காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படைக் கூறுகள்
காவிரி நடுவர் மன்றம் 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் அளித்த இடைக் காலத் தீர்ப்பில்,
205 டி.எம்.சி நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனக் கூறிற்று. மேலும், குறுவை சாகுபடிக்காக (சூன்/செப்டம்பர்)
137 டி.எம்.சி தண்ணீரையும் சம்பா சாகுபடிக்காக (அக்டோ பர்/சனவரி)
68 டி.எம்.சி தண்ணீரையும் தர வேண்டும் என்ற அடிப் படைக்கூற்றையும் வலியுறுத்தியது. எனவே காவிரி நீரின் தேவை என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை குறுவைக்குத்தான் என்பது காலங் காலமாக இருந்து வருகிறது. மேலும் இது ஒரு குறுகிய காலப் பயிர் சாகுபடி முறையும் கர்நாடகத்தைவிட சிக்கனமான ஒன்றாகும். சம்பா சாகுபடி காலமானது தமிழகத்தில் மழைக்காலப் பருவமாகும். எனவே அதற்கு காவிரித் தண்ணீர் ஆரம்பகால வேலைகளுக்கு மட்டுமே தேவை யாக உள்ளது.இந்த நடைமுறை 1892 ஆம் ஆண்டு சென்னை மைசூர் காவிரி உடன்பாட்டிலும் 1924 ஆம் ஆண்டு உடன்பாட்டிலும் பின்பற்றப் பட்டுள்ளது. ஆனால் கர்நாடகம் தனது அணைகளில் நீர் நிரம்பிய நிலையில் மட்டுமே திறந்து விடும் அடாவடிப் போக்கைக் கடைபிடித்து வருகிறது.
நம் தேவை 280 டி.எம்.சி. தானா?
நம்மிடையே உள்ள மன்னார்குடி இரங்கநாதன் தொடர்ந்து பல இடங்களிலும் பேட்டிகளிலும் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் 280 டி.எம்.சி தண்ணீரை தமிழகம் பெற்றுவிட முயற்சிக்க வேண்டும் என்று கூறிவருகிறார். தமிழக காவிரி தொழில் நுட்பக்குழுத்தலைவர் ஏ.மோகனகிருஷ்ணனும் `நீர்வள மேம்பாட்டின் தேசிய எதிர்காலம்’ என்ற தலைப்பில் இந்திய பொது நிர்வாக மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசும்போது தமிழகத்தின் தேவை ஆண்டுக்கு 280 டி.எம்.சி என்று கூறியுள்ளார் (தினமணி 30.3.1998). மன்னார்குடி இரங்க நாதன் ஒரு விவசாய சங்கத்துக்குத் தலைவராக இருந்து வருகிறார். ஏ. மோகனகிருஷ்ணன் தமிழகத்தின் காவிரி தொழில் நுட்பக்குழுத் தலைவ ராக இருந்தவர்.. நதிநீர் இணைப்பு உயர்நிலைக்குழுவில் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர். இத்தகையவர்கள் தமிழகத்தின் தேவை 280 டி.எம்.சி என வரையறுத்துக் கூறுவதன் நோக்கம் என்ன?.
1974 வரை தமிழகம் 573 டி.எம்.சி தண்ணீரைப் பயன்படுத்தி வந்துள்ளது. 1981 ஆம் ஆண்டு கர்நாடக அரசு அளித்த வரைவுத் திட்டத் தில் 414 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு தர ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் முக்கியமான பதவிகளில் பொறுப்புகளில் உள்ள இவர்க ள் 280டி.எம்.சி என வரையறை அளித்து பேசி வருவதன் காரணம் என்ன? மன்னார்குடி இரங்கநாதன் 1996 இலிருந்தே இவ்வாறு பேசி வருகிறார். அதே போல் சம்பா சாகுபடியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இவரும் மற்ற ஒரு சில விவசாய சங்கத் தலைவர்களும் கூறி வருகின்றனர். ஒரு போக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட மறியல் போராட்டம் நடத்துகின்றனர். ஒரு போக சம்பா சாகுபடிக்கா வது தண்ணீர் திறந்துவிடுங்கள் என கெஞ்சுகின்றனர். ஜனாதிபதிக்கு கருணை மனு கூட போட கடந்த வருடம் முடிவெடுத்தனர். சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்டுப் போராடலாம். மறியல் செய்யலாம். ஆனால் அது என்ன ஒரு போக சம்பா சாகுபடி? அப்படியென்றால் மன்னார்குடி இரங்கநாதனும் மற்ற விவசாய சங்கத் தலைவர்களும் குறுவை சாகுபடியை கர்நாடகம் எதிர்பார்ப்பதைப் போல் கைவிடச் சொல்லுகின்றார்களா?
இப்போது இதே மன்னார்குடி இரங்கநாதன் இந்த விவசாய சங்கத் தலைவர்களை அழைத்துக்கொண்டு போய் கர்நாடக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்களிடம் குறுவைக்கு 80 டி.எம்.சி தண்ணீராவது தாருங்கள் என்று கெஞ்சியுள்ளனர். நடுவர்மன்ற இடைக்கால ஆணையிலேயே 137 டி.எம்.சி தண்ணீர் குறுவைக்குத் தர வேண்டும் என்று உள்ளது. இதுவே மிகவும் குறைவானது. இந்த நிலையில் விவசாய சங்கத் தலைவர்கள் மன்னார்குடி இரங்கநாதனின் நூலின் தன்மை புரியாமல் அவர் பின்னால் செல்வது தமிழகத்திற்கு நல்லதல்ல.
No comments:
Post a Comment