நடந்தது என்ன?
*********************************
பேராசிரியர்.மு.நாகநாதன்
==========================
நாகசாமி மறைந்து விட்டார்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
சிலர் இவரின் தமிழர் விரோதப் போக்கை அறியாமல் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்
1980 ஆம் ஆண்டுகளில் பேராசிரியர்.ந.சஞ்சீவி அவர்களை மாலை நேரத்தில் பல்கலைக்கழகப் பணி முடித்து, சந்திப்பேன்.
அப்போது ஒரு முறை நாகசாமி அவர்களைச் சந்தித்துள்ளேன்.
பேராசிரியர்.ந.சஞ்சீவியிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்வார்.
நாகசாமி சென்றவுடன் பேராசிரியர்.ந.சஞ்சீவி சொன்னார்.
இவர் திறமையே தமிழுக்கு எதிராகச் செயல்படுவது தான் என்றார்.
சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என்பார்.
ஆய்வு தரவுகள் புறந்தள்ளிச் சாதி வெறியோடு செயல்படுவார்.
இவர் தற்போது ஊழல் புகாரில் மாட்டிக் கொண்டுள்ளார்.
தன்னை காப்பாற்றிக் கொள்ள இவர் போடும் வேடம் தான் இந்தப் பணிவு.
பேராசிரியர் .ந.சஞ்சீவி அன்றைய அதிமுக பொதுச் செயலாளர் திரு.ப.உ.சண்முகத்திற்கு நெருங்கிய நண்பர்.
இவர் தமிழ்நாட்டின் தொல்லியல் துறையில் இருந்த போது பெரும் ஊழலைச் செய்துவிட்டார் என எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
முன்னாள் சிபிஐ இயக்குநராக இருந்த திரு.நரசிம்மன் இந்த விசாரணையைமேற்கொண்டார். ஆதாரங்கள் இருப்பதாகத் தலைமைச் செயலகத்திற்குக்கோ ப்புகளை அனுப்பிவிட்டார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஊழல் பெருகி வருவதைத் தடுப்பதற்குச் சட்ட வரையறை கொண்டு வரவேண்டும் எனச் சில கருத்துக்களை முன் வைக்க, திரு.நரசிம்மன் அவர்களை நானும், நண்பர் பேராசிரியர்.வி.நாகராஜனும் நேரம் ஒதுக்கித் தருமாறு அக்காலக்கட்டத்தில் கேட்டுக் கொண்டோம்.
மறுநாளே வரும்படி அழைப்பு வந்தது.
திரு .நரசிம்மன் அக்கரகாரத்தின் அதிசய மனிதர். நேர்மையின் சிகரம்.
நாங்கள் இருவரும் இளைஞர்களாக இருந்து கொண்டு ஊழலுக்கு எதிராகக் களம் காண்பதைப் பாராட்டினார்.
நீண்ட உரையாடல் இடையில் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? எனக் கேட்டார்.
நாங்கள் இருவரும் 'இல்லை' எனப் பதில் கூறினோம்.
அப்போது அவர் நான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கே எப்போதாவது சென்று பெரிய சங்கரச்சாரியைச் சந்திப்பது வழக்கம்.
இப்போது நான் அதை விட்டுவிட்டேன்.
காரணம், சென்ற முறை மடத்திற்குச் சென்றிருந்தபோது, இரண்டாவது சங்கராச்சாரி நாகசாமி ஊழல் விசாரணையை அவருக்கு ஆதரவாக அமையும் படி பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
அடுத்த சில மாதங்களில் எம் ஜி ஆர் உடல் நலிவுற்றிருந்தபோது காஞ்சிபுரத்திற்கு ஜானகி அம்மையாருடன் முதல்வர் எம் ஜி ஆர். வந்து இருந்தார்.
பெரிய சங்கரச்சாரியைச் சந்தித்து விட்டு முதல்வர் வெளியே வரும் போது ஊழல் விசாரணையை நீக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் என ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அப்போது தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய திரு.விஜயராகவன்,இ.ஆ.ப அவர்களுக்கு இந்த மனுவை முதல்வர் அலுவலகம் அனுப்பி வைத்தது.
நேர்மையாளரான திரு.விஜயராகவன் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து நாகசாமி மீது நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ஊழலுக்குச் சங்கரமடம் துணை நின்றதால் நான் அங்குச் செல்வதை முழுமையாக நிறுத்திக் கொண்டேன் என்றார் மறைந்த திரு.நரசிம்மன்.
பல இலட்சம் பண ஊழலில் சிக்கி அவாள் செல்வாக்கினால் இறுதியாகத் தண்டனை
பெறாமல் தப்பித்தவர் தான் தமிழ் விரோத நாகசாமி.
இதைத் தெரிந்து கொள்ளாமல் சிலர் இந்த ஊழலில் சிக்கிய நாகசாமிக்கு 'அரசு மரியாதை' என எழுதியுள்ளனர்.
No comments:
Post a Comment