Wednesday, January 29, 2020

சிந்தனையாளர் பெரியார் - அறிஞர் வ.ரா.


சிந்தனையாளர் பெரியார் - அறிஞர் .ரா.

சிந்தனையாளர் பெரியார் அவர்களைப் பற்றி அறிஞர் .ரா. 1933 ‘காந்திஇதழில் எழுதிய கட்டுரை.

தேர் இல்லை, திருவிழா இல்லை, தெய்வம் இல்லை என்கிறார் நாயக்கர். சுவாமியைக் குப்புறப் போட்டு வேட்டி துவைக்கலாம் என்கிறார். இவரைக்காட்டிலும் பழுத்த நாத்திகன் வேறு எவருமே இருக்க முடியாது. பாதகன்என்று சிலர் உறுமுகிறார்கள். வீட்டைக் கட்டி வைக்கோலைத் திணிப்பதைக் காட்டிலும், வீடு கட்டாமலே, வைக்கோலைப் போராய்ப் போடலாம் என்ற சிக்கன யோசனை சொல்வது தவறா? அழுகிப்போய் புழு நெளியும் உடலுடன் இருப் பதைக் காட்டிலும், உயிர் விடுவது உத்தமம் என்று அபிப்பிராயம் கொடுத்தால்சாகச் சொல்லுகிறான், பாவிஎன்று திட்டுவதா? கண்டவர்க்கெல்லாம் குனிந்து சலாம் செய்து, மண்ணோடு மண்ணாய் ஒட்டிக் கொண்டு மார்பால் ஊர்ந்து செல்ல வேண்டாம் என்று சுயமரியாதை உணர்ச்சியை ஊட்டினால், ‘பாபி, நமஸ் காரத்தைக் கண்டிக்கிறான்என்று அபத்தம் பேசுவதா? மனச் சாட்சிக்கும் தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை, நாத்திகன் என்றும் அழைக்கும் அன்பர்கள், நாத்திகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே நான் சொல்லுவேன்.

அநீதியை எதிர்க்கத் திறமையும் தைரியமும் அற்ற ஏழைகளாய் ஸ்மரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை அடி தெரியும் படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பா! நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை ஆணித் தரமான சொற்களை, அணியணியாய் அலங்காரஞ் செய்யும் உவமானங்களை உபகதைகளை, அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை, உடல் துடிதுடிப்பைப் பார்க்கவும் கேட்கவும் வெகு தூரத்திலிருந்து ஜனங்கள் வண்டுகள் மொய்ப்பது போல் வந்து மொய்ப்பார்கள். அவர் இயற்கையின் புதல்வர்! மண்ணை மணந்த மணாளா! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகமில்லை. செய்ய வேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப் படுவதைப் போல தமிழ் நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவ தில்லை. தமிழ் நாட்டின் வருங்காலப் பெருமைக்கு நாயக்கர் அவர்கள் ன்னோடும் பிள்ளை. தூதுவன். வருங்கால வாழ்வின் அமைப்பு. அவர் கண்ணில் அரை குறையாகப்பட்டிருக்கலாம். (எவர் கண்ணிலேனும் அது முழுமையாகப்பட்டிருக்கிறதாக யார் உறுதியாகச் சொல்ல முடியும்?) ஆனால் மலைகளையும் மரங்களையும் வேரோடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப் போல அவர் தமிழ் நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர் புரியும் வகையைக் கண்டு நாம் வியப்படையாமல் இருக்க முடியாது.

No comments: