Wednesday, January 29, 2020

மகாகனம் பொருந்திய திவான்பகதூர் சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள் வரவு நிமித்தமியற்றிய நேரிசை ஆசிரியப்பா


மகாகனம் பொருந்திய திவான்பகதூர் சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள்  வரவு நிமித்தமியற்றிய நேரிசை ஆசிரியப்பா

சீர்தரும் வளங்கள் செறிகோ யம்பத்
தூர்தரு சில்லா விலோர்தரு சோமனூ
ரென்னும் பதியி லினிதுறை சீர்த்தி
மன்னு சாமிக் கண்ணு மகிப!
அமிழ்தினு மினிய தமிழ்நனி யுணர்ந்தோய்!
சொற்றிடும் பல்கலை கற்றுணர் மாண்பினோய்!
செப்பரு மாங்கிலத் தொப்பில் நிபுண!
எம்..,பி.எல்., எல்.எல்.பி.யெனும்
செமமையார் பட்டம் திகழ்தரப் பெற்றோய்!
வான சாஸ்திர ஞானமிக் குடையோய்!
சர்வகலா சாலைச் சங்கத் தொருவ!
பாரதிற் சனோப கார மாக
எண்ணிலாச் சங்கம் நண்ணிட வமைத்தவ!
சொல்லரும் புகழுடைச் சில்லா கலெக்ட
ரோதா வுடைய மேதா வியனே!
பங்கமி லிலக்கியச் சங்கம் பதிப்பவ!
அகமகிழ் தருதிவான் பகதூர ரபிதானம்
விளங்கப் பெற்ற களங்கமில் பெரியோய்!
எளியவர்க் கருள்செ யளிதரு குணத்தோய்!
பரோப கார கிருபா கரனே!
துன்னரு மாயிரத்துத் தொள்ளா யிரத்துப்
பதினா றாண்டிற் பதிகளுட் சிறந்த,
கச்சிப் பதியில் மெச்சிட வோங்கும்
பிள்ளையார் பாளையத் தெள்ளளில் சீர்சால்
முத்தி முடிவெனும் சித்தி நூல் செய்தருள்
சரவண தேசிகர் கிருக மதனில்
பொங்குசீ ரைக்கியச் சங்க மொன்று
செப்பரும் புகழ்சால் சுப்பிர மணிய
ஐயரால் ரிஜிஸ்தர் செய்யப் பெற்றது,
நெய்தற் றொழிலினோ ருய்தரும் பொருட்டே
யேற்படும் நூற்சங் கவேற்பா டுதன்னைப்
பதிவு புரிந்ததால் நிதிகோ டிதந்த
பரிசு போலும் பரிசு போலும்
கார்செயு முதவிக்கு நேருப கார
மார்செய வல்லவ ரன்ன
மாண்புடை நின்தனக் கென்புகல் வதுவே.
நேரிசை வெண்பா
பூமிக்கண் ணல்ல புகழுடைய சற்குணனாம்
சாமிக் கண் ணென்னுமபி தானத்தான்- தேமிக்க
தாருடையான் சோமூர்த் தி........
பேருடையான் வாழ்க பெரிது.

காஞ்சிரம் பிள்ளையார் பாளையம் ஸ்ரீகச்சபேஸ்வர ஐக்கிய நாணய சங்கத்தின் நிர்வாகக் கமிட்டியார்அவர்களாற் பிரசுரஞ் செய்யப் பெற்றது.

இவை யியற்றியவர்யூர் பச்சையப்பன் ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் வெண்பாப்புலி தி.சு. வேலுசாமிப்பிள்ளை (சென்னை-பிங்கள வருடம் வைகாசி மாதம் 1917 ஜுன் 1 மலர் 1 இதழ் 1)

No comments: