Saturday, December 14, 2019

வெள்ளுடை வேந்தர் பிட்டி. தியாகராயர் 149 ஆம் பிறந்த நாள்



1916 ஆம் ஆண்டு பார்ப்பனரல்லாதாரின் நலனுக்காக இயக்கம் கண்ட தலைவர்களில் முதன்மையானவர் சர்.பிட்டி.தியாகராயர்நீதிக்கட்சித் தலைவர்களாகிய டாக்டர் சி.நடேசனார்டாக்டர் டி.எம்.நாயர் மற்றும் பிட்டி தியாகராயர் ஆகியவர்களில் தியாகராயர் பிறந்த ஏப்ரல் 27 ஆம் நாளில் அவரை நினைவு கூர்கிறோம்.

திராவிட இயக்கத்தின் சிற்பியான நம் தியாகராயர் 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் நாள் பிறந்தார்பெருஞ்செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த தியாகராயர் நெசவுத் தொழிலையும் தோல் பதனிடும் தொழிலை யும் நடத்தி வந்தார். `பிட்டி’ என்பது இவரது குடும்பப் பெயராகும்.
நீதிக்கட்சித் தலைவராக விளங்கிய தியாகராயர் தொடக்கத்தில் காங்கிரசில் பணியாற்றியவர். `அக்கிரகார’ காங்கிரசாக உள்ளதை அறிந்த பின்னர் சமூக நலனுக்காக காங்கிரசிலிருந்து விலகினார்.

1876 இல் B.A. பட்டம் பெற்ற தியாகராயர்வேறு வேலைக்கோ அரசு வேலைக்கோ செல்லாமல் தமது தொழில்களையே கவனித்து வந்தார்தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகி வந்தார்பலருக்கு எளிய முறை யில் திருமணம் நடத்திவைத்தார்தியாகராயர் பொது வாழ்வில் தீவிர மாக ஈடுபட்ட போது தமது தொழிற்சாலைகளில் உள்ள தறிகளை தொழிலாளர்களுக்கே சொந்தமாக்கினார்.

1916 ஆம் ஆண்டு மைலாப்பூரிலுள்ள கிராமணித் தோப்பு என்னு மிடத்தில் நடைபெற்ற சைவ சித்தாந்த மகா சமாசத்தின் ஆண்டு விழா வில் தியாகராயர் தம் கருத்துக்களைக் கூறினார்பார்ப்பனரல்லாத சமுதாயத்தினர் பலவகையிலும் ஒடுக்கப்படுவதை எடுத்துக் கூறி ஓர் இயக்கம் தேவை என்பதை விளக்கினார்.

தியாகராயரின் கருத்திற்கேற்ப `தென்னிந்திய மக்கள் சங்கத்தின்’ சார்பில் ஒரு கொள்கை அறிக்கையை டிசம்பர் 1916 இல் வெளியிட்டார்பார்ப்பனரல்லாத மக்கள் சிறுபான்மையினரான பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு அடிமைப்பட்டுள்ளனர்அரசாங்க அலுவல்களில் பார்ப்பன ரல்லாத மக்களுக்கு மிகக் குறைந்த அளவே வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளதுமேலும் கல்வி வசதிகளும் பார்ப்பனரல்லாதாருக்கு அளிக்கப்படவில்லைஇவைகளையெல்லாம் புள்ளி விவரங்களுடன் இவ்வறிக்கையில் தெரிவித்துபார்ப்பனரல்லாத மக்கள் கல்விக் கற்று முன்னேற வேண்டும் என்றும் கூறினார்இக் கொள்கை அறிக்கை பார்ப்பனரல்லாதாரின் உரிமைச் சாசனம் என்று வழங்கப்பட்டது.

 இதன் சார்பில் `திராவிடன்’ என்ற பெயரிலும் தெலுங்கில் `ஆந்திர பிரகாசிகா’ என்ற பெயரிலும் ஆங்கிலத்தில் `ஜஸ்டிஸ்’ என்ற பெயரிலும் இதழ்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டனதிராவிடன் இதழ் தொடக் கத்தில் பக்தவச்சலம்  பிள்ளை பொறுப்பில் நடத்தப்பட்டது. 1930 இல் இவ்விதழ் பெரியாரிடம் ஒப்படைக்கப் பட்டது

ஜஸ்டிஸ் இதழ் டி.எம்நாயரிடமும் பின்னர் தியாகராயரிடமும் ஒப்படைக்கப்பட்டதுஆந்திர பிரகாசிகாதிராவிடன் இதழின் தெலுங்குப் பதிப்பாகவே நடத்தப்பட்டது.

தென்னிந்திய மக்கள் சங்கம்பின்னர் `தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ எனப்  பெயர் மாற்றம் செய்யப்பட்டதுநாளடைவில் இது `ஜஸ்டிஸ்’ கட்சி என வழங்கப்பட்டது.

பார்ப்பனரின் ஆதிக்கத்தால் நலிவுறும் பார்ப்பனரல்லாத மக்களிடையே தன்னம்பிக்கையைத் தோற்றுவிக்கம் விதமாக தாமே ஆசிரியராக இருந்த சூடிn Bசயஅin என்ற பெயரில் இதழை நடத்தினார்பார்ப்பனரல்லாதாரின் உரிமைக்காகக் குரல் கொடுத்த முதல் இதழ் இதுவே ஆகும். 17.12.1917 வரைத் தான் இவ்விதழ் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

1917 ஆம் ஆண்டில் ஏழு மாநாடுகளை தென்னிந்திய நலச்சங்கம் நடத்தியதுகோவை (19.8.1917), ஆந்திரா (27.10.1917), இராயலசீமை மற்றும் நெல்லை (3.11.1917), சேலம் (9.12.1917) சென்னை (28.12.1917) ஆகிய இடங்களில் நடத்தப்பட்டதுநீதிக்கட்சியின் கொடியாக தராசு சின்னம் பொறிக்கப்ட்ட சிவப்புக் கொடிகள் நாடெங்கும் பறந்தன.

எல்லா சமூகத்தினரும் ஒத்த உரிமைஒத்த வாழ்வுஒத்த உயர்வு பெறுதல் வேண்டும்அதுவே நீதிக் கட்சியின் இலட்சியம்ஒரு வகுப்பு மீது மற்றொரு வகுப்பு ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க வகுப்புகளுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும்தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அரசாங்கத்தைத் தட்டிக் கேட்கத் துணிந்தது.

சமுதாய வாழ்க்கையில் நாலரைக் கோடி மக்களில் பார்ப்பனர்கள் முதலிடம் பெற்றிருப்பதும் உடல் உழைப்பு இல்லாதவாறு அன்னார் வாழ்க்கை முறை அமைந்திருப்பதும் மோட்ச உலகத்திற்கு வழிக்காட்டி களாக அவர்கள் மதிக்கப்படுவதுமே இந்த நாட்டில் பார்ப்பனர்களைப் பெரு வாழ்வு வாழச் செய்துவிட்டது என்று தயக்கமின்றி முதலில் குரல் கொடுத்தது நீதிக்கட்சிதான்.

மாண்டேகு செம்ஸ் போர்ட் குழு முன் பார்ப்பனரல்லாதார் அமைப்பின் சார்பாக தியாகராயரும் பேராசியரும் ஆர்வெங்கட ரத்தினம் நாயுடு அவர்களும்திராவிடர் சங்கத்தின் சார்பில் பனகல் அரசரும் தென்னிந்திய நல உரிமைச்சங்கத்தின் சார்பாக டாக்டர் டி.எம்.நாயரும் இராசரத்தின முதலியாரும் சாட்சியளித்தனர்.

இத்தனைக்கும் பிறகு ஆங்கில அரசு நீதிக்கட்சி வலியுறுத்தியபடி அனைத்து வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு செய்ய தயக்கம் காட்டியதுபின்னர் டி.எம்.நாயர் இலண்டன் சென்று பிரிட்டிசுஷ் பாரளுமன்றத்தில் உள்ள தனது நண்பர்களுடன் கலந்துபேசினார்உடனே டி.எம்.நாயருக்கு பேச்சுரிமை மறுக்கப்பட்டதுபின்னர் அவரது நண்பர்கள் பாராளு மன்றத்தில் கூக்குரலிட்டு தடையை வீழ்த்தினர்அப்போது டி.எம்.நாயர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை படுக்கையில் நேரில் சந்தித்து டி.எம்நாயருடைய தெளிவானக் கருத்துக்களைப் புள்ளி விவரங் களுடன் பெற்றனர்அவருக்கு டாக்டர் இராமசாமி முதலியார் உதவி செய்தார்அடுத்த நாள் டி.எம்நாயர் இலண்டன் மருத்துவமனை யிலேயே உயிரிழந்தார்பின்னர் இட ஒதுக்கீடு கொள்கையை `மெஸ்டன் அவர்’ மூலம் அமுல் செய்தது.

1882 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி உறுப்பினராக தியாகராயர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1923 வரை 41 ஆண்டுகள் தொடர்ந்து பணி யாற்றியவர் இவர் ஒருவரேநீதிக்கட்சி செய்த அரிய பெரிய சாதனை யான தேவதாசி ஒழிப்புச்சட்டம்இந்து அறநிலையச் சட்டம்,  ஆந்திரப் பல்கலைக் கழகம்அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாவதற்கும் பின்புலமாக விளங்கியவர் தியாகராயர்இவர் இறைப்பற்று மிக்கவர்ஆனால் ஆலயங்களில் வடமொழியில் வழிபாடு செய்வதை கடுமை யாக எதிர்த்தார்மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருந்ததுநீதிக்கட்சியின் ஆட்சியின் வழியாக இதை நீக்க ஆவன செய்தார்.

1920 இல் சென்னை மகாணத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றதுவெலிங்டன் பிரபு ஆட்சி அமைக்க தியாகராயரை அழைத்தார்.  முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்த அவர்

இந்திய வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லை எனும்படி அரசியல் hனமற்ற பாமர மக்களை தட்டி எழுப்பிய பாவத்திற்காக என்னையும் அகால மரணமடைந்த என் அருமை சகத் தலைவர் டாக்டர் டிஎம்நாயரையும் வெள்ளையனின் வால்பிடிப்பவர்கள் என்று காங்கிரஸ் தலைவர்களும் அவர்களுடைய பத்திரிக்கைகளும் தூற்று கின்றனர்நான் இப்பதவியை ஏற்பானேயானால் எனது புனிதமான கட்சிக்கு களங்கள் விளைவித்தவன் ஆவேன்அதனால் நான் பதவி ஏற்கமாட்டேன்மன்னிக்க வேண்டும்’ என்று தான் வெலிங்கடன் பிரபுக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டு முதலமைச்சர் பதவிக்கு சுப்ப ராயலு ரெட்டியார் அவர்களைப் பரிந்துரைத்தார்.

1921/இல் பக்கிங்காம் கர்நாடிக் பஞ்சாலைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்அவர்களுக்குத் தலைமை தாங்கிப் போராட்டத்தை நடத்தியவர் காங்கிரஸ் தலைவர் திரு.விகலியாணசுந்தரனார்வேலை நிறுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்தபோது தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனாரை நாடு கடத்துவது என ஆங்கில அரசு முடிவு செய்ததுதிரு.வி.அவர்களை நாடு கடத்தினால் நீதிக்கட்சி பதவி விலகும் என வெலிங்டன் பிரபு விடம் தியாகராயர் தெரிவித்தார்இதனால் ஆங்கில அரசு நாடு கடத்தும் திட்டத்தை கைவிட்டதுநீதிக்கட்சிக்கு எதிரான காங்கிரஸில் திரு.வி.இருந்தாலும் இனமொழிப் பற்று மிக்கவர்எனவே அவரை நாடு கடத்துவதை தியாகராயர் தடுத்தார்.
அவர் வெள்ளுடை வேந்தர்மேல் நாட்டுபாணியே அவருக்குப் பிடிக்காதுவெள்ளை வேட்டிவெள்ளைச் சட்டைவெள்ளைக் கோட்டு  மேல் அங்கிவெள்ளை துணியே தலைப்பாகை. 1921 இல் இங்கிலாந்தி லிருந்து எட்வார்டு மன்னர் சென்னை துறைமுகத்தில் வந்திறங்கினார்தியாகராயர் சென்னை மாநகராட்சித் தலைவர்சென்னை மாகாணத் தின் முதல் குடிமகன்அவர்தான் அரசு குறிப்பிட்டிருக்கும் உடை அணிந்துவரவேற்க வேண்டும்இதை மறுத்த தியாகராயர் தனது வெள்ளையுடையிலேயே செல்லப்போவதாகக் கூறினார்ஆங்கில அரசும் இதற்கு பணிந்ததுஇது 8.1.1921 இல் நடந்தது.

சமூகச் சீர்திருத்தத்தில் தியாகராயர் மிகுந்த அக்கறைக் கொண்டி ருந்தார்மனுதர்மத்தில்  உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார்பிறப்பு அடிப்படையில் மனிதனுக்கு மனிதன்  வேற்றுமை காட்டுவதை திராவிட நாகரீகத்து மேதைகள் எவருமே ஏற்றுக் கொண்டதில்லைபார்ப்பனர்களே முதன் முதலில் சாதியைப் புகுத்தியவர்கள்அதன் பரிணாம வளர்ச்சியே வருணாசிரம தர்மம்இதனால் என்னென்ன தீமைகள் வரும் என்பதை அறிந்தே பார்ப்பனர்கள் செய்தனர்இதைப் படிக்காத ஏழை மக்களும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் தெளிவாகவும் அறிவு பூர்வமாகவும் உலகறியச் செய்தவர் தியாகராயர்.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் IAS தேர்வுகள் இலண்டனில் மட்டும்தான் நடைபெற்றதுபார்ப்பனர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்பது அவர்களின் சமயக் கட்டுப்பாடுஎனவே அதை இந்தியாவில் நடத்த வேண்டுமென்று பார்ப்பனர்கள் வலியுறுத்தினர்அவர்களின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி இதன் மூலம் பார்ப்பனர் களே பயன்அடைவர் என்பதை தியாகராயர் வெளிப்படுத்தினார்.

சென்னை மாநகராட்சியின் தலைவராக அவர் இருந்த காலத்தில் தான் மாநகரத்தின் முதல் குடிமகன் மேயர் என்ற பதவி அழைக்கப் பட்டதுஅந்தப் பதவி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் சொந்த மாக்கப்படவில்லைஎல்லா வகுப்பினரும் மேயராக வரும்வகையில் திட்டமிட்டு பார்ப்பனரல்லாதார்முஸ்லிம்கள்கிறித்துவர்கள்பார்ப்பனர்கள் என மாறிமாறி மேயர்களாக வரும் வகையில் `சுழற்சி முறை’ ஏற்படுத்தப்பட்டது.
1919 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர முனிசிபல் சட்டப்படி மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் தியாக ராயரே ஆவார். 1923 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மாநகராட்சித் தலைவராகப் பணியாற்றினார்.

கல்வியைப் பரப்ப மிகவும் பின்தங்கிய பகுதிகளில் எல்லாம் பல புது பள்ளிக்கூடங்களை அமைத்தார்ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ வசதி அளிக்க பல இடங்களில் மருத்துவமனைகள் அமைத்தார்குடிசைகளுக்கு வரி விதிக்காமல் அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு அதிகப்படியான சலுகைகள் அளித்தார்.

கூவம் ஆற்றைச் சீர்ப்படுத்த 1913 ஆம் ஆண்டே திட்டமிட்டார்போதிய வசதியில்லாததால் அத்திட்டம் தடைப்பட்டதுமாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பகல் உணவு அளித்தார்ஆயிரம் விளக்குப் பகுதியில் தொடங்கிய இத்திட்டம் மேலும் நான்கு நகராட்சிப்பள்ளிகளுக்கும் செயல்படுத்தப்பட்டதுதாழ்த்தப் பட்ட மக்களின் கல்விபொதுச் சுகாதாரம்வேலை வாய்ப்பு போன்ற வற்றிற்கும் வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கும் சிறப்பாகத் தன் உழைப்பை நல்கினார்அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பஞ்சமர்பறையர் என்றும் அவர்கள் வாழுமிடங்கள் `பறைச்சேரி’ என்றும் வழங்கப்பட்டனஇவற்றை எண்ணி வருந்திய தியாகராயர் அவர்களுக்கு நல்ல குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்க வற்புறுத்தினார்இதன் விளைவாக ‘மாதிரி பறைச்சேரி’ ஒன்று கல்லறைத் தெருவில் அமைக்கப் பட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் குடியேற்றப்பட்டனர்தியாகராயருக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும்இரண்டடுக்கு கொண்ட மாடி வீடுகள் பாந்தியன் தெருவில் கட்டப்பட்டு ஆங்கிலோ இந்தியருக்கு வழங்கப் பட்டது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடுகாட்டில் பிணங்களைப் புதைக்கு மிடத்தில் மேடை அமைத்துக் கொடுக்கப்பட்டதுபஞ்சமர்பறையர் என்ற சொற்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதுஅதற்கு பதிலாக `ஆதி திராவிடர்’ என்றே அழைக்கப்பட வேண்டுமென்று சட்டம் இயற்றப் பட்டதுதியாகராயரின் நீதிக்கட்சியின் ஆட்சியில் கேரளத்தில் ஈழவர்பார்ப்பனர்களின் தெருக்களில் நடமாடவும் சென்னையில் ஆதிதிரா விடர் எல்லா பொதுவிடங்களையும் மேல் சாதி எனக் கருதப்படும் மக்களுக்குச் சமமாகப் பயன்படுத்தவும் சட்டமியற்றப்பட்டதுஇது நிறை வேற குரல் கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசனாரின் துணைவி யாவார்வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் என்னும் தனது கொள்கையில் தாழ்த்தப்பட்டவர்களையும் நீதிக்கட்சி இணைத்துக் கொண்டதுபிற்படுத்தப்பட் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களின் நலனைக் காப்பதற்கென்று தொழிலாளர் நலத்துறையை நீதிக்கட்சி தொடங்கியது குறிப்பிடத் தக்கது.

தியாகராயர் தம் சொத்தில் ஒரு பங்கை கல்விக்காக அளித்தார்தமது இல்லத்துக்கு அருகில் ஒரு நடுநிலைப்பள்ளியை ஏற்படுத்தினார்இது 1897 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3/ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டதுஇப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்பட்டது. 1904/இல் இப்பள்ளி உயர் நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டதுபின்னர் இப் பள்ளி தியாகராயர் பெயரில் அழைக்கப்பட்டதுஇதன் வளர்ச்சிக்கு அறிஞர் அண்ணா நாடகம் நடத்தி அதன் மூலம் வசூலானத் தொகை யைக் கொண்டு நிதி உதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்ப்பனரல்லாத மக்களின் எழுச்சிக்காகப் பாடுபட்ட உரிய இடத்தை பெற போராடிய முதல் தலைவர் தியாகராயர்அப்படிப்பட்ட தலைவர் 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் தமது 73 வது வயதில் மரணமடைந்தார்.   

 (ஏடு/13)


No comments: