Friday, February 25, 2022

காந்தியம் - பொதியவெர்பன் - 2

 'வைக்கம் வீரர்' எனில் எந்தை பெரியாரே!

வைக்கம் போராட்டக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்தே

உண்மை வரலாற்றுக்குறிப்புகள்:2


2.ரெங்கையா முருகனார் கண்டுணர்ந்ததும்,

காணத் தவறியதும்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"காந்தி குறித்து பல தரவுகள் இருப்பது ஆரோக்கியமான ஒன்றே."- பட்டாபிராமன்

Pattabi Raman 

"சமகாலத்திற்கென அனைத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது தொடரும் உரையாடல்களில் இப்பதிவு முக்கியமானது. தொடர் போராட்டங்களுக்கும் சந்தர்ப்பவாத திரிபுவாதங்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் போலான ஒன்றுதான் இது.

பொதி தோழர் தொடர்ந்து  இதைச்செய்கிறார்" 

Yavanika Sriram 

"யவனிகா! தங்கள் கீழ்க்காணும் நூலை விரைவில் வெளிக்கொணர்க. 

நாம்சகபயணியரே. மகிழ்ச்சி, சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!


"கார்ல் மார்க்ஸை போன்ற அகிலம்சார் யதார்த்தவாதியையும் காந்தியைப்போன்ற தேசிய  முதுமைவாதியையும் அம்பத்கரைப்போன்ற அடித்தள அறவியல்வாதியையும் பெரியாரைப்போன்ற இளமைச் சிந்தனையாளரையும் ஏன் நாம் நினைவில் கொள்கிறோம்?கீழைத்தேய சிந்தனைகளின் இருத்தலியத்திற்குள் இவர்கள் எவ்வாறு ஊடுருவினார்கள்?

 நவீனத்துவ தத்துவங்களும்  முரண்பாடுகளும் நடைமுறைகளும் பாகம் -1" - பொதி

*

"அகிம்சை, எளிமை என்ற பேரில் தன்னை உருவகப்படுத்திக் கொண்டாலும், இல்லை எளிய மக்களால் அப்படியே அழைக்கப்பட்டாலும் பெரியவர் வ.உ.சி.க்கு தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் கொடுத்து விட்ட பணவிசயத்தில் அவ்வளவு முரட்டுத்தனம் காண்பித்தது எந்த அகிம்சையோ? அதாவது ஒரு மடலில் பெரியவர் வ.உ.சி. 'தங்களது இருப்புப் பணத்தில் இருந்து ஏதாவது ஒரு பணத்தை அனுப்பி வையுங்கள். அவருக்கு கொடுக்கப்பட்ட பணத்திற்கான பட்டியல் வந்ததும் முன்னே பின்னே வந்தாலும் கணக்கு பார்த்துக் கொள்ளலாம்' என்று இரங்கி எழுதிய கடிதத்திற்குக் கூட; 'இல்லை பட்டியல் வராமல் தங்களுக்கான பணத்தை அனுப்ப இயலாது' - என்ற காந்தியாரின்  (செயலை என்ன வகை ஹிம்சையில் சேர்ப்பது? 1915 வாக்கில் எல்லா வகையிலும் பிரிட்டிஷ் அரசு பெரியவரை முடக்கி வைக்கிறது. எந்த மனநிலையில் இருந்து தனக்காக அனுப்பப்பட்ட பணத்தை உரியநேரத்தில் சேர்க்காமல் விட்டது காந்தியாருக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால், பெரியவருக்கு அந்த நேரத்தில் சேர்த்திருந்தால் பொருளாதார விடுதலை வேட்கைக்காக தன் பொருளாதாரத்தை முற்றிலும் இழந்த கர்ம தியாகியை அகிம்சைவாதியும் சேர்ந்து சோதித்ததை தமிழ் காந்தியவாதிகளிடம் சிலரிடம் உரையாடிய போது அவர்கள் உள்ளமும் விசனிக்கத்தான் செய்கிறது." -

Rengaiah Murugan 

 - இது காந்தியாரின் 'அகிம்சையின் வன்முறை 'யை முருகனார் கண்டுகொண்ட பக்கம்

மகாத்மாவின் அந்தராத்மா ' அசரீரி' எழுந்தருளும் அவதார இந்து லெட்சண உட்கிடை ரகசியம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பூனா ஒப்பந்தத் தருணத்தில் காந்தியார் மேற்கொண்ட காந்தியாரின் உண்ணாநோன்பையே ' அகிம்சையின் வன்முறை' என்னும் ஓஷோ அண்ணல் அம்பேத்கரின் வகிபாகத்தையே அகிம்சையின் வடிவம் என்றார்:

"கொலை செய்வேன் என்பது மட்டுமா வன்முறை? ஒரு கோரிக்கைக்கான முன்னிபந்தனையாகத் தற்கொலை மிரட்டலை முன்வைப்பதும் வன்முறைதானே என்பதுதான் ஓஷோவின் வாதம். 

அதுமட்டுமல்லாமல் கசையடியைத் தன்மீது பிரயோகித்து, அதன் மீதெழும் கழிவிரக்கத்தை முன்னிறுத்திப் பிழைப்பவனுக்காவது அத்தகைய சுயவதையே அவனுக்கான ஜீவனோபாயமான அவலம் என விட்டுவிடலாம். ஆனால் காந்தியாரின் சுயவதை மிரட்டல்  அகிம்சையின் வன்முறைதானே என்பதே ஓஷோவின் பார்வைக் கோணம் . ('குறளி':1- யூன் 2012)

"காந்தியத்தைப் பொறுத்தமட்டில், அறவியலை  மனிதவாழ்வின் எந்தக் கூறுகளில் இருந்தும் பிரித்துவிட இயலாது. அரசியலை அவர் மதமயப் படுத்தியது என்பதன்பொருள் மிகவும் ஆழமானது, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் சடங்குகள் அல்லது தத்துவங் களுக்கு உட்பட்டும் அரசியலை வளைத்த ஒரு முயற்சி அல்ல அது அரசியலை 'அறவியலாக' மாற்றிய ஒரு முயற்சி அது. " - அ.மார்க்ஸ்('புதிய பார்வை' 16/10/2007)

வள்ளுவரிடமும், வள்ளலாரிடமுங் கூட ' வருணதர்ம இந்துக்கறை'களைக் காணவல்ல தீட்சண்ய மிக்க அ.மா. விழிகளுக்கு, மகாத்மாவின் அந்தராத்மா இந்துலெட்சணமே அரசியலையே அறவியலாகக் காட்சி

அளிப்பதில் வியப்பிலை தானே? இத்தொடர்பில் பல்வேறு

மாற்றுத்தரப்புகளை ஒத்துறழ்ந்து காண்போம்:

" காந்தியாரின் உண்ணாவிரதம் அவர் தலைமையேற்ற

காங்கிரஸ் இயக்கத்தால் முடிவு செயய்யப்பட்டதன்று.

தம்முடைய உள்ளொளி தனக்கு ஆணையிட்டதாகக் காந்தியடிகள் கூறினார்." - பியாரிலால்

"அரசியல் பிரச்னை ஒன்றிற்கு,  மதம் தொடர்பான, உணர்வுபூர்வமான அவரது (காந்தியடிகளது) அணுகுமுறை எனக்குக் கோபத்தை உண்டாக்கிற்று. இது தொடர்பாகக் கடவுளை அடிக்கடி குறிப்பிடுவதும் எனக்குப் பிடிக்கவில்லை. உண்ணாவிரதம் இருப்பதற்கான நாளையும் கடவுளே குறிப்பிட்டார் என்கிறது போல் அவர் கூறியிருக்கிறார். இப்படித்தான் பிறருக்கு முன்னுதாரணமாக இருப்பதா? " - நேரு

"ஹரிஜனம் என்னுமொரு பத்திரிகையையும் பிரசுரம் செய்துவருகிறார். அவர் மனம் போனபடி ஏதேதோ எழுதி வருகிறார். அவற்றில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டோர் அபிப்ராயம் அல்லவென்று சொல்லலாம். அது தன்மயத் தேட்டம். அவர் அசரீரி வாக்கைக் கேட்டறியும் அருள்பெற்றஒ ரு நல்ல ஆத்மா."- ரெட்டைமலை சீனிவாசன்

'பூனா ஒப்பந்தம்  ஒரு சோகக்கதை'- தொ.பரமசிவம்)

ஒரு புதியதிறப்புத் தரவாதாரம்:

"இதர அரசியல் தலைவர்களுடனோ பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது காந்திஜீ ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டுவிடுவார். ஆனால் சிலநாட்கள் கழித்து அவர் ஒப்புக்கொண்டதை மீறிவிடுவார். இதற்கு அவர் சொன்ன காரணம்

'எனது அந்தராத்மா அப்படிச் சொல்லிற்று. எனவே எனது கருத்தை மாற்றிக் கொண்டேன்' என்று சர்வசாதாரணமாகக் கூறிவிடுவார்" - ஏ.கே.ரிபாயி AK Refaye Pathipagam. Hilal Musthafa 

[('மறுமலர்ச்சி' - 30/9/1994) * ('பறை -2015') - 'மணல் வீடு']

Mu Harikrishnan 

- இதுதான் மகாத்மாவின் அந்தராத்மா இந்துலெட்சண அந்தர்பல்டி லீலைககளின் உட்கிடை.


*

"// வைக்கம் போராட்டத்தில் தனது அளப்பரிய பங்களிப்பனை செலுத்தி, 60 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு, மிகவும் துன்புற்று கிடந்த காந்தியவாதி ஈரோடு ஈஸ்வரன் வரலாற்று பக்கங்களில் தேடி பார்க்கும் நிலையில்தான் உள்ளது.."// - 

 ரெங்கய்யா முருகன். இது முருகனார்  மீள மீளப் பெரியாரின் வகிபாகத்தைக் காணமறுக்கும் பக்கமே.

 ஈரோடு ஈஸ்வரனைக் குறித்து  மெய்யாலுமே முருகனைத் தவிர மற்றெவருமே பேசக்கேட்டு நாமறியோம். அவரைப் பற்றி அறிந்திருந்த இவரை அத்தொடர்பில் பதிவிட யார் தடுத்தார். தனியே பதிவிட வேண்டியது தானே? அடிக்கடி அவருக்குப் பெரியாரின் வகிபாகத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டியே உள்ளது. 

மீளவும் இப்பவும் இன்னுமொருமுறை...

*

பெரியாரின் வகிபாகப் பெருஞ்செயல்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1.காலநேரம் கருதி,ஓரீரு சமயங்களில் பார்ப்பனர் அல்லாதவர்களில் ஒரு சிலர் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.தந்தை

பெரியார், திருவிக, வஉசி,வரதராசலு நாயுடு ஆகியோரின் தியாகமும் தொண்டும் போற்றப்பட வேண்டிய அளவுக்குச் சிறப்பிக்கப்படவில்லை"-

சே•இராசேந்திரன்

 Rengaiah Murugan பின்னூட்டத்திற்கு எதிர்வினை. பெரியார்,திருவிக,வஉசி, வரதராசுலு நாயுடு தொடர்பான என் பதிவிற்கான பின்னூட்டத்தில்பெரியார் தன்னை உயர்த்திக் கொண்டவர் என்கிறாரவர்.

*

"முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ்க்குத் தொண்டுசெய்தவர் என்றமுறையில் எவர்க்கேனும் பரிசில்வழங்கப் புகுந்தால் முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும்.  த.நா. காங்கிரஸ் நாயக்கர் உழைப்பை

நன்றாக உண்டு கொழுத்தது. அவர் காங்கிரஸ் வெறிகொண்டு நாலாபக்கமும் பறந்து உழைத்ததை யான் நன்கு அறிவேன்.நாயக்கரும் யானும் சேர்ந்து சேர்ந்து எங்கெங்கேயோ தொண்டு செய்தோம்"

"ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டத்தில் திளைத்தவர்,வெயில்படாது வாழ்ந்தவர்,ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஸ்ரீமான் நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து வறியோர் போல எளியஉடை தரித்து,எளிய உணவு உண்டு,இரவு பகல் தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை அறிவார்?"

"திருவிதாங்கூரிலே தீண்டாமையை ஒழித்த மாபெரும் போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்ற பெரியாருக்கே அந்தப் புகழ், பெருமை.ஆனால் அந்தப்புகழ்

யாருக்கோ போயிற்று.அத்தியாகம் எனதுவாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. எனக்குப் பெண்டு பிள்ளைகள் இல்லை.நான் செத்துப் போனால் எனக்காக அழுகின்ற ஒருநண்பர் இருந்தால் அது பெரியார் இராமசாமி ஆகத்தான் இருக்கமுடியும்.இந்நாட்டில் பெரியகாரியம் செய்தவர் பெரியார் ஒருவர்தான்"- திருவிக


*

தந்தை பெரியார் அவர்கள் மறைந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தனது இல்லத்தில் கண் மூடி படுத்திருக்கிறார் பெருந்தலைவர் காமராசர். தூங்குகிறார் என நினைத்து அருகில் அமைதி காக்கிறார் தோழர் (பெயர் நினைவில் இல்லை). காமராசரின் கண் இமை ஓரத்தில் நீர் வடிகிறது. 

சில நிமிட அமைதி!. படுக்கையை விட்டுத் திடீரென எழுந்து ஆக்ரோஷமாக சத்தமிடுகிறார் காமராசர்,

"யார் இருக்கான்னேன்?  இனி எந்த நாதி இருக்குன்னேன்..? தமிழனுக்காக குரல் கொடுத்த அந்தக்குரலும் போய்விட்டதே ? " என்று சொல்லிக் குலுங்கி குலுங்கி அழுதிருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்களுக்கு இரங்கற் கூட்டம் இராஜாஜி மாளிகையில் நடை பெற்றது. 

அதில் கலந்துகொண்ட காமராஜர், " பெரியாரின் வரலாறு  தான் தமிழகத்தின் வரலாறுன்னேன். தமிழகத்தின் வரலாறு தான் பெரியாரின் வரலாறுன்னேன்” என்றார்.

 Amudhan maheshvarma .

தொடரும்...

அடுத்த பதிவு: 'இந்திய சமூகவெளியில்  காந்தி பெறும் முக்கியத்துவம்':       Puthiyamaadhavi Sankaran புதியமாதவி தரப்பும் எதிரீடும்

No comments: