Saturday, December 14, 2019

பாரதி காந்தியை சந்தித்தாரா?



பாரதி’ திரைப்படத்தில் பாரதியார் காந்தியடிகளைச் சென்னையில் சந்திப்பதாகக் காட்டப்பட்டுள்ளதுஉண்மையில் காந்தியை பாரதியார் சந்தித்தாராஎன்ற கேள்விக்கு ஒரு சிலர் இராசாசியின் முயற்சியின் பேரில் பாரதியார் காந்தியைச் சந்தித்தார் என்று கூறுகின்றனர்உண்மையில் பாரதியார் காந்தியை சந்தித்துவிடாமல் இருக்க காங்கிரசில் இருந்த சில பார்ப்பனர்கள் இராசாசியின் தலைமையில் செயல்பட்டனர் என்பதே வரலாறுஇதற்கான சில ஆதாரங்களை இங்கே தருகிறோம்.

பாரதியார் 12 ஆண்டுகள் பதுச்சேரியில் வாழ்ந்ததாக பாவேந்தர் பாரதிதாசன்பச்சையப்பன் கல்லூரியில் நடந்த பாரதி விழாவில் கூறியுள்ளார்மற்ற பாரதி ஆய்வாளர்கள் பத்தாண்டுகளே பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்ததாகக் கூறி வருகின்றனர்.
இப்போது விசயத்திற்கு வருவோம்.. பாரதியார் மனைவி செல்லம்மாள் பாரதியாருடன் கோபித்துக் கொண்டு தன் சொந்த ஊரான கீழ்க்கடையத்துக்குச் சென்றுவிட்டதால்பாரதியும் புதுவையை விட்டு கீழ்க்கடையத்துக்குச் செல்ல 1918 இல் முடிவெடுக்கிறார்புதுவையை விட்டு செல்லும்போது ஆங்கிலேயரின் ஆட்சி எல்லைக்குட்பட்ட கடலூரில் கைது செய்யப்பட்டு 34 நாட்கள் சிறை வைக்கப்படுகிறார்பின்பு ஆங்கில அரசுக்கு எதிராக எந்தப் போராட்டத்திலும் ஈடுபட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு ஜாமினில் விடுதலைச் செய்யப்பட்டார்இதற்கு உதவியவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் ஒருவர்அங்கிருந்து கீழ்க்கடையம் சென்று இரண்டு ஆண்டுகள் அமைதியாக வாழ்கிறார் பாரதியார்.

இதற்கிடையில் 1919 ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் ஆங்கில அரசால் கொண்டு வரப்படுகிறதுஅச்சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் பந்த் நடத்த அழைப்பு விடுக்கிறார்முதலில் மார்ச் 30, 1919 இல் பந்த் நடத்த போராட்ட நாள் குறிக்கப்பட்டதுபின்பு இது ஏப்ரல் 6, 1919 என மாற்றி அமைக்கப்பட்டது.

ரௌலட் சட்டத்தை எதிர்த்து நடக்க இருக்கும் பந்த்க்கு ஆதரவு திரட்டும் நோக்கில் சென்னையில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததுஇதில் கலந்து கொள்ள காந்தியடிகள் மார்ச் 18, 1919 இல் சென்னைக்கு வந்தார்காந்தியடிகளின் வருகைக்கு வி.எஸ்சீனிவாச சாஸ்திரியார்டாக்டர் எஸ்சுப்பிரமணிய ஐயர்ஜி.நடேசன் மற்றும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காந்தியாரின் வருகைக்கு ஆதரவாக ..சிதம்பரம் பிள்ளைஜி.கஸ்தூரிரங்க அய்யங்கார்அரங்கசாமி அய்யங்கார்சோமசுந்தர பாரதியார் ஆகியோர் செயல்பட்டு சென்னைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்காந்தியடிகளின் உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் காந்தியடிகள் கலந்து கொள்ளவில்லைஅவரது பேச்சு கூட்டத்தில் படிக்கப்பட்டது.

இதன் பின் 13 நாட்கள் சென்னையில் இருந்த காந்தியடிகள் பெரம்பலூரில் சென்னை காங்கிரஸ் தொழிலாளர் கூட்டத்திலும்டிராம்வே தொழிலாளர் கூட்டத்திலும் பேசினார்மார்ச் 31 ஆம் நாள் ஆந்திரா சென்றார்பின் அங்கிருந்து பம்பாய் சென்றார் காந்தியடிகள்காந்தியடிகளின் பேச்சை சென்னையில் அனைத்துக் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் மொழிப் பெயர்த்தவர்திருவிகல்யாணசுந்தரனார்இந்த நாட்களில் திரு.வி.பாரதியார் காந்தியைச் சந்தித்ததாகக் கூறவில்லைவா.ராஎன்ற பார்ப்பனர் மட்டுமே பாரதியார் காந்தியடிகளைச் சந்தித்ததாகக் கூறியுள்ளார்காந்தியடிகள் சென்னையை விட்டுச் சென்றபின்ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டம் பற்றி திரு.வி. கூறியதை அவரது வார்த்தைகளிலேயே அறிவோம்...

ஏப்ரல் ஆறாம் நாள் மலர்ந்ததுஅடிகளின் ஆத்மசக்தி மணங் கமழ்ந்ததுமுன் ஏற்பாட்டின்படி காலையில்  இராயப்பேட்டையிலுள்ள பஜனை கோஷடிகளும் மற்றவர்களும் ‘தேசபக்தன்’ நிலையம் போந்தார்கள்அவர்களுடன் சுப்ராய காமத்தும் யானும் ஊர்வலம் வந்தோம்பிற்பகல் பாலசுப்பிரமணிய பக்த ஜனசபையின் குகானந்த நிலையத்தை அடைந்தோம்சுப்பிரமணிய பாரதியார் பஜனைக் கோஷ்டியில் எங்கேயோ எப்படியோ கலந்துவந்தார்அவரைக் கண்டதும் செவிகள் அவரது பாட்டை விரும்பினபாரதியாரைப் பாடுமாறுக் கேட்டேன்தமிழ்ப்பெருமான் முருகா முருகா என்று பாடத்தொடங்கினார்;... .., பாரதியார் சித்திரப்புதுமை ஆனார்பாட்டுக்கும் ஓவியத்துக்கும் உள்ள ஒருமைப்பாட்டை யான் கண்ணாரக் கண்டேன்சிறிது நேரம் கழித்துப் பாரதியார் விடைபெற்றுச் சென்றார்’ என்று கூறியுள்ளார் திரு.வி.பஜனைக் கோஷடிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியிலும் எங்கிருந்தோ எப்படியோ பாரதியார் கலந்துகொண்டார் என்றுதான் திரு.வி. கூறியுள்ளார்மேலும்.உசி. கஸ்தூரிரங்க அய்யங்ககார் நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோரே கூட்ட ஏற்பாடுகளைச் செய்தவர்களாகவும் கூட்டத்தில் பேசியவர்களாகவும் மா.பொ.சிவஞானம் அவர்கள் கூறியுள்ளார்இந்தக் கூட்ட நிகழ்ச்சிக்கும் இது குறித்து காந்தியடிகளைச் சந்திப்பதற்குச் சென்ற குழுவிலும் பாரதியார் இடம் பெறவில்லை என்பது தெரிகிறது.

எனவே பாரதியார் காந்தியடிகளைச் சந்தித்தார் என்று கூறுவது ஒரு வரலாற்று பிழையே என்பது என் கருத்தாகும்பாரதியார் காந்தியடிகளைச் சந்தித்தார் என்பதற்கு பாரதி ஆய்வாளர்கள் சான்று காட்டுவார்களா?


No comments: