Monday, May 8, 2023

ஸ்டெர்லைட் நச்சு ஆலை எதிர்ப்பு நடைபயண நிறைவு விழாவில் வைகோ பேச்சு

 மக்களின் உயிர்குடிக்கும் தொழிற்சாலை மூடப்பட வேண்டாமா?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட நடைப்பயண நிறைவுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேச்சு!

ஜூன் 2,3,4 ஆகிய தேதிகளில் திருவைகுண்டத்திலிருந்து  தூத்துக்குடி வரை நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பிரச்சார நடைப்பயணத்தின் நிறைவில்  தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கழகப்பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் சிறப்புரை:‡

கடந்த மூன்று தினங்களாக நெருப்பு வெயிலில் நெஞ்சுறுதியோடு நடந்து அடுத்தக் கட்டப்போராட்டத்திற்கு அறைகூவல் விடுகின்ற உணர்வோடு வந்து இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். எங்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்திக் கொண்டிருக்கின்ற பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இங்கே வந்திருக்கின்றார்கள். தடைகளைக் கடக்கவும் சோதனைகளை எதிர்கொள்ளவும் உயிர்த்தியாகம் செய்வதற்கும் தயாராக இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான கழகத்தில் ஆற்றல்மிக்க அடலேறுகள் என்னோடு நடந்து வந்தார்கள்; அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1996 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் நான் இதே திடலில் இதே நேரத்தில் உரையாற்றிய போது ‡ பொதுத் தேர்தலில் நாங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டால் என்ன செய்வோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்த நேரத்தில் ‡ ஒன்றை உறுதிபடச் சொன்னேன். நாங்கள் அரசுப் பொறுப்புக்கு வருகின்ற வாய்ப்பை இந்த நாட்டின் வாக்காளர் மன்றம் தருமானால் நாங்கள் எடுக்கின்ற முதல் நடவடிக்கை ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை இழுத்து மூடுவோம் என்று தெரிவித்தேன். தேர்தல் நேரத்திலே ஒரு பேச்சும், தேர்தலுக்குப் பின்னர் நிலையை மாற்றிக் கொள்வதும், மறுமலர்ச்சி தி.மு.கழகம்  எந்நாளும் பின்பற்றாது.

இன்றைய ஆளுங்கட்சி ஸ்டெர்லைட்டைத் தொடக்கத்தில் எதிர்த்தது ‡ இன்றைக்கு அதன் ஊதுகுழலாக மாறியிருக்கின்றது. அதற்கான காரணங்களை நான் விளக்க விரும்பவில்லை ‡ மக்களுக்குத் தெரியும். இந்தப் போராட்டத்தைப் பல அமைப்புகள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக் கின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கத்திலிருந்து இன்று வரை எதிர்த்துக் கொண்டிருக்கின்றது. தேர்தல் களத்தில் நாங்கள் வேறுபட்டு நின்றாலும், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் அருமைச் சகோதரர் அப்பாத்துரை அவர்கள் இந்தப் போராட்டக்களத்தில் கரங் கோர்த்து நிற்பதோடு மட்டுமல்ல, அடுத்தக்கட்டப் போராட்டத்திற்கும் அவர் களத்திற்கு வருவார் என்பதையும் நான் இங்கே நினைவூட்ட விரும்பு கின்றேன்.

அதைப் போலவே மீனவர் நல அமைப்புககள், ஜனதா தளத்தின் துணை அமைப்புகள், பல்வேறு அமைப்புகளின் சார்பிலே போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. டிசம்பர் திங்களில் குரூஸ் பெர்ணாந்து சிலைக்கருகில் பல்லாயிரக்கணக்Vன தோழர்கள் உண்ணாநோன்பிருந் தோம். மக்கள் நம்பிக்கையோ போராட்டத்தை ஆதரிக்கத் தொடங்கினார்கள். அந்த மேடைக்கும் அப்பாத்துரை வந்தார். அண்ணா தி.மு.க. நகர்மன்றத் தலைவர் யஹன்றி வந்தார். மீண்டும் இந்த ஆண்டு பிப்ரவரி திங்களில் அதே குரூஸ் பெர்ணாந்து சிலைக்கருகில் மறியல் போராட்டத்திற்கு பல்லாயிரக் கணக்கணக்கிலே வந்து குழுமினோம். அநதப் போராட்டத்திலே ஏறத்தாழ 8000 பேர் கைது செய்யப்பட்டார்கள்...... மணிக்குத் தொடங்கி கைது படலம் மாலை நான்கு மணி வரை நடைபெற்றது.

அன்று கைதானவர்களில் சுமார் 6,000 பேருக்குத்தான் உணவு வழங்க முடிந்தது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவில்லை ‡ நானும் உணவருந்தவில்லை. அவர்களையயல்லாம் மைதானத்தில் ஒன்றாக அமரவைத்து நான் பேசினேன். பசியைத் தாங்கிக் கொண்டு 6,000 மைல்கள் நடந்த மாவோவினுடைய படை வீரர்கள் எப்படிப்பட்ட வீரத்தை நிலை நாட்டினார்கள் என்பதை எடுத்துச் சொன்னேன். தொடர்ந்து பேசுங்கள், பேசுங்கள் என்று தோழர்கள் உரத்த முழக்கமிட்டார்கள். நான் ஒரு மணி நேரம் பேசினேன். என்னுடைய நா வலிக்கக் கூடிய அளவிற்கு நான் அங்கே உரையாற்றினேன். தாகத்தால் வறண்டு போயிற்று. கடைசியில் அன்று கைது செய்யப்பட்ட அனைவரையும் சிறைச்சாலையில் அடைக்க இடமில்லாத காரணத்தினால் எங்களை விடுதலை செய்தார்கள்.

அந்தப் போராட்டத்திற்காகக் காலையிலேயே பெட்டி படுக்கைகளோடு வந்த தோழர்கள் கலைந்து சென்றார்கள். சிறைக் கொட்டடியின் வாசல் கதவுகளைத் தட்டுகின்ற நெஞ்சுறுதியோடு வந்த அந்த பட்டாளம்தான் இன்றைக்கும் வந்திருக்கின்றது. இன்று மாலையில் நம்முடைய மாவட்டச் செயலாளரிடம் காவல்துறை அதிகாரிகள் ஒரு சந்தேகத்தோடு கேட்டார்கள் ‡ பொதுக்கூட்டம் நடைபெறும்  இடத்திற்குத்தானே போகின்றீர்கள். ஸ்டெர்லைட் பக்கம் போகப்போகின்றீர்களா? என்று. நான் காவல் துறை அதிகாரிகளுக் குத் தெரிவிப்பேன் ‡ அம்மாதிரி ஏமாற்று வேலைகளில் வை.கோ ஈடுபட மாட்டான். ஸ்டெர்லைட்டுக்குப் போக வேண்டுமென்று முடிவெடுக்கின்ற போது அதை அறிவித்துவிட்டுச் செல்வோம். இந்த நாளில் இந்த நேரத்தில் இந்த இடத்திலேயிருந்து புறப்பட்டுச் செல்வோம். அப்பொழுது ஆயிரம் துப்பாக்கி கள் வந்தாலும் எங்களைத் தடுத்துவிட முடியாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். (கைத்தட்டல்). இன்று மக்கள் சக்தியைத் திரட்டுவது போர்க் களத்திற்கு எங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக.

வை.கோ. படை திரட்டிக் கொண்டு போனான் ‡ அதனாலே கலவரம் வெடித்துவிட்டது. கண்ணீர்ப் புகை பிரயோகம். துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற அளவிற்கு நிலைமை கட்டுமீறிவிட்டது. இந்த விபரீதத்திற்கு வை.கோ.தான் காரணம் என்று இட்டுகட்டி பழி போடக்கூடிய ஒரு பெரிய மனிதர் இந்த நாட்டின் முதலமைச்சராக இருக்கின்ற காரணத்தினால், ஏடுகளில் அவருடைய கருத்துத்தான் எட்டுக்காலச் செய்திகளாக ஆக்கிரமிக்க முடியுமென்ற காரணத்தினால நான் மக்களைச் சந்திக்கின்றேன். ஏழைத் தாய்மார்களைச் சந்திக்கின்றேன் ‡ உழைத்து வாழுகின்ற உப்பளத் தொழி லாளர்களைச் சந்திக்கின்றேன் ‡ கழனி வாழ் விவசாயிகளைச் சந்திக் கின்றேன். தாமிரபரணி நதிக்கரையோரத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டி ருக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்களைச் சந்திக்கின்றேன். இது உங்களுக் காக நான் நடத்துகின்ற போராட்டம்.

உங்களுக்காக நாங்கள் நடத்துகின்ற போராட்டம் இது என்பதை எடுத்துச் சொல்லத்தான் கடந்த மூன்று தினங்களாக நெருப்பு மழையில் நாங்கள் நடந்து வந்தோம். எங்களை வருத்திக் கொண்டோம். எனக்கு ஏற்பட்ட ஆறுதல் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள் எங்களை வாழ்த்தினார்கள். சாலையின் இருமருங்கிலும் கைக்குழந்தைகளை இடுப்பிலே வைத்துக் கொண்டிருந்த தாய்மார்கள், அழுக்கு உடை அணிந்த ஏழைகள் குடிசை வீடுகளின் வாயிலில் இருந்து கொண்டு முகமலர்ச்சியோடு கைகளைக் கூப்பி எங்களுக்கு வாழ்த்துச்சொன்னார்களே, அவர்களின் பிரதிநிதியாக வை.கோ. போராடுகின்றான் ‡ அவர்களின் பிரதிநிதியாக மறுமலர்ச்சி தி.மு.கழகம் போராடுகின்றது.

இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்களின் ஒலி, ஒளிப் பேழைகள் தொகுக்கப்பட்டு, இந்தத் தூத்துக்குடி நகரைச் சுற்றி 50 கல் தொலைவிற்குள் இருக்கின்ற மக்களிடத்திலே போட்டுக்காட்டப்பட்டு மேலும் மக்கள் சக்தியைத் திரட்டுகின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற காரணத்தால் இங்கே நான் பேசுகின்ற பேச்சும் பதிவு செய்யப்படுகின்றது. தொடர்ந்து மக்கள் சக்தியைத் திரட்டுகின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். ஏனெனில் மக்கள் சக்திக்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது. சட்டங்கள் மக்களுக்காகத்தான். அதிகார அமைப்பு மக்களுக்காகத்தான். மக்கள் நலன் கெடுமானால் ‡ அப்படிக் கெடுக்கின்ற சக்திகள் எதுவாக இருப்பினும் அவற்றைத் தகர்ப்பதில் தவறு கிடையாது. (கைத்தட்டல்). 

இந்தத் தூத்துக்குடியில் இருக்கின்ற அனைத்து மக்களுக்காகவும் நாங்கள் போராடுகின்றோம். ஸ்டெர்லைட் இயங்கிக் கொண்டிருக்கின்றது. நச்சுக்காற்று பரவிக் கொண்டிருக்கின்றது. தாமிரம் உற்பத்தியாகின்றது. ஆனால், நம்மை வி­ப்புகை வளைக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். அது சிறுகச் சிறுக நம்முடைய உயிர்களை அழிக்கும். நம்மவர்கள் நோய்களுக்குப் பலியாவார்கள். இப்பொழுதே நான் கேள்விப்படுகின்றேன். இந்தப் புகை நடமாட்டத்தின் காரணமாக பலருக்குத் திடீரென்று அவர்கள் துப்பும் போது ரத்தம் வருகின்றது என்கிறார்கள். ஏற்கனவே ஒருவேளை காசநோய் இருந்திருக்குமோ? என்ற கேட்டால், இல்லை. திடகாத்திரமாகத் தான் இருந்தார்கள் என்கிறார்கள்.

நாங்கள் வருகின்ற வழியிலே கைக்குழந்தைகளை  வைத்துக் கொண்டி ருந்த தாய்மார்களைப் பார்த்த போது இந்தக் குழந்தைகளின் ஆரோக்கியத் தைப் பாதுகாக்கத்தான் நாம் போராடுகின்றோம் என்ற உணர்ச்சியோடு இங்கே வந்திருக்கின்றோம். ஸ்டெர்லைட் தொழிற்சாலை எடுத்து வைக்கின்ற வாதம் என்ன? நாட்டுக்குத் தேவை காப்பர். நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தாமிரத்தை நாங்கள் உற்பத்தி செய்கின்றோம் என்று பணம் இருக்கின்ற காரணத்தினால் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் போடுகின்றார்கள். சிலரை விலைக்கு வாங்கவும் முடிகின்றது. அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஏனெனில் ஏழை கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களை நீங்கள் விலைக்கு வாங்க முடியவில்லையே? விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்களை விலைக்கு வாங்க முடியவில்லையே! இவர்கள் அனைவரும் ஒன்று திரளுவார்களானால் அதை எதிர்க்கின்ற சக்தி எது?

தாமிரம் தேவையயன்று விளம்பரம் போடுகின்ற ஸ்டெர்லைட் நிர்வாகமே, அப்படியானால் உன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்தில் இதற்கு ஏன் அனுமதி கிடைக்கவில்லை? கோவா மாநிலம் அனுமதிக்க முடியாதென்று சொன்னது. மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் கொண்டு போய் அமைத் தார்கள். பஞ்சாயத்துத் தலைவரான பாசல் மாஸ்டர் தலைமையில் 40,000 பேர் ஒன்று திரட்டி விரட்டியடித்தார்கள். அங்கே விளையக்கூடிய மாம்பழங் களின் நிறம் மாறி விடுகின்ற காரணத்திற்காக மக்கள் தெரிவித்த எதிர்ப்பைக் கண்டு சரத்பவார் அரசு கொடுத்த அனுமதியை ரத்துச் செய்தது. கொந்த ளித்து வந்த மக்கள் மீது பலாத்காரததைப் பிரயோகித்து விடாதீர்கள் என்று சொன்னார்.

அந்த தொழிற்சாலையைத் தமிழ்நாட்டிலே கொண்டு வந்து நிறுவியிருக் கிறார்கள். சிலவேர் கேட்கின்றார்கள் ‡ தொழிற்சாலை இயங்கத் தொடங்கி விட்டதே! நிறுத்த முடியுமா? என்று. சிதம்பரம் பிள்ளை உலவிய மண்ணிலிருந்தா அப்படி கேட்பது? அலைகடலையும் அடக்கியாள்கின்றது எங்கள் பிரிட்டானியம் என்று கொக்கரித்துக் கொண்டிருந்த போது, அந்த பிரிட்டானிண ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பிடறி மயிரை உலுக்குகின்ற நெஞ்சுறுதி ஏற்பட்டதே ‡ நம்மால் இது முடியுமாவென்று அவர் நினைத்தாரா? நிலைநிறுத்தப்பட்டுவிட்ட வெள்ளைக்காரன் ஆதிக்கத்தை நம்மால் தக்களி யும், இராட்டையும் கொண்டு விரட்ட முடியுமா? என்று காங்கிரஸ் காரர்கள் நினைத்தார்களா?

நான் பலமுறை சொன்னதைப் போல காலத்தின் கன்னத்தில் விழுந்த கண்ணீர்த்துளி என்று தாகூரால் வர்ணிக்கப்பட்ட தாஜ்மகாலை ‡ அது பழுபட்டுப் போய்விடுமென்று 292 தொழிற்சாலைகளை உச்சநீதிமன்றம் மூடச் செய்திருக்கின்றதே, ஒரு தாஜ்மகாலைக் காக்க 292 தொழிற்சாலை கள் மூடப்பட்டுவிட்டன. பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தெருவில் நிற்கின்றார்கள். இந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை ‡ உயிர்குடிக்கும் தொழிற்சாலை. தூத்துக்குடி மக்களின் உயிர்களோடு விளையாடுகின்ற தொழிற்சாலை மூடப்பட வேண்டாமா? அந்த நல்ல நோக்கத்திலேதான் போராடுகின்றோம் ‡ இதில் அரசியல் எதுவும் கிடையாது.

தாமிரபரணி படுகையிலே வாழுகின்ற மக்களுக்கு குடிதண்ணீர் கூட கிடையாது. ஆனால், ஸ்டெர்லைட தொழிற்சாலைக்கு ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் ? இது என்ன நியாயம்? வாடி வதங்கு கின்றது பயிர்கள் ; விவசாயி அழுது கொண்டிருக்கின்றான். தூத்துக்குடியில் கூட கடந்த பத்து நாட்களாக குடிதண்ணீர் கிடைக்கவில்லை. நான் இந்தக் கூட்டத்தின் வாயிலாக தூத்துக்குடிச் சுற்றியிருக்கின்ற கிராமத்து மக்களுக்குச் சொல்லுகின்றேன். நம் தலைக்கு எமனாக வந்திருக்கின்ற ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. தண்ணீர் போகக் கூடாது. ஒரு சொட்டுத் தண்ணீரை அனுமதித்Vலும் நம் வாழ்வுக்குக் கேடு வருமென்ற உணர்ச்சியோடு போராடுவோம். முதலமைச்சர் எத்தனை வழக்குகளை எங்கள் மீது போட்டாலும் பரவாயில்லை.

ஸ்டெர்லைட் தொழிற்சாçயில் வந்த மஞ்சள் வண்ணப் புகையைக் கண்டு அங்கிருப்பவர்களே பயப்படுகின்றார்கள். அதைக் கண்டு தங்கள் அறையைப் பூட்டிக் கொண்டதாகத் தங்கள் மேலதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுகின்றார்களே ‡ மேலதிகாரிகள் முதலமைச்சரிடம் போய் சொல்லி யிருப்பார்கள் ‡அப்படியா? மஞ்சள் வண்ணப் புகையா வருகின்றது? அது எனக்கு விருப்பமான வண்ணமாயிற்றே ‡ இருந்துவிட்டுப் போகட்டும் என்று அவர் சொல்லக்கூடும். சமீபத்தில் கூட நான் கேள்விப்பட்டேன். தென் மாவட்டங்களில் கலவரம். வயது முதிர்ந்தவர்கள் பெண்கள் பச்சிளங் குழந்தைகள் கூடத் தாக்கப்படுகின்ற துயரம் ; இரத்தமும் கண்ணீரும் ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்தக் கவலையை மறப்பதற்கு உதகை மலர்க் கண்காட்சியை ஒரு முறை பார்த்துவிட்டு வரப் போனார் நம்முடைய முதலமைச்சர்.

உதகையிலே ஒரு நிகழ்ச்சி. அந்த மேடை முழுக்க முழுக்க மஞ்சள் வண்ணத்தாலே அமைக்கப்பட்டிருக்கின்றது. மேற்கூரை, தூண்கள், தரை விரிப்புகள் அனைத்தும் மஞ்சள் வண்ணத்திலே. இது மட்டுமல்ல, 320 சால்வைகள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன ‡ ஒன்றிரண்டு சால்வைகளைத் தவிர அனைத்தும் மஞ்சள் வண்ணத்தில். அது மட்டுமல்ல ; முன் வரிசை யிலே அமர்ந்திருந்த மகளிர் அத்தனை பேரும் மஞ்சள் வண்ணச் சேலையோடு. மஞ்சளைத்தான் பார்க்க வேண்டுமென்று சோதிடர் யாரோ கூறிய காரணத்தினால் அவர் மஞ்சள் வண்ணப் புகையா வருகின்றது? அப்படியானால் ஸ்டெர்லைட்டை ஆதரிக்க இதைவிட வேறு நல்ல காரணம் சொல்ல முடியாது ‡ தொடரட்டும் ஸ்டெர்லைட் ‡ பரவட்டும் மஞ்சள் புகç என்று கூடச் சொல்லுவார் (சிரிப்பு).

இந்த நச்சுப் புகை பரவுதனாலே உயிர்கள் பலியாகும். கழிவுத் தண்ணீர் கலப்பதனால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போகும். குடி தண்ணீர் கிடைக்காது. இந்தக் கேடு அனைத்திற்கும் காரணமான  ஸ்டெர்லைட்டை எதிர்க்கின்றோம். ஸ்டெர்லைட் எங்ளை முற்றுகை போட்டிருக்கின்றது ‡அந்த நச்சுப் புகை மூலமாக. அந்த முற்றுகையை நாங்கள் உடைப்போம். இந்த முற்றுகையை உடைப்பதற்காக அங்கே ஒரு முற்றுகை நடக்கும். அதற்காக மக்களைத் திரட்டி நாங்கள் நடத்துகின்ற போராட்டம் நியாயமென்று டீக்கடையிலே, பஸ் ஸ்டாண்டிலே, ரயில்வே ஸ்டே­னிலே பத்துப் பேர் கூடுகின்ற இடத்திலே மறுமலர்ச்சி தி.மு.க., இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி, மீனவர் அமைப்புகள் நடத்துகின்ற போராட்டம் நியாயமான போராட்டம் ன்று மக்கள் சொல்வார்கள் ‡ அதைத்தான் நான் எதிர்பார்க்கின்றேன்.

என்னருமைத் தமிழ்ப் பெருங்குடி மக்களே! நாங்கள் அறிவித்து நடத்துகின்ற போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள். நெஞ்சுரத்தோடு தோள் பலத்துடன் தோழர்கள் திரண்டு வாருங்கள். வருகின்ற வழியில் என்னை சந்தித்த மீனவ சகோதரிகள் சொன்னார்கள்; போராடுங்கள் உறுதியாக நாங்களும் அந்தக் களத்திற்கு வருகின்றோம் என்று சொன்னார் கள். தன்பாடுத் தொழிலாளர்களைப் பார்த்தேன். தாய்மார்களோடு நீங்கள் போராட்டத்திற்குத் தேதி குறியுங்கள் நாங்களும் வருகின்றோம் என்று சொன்னார்கள். உழைக்கின்ற மக்கள் அனைவரும் வாருங்கள் ‡ கட்சி வித்தியாசமில்லாமல் வாருங்கள், தமிழ் மாநிலக்காங்கிரஸ் கட்சி எதிர்க் கின்றது. மார்க்சிஸ்ட் கட்சி கூட முன்பிருந்த நிலையை மாற்றிக் கொண்டுள்ள தாகக் கருதுகின்றேன். ஆளுங்கட்சியைத் தவிர அனைவரும் எதிர்க்கின்றார் கள். ஸ்டெர்லைட் அகற்றப்படும் ‡ அது வரை வை.கோ. ஓய்வெடுக்கப் போவதில்லை. ஆனால், அது காலம் கடந்துவிட்டால் ஒரு வருடம் கழித்து மூடினால் என்ன பிரயோசனம்? அதுவரை 12 மாத காலத்திற்குள் வரக்கூடிய கேட்டை நாம் எப்படிச் சரி செய்ய முடியும்? 25 வருடம் பெரும் நாசத்திற்கு நாம் ஆளாகி விடுவோம். அமெரிக்காவிலே இதே போன்ற கம்பெனி மூடப்பட்டபோதும் அதனால் ஏற்பட்ட கேடுகளைச் சரிசெய்ய அந்த கம்பெனிக்குச் செலவழிக்கப்பட்டதைப் போல நான்கு மடங்குத் தொகையைச் செலவழித்த போதும் கூட கி.பி.2007 வரை அதைச் சரி செய்ய முடியாது.

பணக்கார நாட்டிலே கூட இதுதான் நிலைமையயன்றால் ஏழை நாடாகிய நம்மால் எப்படி இந்தப் பகுதியை சரி செய்ய முடியும்? அமெரிக்காவிற்கே 25 வருடமென்றால்  மூன்று தலைமுறையானாலும் நம்மால் சரி செய்ய முடியுமா? ஆகவே உயிர்க்கொல்லியாக கழுத்திற்குக் குறி வைத்து உட்கார்ந்திருக்கின்றதே ஸ்டெர்லைட்  தொழிற்சாலை அதை வீழ்த்த வேண்டாமா? அதற்குத்தான் படைதிரட்டுகின்றோம். நடப்பது எதுவாக இருந்தாலும் எங்கள் பக்கம்தான் நியாயமென்று நாடு சொல்ல வேண்டு மென்பதற்காக இந்தக் கருத்துக்களை எடுத்து வைக்கின்றேன்.

இந்தப்போராட்டத்தை நடத்துவதற்காக ஒரு குழு அமைக்கின்றோம். ஏற்கனவே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு இயங்கிக் கொண்டிருக் கின்றது. அருமை நண்பர் அப்பாதுரை, அண்டன் கோமஸ், தமிழ் மாந்தன் இன்னும் பலர்அந்தக் குழுவிலே இருக்கின்றார்கள். அத்தனை அமைப்புகளையும் நாங்கள் மதிக்கின்றோம். அவர்களோடு கலந்து பேசி இந்தப் போராட்டத்தை நடத்துவதற்காக மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பி¼ ஒரு போராட்டக் குழுவை இப்போது நான் அறிவிக்கின்றேன். 

1. எஸ். தங்கவேலு

2. டி.எஸ்.எம். சம்பத்குமார் ‡ செயலாளர்

3. டி.ஏ.கே. இலக்குமணன்

4. டி.பி.எம். மைதீன்கான்

5. ரெத்தினராஜ்

6. ஆர். எம். சண்முகசுந்தரம்

7. அ. செங்குட்டுவன்

8. ஜேசையா

9. நாசரேத் துரை

10. குமரகுருபர இராமநாதன்

11. குட்டி (எ) சண்முக சிதம்பரம்

12. புளியங்குடி பழனிச்சாமி

13. சரணவணப் பெருமாள்

14. கோட்டு ராஜா

15. அரசன் காசிப்பெருமாள்

16. திருச்சிற்றம்பலம்

17. சோ. சுந்தரராஜ்

18. புதுக்கோட்டை செல்வம்

19. தர்மம்

இந்தப் போராட்டக் குழு ஏற்கனவே இருக்கின்ற போராட்டக் குழுவினருடன் கலந்து பேசும். அதற்குப் பிறகு போராட்டக் களத்திற்குச் செல்லுகின்ற போது அங்கே சிவப்பு கருப்பு சிவப்புக் கொடி யார் கையிலும் இருக்காது. அந்தப் போராட்டக் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அரசியல் முழக்கம் எதுவும் இருக்காது. நெல்லையிலும், விருதுநகரிலும் நாங்கள் நடத்திய மனிதச் சங்கிலியில் கொடியும் கிடையாது. கோ­மும் கிடையாது. அதைப் போலத்தான் இந்தப் போராட்டம் நடக்கின்ற போது கட்சிக் கொடிகள் இல்லாத மக்கள் போராட்டமாக, பொது நலம் காக்கின்ற போராட்டமாக நடத்திக் காட்டுவோம்.

எண்ணித் துணிக கருமம் என்ற முறையிலே அடுத்கத் கட்டத்தை நோக்கி நாங்கள் செல்வோம். இப்பகுதி மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்கின்ற உணர்ச்சியோடு செல்வோம். உயர்நீதிமன்றத்திலும் ஸ்டெர்çல் தொழிற் சாலையை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்திருந்தேன். என் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி அவர்கள் தாக்கல் செய்திருந்தார்கள். ஸ்டெர்லைட் கம்பெனி வழக்கறிஞர் அதை அனுமதிக்கக் கூடாது என்று கடுமையாக வாதாடினார். அவர்கள் தங்கள் ஆதாயத்திற்காக வாதாடினார் கள். அதை விடக் கடுமையாக வாதாடியவர் யார் தெரியுமா? தமிழ் நாடு அரசாங்க வழக்கறிஞர். எங்க அப்பன் குதிருக்குள் இல்லையயன்று சொல்வதைப் போல. உங்களுக்கு ஏனிந்த அக்கறை? உங்களுக்க என்ன இவ்வளவு ஆத்திரம்? ஆனால், உயர்நீதிமன்றம் என்னுடைய மனுவை அனுமதித்திருக்கின்றது. ஏற்கனவே ஒரு ரிட் மனு இருக்கின்றது. இந்த வழக்கு ஜூலைத் திங்களிலே எடுத்துக் கொள்ளப்படலாம். நீதிமன்றத்திலே நேரடியாக ஆஜராகி நானே வாதாட இருக்கின்றேன். நாங்கள் வன்முறையை நாடவில்லை. இந்தப் போராட்டத்திலும் அந்த உணர்வோடுதான் நாங்கள் கலந்து கொள்கின்றோம்.

வாருங்கள்! மீனவ சமுதாய மக்களே வாருங்கள்! விவசாயப் பெருங்குடி மக்களே வாருங்கள்! உப்பளத் தொழிலாளர்களே வாருங்கள்! நாட்டு மக்ளின் அக்கறையுள்ள நல்லெண்ணம் கொண்டவர்களே வாருங்கள்! முற்றுகைப் போராட்டத்தை வெற்றி பெறச்செய்யுங்கள்! (சங்கொலி, 27.6.1997).

No comments:

Post a Comment