அண்ணாவின் திராவிடநாடு ஒரு வரலாற்று ஏடு
திராவிட இயக்க இதழ்களின் பரிதாப நிலை திராவிடரியக்கதார் இதழ் நடத்த ஏற்ற இன்னல்கள் எவர் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் செயலாளர் சர்.பி.தியாகராயர்
‘திராவிடன்’ நாளிதழை ஆதரிக்குமாறு விடுத்த உருக்கமான வேண்டுகோள் (1919)!
சர்.பி. தியாகராயர், 1916 இல் துவக்கப்பட்ட பிராமணரல்லாதரின் அரசியல் அமைப்பான, தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் செயலாளர் ; அச்சங்கத்தின் சார்பாகச் செய்தித் தாட்களைத் துவக்கி வெளியிட வேண்டுமென அமைக்கப்பட்ட ஓர் அமைப்பான தென்னிந்திய மக்கள் சங்கத்தின் செயலாளர். தியாகராயர் தம் கையயழுத்திட்டுக் கீழ்க்கண்ட வேண்டுகோளை 1919 இல் விடுத்தார். அவ்வறிக்கை பிராமணரல்லாதாரின் அக்கறையின்மையையும் அலட்சியத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
அந்நோயிலிருந்து இன்னும் அவர்கள் விடுபடவில்லை என்று, 1957 டிசம்பர் முதலாம் தேதியிட்ட 01.12.57, சண்டே அப்சர்வர் (Sunday observer) இதழில் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் அதன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டு, தியாகராயரின் அறிக்கையினை வெளியிட்டார்.
உங்கள் சிந்தனைக்கு அவ்வறிக்கை:
1916 இல் தான் பிராமணரல்லாதார் இயக்கம் உருவாக்கப்பட்டது என்பதை எவ்வித ஐயமின்றி நீங்கள் அறிவீர்கள். அவ்வியக்கத்தின் உண்மை நிலையை மக்கள் முன்பு எடுத்துக் கூறி மக்களுடைய பேராதரவையும் பெறத்தான் மூற்விமிஷ்உe (‘நீதி’) என்ற செய்தித்தாள் 1917 பிப்ரவரித் திங்கள் 27 ஆம் தேதி துவக்கப்பட்டது. அதை ஒட்டி, நான்கு திங்களுக்குப் பிறகு, 1.6.1917 இல் ‘திராவிடன்’ என்ற தமிழ் இதழும், ‘ஆந்திரப்பிரகாசிகா’ என்ற தெலுங்கு இதழும் தொடர்ந்து வெளி வந்தன.
மிகவும் இக்கட்டான நிலைகளிலும், நேச மனப்பான்மை இல்லாத நிலையிலும் தான் இவ்விதழ்கள் தங்கள் வாழ்வைத் தொடங்கின.
ஐஸ்டிஸ் இதழை வாங்காதே!
‘நீதி’ (Justice) நாளிதழ் வெளிவருவதற்கு முன்னாலேயே தல சட்டசபைக் கவுன்சிலின் உறுப்பினர்களான, ஐந்து பிராமணர்கள், அரசாங்கத்தைக் கேள்வி களுக்கு மேல் கேள்விகள் கேட்டனர். அரசாங்கத்தால், அவ்விதழுக்கு ஆதரவு தரப்படுமா என்று!
அதாவது அவ்விதழ் பிறப்பதற்கு முன்பே அவ்விதழின் கண்ணோட்டத்தைச் சிறுமைப்படுத்துவதற்காகவே இவ்விதம் கேட்கப்பட்டது.
இந்த வெறுப்பு இன்னமும் தொடர்ந்து இருக்கிறது.
அலுவலர்கள், பிராமணரல்லாதாரான உறுப்பினர்களை முடிந்தவரைக்கும் அலுவலகத்தில் அதிருப்தியையும் அச்சத்தையும் ஊட்டிப் பயமுறுத்துகின்றனர். பிராமண வக்கீல்களும் பிராமணப் பள்ளி ஆசிரியர்களும் அவ்வாறே இதழை வாங்காதவாறு செய்கின்றனர்.
இத்தகைய பெரிய பயங்கரமான எதிர்ப்பை ஏற்படுத்தி, ‘இந்து’ நாளிதழுக்கு அதிகமான அளவுக்கு அலுவலர், வக்கீல், பள்ளி ஆசிரியர் மூலம் சந்தாதாரர் களாகவும், மற்றொரு இதழான ‘நியூ இந்தியா’வுக்கு கணக்கில்லாதபடி சந்தா சேர்த்து வளர்ச்சியடையவும் , நம்முடைய இதழ்களுக்கு உறுப்பினர் தொகை மிகவும் கொஞ்சமாகவும் இருக்கும்படி செய்கின்ற அளவுக்கு, எதிர்ப்பு வேலை செய்யப்படுகிறது.
1919 இல் ரீம் விலை
போருக்கு முன் ஒரு ரீம் ரூ 4 ஆக இருந்தது. அதை ஒட்டி ரூ10 ஆகவும் உயர்ந்தது. பின் நம் இதழ்கள் தொடங்கப்பட்ட போது ரூ 16 ஆகவும் உயர்ந்ததை நினைத்துப்பார்ப்பின், நமது இயக்குநர்கள் பலவித இன்னல்களுக்கும் தொல்லை களுக்கும் இடையில் எத்தகைய பொருளாதாரப் பிடிப்புகளையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை மிக எளிதில் அறியலாம். உறுப்பினர்கள் அவ்வப் போது பணம் செலுத்தாததினால் இத் தொல்லைகள் பெருத்த அளவில், மேலும் அதிகரிக்கின்றன.
இடைவிடாத அலுவலகக் கொடுமையாலும், தோற்றத்தைப் பற்றிய நச்சுத் தன்மையான பிராமணர்களின் பொய்யுரைகளாலும் , அவ்விதழ்கள் வெகு விரைவில் மறைய நேரிடலாம்.
நாளிதழ் -வார இதழாயிற்று
காகிதப் பற்றாக்குறையும், புறக்கணிப்பும் இருப்பதாலும், போர் முடியுமுன், பெருத்த அளவில் இருப்பு வைக்க வேண்டியதை அறிந்ததாலும், இத்தகைய சூழ்நிலைகளுடன் வாழ்வுக்காக இத்தகு நிலையற்ற ஆபத்தான போராட்டத்தை அவ்விதழ்கள் செய்ய வேண்டியிருப்பதாலும், ‘திராவிடன்’ இதழையும் ‘ஆந்திரப் பிரகாசிகா’இதழையும் வார இதழாக ஆக்கித் தீர வேண்டிய துயரமிக்க அவசியமாய் விட்டது இயக்குநர்க்கு. ஒரு சில பெருந்தன்மையான சமீன்தார்கள், நிலக்கிழார்கள் மற்றுமுள்ள உண்மை நண்பர்களின் இதயபூர்வமான ஆதரவும், காலத்தினால் செய்த ஆதரவும் இல்லாவிட்டால் நாம் தப்பிக்க முடிந்திராது.
2 ஆண்டுகள் 9 திங்களில் அடைந்த பலன்
2 ஆண்டுகளும் 9 திங்கள்களும் கொண்ட வாழ்வையுடைய இவ்விதழ்கள் அவற்றின் வேலையைச் செய்துள்ளன. அவற்றின் பயனை நம்முடைய கூடாப் பகைவரும் மறுத்திட முடியாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. பிராமண ரல்லாதாரின் சமுதாயத்தில் நம்பிக்கையையும், உளப்பான்மையையும் உண்டாக்கி யிருக்கின்றன. புதிய சிந்தனைகளையும் செயல்களையும் புரிய வழி திறந்து விட்டிருக்கின்றன. பயனுள்ளவற்றை புரியப் புத்தம் புதிய துறைகளைத் திறந்து விட்டிருக்கின்றன.
பிராமணரல்லாதாரின் வகுப்புவாதக் கோரிக்கை இந்திய அரசின் கருத்தைக் கவர்ந்தது.
இவ்விதழ்கள் தொடர்ந்து பணிபுரிந்திராவிடில், வகுப்புவாரித் தேர்தல்களும் பிரதிநிதிகளும் வேண்டும் என்ற பிராமணரல்லாதாரின் கோரிக்கையானது, இப்போது கவனத்தை ஈர்ப்பதைப் போல், இந்த பார்ப்பனர்களால் ஆதிக்கம் புரியப்படும் இந்த சென்னை அரசின் கவனத்தையும் கவர்ந்திருக்க முடியாது. எப்பொழுதுமே சென்னை மாகாண அரசியல் ஒதுக்கப்பட்ட ஒன்று என்பதாகத்தான் கருதிடும். இந்திய அரசின் கவனத்தையும் கவர்ந்திருக்க முடியாது. இவ்விதழ்களின் ஆக்கப் பணியில்லாவிட்டால் சர்.சங்கரன் நாயரும், இந்நாட்டுச் செயலாளரும், தங்களின் உச்ச வெறுப்பு நிலையிலிருந்து பார்ப்பனரல்லாதார் கோரிக்கைக்காகக் கீழிறங்கி இருக்க மாட்டார்கள். நம்முடைய பொருளாதாரப் பிடிப்புத் தொல்லைகள் இன்னும் தொடர்கின்றன.
நேரிய முறையில், உடனடியாக செயல்தான் இப்போது மிகவும் தேவை. அவ்விதழ்கள், போதுமான பணமும், நேர்மையான ஆதரவும் இன்றி அவை நிறுத்தப்படுமானால், நம்முடைய இயக்கம், இறப்பு எனும் ஆபத்தில் இருக்கும்; நம்முடைய முன்னேற்றம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்தங்கி நிற்க வேண்டி யிருக்கும்.
ஒவ்வொருவரும் ஜஸ்டிஸ் இதழுக்கு சந்தாதாரர் ஆவீர்
ஆகவே, இக்காரியத்தைப் பொறுத்தமட்டில் உடனடியாக செயல் தேவைப் படுகிறது. ஒதுங்கியிருப்பதும், பார்த்துக் கொண்டிருப்பதும் முறை அல்ல. தியாகம் இன்றி எதையும் அடைய முடியாது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். உங்களை இயக்குநர்கள் கேட்டுக் கொள்வது; நீங்கள் நேர்மையான யுளத்துடன் உதவி புரிய முன் வாருங்கள். 28 மிலியன் மக்கள் கொண்ட ஒரு பிராமணரல்லாதார் சமுதாயத்திற்கு, இவ்விதழ்களால் வகுப்புவாரி முயற்சிகளால் போதுமான பொருளாதார ஆதரவைப் பெற முடியாதா? ஒவ்வொரு பார்ப்பனரல்லாத அலுவலரை, ஆசிரியரை ‡ திங்களுக்கு ரூ 75 யும் அதற்கு மேலும் பெறுவோரை ‡ வக்கீல்களை, வியாபாரிகளை, நிலக்கிழார்களை எல்லாம் இயக்குநர்கள் நம்பிக்கையுடன் கேட்டுக் கொள்வது என்னவெனில் ‡ ஒவ்வொருவரும் ‘நீதி’ இதழுக்குச் சந்தாத் தொகை செலுத்தவும், இரு மொழிகளில் நடைபெறுவனவற்றில் ஒன்றிற்குத் தன் குடும்பத்தினரின் பயனுக்கெனவும் சந்தாத் தொகை செலுத்துவும், இவ்விதம் செய்வதன் மூலம் இவ்விதழ்கள் தொடர்ந்து நடத்திடவும் பார்ப்பன ரல்லாதார் இயக்கம் வெற்றி பெறவும் வேண்டும் என்பது தான்.
போதுமான அளவுக்கு இப்போது உறுப்பினர்கள் தம் பெயரைப் பதிவு செய்தால், இயக்குநர்கள் ‘ஜஸ்டிஸ்’ ( நீதி ) இதழை 16 பக்கங்களாகப் பெரிதாக்கவும், முடியுமானால் விலையைக் குறைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக் காலத் திற்குத் தேவையான இதழாகத் திகழும். அரசியல்,கலை, தொழில் கல்வி தொடர்பான எல்லா மாவட்ட, மாநிலங்கள் செய்திகளும் வெளிநாட்டுச் செய்திகளும் இடம் பெறும்.
தமிழ் இதழ் நாளிதழாகவும், தெலுங்குஇதழ் கிழமைக்கு இரண்டாகவும் இருக்கும். இத்தகைய சிறந்த கருவிகளால் , நம்முடைய சமுதாயத்திற்கு வரம்பற்ற அரசியல் நன்மைகள் ஏற்படும். நம்முடைய பணி, தொல்லைக்குள்ளானது; சுமை, கனமானது. ஆதலால் உங்கள் உதவி, மிக மிக, உடனடியாக அவசியமாக அதிகமாகத் தேவையானதாகிறது. தொடர்ந்த உறுதியான நோக்கம், ஆற்றல், ஊக்கம் முதலியவற்றுடன் அனைவரும் கூடி செய்யும் முயற்சியால் விளையும் நல்ல உருவான நன்மைகளை, நாம் பெற வேண்டும்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ‡ பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது
இந்த மாநிலத்தில், பார்ப்பனரல்லாதாருக்காக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற கொள்கைக்குக் கூட்டுப் பாராளுமன்ற குழு ஒப்புதல் அளித்துவிட்டதை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள். இரண்டரை ஆண்டுகளாக இடையறாது உழைத்ததின் நேரிடையான பலன்தான் அவ்விளைவு அல்லவா? உணர்ச்சிக்கு ஆட்படாதவரும், உரிய கண்ணோட்டக்காரர்களும் அதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
நமது அமைப்பு மறைந்து போகுமானால்....!
ஆனால் இன்னும் அரிய பொருள்களும் இன்னும் சிறந்த காலமும் நமக்கு வர இருக்கின்றன. நமது அமைப்பு மறைந்து போகுமானால், அல்லது மக்கள் ஆதரவும் நம்முடைய சார்பில் இடையறாத நம்பிக்கைகள், துஞ்சாத கண்காணிப்பு முதலியவை இல்லாமையால், நமது அமைப்பின் வலிமை குறையுமானால், நமது உரிமைக் குரலை எழுப்புவதற்கு எதிர்காலத்தில், முற்றிலும் உதவியற்ற நிலையில் இருப்போம் என்பது மட்டுமல்ல ; மூன்று ஆண்டுகளாக ஆக்கத்துடன் ஊக்கத்துடன் பாடுபட்ட உழைப்பையும் இழந்து விடுவோம் ; திரும்பவும் பெற முடியாதபடி இழந்து விடுவோம். ஆகையால் தான், என்னிடமுள்ள நேர்மையுளத்துடன் உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களிடையே இருக்கும் வேற்றுமையை விட்டு விடுங்கள் ; நம்முடைய இதழ் ஜஸ்டிஸ் (நீதி) எதற்காகப் பாடுபடுகிறதோ, அதற்காக நீங்கள் விடாது உழைத்து நிலைபெறச் செய்திடுங்கள். தன்னந்தனியான மனிதர்களாக மட்டுமல்ல ; ஓர் எழுச்சிமிக்கத் தன்மானமிக்கத் தன்னம்பிக்கை மிக்க ஒரு சமுதாயத்தைப் போல், நேர்மையாகப் போராடுவதைப் போல், ஆண்மையோடு போராடுவதைப் போல், உயர்ந்த எண்ணங்களுடன் கூடிய, ஒன்று கூடி அமைக்கப்படும் வாழ்வையும் அதைத் தொடரும் சமுதாய நாட்டுச் சிறப்பையும் அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் துஞ்சாது அயராது உழைக்கும்படி நான் நேர்மையுடன் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
1919 இல் தியாகராயரின் வேண்டுகோள் இவ்விதம் அமைந்திருந்தது.
தமிழாக்கம்: ‘நிறை’(இளந்தமிழன் சனவரி,2009)

No comments:
Post a Comment