சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினாரா?..
ஆம் ஒன்று அல்ல இரண்டு அல்ல,
ஆறு கடிதங்கள்🤣🤣...
1911, ஜூலையில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் சாவர்க்கர் தனது முதல் மன்னிப்புக் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
1913, நவம்பரில் சாவர்க்கர் தனது இரண்டாவது மன்னிப்புக் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
1914, 1918 ஆகிய ஆண்டுகளில் சாவர்க்கர் எழுதியதாகக் கூறப்படும் மன்னிப்புக் கடிதம் பற்றி 1920-ம் ஆண்டு, சட்டமன்றத்தில் உள்துறை உறுப்பினர் சர் வில்லியம் வின்சென்ட் குறிப்பிட்டிருக்கிறார்” எனப் பதிவு செய்திருக்கிறார். மேலும்,
காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து 1914-ம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி புறப்பட்டு 1915-ம் ஆண்டு, ஜனவரி 9-ம் தேதியே இந்தியாவுக்கு வருகை தந்தார்.
அவரது வருகைக்கு முன்பே சாவர்க்கர் இரு முறை கருணை மனுக்களை எழுதியிருக்கிறார்"
என ஓர் ஆங்கில நாளேட்டுக்கு எழுதிய கட்டுரையில் விவரித்திருக்கிறார்...
அதேபோல,
சாவர்க்கர் பற்றி ஆய்வுகள் செய்துவரும் நிரஞ்சன் தக்லே என்பவர்,
1911, ஜூலை 11-ம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்குக் கொண்டு செல்லப்பட்டார்,
அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது, ஆகஸ்ட் 29-ம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கடிதத்தை எழுதினார்...
அதன் பிறகு ஒன்பது ஆண்டுகளில், அவர் ஆறு முறை மன்னிப்புக் கடிதங்களைக் கொடுத்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், 1924-ல் சாவர்க்கர் தனது ஆறாவது மன்னிப்புக் கடிதத்தை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதியிருக்கிறார்"
என ஒரு சர்வதேச ஆங்கில ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் இன்னொரு கடிதத்தில், "பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு முறைகள் எனக்கு நம்பிக்கையை உண்டாக்கியிருக்கின்றன. இப்போது வன்முறையின் பாதையைக் கைவிட்டுவிட்டேன்"
என வீர.சாவர்க்கர் கடிதம் எழுதியதாகவும்,
அதன் விளைவாக 1919, மே 30, 31 ஆகிய இரு தேதிகளில் அவருடைய மனைவி, தம்பிகளைப் பார்க்க அந்தமான் சிறையிலிருந்த சாவர்கருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் நிரஞ்சன் தக்லே கூறியிருக்கிறார்.
மேலும்,
சாவர்க்கர், இன்னொரு கடிதத்தில் ``சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை,
எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள்,
அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால்,
நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்குச் சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்டவில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்!"
எனப் பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சாவர்க்கர் தனது ஐந்தாவது கடிதத்தில் தன் மீது கருணை காட்டுமாறும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட மாட்டேன் என்றும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், சாவர்க்கர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்துக்காகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார் எனவும் கூறப்படுகிறது...
இதன் விளைவாகவே,
சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, 1921, மே மாதம் ரத்னகிரி மாவட்டத்திலுள்ள சிறைக்கு மாற்றப்பட்டார் எனக் கூறப்படுகிறது. மேலும்,
1924-ம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய ஆறாவது கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம்,
"எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக் கூடாது,
ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தைவிட்டு வெளியேறக் கூடாது,
அடுத்த ஐந்து வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது"
போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில்,
1924, ஜனவரி 6-ம் தேதி சாவர்க்கர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
-ஏ.ஜி.நூரானி
(வழக்கறிஞர், எழுத்தாளர்)...
No comments:
Post a Comment