கே. ராஜூ புதிய ஆசிரியன்
ஜுன் 13 பதிவு…
வரலாற்றில் இடம் பிடித்த சார்லஸ் பிராட்லா
நாத்திகம் பேசியதால்.. பதவியேற்பு நிறுத்தப்பட்டு,
நான்கு முறை நடந்த மறு தேர்தல்களிலும் வென்று..சாதனை படைத்தவர் சரித்திர நாயகர் சார்லஸ் பிராட்லா (1833 – 1891).
இவரின் பிடிவாதத்தால்
பிரிட்டனின் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.
சார்லஸ் பிராட்லா, நாத்திகர்.
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
" கடவுளின் சாட்சியாக"பதவி ஏற்குமாறு கூறினார்கள்.
ஆனால் அவரோ,
"இல்லாத கடவுளை நான் சாட்சிக்கு அழைத்துவர முடியாது" என்று கூறி,
கடவுளின் பெயரால் பதவி ஏற்க உறுதியாக மறுத்துவிட்டார்.
"உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா? இல்லையா? என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை;
இந்தப் பேரவை நம்புகின்றது,
இந்த நாட்டின் அரசு அமைப்புச் சட்டம் நம்புகின்றது, அதற்குக் கட்டுப்பட்டவர் நீங்கள்; எனவே, 'கடவுள் சாட்சியாக' என்று கூறித்தான் நீங்கள் பதவி ஏற்க வேண்டும்;
அதற்கு நீங்கள் மறுப்பீர்களேயானால் உங்கள் தேர்வு நீக்கப்படும்" என்றார்கள்.
அதற்கு சார்லஸ் பிராட்லா,
"இந்தப் பதவி ஐந்து ஆண்டுகள்தான்;
இதற்காக, என் வாழ்நாள் முழுமையும் நான் கட்டிக்காத்துவரும் என்கொள்கைகளை விட்டுவிடமுடியாது;
நீங்கள், உங்கள் விருப்பப்படி செய்து கொள்ளலாம் என்று கூறி விட்டார்.
அவர்களும் அவர் உறுப்பினர் ஆக முடியாது என்று அறிவித்தனர்.
அவருடைய தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடந்தது;
மீண்டும் பிராட்லா போட்டியிட்டார்;
மீண்டும் வெற்றிபெற்றார்;
மீண்டும் அதே பிரச்சனை!
"எனக்கு ஒரு கொள்கை - ஒரு நம்பிக்கை இருக்கின்றது... அதை எந்தக் காரணத்திற்காகவும் என்னால் விட்டுத்தர இயலாது"
என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் பிராட்லா.
மீண்டும் அவர் தொகுதிக்குத் தேர்தல் நடந்தது.
மூன்றாவது முறையும் பிராட்லா போட்டியிட்டார்; இந்த முறை முந்தைய இரண்டுமுறை வாங்கிய வாக்குகளைவிடக் கூடுதல் வாக்குகள் வாங வெற்றி பெற்றார் பிராட்லா!
இம்முறை கெஞ்சினார்கள்
"தயவுசெய்து பிடிவாதம் பிடிக்காமல் இந்த அவையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள்;
பிராட்லா மிகவும் உறுதியாகச் சொன்னார்,
"நான் யார், என் கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டுதான் என் தொகுதி மக்கள் என்னை மீண்டும் மீண்டும் தேர்ந்து எடுக்கிறார்கள்;
என் தேர்வை நீக்குவதன் மூலமாக என்னைத் தேர்ந்து எடுத்த மக்களை நீங்கள் அவமதிக்கின்றீர்கள்; அவர்களுடைய உரிமைகளை இழிவு செய்கின்றீர்கள்; அவர்களுடைய தன்மானத்தைச் சோதிக்கின்றீர்கள்"
என்று கடுமை காட்டிய பிராட்லா,
"இதற்குமேல் பேச என்னிடம் எதுவும் இல்லை" என்று கூறி விட்டார்.
இந்த முறை பிரிட்டன் நாடாளுமன்றம் பணிந்தது.
"தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கடவுளின் பெயரால் மட்டும் அன்றி மனச்சாட்சியின் பெயராலும் பதவி ஏற்கலாம்" என பிரிட்டனின் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.
இன்று பகுத்தறிவுவாதிகள் உட்பட பலருமே மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்பதற்கு சார்லஸ் பிராட்லாதான் காரணம்.
No comments:
Post a Comment