வைக்கம் போராட்டம் திரிக்கப்பட்ட கட்டுக்கதைகளை ஊடுருவித் துலக்கும் உண்மை வரலாற்றுக் குறிப்புகள்
பொதியவெர்பன் அவர்கள் எழுதிய மறுப்பு.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அ.குமரிக்கிழவனார் குமரிக்குசும்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவாங்கூரின் சில ஆவணங்களை ஆராய்ந்தால் வைக்கம் வீரர் என்று பெரியாரை கொண்டாடுவது சிரிப்பைத்தான் தருகிறது.......
அதன் ஒரிஜினல் வீரர்கள் டி எஸ் மாதவனும் ஈழவர்களும் புலையர்களும் பணிக்கர்களும் தான்.பெரியார் இரண்டுமுறை கைது செய்யப்பட்டார் பெரியார் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இந்த சாலை என்ன மன்னனின் அப்பன் வீட்டு சொத்தா என்று முழங்கினார் அதற்காக மூலம் திருநாளால் ஆறுமாதம் சிறையில் அடைக்கப்பட்டார் பின்னர் சேது இலக்குமி பாயின் அரசாட்சியில் திருவாங்கூருக்கள் வரவே கூடாது என்ற நிபுந்தனையில் விடுவிக்கப்பட்டார்.அதை இறுதி வரை கடைப்பிடித்தார்.........
பெரியார் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைபட்டார் என்று சொல்வது வரை ஏற்று கொள்ளலாம் ஆனார் வைக்கம் வீரர் என்று கொண்டாடுவது மிகைப்படுத்தல் மட்டுமின்றி பதினெட்டாம் நூற்றாண்டில் இறுதியில் இருந்து நடந்து வரும் போரட்டத்தை பதியாமல் வரலாற்று திரிக்க முற்படுவதாகும்.........
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தளவாய் குளம் சம்பவத்தில் தொடங்கி பதியப் படவேண்டிய நூற்றி முப்பது ஆண்டுகால ஈழவர்களின் கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றை அப்படியே ஆட்டயம் போடுவதில் இவர்களுக்கு என்ன லாபம் என்று புரியவில்லை.........
டிகே மாதவன் அவர்களும் வீடு வீடாக பிடியரிசி மடிஏந்தி போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்த ஈழவப் பெண்களும் 1803 ஆம் ஆண்டு நடந்த தளவாய் குளம் சம்பவத்தின் போது சாகடிக்கப்பட்டவர்களும் தான் உண்மையான வைக்கம் வீரர்கள்.......
குமரிக்கிழவனார்
#வைக்கம்_வீரர்கள்
*குமரிக்கிழவனார் தாமாய்ந்த திருவாங்கூர் ஆவணத் தரப்பு யாதொன்றையுமே முன்வைக்க வில்லை. முப்பதாண்டுக்கால ஈழவர் கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றின் குறிப்பு யாதொன்றையும் கூட எடுத்துரைக்கவும் இல்லை. இனியேனும் அது குறித்து ஆவண ஆதாரங்களுடன் முன்வைப்பாராக!
அவற்றை மறுதலிப்பதன்று எம்மனோர் நோக்கம். இங்கான பேசுபொருள் வைக்கம் போராட்டமும் அதில் பெரியாரின் வகிபாகமுமே! அவர் குறிப்பிடும் ஒரிஜினல் வீரர்கள் தரப்புகள், மாற்றுத்தரப்புகள் குறித்தும் காண்போம்.
ஆ .அதியமான் காணத்தவறிய பக்கங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சட்டகத்துக்குள்ளிருந்து ஆடும் சதுரங்கம்:2
2•மகாத்மாவும் துணைமகாத்மாவும்•••••••
°~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~•
வைக்கம் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது காந்திவருகை என்பதே அதியமான் தரப்பாகும். அந்தவருகை எதற்காக நிகழ்ந்தது? யாராலவர் யாருக்கு
மாற்றாகத் தருவிக்கப்பட்டார்? என்பதற்கான கேள்விகளுக்கு விடை காண்போம். அதற்கு முன் இன்னும் இரு கேள்விகள்...
பெரியாரைத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஆக்கியது யார்? காந்தியாரை அனைத் திந்தியக் காங்கிரஸ் தலைவர் ஆக்கியது யார் யார்?:
"என்னை இராஜாஜீ அவர்கள்தான் முதலாவதாகக் கோயம்புத்தூர் ஜில்லா காங்கிரஸ் கட்சி செக்ரட்டரி, பிறகு தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டித்தலைவர் ஆக்கினார்.
என்னிடம் அவர் முழுநம்பிக்கை வைத்து அவர் நமது தலைவர் நாயக்கர் என்று அழைத்ததோடு, வெகுபேரை
என்னைத் தலைவர் என்று அழைக்கும்படிச் செய்தார்" - ஈவெரா ('விடுதலை' 26-12-1972)
"இராஜாஜீ,காந்தியை ஆதரித்து அவரைத் தன்வயப்படுத்த முயன்று வேலை செய்து வந்தார்.
சென்னைப் பார்ப்பனர்கள் திலகரைப் பிடித்துத் தம்வசப்படுத்தி இராஜாஜீயை ஒழிக்க முயற்சி செய்தார்கள். அமிர்தசரஸ் காங்கிரசில் எங்கள் ஆதரவால் காந்தி வெற்றிபெற்றார். திலகர் தோல்வியடைந்தார் ஒரு ஆண்டுக்குள் அந்தக் கவலையால் திலகர் செத்தார். காந்தி எதிர்ப்பில்லாத ஏக தலைவர் ஆனார்.அவரைச் சர்வாதிகாரி ஆக்கிவிட்டோம். இதற்கு இராஜாஜீக்கு முக்கிய பங்குண்டு."
-ஈ•வெ•ராமசாமி
('பெரியார்பார்வை'-இதழ்த்தொகுப்பு).
இத்தொடர்பில் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளுகளுக்கு இணங்கியாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர் எவ்வாறு தம்மனம் ஒப்பாமலே ஆளாக நேர்ந்தது? அவருடைய சூழ்ச்சிகள் யாவை என்பன குறித்து இனிக்காண்போம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"வைக்கம் சத்தியாக்கிரக சரித்திரம் ஒரு பெரிய சூழ்ச்சிக்கதையாகும் அதற்குத் தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவர்களும் காந்தியாரும் கொடுத்த தொல்லைகள்
செய்த சூழ்ச்சிகள் அளவிடற்குரியதல்ல. காந்தியாரையே அவரது சர்வ வல்லமை யுள்ள பிடிவாதத்திற்கு விரோதமாக இறங்கிவந்து தனது கருத்துக்களை அவர் இஷ்டத்திற்கு விரோதமாக மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியத்திற்குக் கொண்டுவந்து விட்டதானது வைக்கம்சத்தியாக் கிரகமாகும்.ஆனால் வைக்கம் சத்தியாக்கிரகத்தைப் பார்ப்பனர்கள் மனமார மாற்றி எழுதிவிட்டார்கள்"- ந•க•மங்களமுருகேசன் ('சுயமரியாதை இயக்கம்')
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சட்டகத்துக்குள்ளிருந்தே ஆடும் சதுரங்கம்:3
3•பெரியாருக்கே அந்தப்புகழ்!
°<~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~•
"திருவிதாங்கூரிலே தீண்டாமையை ஒழித்த மாபெரும் போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்ற பெரியாருக்கே அந்தப்புகழ், பெருமை. ஆனால் அந்தப்புகழ் யாருக்கோ போயிற்று."- திரு•வி•க•(வாழ்க்கைக் குறிப்புகள்).
"அந்தப் போராட்டத்தில் அவர் ஈடுபடுவார் என்று அந்த (திருவிதாங்கூர்) அரசரோ அல்லது ஆட்சியோ எதிர்பார்க்க வில்லை.காரணம் அந்த அரசர் டெல்லிக்குச் செல்கிற நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள்வீட்டில் விருந்தினராக இருந்து ஈரோட்டில் தங்கிவிட்டுச் செல்வது வாடிக்கை. எனவே பெரியார் அவர்கள் அங்கு போகும் போது அரசுமரியாதைகளோடு அதிகாரிகளை அனுப்பி வரவேற்பு கொடுத்த நேரத்தில் நான் இங்கு வந்திருப்பது விருந்துக்காக அல்ல உரிமைப் போராட்டத்திற்காக எனவே அருள்கூர்ந்து நான் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவருக்கே உரிய தன்மையோடு எடுத்துக்கூறியதோடு தன்னுடைய அந்தப் போராட்டஉணர்வை நியாயப்படுத்தி அந்த மக்களை எல்லாம் தட்டியெழுப்பும்படியாகச் செய்தார்களென அங்கு வாழ்ந்தபாமரமக்களுக்குக் கூட அந்த உணர்வை ஊட்டினார்கள் " - சி•என்•அண்ணாதுரை ('பெரியார் பார்வை').
"சத்தியாக்கிரகத்த தெரிந்தவர்களைக் கூட வசீகரித்துப் போராட இழுக்கும் ஈர்ப்புத்தன்மையுடையனவாக இருந்தன. பெரியார் சொற்பொழிவுகள் அவற்றில் அவர் திருவாங்கூர் அரசை வன்மையாகக் கண்டித்துக் காரசாரமாக விமர்சனம் செய்தார்"- கே.ராஜன்
'(திராவிட இயக்கம் உரையாடல்கள்)
"திருவிதாங்கூர் திவான் பெரியாருடன் பேசுவதற்கு ஆச்சாரியாரைத் தூது பிடித்தார். ஆச்சாரியார் அந்தச் சந்தர்ப்பம் பெரியாருக்கு வாய்ப்பதை இஷ்டப்படாமல் காந்தியாரையே தருவிப்பதாக ஒப்புக்கொண்டு
உடனே காந்தியாரை அழைத்தார்.என்றாலும் சமாதானம் பேசும்போது காந்தியார் பெரியாரையும் தன்கூட இருக்கும்படி செய்துகொண்டார்"
- ந•க•மங்கள முருகேசன்(' சுயமரியாதை இயக்கம்')
காந்தியாரின் வருகை குறித்த அதியமான் தரப்போ போராட்டத்தை அடுத்த நகர்வுக்குச் செல்ல உதவியது, முடிவை நோக்கி உந்திய முக்கியபயணம் என்பதாக முன் நிறுத்தப்படுகின்றது. ஆனால் காந்தியார் வருகையே
பெரியாருக்கு மக்கள் மத்தியிலிருந்த செல்வாக்கைக் கண்டஞ்சி ஆச்சாரியார் செய்த சூழ்ச்சி என்பது
அதியமான் அறியாத பக்கமாகும். அது மட்டுமில்லை, மகாத்மாவும் துணை மகாத்மாவும் (ஆச்சாரியார்) ஆடிநின்ற சதுரங்க நகர்வுகள் குறித்தும் ஜெயமோகன் விட்ட புதுக்கரடிகளைக் கட்டவிழ்த்தும் இனிக் காண்போம்.
தொடரும்••••
No comments:
Post a Comment