Saturday, December 14, 2019

தீட்சிதர்களின் பிடியில் தில்லை நடராஜர் ஆலய நிர்வாகம்

தீட்சிதர்களின் பிடியில் தில்லை நடராஜர் ஆலய நிர்வாகம்

ஆலயத்தின் வரலாறு

புலிக்கால் முனிவர் உலக உயிர்கள் நலம் பெற வேண்டி திருமூலரா கிய சிவலிங்கத்தை வணங்கியதால் இத்தளம் பெரும் பற்றப்புலியூர் என்றாயிற்றுபதஞ்சலி முனிவரின் வழிபாட்டிற்கு இணங்கிநடராசர் உருக்கொண்டு சிவகாமி அம்மைக் காண ஆனந்த தாண்டவமாகிய அருட்கூத்தினை நிறைவேற்றினார் சிவபெருமான் என்பது புராணக் கதை.

சிம்ம வர்மன் என்னும் வேந்தன்சிவகங்கையில் நீராடி தனது உடல் நோய் நீங்கிப் பொன்மேனி பெற்றமையால்நாள் தோறும்வழிபாடும் திருவிழாக்களும் நடைபெற நிபந்தம் வழங்கியுள்ளான்.

பொற்கூரை வேய்தல்

கி.பிஅய்ந்தாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் சிம்ம வர்மன் தில்லையில் பொன் வேய்ந்தான் என்பதுதிருஞhனசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடிய திருப்பதிகங்களால் நன்கு விளங்கும்கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்முதல் ஆதித்த சோழன்கொங்கு நாட்டினை வென்று அங்குப் பெற்ற பொன்னைக் கொண்டு தில்லையம் பலத்தை மீண்டும் பொன்னால் வேய்ந்தான் என நம்பியாண்டார் நம்பி குறித்துள்ளார்இராசராசன் குந்தவையாரும் தில்லை நாயகர் கோயி லெல்லாம் செம்பொன் வேய்ந்துள்ளார்மூன்றாம் குலோத்துங்க சோழன் நடராசருக்கு நடனம் புரியும் திருச்சிற்றம்பலத்தின் முகப்பி லுள்ள முன் மண்டபமாகிய எதிரம்பலத்தைச் செம்பொன் வேய்ந்தான்சிவகாமியம்மையின் திருக்கோபுரத்திற்குச் செம்பொன் வேய்ந்தான்இச்செய்தி,

எத்தரையும் தொழும் இறைவற்கு
எதிரம்பலஞ் செம்பொன் வேய்ந்து
சித்திரை விழா அமைத்து இறைவி
திருக்கோபுரஞ் செம்பொன் வேய்ந்து
என அவனது மெய்க் கீர்த்தியிற் கூறப்பட்டுள்ளது. (திரு வெள்ளை வாரணர் கட்டுரை, ‘திருக்கோயில்’ ஆகஸ்ட் 79 இதழ்.)

நிலம் நன்கொடையாக அளிக்கப்படல்

கோப்பெருஞ் சிங்கனது ஆட்சியில்நந்தவனங்கள் அமைப்பதற்கு சிதம்பரத்தின் எல்லையிலுள்ள கடவாச்சேரியிலும்சண்டேசுவர நல்லூரிலும் இளநாங்கூரிலும் சிவகாமி அம்மைக்குத் நந்தவனங்கள் அமைக்க நிலமளித்த செய்தி இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

எட்டாம் ஆண்டுக் கல்வெட்டில் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியாருக்குச் சாத்தும் பரிச்சட்டம் (புடவைநெய்து கொடுக்கும் சாலியர் குடியிருக்கத் திருவம்பலப் பெருமாள்புரம் என்னும் பெயரால் கடவாச்சேரியான தில்லைநாயக நல்லூரில் நாலு வேலியும் ஆறு மாவும் நிலமளித்த செய்தி குறிக்கப்பட்டுள்ளதுஓன்பதாம் ஆண்டின் கல்வெட்டில் பவித்திரமாணிக்க நல்லூர் முதலிய ஊர்களிலும் திரு நந்த வனத்திற்கும் நந்தவனக் குடிகட்கும் நிலமளித்த செய்திக் குறிக்கப் பட்டுள்ளதுபத்து மற்றும் பதினோறாம் ஆண்டுக் கல்வெட்டிலும் திரு நந்தவனத்திற்கும்திருப் பள்ளித் தாமம் பறித்து மாலை தொடுப்பார்க் கும் எனச் சிதம்பரத்தையடுத்த விக்கிரம சோழ நல்லூரிலும் அளக்குடி யிலும் எருக்காட்டாஞ்சேரியான செயங்கொண்ட சோழநல்லூரிலும் திருநந்தவனப் புறமாகவும் திருப்பாவாடைப் புறமாகவும் நிலமளித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

இன்றைய சொத்து நிலவரம்

திருக்கோவிலுக்கு 465.10 ஏக்கர் நஞ்சை நிலமும் 453.19 ஏக்கர் புஞ்சை நிலமும் அறக்கட்டளைகளுக்கு 2288.93 ஏக்கர் நஞ்சை நிலமும் 462.29 ஏக்கர் புஞ்சை நிலமும் உள்ளது. (6.4.1997 சட்டசபையில் முதல்வர் கலைஞர் பேச்சு)

ஆலயத்தின் சிறப்பு

பெரியபுராணத்தை எழுத சேக்கிழாருக்குசிவபெருமான் ‘உலகெ லாம்..’ என அடிஎடுத்துக் கொடுத்த புராண வரலாறும்திருவாசகத்தை மணிவாசகர் இக்கோயிலில்தான் அரகேற்றினார் என்பதும் ஆன்மீக வாதிகளின் மகிழ்ச்சிக்குரிய  நிகழ்ச்சிகள்.

ஆலய நிர்வாக வரலாறு

தீட்சிதர்களுக்குச் சொந்தமானது அல்ல / தென் ஆர்காடு வழக்கு மன்றம் தீர்ப்பு;
குத்தகை வசூல் செய்தல்ஆலய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கல்ஆலயம் பழுது பார்த்தல்திருவிழா நடத்துதல் ஆகியவற்றை  மேற் கொள்ள ஒரு குழு தீட்சிதர்களால் அமைக்கப்பட்டதுதீட்சிதர்களைக் கொண்ட இக்குழுவில்  1887இல் சிக்கல் தோன்றியதுஇக்குழு உறுப்பினர் களாகிய தீட்சிதர்களிடையே போட்டி பொறாமை ஏற்பட்டு இரண்டு பிரிவாகப் பிரிந்தனர்இந்த சிக்கல் வழக்கு மன்றத்திற்கு சென்றதுதென்னார்காடு வழக்கு மன்றத்தில் (டீ.ளுஎண் 7,1887) வழக்கு நடை பெற்றதுமேல்முறையீட்டிற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில்  A.ளு.எண் அப்பீல் 108. 159,1888 வழக்கு பதிவு செய்யப்பட்டதுஇது இரண்டு நீதிபதிகளைக் கொண்ட டிவிசன் பெஞ்ச்க்கு அனுப்பப்பட்டது.

முதல் இந்திய நீதிபதி என பெயர் பெற்ற முத்துசாமி அய்யர் என்பவர் ஒரு நீதிபதிமற்றொருவர் ஷிப்பர்டு என்பவர்.

இவர்கள் தமது தீர்ப்பில், ‘முற்காலந்தொட்டே இக்கோயில் ஒரு பொது வழிப்பாட்டிற்குரிய இடமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியவில்லைமேலும் இத்திருக்கோயிலானது தீட்சிதர்களுக்கு சொந்தமான சொத்து என்பதற்கு சிறு துளியளவுக்கூட ஆதாரம் கிடையாது’ என்று கூறியிருந்தனர்.

சிதம்பரம் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் 1901 O.S 1192 வழக்கு

சிதம்பரம் மாவட்ட முன்சீப் கோர்டின் 1901 O.S.1192 என்ற எண்ணிடப்பட்ட வழக்கிலும், ‘இந்த கோவில்தில்லை கோவில்இந்த நடராசர் கோவில் தொன்றுதொட்டு ஒரு பொது வழிபாட்டிற்குரிய இடம்’ எனக் கூறப்பட்டுள்ளது.  1922 ஆம் இந்து அறநிலைய சட்டம் இயற்றப்பட்டு 1925 இல் நீதிக்கட்சியினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட போதுஇச்சட்டம் எங்களுக்குப் பொருந்தாது எனக்கூறி எதிர்த்தனர் தீட்சிதர்கள்பின்னர் இச்சட்டத்தின் இந்து சமய கட்டளைகள் 1 ஆவது சட்ட விதிகளின்படி விலக்கு அளிக்கக் கோரினர்

இந்து அறநிலையப் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் நீதிபதி சதாசிவ அய்யர்  31.12.1925 இல் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்அதில், ‘இந்தக் கோயிலுக்கு நகைகள் தவிரவேறு சொத்துக்கள் எதுவுமில்லையென்று பொதுத் தீட்சிதர்கள் சொல்லுவதும் இந்த ஆலயத்திற்கு எவ்வித கட்டளைகளும்வருவாய் தரும் இனங்களும் அல்லது வேறு நிரந்தர வருவாய் தரக்கூடிய வகைகள் இல்லையென்று பொதுத் தீட்சிதர்கள் சொல்லுவதும் சரியல்லஆகவேபொதுத் தீட்சிதர்கள் உண்மைக்குப் புறம்பாக மனு கொடுத்துள்ளனர்மேற்கண்ட ஆலயத்திற்கு எவ்வித வரவு/செலவு கணக்குகளையும் வைக்காமல்பொதுத் தீட்சிதர்கள் நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டிற் கும்உள்ளாகிறார்கள்’ என்பவை மிகத் தெளிவாக அவர் சொல்லிய வாசகங்கள்சொன்னவர் பார்ப்பன நீதிபதி.

1925 ஆம் ஆண்டு இந்து மதக் கட்டளைகள் 1 ஆவது பிரிவு

 1925 ஆம் ஆண்டு இந்து மதக் கட்டளைகள் 1 ஆவது பிரிவு சட்டத்தின் படி (1 டிக 1925) 38, 57 என்ற சில பிரிவுகளின் மூலம் மற்றும் 70 பிரிவுகளைத் தவிர்த்து ஏனைய பிரிவுகளிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டதுஇவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்ட பின்னரும்கோவிலின் நிர்வாகம் ஒழுங்காக நடத்தப்பட்டதா என்றால் இல்லை என்பதே விடையாகும்மேலும் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட நீண்டகால அவகாசத்திலும் கோவில் நிர்வாகம் சீர்அடையாததற்கு தீட்சிதர்களிடையே ஏற்பட்ட போட்டி பொறாமையே காரணமாகும்.  எனவே இதுவரை அளிக்கப்பட்டு வந்த விதிவிலக்கு சலுகையை இரத்து செய்ய அரசு 1936 ஆம் ஆண்டு முடிவு செய்ததுஇதற்கான ஆணையை  உள்ளாட்சித் துறை ஆணை 43, 52 மூலம் பிறப்பித்தது

1931இல் அறநிலைய வாரியத் தலைவராக  திரு சூரியராவும்ஆணை யாளராக திருகேசிதம்பர முதலியாரும் இருந்தபோது ‘ஸ்கீம்’ ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று ஆலோசனைக் கூறினர். ‘ஸ்கிம்’ என்றால் நிர்வாகத் திட்டம் என்று பெயர்.  இத்திட்டம் அமைந்தவுடன் 1932 இல்இந்து அறநிலைய வாரியத்தின் விதிமுறைகள் எங்களுக்குப் பொருந்தாதுநிர்வாகத் திட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என மீண்டும் வழக்குத் தாக்கல் செய்தனர் தீட்சிதர்கள் (தென்னார்காடு மாவட்ட நீதிமன்றத்தில் O.S. 16,1932). இது எங்களுடைய சொந்த சொத்து என்று வாதாடினார்கள்தென்னார்காடு மாவட்ட நீதிமன்றம்  9.9.1936 நாளிட்ட தனது தீர்ப்பில் இக் கோரிக்கையை நிராகரித்தது.

Notification

இந்து அறநிலையத் துறைச் சட்டம் பகுதி VI இன் படி இக்கோயிலை அறிவிப்புச் செய்ய (Notification) ஆணையிட்டனர்அதில் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தனர்.

ஒவ்வொரு பசலிக்குமான வரவு செலவு கணக்குகள் ரொக்கம்தானியம் அறநிலையப் பார்வைக்கு அனுப்பாதது.

அறநிலையத்திற்கு சொந்தமான காலி மனைகளை குத்தகைக்கு விடாமல் வருவாய் இழப்புச் செய்தது.

துறையூர் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் 1926 இல் டெபாசிட்டுக்காக வைக்கப்பட்டிருந்த தொகையினை கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்காதது.
இந்த வழக்கு முடிந்துதீர்ப்பில்கோவில் நிர்வாகம் சிறப்பாக நடைபெற ஒரு நிர்வாகத் திட்டம் தேவை என்ற நிலையில், 1933 இல் இத் திருக்கோவிலுக்கு நிர்வாகத் திட்டம் அமைக்கப்பட வழிவகை செய்யப் பட்டதுமேலும் இத்தீர்ப்பில்இத்திட்டம் தொடர்பான திருத்த நடவடிக்கைகள் 1939 வரை நீட்டிக்கப்பட்டதுஇந்நிர்வாக திட்டம் செயல் படுத்திடப் பொதுத் தீட்சிதர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படல் வேண்டும்ஆகையால் இந்து அறநிலையத் துறை வாரியம் Notification Proceedings  கைவிட வேண்டும் என்றும் தீர்ப்புக் கூறியதுஎனவே 20.3.1940 இல் தனது ஆணையைக் கைவிட்டது.

 நீண்டநாள் அவகாசம் கொடுத்தும் கோயில் நிலங்களைக் குத்தகைக்குப் பொது ஏலத்தில் விடப் படவில்லைஉண்டியல்கள் வைக்கப்படவில்லைஆலயத்தில் காலி இடங்கள் வாடகைக்கு விடப்படவில்லை.  கணக்குகள் முறைப்படி பராமரிக்கப்படவில்லைமின்விளக்குகள் இல்லைபிரகாரம் தூய்மை யாகப் பராமரிக்கப்படவில்லை.  கோயிலின் ஆபரணங்கள்நகைகள் பற்றிய கணக்கே இல்லைகட்டணங்களாக பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகைகளுக்கு இரசீது கொடுக்கப் படுவதில்லைஅதற்கு சரியான கணக்குகளும் வைக்கப்படவில்லை.

1951 இல் Writ Petition

இதனால் 1950 இல் மீண்டும் Notification Proceedings  அரசு வெளி யிட்டதுஇதை எதிர்த்து தீட்சிதர்கள் வழக்கு தொடுத்தனர்அதில் அவர்கள், ‘திருவிளக்கு மான்யம் என்ற பெயரில் 200 ஏக்கர்தான் உள்ளதுஅதிலே 100 ஏக்கர் அரசாங்கம் மற்ற வகைகளில் போய் விட்டதுஇன்னொரு 100 ஏக்கர் பல பேருடைய பெயர்களில் 75 ஆண்டு களாகக் குத்தகையில் இருக்கிறதுஅதிலிருந்து பணம் ஒன்றும் வருவ தில்லைஅதனால் அது எங்களுக்கே போதவில்லை’ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். 75 ஆண்டுகளாக குத்தகை பணம் வசூலிக்க வில்லை அல்லது வசூலிக்க முடியவில்லை என்பதே அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தை நடத்துவதற்கு திறமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

 இந்த வழக்கில், 1951இல் Writ Petition 379, 380 இல் டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் சத்திய நாராயணராவ்இராஜகோபாலன் ஆகியோர் தீட்சிதர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய போதும்அத்தீர்ப்பில், ‘The Temple at Chidambaram, Chit and Ambalam (the atmosphere of Wisdom) is a public temple of great antiquity sacred to Saivaities all over India’  என்று கூறியுள்ளனர்அதாவது, ‘இந்தியா முழுவதிலுமிருக்கிற சைவர்களுக்கே புனிதமானது என்று கருதக்கூடிய மிக முக்கியமான பொதுக்கோயில் இதுசித்துஅம்பலம் இரண்டும் இணைந்தது’ என்று கூறினர்அதாவது தீட்சிதர்கள் இக்கோயில் எங்களுக்குச் சொந்தமானது என்ற வாதத்தை ஏற்க மறுத்துஇந்தியா முழுவதிலுமிருக்கிற சைவர்களுக்கே சொந்த மானது என்று வழங்கியுள்ள தீர்ப்பு குறிப்பிடத்தக்கது.

செயல் அலுவலர் நியமனம் குறித்த விளக்க அறிக்கை

20.7.1982 இல் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைபொது தீட்சிதர் களின் செயலர் வி.என்நடனசபாபதி தீட்சிதருக்குதில்லை நடராசர் கோயிலுக்கு ஏன் செயல்அலுவலரை நியமிக்கக் கூடாது?  எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுஉடனே தீட்சிதர்கள் ரிட் மனுத் தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றனர். 31.7.87 இல் செயல் அலுவலரை நியமனம் செய்ய வழக்கு மன்றம் ஆணைப் பிறப்பித்ததுஇந்த ஆணையை எதிர்த்தும் ரிட் மனுத் தாக்கல் செய்து தடை உத்தரவைப் பெற்றனர் தீட்சிதர்கள்பத்து ஆண்டுகள் கழித்து இந்த ரிட் மனு மீது உயர்நீதி மன்றம் 17.2.1997 அளித்த தீர்ப்பில், ‘பொதுத் தீட்சிதர்களின் கோரிக்கை நியாயம் அல்ல’ என்று கூறினர்.  மேலும் 250 தீட்சிதர்களின்  குடும்பங் களின் நலனை விட பொது நலனைக் காப்பது முக்கியம் என்றும் கூறினர்.

இத்தீர்ப்பை எதிர்த்தும் தீட்சிதர்கள் மேல் முறையீடு செய்தனர்இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டதுஇவர்கள் வழங்கிய தீர்ப்பில், ‘கோயிலின் அனைத்து வருமானங்களையும் பெறுவ தற்கு நிர்வாக  அலுவலர் அதிகாரம் படைத்தவர் அல்லர். 45 நாட்களுக்கு ஒரு முறை நிர்வாக அதிகாரியிடம்தீட்சிதர்கள் கோயிலுக்காக தாங்களால் பெறப்பட்ட வருமானம் அனைத்திற்கும் கணக்கு தர வேண்டும்’ என கூறியிருந்தனர்ஆனால் இன்றுவரை தீட்சிதர்கள் எதையுமே பின்பற்றவில்லைதமிழக அரசும் இந்து அறநிலையத்துறை யும் அதற்கான நடவடிக்கை எதையும் எடுக்க முயலவில்லை.

யார் இந்த தீட்சிதர்கள்?

தில்லை வந்த திருநாவுக்கரசர் கொலை செய்யப்பட்டார்இதற்கு காரணமாக இருந்தவர்கள் தீட்சிதர்கள்ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை யின்படிநடராசனின் அருளைப் பெற்ற நந்தனார் தீக்கிரையாக்கப் பட்டதும் இந்தத் தீட்சிதர்களால்தான்தவம் செய்ய தனது குடிலுக்குள் போன வள்ளலாரைக் குடிலோடு தீயிட்டுக் கொன்றதும் இந்த தீட்சிதர்கள்.

1927 இல் சிதம்பரத்திற்கு மகாத்மா காந்தியடிகள்இந்தியாவின் தந்தைவந்தபோது அவர் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றுவிடாமல் தடுக்ககோவிலின் நான்கு கோபுர வாசலின் கதவுகளையும் பூட்டியவர்கள் இந்த தீட்சிதர்கள். 1987 வரை தேசிகர்களைஓதுவார்களை பூசை காலங்களில் தேவாரம் ஓத விடாமல் தடுத்தவர்கள்இன்றும் நீதிமன்ற துணையோடும் காவல்துறை துணை யோடும் தேவாரம் பாடும் பார்ப்பனரல்லாதவர்களை அடித்தும் உதைத்தும் வன்முறையில் தீட்சிதர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களைப்பற்றி திருமூலர்,

பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை  அர்ச்சித்தால்
போர் கொண்ட வேந்தனுக்கு பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் பட்டினியும் ஆமென்று
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே
என்று எச்சரித்துள்ளார்.

பூசைக் காலத்தில் யார் தேவாரம் இசைக்க வேண்டும்?

திருமறைக்கண்ட சோழன்கிடைக்கப் பெற்ற திருமறைகளுக்குபண்ணடைவு வேண்டும் என்று வேதனையுற்ற போதுதிருநீலகண் டத்து  யாழ்ப்பாணர் (இவர் பறையர் வகுப்பைச் சார்ந்தவர்திருநாவுக் கரசு மற்றும் திருஞhனசம்பந்தன் போன்றவர்கள் தாங்கள் இயற்றிய தேவராப்பாடல் களை இசை அமைத்து பாடுவதற்கு இந்தப் பரம்பரை யைச் சேர்ந்தவர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்மரபிலே வந்த பெண்  ஒருவர் மூலமாக பண் முறை  வகுக்க வழி வகை செய்யப்பட்டதுகால பூசையில் ஓதுவார்கள் சுத்தாங்கமாகவும் விசேச பூசையில் கட்டியம் சொல்லப்படும் போது பண்ணாங்கமாகவும் பாடுதல் மரபு. (தின மலர் 11.10.1997)

ஆறுமுகசாமி வரலாறு

ஆறுமுகசாமி என்பவர் தான் வசித்து வரும் குமுடி மூலை கிராமத் தில் தாமே ஒரு சிவாலயம் கட்டி தேவாரத்தை இசைத்துப் பாடி வழி பட்டு வருபவர்காடாக இருந்த ஊருக்கு பஸ் வசதிபள்ளிக்கூடம்மருத்துவமனை கொண்டுவந்தது உட்பட பல வசதிகள் செய்து கொடுத்த வர்சிறிது கூட சுயநலம் இல்லாதவர்அவர் நடராசர் கோவிலில் அம்பலத்தில் நின்று தேவாரம் பாடகடலூர் நீதிபதி சிங்காரவேலு அவர்களைச் சந்தித்துஅனுமதி கேட்டார்கடந்த நவம்பர் மாதம் இரண்டு அதிகாரிகள் முன்னிலையில் நடராசர் கோவிலில் பாட சென்றபோது தீட்சிதர்கள் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளி யுள்ளனர்மீண்டும் நவம்பர் 19 ஆம் நாள் அவர் பாட சென்றபோது 10/இக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து அவரை அம்பலத்தி லிருந்துக் கீழே தள்ளியுள்ளனர்.

மே மாதம் 8 ஆம் தேதிமறுபடியும் நீதிமன்றத்தில் அனுமதிப் பெற்றுமீண்டும் நடராசர் கோவிலில் தேவாரம் இசைக்கச் சென்ற போது ஆறுமுகசாமிசுப்ரமணிய தீட்சிதர் என்பவரால் தாக்கப்பட்டிருக்கிறார்.

பொதுமக்கள் சொத்துக்களை அனுபவித்து வருவதில்லாமல்கோவிலைச் சுற்றியுள்ள வீடுகளில் குடிபுகுந்தும் அனுபவித்து வருவ தில்லாமல்  இவ்வாறான வன்முறைகளையும் தீட்சிதர்கள் கட்ட விழ்த்து வருவது தமிழர்களுக்குக் கேவலமான ஒன்றாகும் .

தில்லை நடராசர் கோவிலை மீட்கஇந்து அறநிலையத் துறை அமைச்சர் திருதமிழ்க்குடிமகன்ஆர்.எம்.வீரப்பன் எடுத்த முயற்சி களைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்தமிழர்கள் முழு ஆதரவை யும் தருவார்கள்இது சிதம்பர வாழ் மக்கள் பிரச்சனையல்லதமிழர் களின் உரிமைப் பிரச்சனை.

(ஆதாரம்:1. கி.வீரமணி எழுதிய சிதம்பர இரகசியம்?  2. ‘திருக் கோயில்’ இதழ் ஆகஸ்டு 1979, மற்றும் கலைஞர் சட்டமன்ற பேச்சு)  *        (இதழ்க் குறிப்புஏடு-6)

No comments: