நல்லோர் நடேச முதலியார் வாழ்க்கை வரலாறு
திவான் பகதூர் டாக்டர் சி.நடேச முதலியார்
(1875- 18.2.1937)
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்சியாகப் பதவியில் மிகச் செல்வாக்கோடு இருந்த காலத்தில், 1949 இல், தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறுபதாவதாண்டு வைர விழா, 2009 இல் வந்தது.
1909 இல் பிறந்த அண்ணாவின் நூற்றாண்டு நிறைவும் அதே ஆண்டில் வந்தது. 1949 இல் தி.மு.கழகத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற, இன்றைய தி.மு.க தலைவர் காலத்திலேயே 2009 இல் தி.மு.க.வின் 60 ஆவது ஆண்டு வைர விழா வந்தும் வைர விழாவைப் பெருமையுடன் தி.மு.க. கொண்டாடத் தவறியது வியப்பினை அளித்தது. இன்றும் அளித்து வருகிறது.கொண்டாடததற்கான காரணமும் தெரியவில்லை.
நமது இளந்தமிழன் இதழில் வைர விழாவைக் கொண்டாட வேண்டும் என்று 2007, 2008, 2009 இதழ்களில் எழுதியிருந்தோம்.
கடந்த காலங்களில் திராவிட சங்கத்தின் பொன் விழா, வைரவிழா, முத்து விழா ஆகிய விழாக்களையும், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் முதலிய தலைவர்களின் விழாக்களையும், நீதிக்கட்சியின் சிறப்பான ஆண்டு நிறைவுகளையும் இவர்கள் கொண்டாடினார்களா?
இருப்பினும், இப்பொழுது நல்லோர் நடேச முதலியார் அமைத்த திராவிடர் சங்கத்தின் நூற்றாண்டைக் கொண்டாடியது வரவேற்கத்தக்கது. நல்லோர் நடேச முதலியார் பற்றிய வாழ்கைக் குறிப்பை நமது வாசகர்களுக்கு அளிக்கின்றோம். - தி.வ.மெய்கண்டார்.
(நடேச முதலியார் பற்றிய இக்கட்டுரை திராவிடரியக்க வரலாற்றறிஞர் திரு. கே.குமாரசாமி எழுதிய திராவிடர் தலைவர் டாக்டர் நடேசனார் என்னும் நூலி லிருந்து எடுக்கப்பட்டது)
No comments:
Post a Comment