Saturday, December 14, 2019

இலக்கணக்கடல் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகன் அவர்களின் பாராட்டுரை



முனைவர் இரா.திருமுருகன்
ஆசிரியர்தெளிதமிழ்
தலைவர்தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுபுதுச்சேரி
ஏழிசைக் குடில்
62 மறைமலையடிகள் சாலை,
புதுச்சேரி 605 001
பேசி: 0413-201191

18.5.2002

பாராட்டுகிறேன்

தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்ப வேண் டும் என்ற தணியாத வேட்கையுடன் ‘பெரியார் பார்வை’ என்ற பெயரில் அரிய பல கட்டுரைகளையும் புதிய பல செய்திகளையும் அச்சிட்டுத் திங்களிதழாக விலையின்றி வெளியிட்டுப்பரப்பும் கவிகுரு முதலிய இளைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

பெரியார் இன்று இருந்தால் அவரது பார்வையும் இன்றைய நிலைமை களுக்கேற்றபடி மாற்றமடைந்தே இருக்கும்இதழுக்குப் ‘பெரியார் பார்வை’ என்று பெயர் வைத்திருந்தாலும்அப்பார்வையின் அடிப்படையில் இருப்பது தமிழர் முன்னேற்றமே என்பதை இவர்கள் நன்கு புரிந்து கொண்டவர்களா கவே காணப்படுகிறார்கள்அதனால் இன்றைய குமுகாயப் பார்வையோடு,

1. இன்றைய ஆட்சி மொழிகல்வி மொழிச்சிக்கல்கள்
2. தமிழீழ விடுதலை
3. தேவநேயப் பாவாணரின் மொழிஇன முதன்மைக் கொள்கை
ஆகிய கருத்துக்களை வற்புறுத்தும் கட்டுரைகளையே பெரும்பாலும் அவ் விதழில் வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழ் வளர்ச்சிக்கு எதிராக உள்ளவர்கள் இரண்டு வகைப்படுவார்கள்.

1. ஆங்கில வழிக்கல்வி வணிகர்கள்இவர்களின் நோக்கம் பொருள் திரட்டுவது மட்டுமேதமிழ் மக்களின் பண்பாட்டுப் பாதுகாப்பிலும் அறிவு வளர்ச்சியிலும் இவர்களுககு அக்கறையில்லை.
2. திட்டமிட்டுத் திறமையாகத் தமிழை அழிப்பவர்கள்இவர்களின் நோக்கம் தமிழின் தனித்தன்மையையும் பெருமையையும் அழித்து வடமொழி யையும் ஆரிய பண்பாடுகளையும் உயர்த்திக் காட்டுவதில் இவர்களுக்கு அக்கறை மிகுதி.

இக்கருத்துகளை இவ்விதழ் நன்கு வலியுறுத்துகிறதுஇதில் தொட்டவிட மெல்லாம் பகுத்தறிவுப் பார்வை தட்டுப்படுகிறதுகண்ணில் பட்டவிடமெல் லாம் மொழிப்பற்றும் இனப்பற்றும் எழுச்சியூட்டுகின்றன.

பாரதியார் காந்தியாரைச் சந்தித்தாராஎன்ற வினாவை எழுப்பி அதற்குச் சுவையானபலரும் அறியாத விடையைத் தருகிறது இவ்விதழ்.

சிலப்பதிகாரம்தேவார திருவாசகங்கள்திவ்வியப்பிரபந்தம்கம்ப ராமாயணம்பெரியபுராணம் முதலிய தமிழிலக்கியங்களைப் பெரியார் கண்டிக்கிறார்.
தேவடியாள் எப்படிப் பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோஆனால் உள்ளே போய்ப் பார்த்தால்உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும்உடலெல்லாம் நோய் கொண்டும் மக்களை ஏய்த்தும் பிழைத்துக் கொண்டிருப் பதாகக் காணப்படுகிறாளோஅது போலத்தான் இந்தச் சிலப்பதிகாரமாகும்கோவலன் ஒழுக்கமற்றவன்தாசி (மாதவிஒழுக்கமற்றவள்கண்ணகி மடப் பெண்கம்பராமாயணத்துக்கும் சிலப்பதிகாரத்துக்கும் இந்த நாட்டில் மதிப்பு இருக்கிறது என்றால் இந்த நாட்டு மக்களுக்கு அறிவும் இல்லைமானமும் இல்லைஇன உணர்ச்சியும் இல்லை என்றுதானே பொருள்?. இவைகளின் தன்மையே இப்படியிருந்தால் தேவாரம்திருவாசகம்திருமுறைபிரபந்தம்பெரியபுராணம் முதலிய குப்பை குளங்களின் யோக்கியதை எப்படி இருக்கும்?-இது பெரியார் கருத்து. (‘பெரியார் .வேராசிந்தனைகள்’ வே.ஆனைமுத்து வெளியீடு பக். 1267, 984)

மொழியில் மேம்பாடும் வெற்றியும் பெற்றுவிடுவதாலேயே நமது இழிவும்இழிவுக்கு ஆதாரமான கலாசாரமும் ஒழிந்துவிட மாட்டா. (விடுதலை 27.1.1950)- இது மொழி மேம்பாடு குறித்த பெரியாரின் கருத்து.

பசனைப் பாட்டுகள் தமிழில் இருந்தால் என்னதெலுங்கில் இருந்தால் என்னஇந்தியில் இருந்தால் என்ன அல்லது சப்பான்செர்மனி மொழியில் இருந்தால்தான் என்னகடவுளுக்கு எந்த மொழி தெரியாது? (பெரியார் பார்வை- ஏடு 14) இது தமிழிசை இயக்கம் தேவையற்றது என்று பெரியார் கூறிய கருத்துஇவர் காலத்திலேயே பேறிஞர் அண்ணாவின் தமிழிசைப் பற்றிய கருத்து இதற்கு நேர்மாறாக இருந்தது.

தமிழ்க்கலை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறவர்களைத் தமிழ்ப் பகைவர் கள்தமிழ்க்கலை விரோதிகள்தமிழரின் எதிரிகள் என்று கூறத் தொடங்கினால் அதை இல்லை என்று சொல்ல முடியுமாசங்கீதம் எந்த மொழியில் இருந்தால் என்ன என்று கூறுபவர்கள் நாதசுரமும் பிடிலும் இருக்க வாய்ப்பாட்டு வேறு ஏன் தேடுகிறார்கள்?  வாய்ப்பாட்டில் நாதமும் நெஞ்சை அள்ளும் சாகித்தியமும் இருக்கின்றது என்பதற்காகத்தான். (அண்ணாதமிழரின் மறுமலர்ச்சி).

கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்’ என்று பேசிய பேரறிஞர் அண்ணாபிற்காலத்தில் கம்பன் விழாக்களில் கலந்து கொண்டார்.

தமிழர் என்பது மொழிப்பெயர்திராவிடர் என்பது இனப்பெயர்’ என்கிறார் பெரியார்ஆனால் தமிழ் என்பது மொழிப்பெயர்தமிழர் என்பது இனப்பெயர் என்பது இன்றைய பார்வை.
சிலப்பதிகாரம்கம்பராமாயணம்  முதலியன  தமிழ் இலக்கிய வளத்தின் தன்னிகரற்ற நிலையைக் காட்டுவனதேவாரம்நாலாயிரம் முதலியன தமிழிசையின் ஈடிணையற்ற செல்வங்களாகத் தமிழ் இனத்துக்கே பெருமை தருவனஇவை கற்பனையுடன் கூடியவைஇன்ப நுகர்ச்சிக்குரிய கலைச் செல்வங்கள் என்பது ஆபிரகாம் பண்டிதர்தேவநேயப் பாவாணர் முதலிய அறிஞர்களின் தெளிவான பார்வை.
இன்று தமிழ்மொழிதமிழ்க்கலைகள்தமிழ்ப்பண்பாடுகள்தமிழ்நிலம் என்ற உணர்வுகளைப் போற்றும் தமிழ்த்தேசியக் கருத்தைப் பழநெடுமாறன் முதலிய தலைவர்கள் பரப்பித் தமிழனைத் தன்மானத்துடன் வாழச் செய்யப் பாடுபட்டு வருகின்றார்கள்.
இந்தக் கருத்து மாற்றங்களுக்கும் ‘பெரியார் பார்வை’ இடமளிப்பதைக் காணமுடிகிறது.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு.

என்ற வள்ளுவரின்பெரியாரின் பகுத்தறிவு நெறிக்கு ஒத்ததே.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய தமிழ்நாடு என்ற தமிழ் நெறியைச் சிறப்பாகப் பரப்பி வரும் பெரியார் பார்வை ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்.






No comments:

Post a Comment