Friday, February 25, 2022

காந்தியம் -பொதியவெர்பன் - 1

 எத்தனை எத்தனை கட்டுக்கதைகள்தாம் திரிப்பீர்நீம்?

அத்தனை அத்தனைத் தித்திருக்கும் கட்டவிழ்த்தே

வைக்கம் போராட்டத்தில் எந்தை பெரியார் வகிபாகம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருத்தி விரிவாக்கப்பட்ட மீள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'வைக்கம் வீரர்'  எனில் எந்தை பெரியாரே!

வைக்கம் போராட்டக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்தே

உண்மை வரலாற்றுக் குறிப்புகள்:1

°<~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~>•

1.அதியமானும் அறியொணாப் பக்கங்கள்:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அ. மகாத்மாவின் எளிமைக்கான விலை!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சமூக அசைவியக்க ஆவணங்களாக நம்பகமான முதன்மை ஆதாரங்ளைத் தேடித் துருவி வரதராஜுலு நாயுடு,சேரன்மாதேவிக் குருகுலப் போராட்டம் குறித்த

வரலாற்றாவண நூல்களை வழங்கிய என் மதிப்பிற்குரிய ஆய்வாளரே நண்பர் பழ•அதியமான். அவர் 'வைக்கம் போராட்டத்தில் காந்தியின் வருகை நிகழ்த்திய மாற்றங்கள்'('இந்து தமிழ்த்திசை- 22•10•2019) என்ற கட்டுரையை முன்வைத்துள்ளார்.

Selva Puviyarasan. கே.கே.மகேஷ் முருகேஷ் மு  த.ராஜன் 

"வ.வே.சு. ஐயரைப் பாதுகாக்கும் நோக்கம் (அவரையும் அறியாமல்) இழையோடும் ஆங்கிலக்கட்டுரை" என அக்குருகுலப் போராட்டங் குறித்த நூலில் அவர் ஆர்.சண்முசாமியின் கட்டுரை குறித்துச் சுட்டுமாப்போலவே அதியமானின் இக்கட்டுரையுங் கூடக் காந்தியாரைக் காப்பாற்றமுயலும் கட்டுரையாகவே காணக்கிடக்கின்றதெனலாம். இக்கட்டுரையில் குறிப்பிட்ட சிலபுள்ளிகள் குறித்து விவாதிக்குமுகமாகவே இதனை முன்வைக்கிறேன்:

"எர்ணாகுளத்திலிருந்து படகுமூலம் வந்த காந்தியை, வரவேற்பவர்கள் முன்சென்று அழைத்துவரப் படகுகள் சூழப்போனார்கள்.எளிமையைக் கடைப்பிடிக்கும் காந்தி, இந்த படாடோபத்தை விரும்புவாரா? பிடிவாதமாகத் தடுத்து,தனியாய்த்தான் தன் படகு பயணிக்கவேண்டும் என்று சொல்லி விட்டார்"- பழ•அதியமான். இத்தொடர்பில் ஒத்தும் உறழ்ந்தும் ஏனைப் பிற மாற்றுத்தரப்புகள்:

"காந்தி குறித்து மிகவும் தவறான பல தகவல்களே ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளன....அவரை எளிமையாக வைத்துக்கொள்வதற்காக ஏராளமாகச் செலவுசெய்ய

வேண்டியிருக்கிறது எனப் பாதி நகைச்சுவையாகச் சொல்லப்பட்ட கூற்றையே ஆதாரமாகக் கொண்டு காந்தி பற்றிய மதிப்பீட்டை உருவாக்கியுள்ளவர் பலர்"-

அ•மார்க்ஸ்('புத்தகம் பேசுது'-ஜுலை 2008)

Puthagam Pesuthu. Mohammed Sirajudeen.

சிவகுருநாதன் முனியப்பன் 

காந்தியார் ரயிலில் மூன்றாம் வகுப்பிலேயே பயணிப்பார்.  ஏன் மூன்றாம் வகுப்பிலேயே பயணிக்கிறீர்கள் எனக்கேட்டால்  நான்காம் வகுப்பில்லையே என்பர். ஆனால் உண்மை என்ன தெரியுமா? மாற்றுத்தரப்புகளைக் காண்போம்:

*

ஆ.காந்தி - லெனின் ஒப்பீடு :

குஹா நோக்கிலும் கோரா நோக்கிலும்

°~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~•

"இருவரும் சமகாலத்தவர்கள்.மிகப் பாரம்பரியமான

 கலாச்சாரப்பின்னணியும் வரலாறும் கொண்ட நாடுகளின் இணையற்றதலைவர்கள் இருவரும். இருவருமே அரசியல் அடக்குமுறைக்கும் பொருளாதாரத் தேக்கநிலைக்கும் எதிராகப் போராடியவர்கள். மக்களுக்காக  வாழ்ந்தவர்கள்"

"லெனின் கூட நல்ல உணவையும் மதுவையும் சுவைப்பதில் ஆர்வமுள்ளவர் இந்திய கம்யூனிஸ்ட்களால் பூர்ஷ்வா என்றும் வலதுசாரி என்றும் அர்ச்சிக்கப்பட்ட காந்தி சாமானியர்களைப் போலவே எளிமையாக உடை உடுத்தியவர். உடுத்தியவர்.சாப்பாடும் அப்படியே."

-ராமசந்திர குஹா ('இந்துத் தமிழ்த்திசை'-30-1-2020)

மாற்றுத்தரப்புகளைக் காண்போம்:

மலிவு விளம்பரங்கள் மூலம்மகிமை அடைந்த கதை

°<~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~>•

['குற்றவாளிக் கூண்டில் காந்திஜீ' இரண்டாவது பாகம்]

"இந்தியமக்களில் பெரும்பாலோர்  வறுமையில் வாடுகிறார்கள் என்றும்  உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி பரிதவிக்கிறார்கள் என்றும் காரணம் காட்டிக் காந்திஜீ அவர்கள் தமது உணவுமுறையையும்

மாற்றிக்கொண்டார்.ஆடைகளையும் குறைத்துக் கொண்டார்.ஆட்டுப்பாலும் நிலக்கடலையும் கனிகளும் காய்கறிகளுமே அவரது பிரரதானஉணவாக அமைந்தன"

"இந்தியமக்களின் உண்மையான பிரதிபலிப்பாகத்தாம் விளங்குவதாக வெளியில் அவர் காட்டிக்கொண்டார். 

பத்திரிகைகள் அனைத்தும் அவரது செயலை வெளிச்சம் போட்டுக் காட்டின. 'அரை நிர்வாணப் பக்கிரி'(Half Naked pakir) என்று வின்ஸ்டண்ட் சர்ச்சில் காந்திஜீயை வருணித்தார்.இந்திய மக்கள் இதனைப் பெருமையாகஎடுத்துக் கொண்டார்கள்"-ஏ•கே•ரிபாயி

('மறுமலர்ச்சி'•30-9-1994) AK Refaye Pathipagam 

Hilal Musthafa 

இதனை ரிபாயி சித்துவிளையாட்டுக்கள் என்றும் 'ஸ்டண்ட்' செய்ய முற்படுதல்  என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்:

"இந்தியமக்கள் வறுமையில் வாடும்பொழுது ஆடம்பரமாக முதலாம்வகுப்பு, இரண்டாம்வகுப்பு என ரயில்பயணம் செய்வது பாவம் என அவர் கருதினார். மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் என்றுதான்  பெயர். அவர் பிரயாணம் செய்யும் கம்பார்ட்மண்ட்டில் அவரும் அவரது சகாக்களும் உதவியாளர்களும் தான் இருப்பார்கள்.மற்ற பயணிகள்  யாரும் அந்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறிப் பயணம் செய்யமுடியாது சுருக்கமாகச் சொல்வதானால், அந்த கம்பார்ட்மெண்ட் முழுவதும் அவருக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. இதற்குப் பெயர்தான் எளிமையான மூன்றாம் வகுப்புப் பயணம்"-ஏ•கே•ரிபாயி

"To Keep Gandhi in poverty, the congressparty has to spent millions of rupees"- Sarogini Naidu"

('மறுமலர்ச்சி' மேலது)

நம்மில் பலருக்குக் காந்தியையும் குஹாவையும் பற்றித் தெரிந்த அளவிற்குக் குமரப்பாவையோ,கோராவையோ பற்றித் தெரியாது. ஏன் பெரும்பாலான காந்தியர் எனப்படுவோரே குமரப்பாவையோ கோராவையோ பற்றிப் பேசுவதே கிடையாது.

காந்தி-லெனின் ஒப்பீட்டில் இருவருமே பொருளாதாரத் தேக்கத்துக்கு எதிராகப் போராடியோர் எனவும்;

வெவ்வேறு மதங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் காந்தியாக மட்டுமே இருக்கமுடியும் என்பதும் விவாதிக்கப்பட வேண்டிய தரப்புகளே யாகும்.

'காந்தி நினைவு டிரஸ்ட்டி'ன்  அலுவலகம் எளிமையாக ஒரு கிராமத்தில் அமையாமல் ஆடம்பரமாகத் தில்லியில் அமைந்தது. பெருமுதலாளிகளும் தொழிலதிபர்களும் அறங்காவலராயினர். நிதியென்னவோ18 கோடி குவிந்தது. ஆனால் காந்தியப் பணிகளுக்குத் தம்மை அர்ப்பணிக்குமாறு குமரப்பா விடுத்த வேண்டுகோளைக் காங்கிரசார் ஏற்கத்தயாராக இல்லை. காந்தியிருந்த போதும், காலமானபின்னும் பெருமுதலாளிகளும் தொழிலதிபர்களும் காந்தியப்பணிகளுக்கான நிதியாதாரங்களை வழங்கத் தயாராக இருந்தனர். ஆனால் என்றுமே உடைமைக்கு அடிமையாகாத  ஓரிரு கோராக்களும், குமரப்பாக்களும் மட்டுமே காந்தியத்துக்கு ஆதாரசுருதியாகத் தம்மையே ஆத்மார்த்தமாக அர்ப்பணித்து அதனைத் தம் வாழ்வறத்தால் அர்த்தபூர்வமாக ஆக்கினர்.

அடுத்து, கோரா நோக்கில் காந்தி-லெனின் ஓப்பீட்டை நோக்குவோம்:

"பஞ்ச் குவான் சாலையில் அமைந்திருந்த ஆசிரமத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுடன் காந்தி தங்கியிருந்தார்"

"1974 -ஆமாண்டு நான் மாஸ்கோ சென்றேன். படைத்தளபதியின் பெரியமாளிகைக்குப் பக்கத்தில் இருந்த  அந்தப்பணியாளனின்  குடியிருப்பைக் கண்டபோது லெனின்மீது நான் கொண்டிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு உயர்ந்தது. அந்தப் பணியாளனின் குடியிருப்பில்தான் லெனின் வாழ்ந்தார். காந்தியின் சுய சேவாக்கிராமக் குடிசையும், லெனின்தங்கிய குடியிருப்பும் உடனே அருகருகே என் மனக்கண்முன் தோன்றின"- கோரா ('நாங்கள் நாத்திகரானோம்')

எது சரியான ஒப்பீடு?

*

இ•திலகரைத் தோற்கடித்துக் காந்தியாரைச்

சர்வாதிகாரியாக ஆக்கியோர் யாவர்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வைக்கம் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது காந்திவருகை என்பதே அதியமான் தரப்பாகும். அந்த வருகை எதற்காக நிகழ்ந்தது? யாராலவர் யாருக்கு மாற்றாகத் தருவிக்கப்பட்டார்? என்பதற்கான கேள்விகளுக்கு விடை காண்போம். அதற்கு முன் இன்னும்  இரு கேள்விகள்!

பெரியாரைத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஆக்கியது யார்? காந்தியாரை அனைத்திந்திய காங்கிரஸ் தலைவர் ஆக்கியது யார் யார்?:

"என்னை இராஜாஜீ அவர்கள்தான் முதலாவதாகக் கோயம்புத்தூர் ஜில்லா காங்கிரஸ் செக்ரட்ரி ஆக்கினார்.பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஆக்கினார்.என்னிடம் அவர் முழுநம்பிக்கை வைத்து அவர் நமது தலைவர் நாயக்கர் என்று அழைத்ததோடு, வெகுபேரை என்னைத் தலைவர் என்று அழைக்கும்படிச்செய்தார்"- ஈவெரா ('விடுதலை'26-12-1972)

"இராஜாஜீ,காந்தியை ஆதரித்து அவரைத் தன்வயப்படுத்த முயன்று வேலை செய்து வந்தார். சென்னைப் பார்ப்பனர்கள் திலகரைப் பிடித்துத் தம்வசப்படுத்தி இராஜாஜீயை ஒழிக்க முயற்சி செய்தார்கள்.

அமிர்தசரஸ் காங்கிரசில் எங்கள் ஆதரவால் காந்தி வெற்றி பெற்றார்.திலகர் தோல்வி யடைந்தார்.ஒரு ஆண்டுக்குள் அந்தக் கவலையால் திலகர் செத்தார்.

காந்தி எதிர்ப்பில்லாத ஏக தலைவர் ஆனார். அவரைச் சர்வாதிகாரி ஆக்கிவிட்டோம். இதற்கு இராஜாஜீக்கு முக்கிய பங்குண்டு"-ஈ•வெ•ராமசாமி 

('பெரியார் பார்வை'-இதழ்த்தொகுப்பு).

இத்தொடர்பில் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளுக்கு இணங்கியாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர் எவ்வாறு தம்மனம் ஒப்பாமலே ஆளாக நேர்ந்தது?அவருடைய சூழ்ச்சிகள் யாவை என்பன குறித்து இனிக்காண்போம்:

""வைக்கம் சத்தியாக்கிரக சரித்திரம் ஒரு பெரிய சூழ்ச்சிக்கதையாகும். அதற்குத்  தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவர்களும்  காந்தியாரும் கொடுத்த தொல்லைகள் செய்த சூழ்ச்சிகள் அளவிடற்குரியதல்ல.

காந்தியாரையே அவரது சர்வ வல்லமை யுள்ள பிடிவாதத்திற்கு விரோதமாக இறங்கிவந்து தனது கருத்துக்களை அவர் இஷ்டத்திற்கு விரோதமாக மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியத்திற்குக் கொண்டுவந்து விட்டதானது வைக்கம் சத்தியாக்ககிரகமாகும்.ஆனால் வைக்கம் சத்தியாக்கிரகத்தைப் பார்ப்பனர்கள் மனமார மாற்றி எழுதிவிட்டார்கள்"- ந•க•மங்களமுருகேசன்  ('சுயமரியாதை இயக்கம்')

*

ஈ •பெரியாருக்கே அந்தப்புகழ்!  ஆனால்....

°<~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~>

"திருவிதாங்கூரிலே தீண்டாமையை ஒழித்த மாபெரும் போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்ற பெரியாருக்கே அந்தப்புகழ், பெருமை. ஆனால் அந்தப்புகழ் யாருக்கோ போயிற்று."-    திருவிக (திரு•வி•க•  வாழ்க்கைக் குறிப்புகள்).

"அந்தப் போராட்டத்தில் அவர் ஈடுபடுவார் என்று அந்த (திருவிதாங்கூர்) அரசரோ அல்லது ஆட்சியோ எதிர்பார்க்கவில்லை. காரணம் அந்த அரசர் டெல்லிக்குச் செல்கிற நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள்வீட்டில் விருந்தினரா  இருந்து ஈரோட்டில் தங்கிவிட்டுச்

 செல்வது வாடிக்கை. எனவே  பெரியார் அவர்கள் அங்கு போகும் போது அரசுமரியாதைகளோடு அதிகாரிகளை அனுப்பி வரவேற்பு  கொடுத்த நேரத்தில் நான் இங்கு

வந்திருப்பது விருந்துக்காக அல்ல உரிமைப் போராட்டத்திற்காக எனவே அருள்கூர்ந்து நான் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவருக்கே உரிய தன்மையோடு  எடுத்துக்கூறியதோடு தன்னுடைய

 அந்தப் போராட்டஉணர்வை நியாயப்படுத்தி அந்த மக்களை எல்லாம் தட்டியெழுப்பும்படியாகச் செய்தார்களென அங்கு வாழ்ந்த பாமரமக்களுக்குக் கூட

அந்த உணர்வை  ஊட்டினார்கள்" -  சி•என்•அண்ணாதுரை ('பெரியார் பார்வை').

"சத்தியாக்கிரகத்த தெரிந்தவர்களைக் கூட வசீகரித்துப் போராட இழுக்கும் ஈர்ப்புத்தன்மையுடையனவாக இருந்தன. பெரியார் சொற்பொழிவுகள்  அவற்றில் அவர் திருவாங்கூர் அரசை  வன்மையாகக் கண்டித்துக் காரசாரமாக விமர்சனம் செய்தார்"- கே.ராஜன்   ('திராவிட இயக்கம்  உரையாடல்கள்)

"திருவிதாங்கூர் திவான் பெரியாருடன் பேசுவதற்கு ஆச்சாரியாரைத் தூது பிடித்தார். ஆச்சாரியார் அந்தச் சந்தர்ப்பம் பெரியாருக்கு வாய்ப்பதை இஷ்டப்படாமல் காந்தியாரையே  தருவிப்பதாக ஒப்புக்கொண்டு உடனே காந்தியாரை  அழைத்தார். என்றாலும் சமாதானம் பேசும்போது காந்தியார் பெரியாரையும் தன்கூட இருக்கும்படி செய்துகொண்டார்"

- ந•க•மங்கள முருகேசன்(' சுயமரியாதை இயக்கம்')

காந்தியாரின் வருகை குறித்த அதியமான் தரப்போ போராட்டத்தை அடுத்த நகர்வுக்குச்  செல்ல உதவியது, முடிவை நோக்கி உந்திய முக்கியபயணம் என்பதாக முன் நிறுத்தப்படுகின்றது. ஆனால் காந்தியார் வருகையே பெரியாருக்கு மக்கள் மத்தியிலிருந்த  செல்வாக்கைக் கண்டஞ்சி ஆச்சாரியார் செய்த சூழ்ச்சி என்பது அதியமான் அறியாத பக்கமாகும். 

தொடரும்....

No comments: