‘தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ்
பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும்.. ஆனால் தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனா யிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடன் என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால், திராவிட
மொழி தமிழ் என்ற காரணத்திற்காக தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் மொழி காரணமாக
மட்டுமே தன்னைத் திராவிடனென்று கூறிக் கொள்ளமுடியாது. தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழ னென்று கூறிக்கொண்டு நம்முடன்
கலந்து மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்த பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொண்டு
நம்முடன் சேர முற்பட மாட்டான்’ /
தந்தை பெரியார்.
இத்தகைய கருத்தாய்வுள்ள விளக்கத்திற்கு பிறகும், இங்குள்ள சிவப்பு சாயம் பூசப்பட்டு, ஆனால் அவற்றை மறைக்க தமிழ், தமிழர், தமிழ்த் தேசம் என்ற பெயரில் உலாவுகின்றவர்கள், இங்கேயே பிறந்து வளர்ந்து, தமிழ்
மொழி பேசி வருகின்ற பார்ப்பனர்களும் தமிழர்களே என்கின்ற னர். ஆந்திராவிலிருந்து, கர்நாடகாவிலிருந்து
இங்கு குடியேறி, வீட்டிற்
குள்ளும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் தெலுங்கிலும் கன்னடத் திலும்
பேசுபவர்களைக் காட்டிலும் பார்ப்பனர்கள் பரவாயில்லை என்ற கருத்தை
வலியுறுத்துகின்றனர். தமிழ்த்
தேசியம் பேசுகின்றவர்கள், தனித்தமிழ்
என்று சொல்லுகின்றவர்கள் பெரியாரை இகழட்டும். ஆனால் எழுகின்ற சில ஐயப்பாடுகளுக்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
அ) அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில், தென் ஆப்பிரிக்காவில் மற்றும் பல வெளி நாடுகளில், பல பத்தாண்டுகளுக்கு முன்பு குடி யேறியத் தமிழர்கள், தமிழை மறந்து, அங்குள்ள
சூழ்நிலைக்கு ஏற்ப ஆங்கிலமோ அல்லது அங்கு சமுகத்தில் புழங்குகின்ற மொழியிலோ
பேசுகின்றனர். குழந்தைகளைப்
படிக்க வைக்கின்றனர். அந்த
தமிழ்க் குழந்தைகளும் (தமிழை அறியாவிட்டாலும்) அங்கேயே அந்த நாடுகளி லேயே பிறந்தவர்கள். அவர்களுக்கு அந்த நாட்டின் அரசியல் சட்டப் படி, குடியுரிமை கூட வழங்கப்பட்டிருக்கலாம். அதனாலேயே அவர்கள் ஆங்கிலேயர்களாக ஆகிவிட முடியுமா? அவர்களுக்கு தமிழ் தெரியா விட்டாலும், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவர்கள் தமிழர்கள்தானே?
அது போல் இங்குள்ள பார்ப்பனர்கள், இங்கேயே பிறந்தவர்கள் வளர்ந்தவர்கள் என்றாலும் தமிழையே பேசுபவர்கள்
என்றாலும் அவர்கள் ஆரியர்கள்தானே?
ஆ) 1945/இல் ‘அந்த தைரியம்’ என்ற
தலைப்பில் அறிஞர் அண்ணா, ‘தமிழர் என்றால் தமிழகத்தில் பிறந்து, தமிழ்ப் பேசும் அனைவரும் தமிழரே என்பர். ஆனால் உள்qர உணர்வர். தமிழர் என்றால், தமிழ்
மொழியின் மீது மட்டுமன்று, மொழி, விழி, வழி மூன்றிலும் தமிழர். நோக்கம், நெறி (விழி,வழி) என்ற இரண்டும் தமிழர்களுக்குத் தனி. ஆரிய நோக்கம் வேறு, மார்க்கம்
வேறு. தமிழர் என்றால் தனி இனம் என்ற கருத்தே தவிர, மொழியிலே மட்டுமன்று’ என்று
விளக்குகிறார். உண்மையில், பார்ப்பனர்கள் தமிழர்களே என வாதாடும் இவர்கள் (பார்ப்பனர்களே தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை
என்பது வேறு) அவர்கள்
தமிழ் மொழி மீது பற்றுக் கொண்டவர்கள், தமிழுக்காக
உயிரை விடுபவர்கள் என்பதை விளக்கு வார்களா? உ.வே.சா., பரிதிமாற் கலைஞர், பரிமேலழகர், பாரதியார் என்று இவர்களின் பெயர்களை சொல்லி அவர்களாகவே தமிழ்த் தாத்தா
என்றும் மகாகவி என்றும் போட்டுக் கொண்ட பட்டங்களை வைத்துக் கொண்டு வாதங்கள் செய்யக்
கூடாது. சாலையில் செல்லு கின்ற, உங்கள்
தெருவில் இருக்கின்ற ஒரு பார்ப்பானைப் பிடியுங்கள். அவன் மூலம் உங்கள் வாதத்திற்கு அணி சேர்க்க முடியுமா?
இ) ஆலய வழிபாடு தமிழில் இருக்க வேண்டும் என்று கூறுகின்ற பார்ப்பானை உங்களால்
காட்ட முடியுமா? தமிழ்ப்
போராட்டத்தை ஆதரிக்கும் பார்ப்பானை உங்களால் மேடையேற்ற முடியுமா? தமிழ் வழிக் கல்வியை ஆதரிக்கும் பார்ப்பானை காட்ட முடியுமா? தமிழிசையை, தேவாரத்தைப்
பாடும் பார்ப்பான் எங்கே? தமிழ்த்
தேசிய இனச்சிக்கலைத் தெளிவுபடுத்தும் பார்ப்பான் இருக்கிறானா? சமூக நீதி யைப் பற்றி பேசும் பார்ப்பானைக் காட்டுவார்களா? எல்லாவற்றிற்கும் மேலாக பூணூலைக் கழட்டக் கூடிய பார்ப்பான் இருக்கிறானா? மனித நேயம் கொண்ட மாமனிதர் பெரியாரை ஏற்றுக் கொள்ளும் பார்ப்பான் எங்கே?
ஈ) பெண்மை என்பது குழந்தையைப் பெறுவதால் மட்டுமே ஏற்படுவது அன்று. அக்குழந்தையை வளர்ப்பதும் பராமரிப்பதும் சான்றோனாக்குவதும் ஆகும். அவ்வாறே தமிழர் என்பதும் பிறப்பாலே யும் தமிழர்களிடையே வளர்வதாலேயே மட்டுமே
வருவது அன்று. உணர்வுகளால்
அவை பெறப்பட வேண்டும். இது
பார்ப்பனர்களுக்கு சாத்தியப்படுமா?
உ) தமிழர்களின் உருவத்தைக் கொண்டு ஒருவரை பறையர் என்றோ, வன்னியர் என்றோ, முதலியார்
என்றோ, நாயக்கர் என்றோ, செட்டி
யார் என்றோ கூற முடியுமா? ஆனால்
பார்ப்பனர்களைக் கண்டால் மட்டும் அவர்கள் பார்ப்பனர்கள் என்று அறிய முடியகின்றது. இது எதனால்?
ஊ) ஒரு தமிழ்ப் பெயரைக் கொண்டு அவர் பறையரா, வன்னியரா, செட்டியாரா
என்று சொல்ல முடியவில்லை. ஆனால்
ஒரு பார்ப்பான் பெயரைக் கொண்ட அவன் பார்ப்பான் என்று அறிய முடிகின்றது. இதற்கு நம் தோழர்கள் விளக்கம் தருவார்களா?
இறுதியாக தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள பார்ப்பனர்களே இந்த 20 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் விரும்பவில்லை. தங்களை பார்ப்பான் என்று அடையாளம் காட்டவே செய்கின்றார்கள். நீங்கள் ஏன் அவர்களைத் தமிழர்களாகச் சித்தரிக்க முயலுகின்றீர்கள்?
(ஏடு /1)
No comments:
Post a Comment