வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 2
அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அணியமானார் தலைவர் வைகோ...
வானூர்தியில் அவர் ஏறியவுடனேயே, செய்திகள் பறக்க தொடங்கின பொடாவில் 'தளை' செய்யபட போவதாக.
29.11.2002 மடலில் வைகோ அவர்கள், 'அடக்குமுறைக்கு அஞ்சிடோம்!' ஆண்டுக்கணக்கில் சிறையில் பூட்டப்பட்டாலும்,
உயிருக்கே இறுதி நேரிடும் எனத் தெரிந்தாலும், அடக்குமுறைக்கு வைகோ அடிபணியமாட்டான்!' என்று எழுதினார்.
அவ்வாறே, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தற்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே சென்னை வந்து சேர்ந்தார். வானூர்தி நிலையத்தில் வைத்து தலைவர் வைகோ 'தளை' செய்யப்பட்டார்.
காவலில் வைக்கப்பட்டு நான்கு திங்கள் கடந்த பின்னர் 29.11.2002 நாளிட்ட மடலில் கண்மணிகளுக்கு எழுதுகிறார்.
மடல் இலக்கியத்திற்கு ஏற்ப நயத்துடன் தொடங்குகிறார். அதில், 'நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பேரறிஞர் அண்ணா அவர்கள் இங்குதான் சிறைவாசம் ஏற்றார். உங்களின் அளப்பரிய அன்பும் வரையற்ற வாஞ்சையும், எல்லையற்ற பாசமும், எத்தகைய இன்னல்களை யும் நான் எதிர்கொள்ள இயக்குவிக்கும் உயிர்ச் சக்தி அன்றோ!
ஆயிரமாயிரம் நினைவுகள் இதயக் கபாடத்தில்! எதைச் சொல்வது? எனத்
திகைக்கிறேன். காளிதாசன் மேகத்தைத் தூது அனுப்பினாள். தென்னாட்டுப்புலவன். விண்ணில் சிறகடித்த பறவையிடம் தூது சொன்னான். நான் உங்களின் உணர்வுகளுடன் சங்கமிக்க வாய்த்ததுதாளே நமது "சங்கொலி" என்று தொடங்குகிறார்.
மேலும் ''சிறைப்பிடிப்போம்' என்றா மிரட்டுகிறீர்கள்? குறிப்பிட்ட நாளுக்கு இரண்டு நாள்கள் முன்னரே தமிழகம் வருகிறேன்; 'எச்சரிக்கை' எனக் காட்டுக் கூச்சலிடும் தர்பார் இந்த 'அண்ணாவின் தம்பி'யை மிரட்ட முடியாது; ஓங்கி ஒலிக்கும் எனது
உரிமைக்குரல்'" எனப் பிரகடனம் செய்துவிட்டுச் சிகாகோ நகரில் இருந்து புறப்பட்டேன் என்றார் வைகோ.
வானூர்தி நிலையத்திலேயே தலைவர் வைகோ 'தளை' செய்யப்பட்ட செய்தியினைக் கேட்டுப் பதறித்துடிக்கத் தழலுக்கு தன்னையே தந்து உயிரை மாய்த்துக் கொண்ட அந்த நல்லூர் அறிவழகன், அரவேணு சிவன், நல்லாம்பள்ளி சுப்பன், கீழ்ப்புளியஞ்சை வைகோதாசன் ஆகியோரின் ஈகங்களை நினைவு கூர்ந்து எழுதுகிறார்.
No comments:
Post a Comment