Wednesday, January 29, 2020

பெரியாரும் பிராமணர்களும்


பெரியாரும் பிராமணர்களும்

ஏற்கனவே பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தபடி இக்கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இதில் மைலாப்பூர் பார்ப்பன பிரமுகர்கள் சுமார் 200-க்கு மேற்பட்டவர்கள் நாற்காலியில் அமர்ந் திருந்தார்கள். சுமார் 2000, 3000-க்கு மேற்பட்ட மக்கள் வெகு நெருக்கடியாகக் கூடி பெரும்பாலோர் நின்று கொண்டிருந்தார்கள். பல பெண்மணிகளும் சூழ்ந்திருந்தார்கள்.

உயரமான மேடையும் நல்ல உயர்ந்த ரக ஒலிபெருக்கியுடன் அமைக்கப்பட்டிருந்தது.
பெரியாருக்கு வரவேற்பு உபசாரம்

பெரியார் அவர்கள் சரியாக 6-15 மணிக்கு வந்தவுடன் சங்கத் தலைவர் திவான்பகதூர் கே.எஸ். இராமசாமி சாஸ்திரியார் அவர் களும் கழக செயலாளர் அவர்களும் பெரியாரவர்களை வரவேற்று அழைத்துச் சென்று பெரியார் அவர்களையும் நடிகர் தோழர் டி.கே. ஷண்முகம் அவர்களையும் மேடையில் அமரச் செய்து இருபெரு  ரோஜாப்பூ மாலையை அணிவித்தார்கள்.

பெரியார் தலைமையுரை

கூட்டம் துவக்கலாம் என்று கேட்டுக் கொண்டவுடன் ரிடையர்ட் ஜட்ஜுயும் சங்கத் தலைவருமான திவான பகதூர் இராமசாமி சாஸ்திரியார் அவர்கள் பெரியாரவர்களை தலைமை வகிக்கப் பிரேரேபிக்கும் போது பெரியாரவர்களைப் புகழ்ந்து கூறி, ‘நமது தலைவர் பெரியார் அவர்கள் இந்த நெருக்கடியான சமயத் தில் நமக்கு நல்லபடி வழிகாட்ட வேண்டும்என்று பிரேரேபித்தார். மற்றொரு தோழர் ஆமோதித்த உடன் பெரியார் அவர்கள் தலைமை உரையாக சிறிது நேரம் பேசினார்கள்,

அதாவது, பெரியோர்களே! தாய்மார்களே! சாதாரணமாக தலைமை வகிப்பவரின் கடமை என்னவென்றால் தலைமை  வகித்து கூட்டத்தில் பேசப்படும் தலைப்பு விஷயத்தை எடுத்துச் சொல்லி பேசப்போகும் பேச்சாளர்களை அறிமுகப்படுத்திவிட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டியதாகும். முடிவுரையில் பேசப்பட்ட விஷயங்களில் தனக்குப் பொறுத்தமானவற்றை மேலும் ஆதரித்து பேசி விளக்க வேண்டியது. அவ்வளவுதான். மற்றப்படி பேச்சாளர் பேசப்போகும் விஷயத்தைப் பற்றி அவர்கள் சொல்லப்போகும் கருத்துக்களை எல்லாம் தானே முன்னால் சொல்லிவிடுவதல்ல. இதுதான் நாகரீகமான தலைமையாகும். ஆதலால் நான் சொல்லு வதை முடிவுரையில் சொல்லுகிறேன்.

10-12 ஆண்டுகளுக்கு முன்

ஆனால் வேறு சில விஷயம்தான், இந்த சந்தர்ப்பத்தில் குறிப் பிட வேண்டியவனாக இருக்கிறேன். இந்த சங்கத்திற்கு நான் இப்போது  இரண்டாம் தடவையாக வந்திருக்கிறேன். சுமார் 10-12 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் எஸ். ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்கள் முடிவெய்திய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அனுதாபக் கூட்டத்தில் அனுதாபம் தெரிவிக்க வந்து இருக்கிறேன். அப்போது நகரப் பிரமுகர்கள் பலரும் வந்திருந்தார்கள்.

பலமுறை அழைப்பு

அதற்குப் பின்பு இச்சங்கத்தின் செயலாளரும் எனது பழைய நண்பர் காலஞ் சென்ற ஜட்ஜு இரங்கசாமி அய்யங்கார் மகனான தோழர் ஸ்ரீனிவாச ராகவன் பல தடவை அழைத்தும் எனக்கு வர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இப்போது அவரும் நண்பர் பெரியார் எஸ்.முத்தையா முதலியார் அவர்களும் ஒருவாரம் 10 நாள்களுக்கு முன்பாகவே தெரிவித்து விரும்பியதாலும் இதை நான் ஒரு பெருமையாகவே கருதி மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டேன்

ஸ்ரீனிவாசராகவன் அவர்களின் தந்தையார் ரங்கசாமி அய்யங்கார் அவர்கள் எங்கள் ஊரில் ஈரோட்டில் 1917, 1918-இல் முனிசீஃப்பாய் இருந்தார். அப்போது நான் முனிசிபல் சேர்மன்
தாலுக்கா  போர்ட் பிரசிடெண்ட், யுத்தக் கமிட்டி செயலாளர் இவை அதிகாரிகளுடன் நெருங்கிய சம்பந்தமுடையவை. இவற்றில் ஏமாற்றமடைந்தவர்களின் தொல்லை, இப்போது போலவே அப்போதும் எனக்கு அதிகம். கட்சிகள் கூட உண்டு. அப்போது இரங்கசாமி அய்யங்காரை என் கட்சி என்று எதிரிகள் எல்வோரும் சொல்லுவார்கள். அப்போது அதிகாரிகளுக்கு அதிக மதிப்பு. ஒவ்வொரு பிரச்சனையிலும் விவகாரத்திலும் அவர் என்னை ஆதரிப்பார். கிளப்பு முதலிய பொது ஸ்தாபனங்களில் நான் தலைவர். அவர் செயலாளர். அவர் தலைவர். நான் செயலாளன். எல்லா ஸ்தாபனங்களும் எங்களுக்குள்ளாகவே அடங்கிவிடும்.

அப்படிப்பட்ட நண்பர் அவர். ஈரோட்டை விட்டு அவர் வேறு ஊருக்குச் சென்றும் எனக்கு கடிதம் எழுதிக் கொண்டு இருப்பார். அவர் சப் ஜட்ஜு ஆன காலத்தில், நான் காங்கிரஸில் காரிய தரிசியாகவும், தலைவனாகவும் இருந்த காலத்தில் வெளியூர்களுக்கு சென்ற காலங்களிலும் அங்கு அவர் உத்தியோகத்தில் இருந்தால் அவசியம் அவரை நான் சந்திப்பேன். அவர் என்னை சந்திப்பார். இந்தப்படி உண்மையான நண்பர்களாக இருந்தோம். இதை யெல்லாம் நேரிற் கண்ட அவருடைய மகன் என்னிடம தந்தையைப் போலவே அன்பாக சந்திப்பார். இங்கு அழைப்பார்.
இவரைக் காணும்போதெல்லாம் அவருக்கும் எனக்கும் பழைய நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வந்து பேசி மகிழ்வோம்.

அந்தப் புகழ்ச்சி

அடுத்தப்படியாக பெரியார் இராமசாமி சாஸ்திரி அவர்கள் என்னை பிரேரேபிக்கும் போது அதிகமாகப் புகழ்ந்தார். அது அவருடைய அன்பு. மற்றப்படி நான் அவ்வளவுக்கு அருகதை அற்றவன். அவரை நீண்ட நாளாக எனக்கு தெரியும். அவருடைய ஒய்வு அவ்வளவையும் பொது நலத்துக்கே பயன்படுத்துகிறார்.  நாங்கள் பல சந்தர்ப்பங்களில் அன்போடு கலந்து பேசி இருக் கிறோம். இரண்டோரு சமயங்களில் சில பொது விஷயங் களைப்பற்றி யோசிக்கவும் என்கருத்தை அறியவும் என்னிடம் வந்து அளவளாவி இருக்கிறார். இவைகள் எல்லாம் இந்த சமயம் ஞாபகத்திற்கு வரும்படியாகவும் இவர்களது அன்பும் நட்பும் மேலும் துலங்கும் படியாகவும் இந்தச் சந்தர்ப்பமும் இவர்களது வரவேற்பும் செய்கிறது.

சீனிவாச ராகவன்

அடுத்தாற்போல் தோழர் ஆர். சீனிவாச ராகவன் அவர்களை பேசும்படி கேட்டுக் கொண்டார். அவர் துவக்கும் போதேதமிழ்த்தாத்தா அவர்களே!............

தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் திராவிடர் கழகத்தினரின் கை ஓங்கி, திராவிடர் கழகம் பலமிக்கதாக ஆகி, பிராமண சமூகத்தை திராவிடர் கழகத்தார் ஒழித்துவிடுவார்கள் என்று சில பிராமணர்கள் பயப்படுகிறார்கள். இந்த தவறான எண்ணத்தைப் போக்கவே பெரியார் அவர்களை இங்கு பேசுவதற்கு அழைத்தோம் என்று குறிப்பிட்டு, கடந்த 25 வருட காலமாக திராவிடர் கழகம் தன்னுடைய கொள்கைகளைத் தீவிரமாக எடுத்துச் சொல்லியும் நடத்தியும் வந்தும் இதுவரை திராவிடர் கழகம் ஒழுங்குக்கும், அமைதிக்கும், பாதகமான பலாத்காரத் தன்மைக்கு போனதே யில்லை. இதுவரை இந்த நாட்டில் பிராமணர்கள் திராவிடர் கழகத்தாரால் பலாத்காரமாகவோ, அநியாயமாகவோ தாக்கப் பட்டதில்லைஎன்று பேசினார்.

பெரியார் தம் முடிவுரையில்

எனக்கு முன் பேசிய நண்பர் ஸ்ரீநிவாசராகவன் அவர்கள் பேசும் போது ஒரு விஷயம் குறிப்பிட்டார். அதைப்பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன்.

பிராமணர்கள்

அதாவது யாரோ சில பிராமணர்கள் அவரைபெரியார் ராமசாமி நாயக்கர், பிராமணர்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்று பேசி வருகிறார். அவரை நீங்கள் எப்படி இங்கே கூப் பிட்டீர்கள் என்பதாக கேட்டார்கள்என்று சொன்னார். பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக்  கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத் தினுடைய திட்டமெல்லாம், திராவிடர் கழகமும் நானும் சொல்வ தெல்லாம் விரும்புவது எல்லாம், நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பதுதான்.

சமத்துவமோடு

இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான். இது பிராமணர் களை வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டை விட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்னதாகவோ அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்லவேண்டிய அவசிய முமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை. தவிரவும் பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றும் இல்லை. அவர்கள் அனுசரிக்கும் சில பழக்க வழக்கங் களையும், முறைகளையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக் கொள்ளுவது பிரமாதமான காரியம் அல்ல. நமக்கும் அவர்களுக்கும் என்ன பேதம்? ஒரு குழாயிலே தண்ணீர் பிடிக்கிறோம். ஒரு தெருவிலே நடக்கிறோம். ஒரு தொழிலையே இருவரும் செய்கிறோம்

காலமும் பெருத்த மாறுதல் அடைந்து விட்டது. மக்களும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள். விஞ்ஞானம் பெருக்கம் அடைந்து விட்டது. இந்த நிலையில் நமக்குள் மனிதத் தர்மத்தில் பேதம் இருப்பானேன்?. ஆகவே உள்ள பேதங்கள் மாறி நாம் ஒருவருக் கொருவர் சமமாகவும், சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கு ஆகத்தான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்கு கவலை உண்டு. எனது முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்கு கவலை உண்டு. காலம் எப்போதும் ஒன்று போலவே இருக்க முடியாது. நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும் பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழக பின் சந்ததி களும் பிராமணர்கள் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து  கொள்ளுவார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால் அதிருப்திக்குக் காரணமானவைகளை மாற்றிக் கொள்ளுவது இருவருக்கும் நலம். அதை நண்பர் ஸ்ரீநிவாச ராகவன் அவர்களும் நன்றாய் விளக்கு இருக்கிறார். அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்தமானத் துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இருதரப்பினரும் கவனிக்க வேண்டியது.

கண்ணீர் துளியின் அதிகப் பிரசிங்கித்தனம்

உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் மேலும் சிறிது சொல்லு கிறேன். பிராமணர்களில் எனக்கு யாரிடமும் தனிப்பட்ட விரோதம் இல்லை. உதாரணமாக இந்த கூட்டத்திலே கண்ணீர்துளியைச் சேர்ந்த ஒருவன் அதிகப் பிரசங்கித்தனமாக சில கேள்விகள் கேட்டி ருக்கிறான். அவைகள் எல்லாவற்றையும் பற்றி இங்கு நான் பதில் சொல்ல வரவில்லை.

இதோ பாருங்கள் (கேள்விகளைக் காட்டினார்கள்) அந்தக் கேள்வித் தாள்களை, கையெழுத்துப் போட்டு கண்ணீர் துளிக்கு உள்ள பெயரையும் போட்டுக் கொடுத்திருக்கிறான். ‘ஆச்சாரி யாருடன் சிநேகமாக இருந்து கொண்டு, உங்களுக்குள் அவரை ஆதரித்துக் கொண்டு இருப்பதனாலும் தானே உன்னை அங்கு வரவேற்றிருக்கிறாரகள்என்று எழுதியிருக்கிறான். அவன் எழுதியது எப்படியோ இருக்கட்டும்.

நண்பர்கள்

ஆச்சாரியார் அவர்கள் எனக்கு நல்ல நண்பர்தான். ஆச்சாரி யாரைப் போலவே மற்றும் பல பார்ப்பனர்களும் எனக்கு நண்பர் களாக இருந்துதான் வருகிறார்கள். நெருங்கிப் பழகிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதற்காக ஆச்சாரியார் மந்திரி சபையை ஆதரிப்பதோ, அவர் மந்திரியாய் இருக்க வேண்டும் என்று விரும்புவதோ, திராவிடர் கழகத்தின் எந்த ஒரு சிறு கொள்கை யாவது விட்டுக் கொடுப்பதோ அடியோடு கிடையவே கிடையாது. அது மாத்திரமல்ல. அவர் மந்திரியானது முதல் இன்று வரையிலும் நான் அவரை சந்தித்ததும் கிடையாது. கருத்துக்கள் பரிமாறிக் கொண்டதும் கிடையாது. அவர் மந்திரியாய் வருவதை நான் விரும்பினதாகச் சொல்ல முடியாது.

ஆனால் கம்யூனிஸ்டுகள் தாங்கள் வெற்றி பெற்ற உடன் திடீரென்று ஒரு பிராமணரை மந்திரியாகக் கொண்டு வர முயற்சித் தார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. அந்த சமயத்தில்  ஆச்சாரி யார் பெயர் அடிப்பட்டது, இருவரில் அவரைவிட இவர் (ஆச்சாரி யார்) மேல் என்று கருதினேன். எழுதினேன். இது பொது நலத்தை உத்தேசித்தே தவிர, சிநேகிதத்துக்கு ஆகவே, வேறு சுயநலத்துக் காகவோ அல்ல. இன்னும் நல்ல காரியங்களை வரவேற்கிறேன். அதிப்தியான காரியங்களை எதிர்க்கிறேன்.

நாம் யாவரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக் கிறது. அதுதான் மேலேயே குறிப்பிட்டிருக்கிறேன். நாம் நம் நாட்டை பூரண விடுதலை உடைய நாடாகச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் யாவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். நம் தமிழ்நாட்டவன் அல்லாத வேறு எவனும் நம் நாட்டைச் சுரண்டாமலும், நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தா மலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் நாம் யாவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

பெரியோர்களே இந்த இடத்துக்கு நீங்கள் என்னை அழைத்ததற்கும் என்னை தலைமை வகிக்கச் செய்த பெருமைப் படுத்தினதற்கும் உங்கள் உளம் நிறைந்த புகழ் வார்த்தைகளுக்கு ஆகவும் மறுபடியும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்று கூறி முடித்தார்கள்.

பிறகு நண்பர் சந்தானம் அவர்கள் நன்றி கூறினார்கள்.

No comments: