மெயில் எம்.ஏ. முனுசாமி
சென்னை சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் நான்காவது தெரு, 22 ஆம் எண்ணில் வாழ்ந்து வரும் திரு, மெயில் எம்.ஏ. முனுசாமி 1917 சூன் முதல் நாள் வெளிவந்த திராவிடன் நாளிதழின் முதல் ஆறு மாத கால இதழ்களை பாதுகாத்து வைத்திருக்கிறார்.
இவரை எழுத்தாளரும், நூலாசிரியருமான ஆராய்ச்சியாளர் திரு.பெ.சு.மணி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அறுபது வயது நிரம்பிய திரு. முனுசாமி 1953 இல் ஏ.ஏ. எயில்ஸ் என்ற வெள்ளைக்காரர் ஆசிரியராக இருந்த போது ‘மெயில்’ இதழில் பணியில் சேர்ந்தது 1981 இல் திரு. இராஜன் ஆசிரியராக இருந்த காலத்தில். இவ்விதழ் நிற்பதுவரை பணியாற்றினார். இதன் காரணமாக இவர் பெயருடன் ‘மெயில்’ சேர்ந்து கொண்டது.
மெயில் முனுசாமி அம்பேத்கர் சிந்தனைக் கூடச் செயலாளராக 1960 முதல் இருந்து வருகிறார். இவ்வமைப்பன் சார்பில் 1) வட்டமேசை மாநாடும்
2) இந்தியாவில் ஜாதிகள் 3) ஒடுக்கப்பட்ட இந்துக்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவர் நீதிக்கட்சியின் (ஜஸ்டிஸ் பார்ட்டியின்) இதழான ‘திராவிடனி’ன் தொடக்கால இதழ்களை இதுவரைப் பாதுகாத்து வைத்திருந்தது வியப்புக்குரிய நிகழ்ச்சியாகும்.
1967 இல் நீதிக்கட்சியின் பொன் விழா மலரைத் தயாரிக்கும் போது இவ்விதழ் கிடைக்கவில்லை, ஜஸ்டிஸ் கட்சி ஆதி திராவிடர் களின் பிரச்சனையில் அக்கறை செலுத்தியது.
ஜஸ்டிஸ் கட்சி உருவாகுமுன், ஆதிதிராவிடர் மகாஜன சபையின் தலைவராக
1890 இல் ஷாப்பு பி.வி. சுப்பிரமணியம் பிள்ளையும், பொதுச் செயலாளராக இராவ்பகதூர் எம்.சி.ராஜாவும் பறையர் மகாஜன சபைத் தலைவராக திவான்பகதூர் இரட்டை மலை சீனிவாசனும் இருந்துவந்தனர். இவர்கள் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவரான டி.எம்.நாயருடன் ஒன்று கூடிப் பேசி இரு அமைப்புகளையும் ஒன்றாக இணைத்தனர்.
ஆதிதிராவிடர்களின் பிரச்சனைகள், இயக்க சம்பந்தமான கட்டுரைகள், சொற்பொழிவுகள் திராவிடன் நாளிதழில் வெளிவந்தன.
1885 இல் ‘திராவிட பாண்டியன்’ என்னும் பத்திரிகையை நடத்திய ஜான் இரத்தினத்தின் சொற்பொழிவு திராவிடன் இதழில் வெளிவந்தது.
ஜஸ்டிஸ் கட்சியைப் பலப்படுத்தியதில் ஆதிதிராவிடர்களுக்கு சிறப்பான பங்குண்டு. இதன் காரணமாக மெயில் முனுசாமியின் முன்னோர்கள் இவ்விதழ்களைப் பாதுகாத்து வைத்தனர். இளமைக்காலம் முதல் ஆதிதிராவிடர் இயக்கத்தில் பற்றுக் கொண்டு பணியாற்றிவரும் முனுசாமி தொடர்ந்து இதுகாறும் இவ் விதழ்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.
திராவிடன் நாளிதழுக்கு முன்பு ஆதி திராவிடர்களின் நலன் குறித்து,
சூரியோதயம் 1869 ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
பஞ்சமன் 1871 ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திராவிட பாண்டியன் 1885 டி.எஸ். இராஜரத்தினம்
மகாவிகட தூதன் 1888 இராஜேந்திரம்
பறையன் 1893 இரட்டைமலை சீனிவாசன்
இல்லற ஒழுக்கம் 1898 ம.சின்னதம்பி
பூலோக வியாசன் 1900 பூஞ்சோலை முத்துவீர நாவலர்
ஒரு பைசா தமிழன் 1907 க. அயோத்திதாஸ் பண்டிதர்
தமிழன்
ஆன்றோர்மித்திரன் 1910 வே. இரத்தின முருகேச பண்டிதர்
தமிழன் (கோலார்) 1926 பண்டிதமணி ஜி. அப்பாத்துரை
ஆகிய இதழ்கள் முழுமையாக பணியாற்றி வந்துள்ளன. திராவிடன் இதழைப் பார்வையிட அனுமதித்து. அதுகுறித்து தகவல்கள் தந்த மெயில் எம்.ஏ. முனுசாமி அவர்களுக்கும் அவரிடம் அறிமுகம் செய்து வைத்த திரு. பெ.சு.மணி அவர்களுக்கும் நன்றி.
(தி.வ.மெய்கண்டார்)
No comments:
Post a Comment