Saturday, December 14, 2019

சோதிடம் ஒரு மோசடி



பல்கலைக் கழக மானியக் குழுவின் (யு.ஜி.சிமூலம் பாடத் திட்டங்களில் சேர்க்கப்பட்ட வேத சோதிடம் இன்று விஞ்ஞானிகளின் மற்றும் கல்வியாளர்களின் எதிர்ப்பை எதிர்நோக்கியுள்ளது

முன்னாள் பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் யஷ்பால் இதைக்கண்டித்துள்ளார்

விஞ்ஞானி பார்க்கவா மற்றும் இரண்டு விஞ்ஞானிகள் இப் பாடத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்

இந்நிலையில், ‘சோதிடம் என்பது விசய ஞானமுள்ளவர்களை உருவாக்கும்ஏற்கனவே இந்தியாவில் 16 பல்கலைக் கழகங்களில்  சமஸ்கிருதம் அல்லது வேறுபாடப் பிரிவுகளுடன் சோதிடம் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறதுபனாரஸ் இந்து பல்கலைக்கழத்தில் சோதிடம் கூடுதல் பாடமாகவும் தில்லி லால்பகதூர் சாஸ்திரி சமஸ்கிருத வித்யா பீடம் தனது சமஸ்கிருத துறையில் சோதிடப்பிரிவையும் வைத்துள்ளதுஎனவே பல்கலைக் கழக மானியக்குழு பரிந்துரைப்பதற்கு முன்பே பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் இது உள்ளதுமேலும் பல்கலைக்கழக மானியக் குழு ஒதுக்கியுள்ள தொகை வெறும் இரண்டு கோடி மட்டும்தான்’ என்பது மய்ய அமைச்சர் முரளி மனோகர் ஜோசி மற்றும் பி.ஜே.பி.யினரின் மோசடி வாதமாக உள்ளது

தனிக் கல்லூரிகளோ அல்லது பல்கலைக்கழகங்களோ அவற்றை நடத்துவதில் எவ்வித தடையும் இல்லைமதச்சார்ப்பற்ற நாட்டில் ஒரு சமயத்தைச் சார்ந்த சோதிடத்தை மய்ய அரசின் கல்விக் கொள்கையாக அறிவித்துமய்ய அரசின் மானிய உதவியுடன் செயல்படும் பல்கலைக் கழக மானியக் குழு அதை செயல்படுத்துவதைதான் எதிர்க்கிறோம்இது மக்களிடையே மூட நம்பிக்கையை வளர்க்கிறதுகல்விச் செயலாளர் எம்.கே.கா என்பவர் தான் இத்தகைய கல்வியைக் காவிமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்து பவர் ஆவார்.

சோதிடத்தில் சூரியன் கிரகமாகச் (Planet) சித்தரிக்கப்படுகிறதுஇது உண்மையில் நட்சத்திரமாகும் (Star). மேலும் சூரியன் பூமியைச் சுற்று கிறது என்பதும் இவர்களது வாதமாகும்ஆனால் இது உண்மையல்லபூமியும் மற்ற கோள்களும்தான் சூரியனைச் சுற்றுகிறது என்று கோபர் நிகஸ் கூறினார்இதனால் சமயவாதிகளால் எள்ளி நகையாடப்பட்டார்இவரது இக்கொள்கையைப் பரப்பிய புருனோ (Bruno) சமயவாதிகளால் உயிரோடு கொளுத்தப்பட்டார்.

பண்டைக்காலக் கிரேக்கர்கள் கிரகங்களை கடவுள்களாக வழிபட்டு வந்தனர்அலெக்சாண்டர் படையெடுப்பால் கிரேக்க சோதிடம் இந்தியாவிற்குள் புகுந்ததுசோதிடத்தில் சூரியன்சந்திரன்ராகுகேதுபுதன்வியாழன்வெள்ளிசனி ஆகிய ஒன்பது கிரகங்கள் உள்ளதுபூமி இதில் குறிப்பிடப்படவில்லைஉண்மையில் சூரியனும் சந்திரனும் கிரகங்கள் அல்லசூரியன் ஒளிக் கோளங்களையுடைய ஒரு விண்மீன் (Star). சந்திரன் அதனைச் சுற்றிவரும் ஒரு துணைக்கோள் (Satelite). மேலும் இராகுவும் கேதுவும் கற்பனைக் கிரகங்கள்இல்லாத ராகு கிரகம் ராகு காலத்தின் மூலமும் கேது கிரகம் குளிகை காலத்தின் மூலமும் மனிதனைப் பாதிக்கின்றது என்பது முட்டாள்தனமான வாதமாகும்.

மேலும் யுரேனஸ்நெப்டியூன் மற்றும் புளோட்டோ  என்ற மூன்று கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றனஇவை பற்றி சோதிடத்தில் எந்தக் குறிப்புகளும் காணப் படுவதில்லைஇவற்றால் மனிதனுக்குப் பாதிப்பு ஏற்படாதா?

சோதிடத்திற்கு முக்கிய அடிப்படை பிறந்த தேதிநேரம்ராசி மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவையாகும்சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் மனிதனைப் பாதிக்கும் என்றால் அந்த நேரத்தை எப்படி நிர்ணயிப்பதுஏனெனில் சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் பூமியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகின்றனபிறந்த நேரத்தை நிர்ணயிக்கும் போது எட்டு நிமிடங்கள் முன்னாலேயே நிர்ணயிப்பதா அல்லது எட்டு நிமிடங்கள் கழித்து நிர்ணயிப்பதா?
பிறந்த காலம் பற்றி தந்தை பெரியார் அவர்கள் பல அடுக்கடுக்கான கேள்விகளை தொடுக்கிறார்.

 அதில், ‘பிறந்த காலம் என்பது வயிற்றுக் குள் இருக்கும் போதே ஜீவன் (உயிர்ஏற்பட்ட காலமா அல்லது வயிற்றி லிருந்து 7 ,8, 9, 10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமாஅப்படி பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமாஅல்லது ஒரு நாள்அரைநாள் குழந்தை கீழே விழாமல் கஷ்டப்டும் காலத்தில் தலை வெளியாகி நிலத்தில்பட்டு கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமாஅல்லது மருத்துவச்சி கைவிட்டு எடுத்த நேரமாஅல்லது டாக்டர் வயிற்றை அறுத்து எடுத்து நேரமாஅல்லது கால்தலை எல்லாம் மருத்துவச்சி கையில் விழுந்த நேரமாஅல்லது மருத்துவச்சி கையிலிருந்து கீழே விழுந்த நேரமாஎன்ப தெல்லாம் ஒருபுறமிருக்கஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு மாத்திரம் என்ன விசேஷம் என்பது ஒரு பக்கமிருந்தாலும் அந்த நேரத்தையாவது எப்படிக் சரியாக கண்டுபிடிக்க முடியும் என்பதை யோசிப்போம்குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடன் இருக்கிறதா இல்லையாஆணாபெண்ணாஎன்பவைகளைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும்பிறகு அந்தச் சேதியைக் கொண்டு வந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும்அந்தச் செய்தியைக் கேட்டவன் நேரத்தைக் குறிக்க அங்கேயே கெடிகாரம் இருக்க வேண்டும்.  அந்தக் கடிகாரம் சரியான மணியாக இருக்க வேண்டும்மேலும் இரண்டு கடிகாரங்கள் ஒரே சமயத்தில் ஒரே நேரத்தைக் காட்டுவ தில்லை சாதரணமாக எல்லோருக்கும் புரிந்த விசயமாகும்இப்படிபட்ட சூழ்நிலையில் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட சோதிடம் எப்படி அறிவியல் பூர்வமானதாகும்?’ என்று கேள்விக் கனைகளைத் தொடுத் துக் கொண்டே பகுத்தறிவைத் தூண்டுகின்றார்.

மேலும் சோதிடம் பற்றி தந்தை பெரியார், ‘தங்கள் வாழ்க்கைக்கு ஜோசியம் என்னும் ஒரு விஷயத்திலும் அதிக நம்பிக்கை வைத்துப் பணத் தையும் நேரத்தையும் செலவு செய்து வருகிறார்கள்இதனால் மக்களின் வாழ்க்கைக்கு எவ்வளவு கெடுதிகளும் பொருள் நஷ்டம்கால நஷ்டம்தப்பு அபிப்ராயம் முதலியவைகளும் ஏற்பட்டு வருவதைக் கண் கூடாய்ப் பார்க்கிறோம்’ என்றும் அதன் விளைவுகளைப் பற்றிக் கூறுகிறார்.
பண்டைக்காலத் தமிழகத்தில்சோதிடம் பொய்யானது என்பதை நிருபிக்கசேர அரசவையில் காலக் கணிக்கர் ஒருவர் அண்ணன் சேரன் செங்குட்டுவன் அரசனாக முடியாதுதம்பி இளங்கோவடிகளே அரசா ளுவார் என்று கூறினார்இதை முறியடிக்க தம்பி இளங்கோவடிகள் துறவறம் பூண்டுஅண்ணன் செங்குட்டுவன் அரசனாவதற்கு வழிவிட்டு சோதிடத்தை பொய்யாக்கினார்மேலும் தமிழர்கள் மகிழும்படியான சிலப்பதிகாரம் என்னும் இலக்கியத்தையும் படைத்தார்.

எனவே சோதிடம் மோசடியானது என்று சங்கக்காலத்தமிழனே நிருபித்திருக்கிறான்சாதகப் பொருத்தம் பார்த்து நடத்தப்பட்ட திருமணங்கள் எல்லாமே அவர்கள் வாழ்க்கையில் முழு மகிழ்ச்சியாக இருந் தது இல்லைநாட்டில் ஏராளமான இளம் விதவைகளும் உள்ளனர்பிரம்மரிஷி என்று கருதப்பட்ட வஷிஷடரால் இராமனின் பட்டா பிnஷக நாள் குறிக்கப்பட்டதுஆனால் இராமன் பட்டாபிnஷகம் நடை பெறவில்லைமேலும் அவரால் நாள் குறிக்கப்பட்டு நடத்தி வைக்கப்பட்ட இராமன்/சீதை திருமண வாழ்க்கையும் சோகங்களுடனே முடிவ டைந்தது.


No comments: