Saturday, December 14, 2019

தமிழ் வழிபாடு நம் அடிப்படை உரிமை - வழக்குரைஞர் கு.ச. ஆனந்தன்



வழக்குரைஞர் கு.. ஆனந்தன்


தமிழ்த்துதி  முறை

சிவன்திருமால்சக்தி வழிபாடுகள் தமிழகத்தில் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே தமிழ்த்துதி முறைமையுடன் நடைபெற்று வந்தனஅத்தெய்வங்கள் வேதங்களில் இல்லைதமிழ் வழிபாட்டு நூலான `மூத்த திருப்பதிகம்’ பாடிய காரைக்கால் அம்மையார் தமிழிலேயே வழிபட்டு முக்கியடைந்தார்அவர் அய்ந்தாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந் தவர். 7 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத் திருக்கோயில்களில் தேவாரத் திருப்பதிகங்களும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும் ஓதப்பட்டன என்பதற்குப் பல இலக்கியகல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

பத்து அல்லது பதினோராம் நூற்றாண்டில் ஒன்பது தமிழ்ப்புலவர் களால் ‘திருவிசைப்பாஎன்ற அரிய தமிழ் வழிபாட்டு நூல் எழுந்தது.

திருமந்திரம்தேவாரங்கள்திருவாசகம்நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் முதலியவற்றில் உள்ள தெய்வத் தமிழ்ப் பாடல்களும் மற்ற பக்திப் பனுவல்களில் உள்ள இறைப்பாட்டுக்களும் வெறும் இலக்கியங் களல்லதமிழ்த்துதி முறை நடப்பிலிருந்ததை விளக்கும் ‘தமிழ வாய் மொழிகளே’. அவற்றில் இறைவன் அருளைப் பெறும் வழிபாடுகளும் பூசனைகளும்தமிழ் மந்திரங்களும் மெய்யுணர்வுக் கருத்துகளும் அடங்கி யுள்ளனஅவை வடமொழி ஆகமங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புக் கூறாக மலர்ந்து நெடுங்காலமாக வளர்ந்தவை.

தமிழில் அர்ச்சனை செய்யக்கூடாது என்று வலியுறுத்துபவர்கள் அது ஆகமங்களுக்கு எதிரானது என்று வாதாடுகின்றனர்.ஆகமங்கள் என்பவை யாரால் எப்போது எந்நிலையில் எழுதப்பட்டவை என்பதை யாரும் வரலாற்றின்  அடிப்படையில்  தக்க சான்றுகோடு கூறுவதில்லை.

ஆகமங்கள் என்பது என்ன?

ஆகமங்களில் சைவ ஆகமம்வைணவ ஆகமம்சாந்தாகமம் என்பன போன்ற அந்தந்த கடவுளர்க்கு  ஏற்ப பல பிரிவுகள் உண்டுசிவ ஆகமங்கள் 28. அவற்றில் காமிகாகமம்காரணாகமம்வாதுள ஆகமம்சுப்பிரபேத ஆகமம்புஷ்கர ஆகமம் ஆகிய ஐந்து மட்டுமே கிரந்த எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

வைணவ ஆகமங்கள் 108. பாஞ்சராத்திரங்கள்பாகவத சாத்திரம் என இரு வகையாகப் பிரிக்கப் படுகின்றனபாஞ்சராத்திர முறைப்படி சாதிகுலம்பிரிவுபால்வருணம் ஆகியவைகளைக் கடந்து வீடுகளிலும் கோயில்களிலும் வழிபாடுகள் நடத்துவதற்கு எல்லா வைணவர்களும் உரிமை பெறுகின்றனர்.

மகராசன் குழுவின் அறிக்கை

தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி மகராசன் ஆணைக்குழு தமிழகத்  திருக்கோயில்களில் ஆகம விதிகள் மீறப்பட்ட துறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறதுசோழருக்குப் பின்னர் விசய நகரப் பேரரசு வரை 150 ஆண்டுகள் ஆகம முறைப்படி பல கோயில்கள் நடைபெற வில்லை.  சிதம்பரம்திருவரங்கம் கோயில்களில் நீண்டகாலம்  பூசைகள் இல்லைபல கோயில்கள் ஆகம முறைக்கு முரணாகத் தோன்றியுள்ளனஆலய அமைப்பு முறைகளும் ஏழாம் நூற்றாண்டிலிருந்து மாறி வந்துள்ளனஎனவே ஆகமங்கள் படிதான் திருக்கோயில்கள் நடை பெறுகின்றன என்பது பொருந்தாது.

கி.பி 8 ஆம் நூற்றாண்டில் சங்கராச்சாரியாரால் சிவன்திருமால்முருகன்கணபதிசூரியன்சக்தி ஆகிய தெய்வங்களுக்குரிய வடமொழி வழிபாட்டு முறைகள் வல்லந்தமாகக் கொண்டுவரப்பட்டனஅதற்கு முன் தமிழ் வழிபாடே நடப்பிலிருந்தது.

அர்ச்சனை - பூசனை

ஒவ்வொரு பக்தரும் தம்முடைய நன்மைக்காக அர்ச்சகர் மூலமாக இறைஞ்சிச் சொல்லுகிற வேண்டுகோள்தான் அர்ச்சனைஅர்ச்சனை என்பது பரார்த்த பூசையின் ஓர் அங்கமல்லஇது ஆகமங்களில் சொல் லப்படவில்லைஆகமங்களில் கூறப்பட்ட `அர்ச்சனா விதிப்படலம்’ பூசா விதி பற்றிக் கூறுகிறதுஅதாவது குறித்த தெய்வத்திற்குச் செய்யப் படும் பூசைஇங்கு அருச்சனை என்றால் பூசனை என்று பொருள்.

அஷ்டோத்திரம் (108), திரிகதி (300), சகஸ்ரநாமம் (1008) ஆகிய மூவகை அருச்சனைகளும் புராணத்தன்மை கொண்டனவேயன்றி ஆகம / வேத அடிப்படைகளற்றவைகணேச சகஸ்கர நாமம் கணேச புராணத்திலும் விஷ்ணு சகஸ்கர நாமம் விஷ்ணு புராணத்திலும் எடுக் கப்பட்டவைஇவை எந்த ஆகமத்திலும் இல்லைஅவற்றில் மந்திரங்கள் இல்லைஅவை வெறும் நாமவளிகளேதமிழில் அருச்சனை செய்யக் கூடாது என எந்த ஆகமும் தடைவிதிப்பதில்லை.

இந்தியாவிலுள்ள ஜோதி லிங்கங்கள் 12. அத்திருக்கோயில்களில் இராமேசுவரம் தவிர மற்றவற்றில் அனைவராலும் தாமே பூவிட்டுத் தொட்டு தம்மொழியில் போற்றி வணங்கி வழிபாடு நடைபெறுகின்றனஅருச்சகர்கள் துணையாக மட்டும் இருப்பர்கி.பி. 1644 வரை பழனித் திருக்கோயிலில் தமிழ் வழிபாடும் பண்டாரப் பூசனையும் நடைபெற்று வந்தனதிவான் இராமப்ப அய்யரால் அங்கு வடமொழி வழிபாடும் ஆகம முறையும் திணிக்கப்பட்டன.  (நந்தன்/நவம்பர் 16/30, 98)


No comments: