்ததும் இரண்டாம் வரியில் இருந்து அவர் அப்படியே திரும்பச் சொல்லத் தொடங்கினார். 

'‘நாகம்மை இறந்துபோனதை ஒரு துணை போயிற்று என்று சொல்வேனா? ஓர் அமைச்சு போயிற்று என்று சொல்வேனா? ஓர் அடிமை போயிற்று என்று சொல்வேனா?  எல்லாம் போயிற்று என்று சொல்வேனா?..’ என நினைவில் இருந்து சொல்லத் தொடங்கி விட்டார்.தம் தழுதழுத்த குரலில் இப்படிச் சொல்லி முடித்துவிட்டுக் கண்கலங்கினார் பெரியார்.   

நாகம்மை இறந்தது 1933இல்.நான் இதை வாசித்துக் காண்பித்தது 1973இல் .  ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள்.''  

-  15.11.2009 அன்று வெளிவந்த தினமணி கதிர் இதழில் வே.ஆனைமுத்து அவர்கள்.

No comments:

Post a Comment