Saturday, December 14, 2019

சோ என்ற பார்ப்பன நச்சுப் பாம்பு


சோ என்ற பார்ப்பன நச்சுப் பாம்பு

துக்ளக் இதழ் 2.8.2000 இதழில்ஒரு கேள்விக்கு சோ அளித்த பதில்..

கேதமிழகம் ஜாதிக் கட்சிகளின் மையமாகி வருவது பற்றி.?

பெரியார் வாழ்ந்த மாநிலம்... பெரியார் வழி செல்கிற மாநிலம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லியேஇந்த நிலை வந்திருக்கிறதுபெரியார் பிராமண ஜாதியினரை எதிர்த்தார்அந்த ஜாதி அடிப்படை இயக்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்பிராமண ஜாதி எதிர்ப்பு தொடர்ந்ததுபின்னர் பிராமண எதிர்ப்பு அர்த்தமற்றுப் போன நிலையில்ஒவ்வொரு ஜாதியினரும் வேறொரு ஜாதியினரை எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஜாதி இயக்கங்களும், ஜாதி மோதல்களும் வளர்ந்தனவிதை பெரியார் ஊன்றியது.

சாதி கலவரங்களுக்குக் காரணம் பெரியார் என்கிறார் சோதின்கின்ற சோற்றில் நஞ்சைக் கலந்துஒன்றும் தெரியாத அப்பாவி போல் கொடுப்பவர்கள் பார்ப்பனர்கள் என்பதற்கு இதைவிடச் சான்று வேறென்ன இருக்க முடியும்?. பண்டையத் தமிழகத்தில் சாதிகள் இல்லைஏன் சாதி என்றச் சொல் கூட கிடையாதுசாதி என்ற சொல் தமிழ்ச் சொல் அல்லஅது வடமொழிச் சொல்லாகும்

வள்ளுவர் கூட ‘பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றுதான் கூறியுள்ளார்பார்ப்பனர்களின் படையெடுப்புக்குப் பின்னால்அவர்களின் வருணாசிரமத் தர்மப் படி தமிழ்ச் சமுதாயத்தில் சாதிப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டனபிறப்பினால் உயர்வு தாழ்வு ஏற்படுத்தப்பட்டனகுலத்தொழில் உண்டாக்கப்பட்டது.  பார்ப்பனரல்லாத மக்கள் இழி மக்களாகக் கருதப் பட்டனர்பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாகசூத்திரர்களாக ஆக்கப்பட்டனர்இந்த வருணாசிரமத்தை எதிர்த்து பாடுபட்டவர் ஒப்புயர்வற்ற மாமனிதர்மனிதனைப் பற்றியே சிந்தனைச் செய்து வாழ் நாள் முழுவதும் வாழ்ந்திட்டவர் தந்தை பெரியார்.

சாதி இழிவை ஒழிப்பதற்கென இயக்கம் கண்டவர்காங்கிரஸ் இயக்கத்தில் வகுப்புவாரி உரிமை மறுக்கப்பட்ட போது காங்கிரஸை விட்டு வெளியேறியவர்சாதியை ஒழிக்க சாதி மறுப்பு திருமணம்விதவைத் திருமணம் போன்ற சமூக சீர்திருத்தத் திருமணங் களை ஏற்படுத்தியவர்சாதி ஒழிப்பு மாநாடு நடத்தியவர்இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தில் வருணாசிரமத்தைப் பாதுகாக்கும் விதிகள் 13,25,372 ஆகியவற்றை தமிழாக்கம் செய்து அச்சிட்டு கொளுத்தி சிறைத் தண்டனைப் பெற்றவர் தந்தை பெரியார்.  .வே.சுஅய்யர் தேசியப் பணத்தில் நடத்திய குருகுலக் கல்வி நிலையத்தில் பிறப்பினால் உயர்வுத் தாழ்வுக் கற்பிக்கப்பட்டபோதுஅதனால் பாதிக்கப்பட்ட ஓமந்தூர் இராமசாமியின் மகனால்குருகுலக் கல்வியில் நடைபெறும் சாதி இழிவு நடவடிக்கைகள் தெரியவரதந்தை பெரியார் பெரும் போராட்டம் நடத்தி குருகுலக் கல்வியை இழுத்து மூடினார்இந்தக் குருகுலப் போராட்டம் பெரியாருக்கு ஒரு படிப்பினையைத் தந்ததுசாதி வேற்றுமை எல்லா வசதிகளையும் பெற்று வந்ததை பெரியார் உணர்ந்தார்.

சாதி வேறுபாடின்மை/திறமை ஆகிய இரண்டை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகளை அறிந்த பெரியார்சாதிப் பெயரை வைத்துக் கொண்டே  ஒவ்வொரு சாதியும் முன்னேறக் கூடிய வழியைக் கண்டறிந்தார்அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்புகளிலும் கல்வி நிலையங்களிலும் ஒவ்வொரு சாதிக் கேற்றவாறு  பிரதிநிதித்துவம் வேண்டும் என்று முடிவு செய்தார்இதுவே சமூக நீதி என்று எல்லோரா லும் அழைக்கப்பட்டதுதனக்கென்று நாட்டுப் பற்றோமொழிப் பற்றோஇனப்பற்றோமதப்பற்றோசாதிப்பற்றோ எதுவும் கிடையாதுமனிதப் பற்று ஒன்றுமட்டுமே  உண்டு என்றார் தந்தை பெரியார்.

சாதி ஒழிப்பையும் இடஒதுக்கீட்டு கொள்கையையும் சரியான முறையில்கோணத்தில் அனுகியவர் தந்தை பெரியார்பூணூலை மார்பில் அணிந்து கொண்டுதான் பிரம்மாவின் தலையில் பிறந்தவன் என்று கூறிக் கொண்டுவரும் இனத்தைச் சேர்ந்த சோ சாதி ஒழிப்பைப் பற்றி பேசுகிறார்சங்கர மடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவனோபிற்படுத்தப் பட்டவனோ மடத் தலைவனாகவோ அல்லது ஊழியனாகவோக் கூட வர முடியாதுஇவர்கள் சாதி ஒழிப்பைப் பற்றி பேசுகின்றார்கள்.

  (இதழ்க் குறிப்புஏடு/6)

No comments: