Saturday, December 14, 2019

தந்தை பெரியார் ஆற்றிய தமிழ்ப்பணி - விடுதலை இராசேந்திரன்



தந்தை பெரியார் ஆற்றிய தமிழ்ப்பணி

- விடுதலை இராசேந்திரன்

தந்தை பெரியார் ஆற்றிய தமிழ்ப்பணிக் குறித்து டாக்டர் மாஇராச மாணிக்கனார் அவர்கள் விடுதலை தந்தை பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதியுள்ள ஒரு கட்டுரையை இங்கே எடுத்துக் காட்டுகிறோம்..

தமிழுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் முன்னடியராக நின்று அவ்வின்னலை நீக்குதல் பெரியாரது இயல்பு.  1933இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் அன்பர் மாநாடு கூட்டப்பெற்றது. ‘பேசுவது போல் எழுத வேண்டும்’ என்பது அம்மாநாட்டில் முடிவு செய்யப்படுவதாக இருந்தததுஇத்தீய முடிவு வெற்றி பெற்றிருப்பின்செந்தமிழ் வழக்குச் சிதைந்து ஒழியும் என்பதை உணர்ந்த பெரியார்/அம்மாநாடு நன்முறையில் நடைபெற விரும்பினார்அதன் பயனாகத் திருகுருசாமி முதலிய தமிழ் வீரார்கள் அம்மாநாட்டில் கலந்து கொண்டு அதன் முடிவு நிறைவேறா வண்ணம் செய்தனர்அன்று பெரியாரும் அவர் தம் வீரரும் தலையிட்டிராவிடின்பெருஞ் செல் வாக்குப் படைத்த தமிழ் அன்பர்களால் கூட்டப்பெற்ற அம்மாநாடு இது வரையில் செந்தமிழ் வழக்கினை  நிலைநிறுத்திய பெருமை பெரியார் அவர்கட்கே உண்டு.

1935-இல் தவத்திரு மறைமலை அடிகளால்  எழுதிய ‘அறிவுரைக் கொத்து’ என்னும் நூலைப் பல்கலைக் கழகத்தார் பி.வகுப்பிற்குப் பாடநூலாக வைத்தனர்அதில் சில குறைகள் இருப்பதாகச் சிலர் கூக்குர லிட்டனர்சிலர் அதனைப் பாடநூல் பட்டியலிருந்து நீக்கிவிட வேண்டு மென்று செய்தித்தாள்களில் எழுதினர்எதிர்ப்புக் கட்டுரைகளும் செய்தித் தாள்களில் வெளிவந்தனஇந்நிலையில் பெரியார் அவர்கள் இவ்வாத அரங்கு குறித்துத் தமது           ‘குடிஅரசிலும் ‘பகுத்தறிவிலும் பல கட்டுரைகள் எழுதினார்கள்நாடெங்கும் சுற்றிச் சொற்பொழி வாற்றினார்கள்

இறுதியில் அந்நூல் பாடநூலாகவே மாணவரால் படித்து முடிக்கப்பட்டதுபெரியாருக்கும் மறைமலையடிகளாருக்கும் சமயத்துறையில் கருத்து வேறுபாடு இருப்பினும்அதனைப் பொருட் படுத்தாது அவரைத் தாங்கிப் போர் முழக்கம் செய்தமைபெரியாருக்குத் தமிழின்பாலுள்ள இளப்பரியப் பற்றினை நன்கு விளக்கு கின்றது’.

‘1936-இல் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராகப் பெரியார் திகழ்ந் தார்.  ‘தமிழ் வாழ்ககட்டாய இந்தி ஒழிக’ என்னும் முழக்கம் தமிழ்நாடு முழுவதும் முழங்கச் செய்த பெருமை பெரியாருக்கே உரியதுஇந்தி எதிர்ப்பின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் வீரர்கள் சிறைக்கோட்டம் நண்ணினர்அவ்வாண்டிற்தான் தமிழ் மறுமலர்ச்சி அடைந்ததுதூயதமிழ் பேசவும் எழுதவும் வேண்டும் என்னும் பிடிவாத நல்லெண்ணம் தமிழ் மக்களுக்கு அப்போதுதான் முகிழ்த்ததுடாக்டர் சோமசுந்தர பாரதியார்,   திரு.வி..  மறைமலையடிகள்சர்..டிபன்னீர் செல்வம்சர் டி.கேசண்முகம் செட்டியார் போன்ற அரசியல் அறிஞர் களும்பெரியார் இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர்.  திருச்சியிலிருந்து  பெரியார் ஆசியோடு கால்நடையாகப் புறப்பட்ட தமிழர் படைசென்னை வரையிலும் தனது வழியிலிருந்த சிற்றூர்களிலும்   பேருர் களிலும்  இந்தியினால் தமிழ் எவ்வாறு கெடும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்ததுபாசறைதிடல் அணிவகுப்புமன்றம் போன்ற அருந்தமிழ்ச் செஞ்சொற்கள் இப்போராட்டத்தின் போதுதான் பொது மக்களாலும் பயன்படுத்தப்பட்டன.

 சென்னைக் கடற்கரையில் இந்தி எதிர்ப்புக்காக கூட்டப்பெற்ற மக்கள் தொகை லட்சத்திற்கும் மேற்பட்ட தாக இருந்ததுவெள்ளம் போன்ற தமிழர் கூட்டம் ஒரே சமயத்தில் உணர்ச்சியோடு ‘தமிழ் வாழ்க’ என்று முழக்கமிட்டமை நற்றமிழர்களின் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறதுசாதி சமயம் எண்ணம்  வேறுபாடின்றி  அறிவடைய எல்லா தமிழர் உள்ளங்களிலும் பெரியார் கோயில் கொண்ட காலம் அதுதான்அப்பெருந்ததகையாரது அரியப் போராட்டத்தினால் கட்டாய இந்தி ஒழிந்ததுஅன்று முதல் பெரியார்-தமிழ்ப்பெரியாராக கருதப்பட்டார்’.

புகை வண்டி நிலையங்களில் முதலில் இந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் இறுதியில் தமிழிலும் பெயர்ப்பலகைகள் எழுதப் பட்டிருக்கின்றனமுதலில்/தமிழில் பெயரமைதல் வேண்டுமென்று பெரியார் போராட்டம் வெற்றி பெற்றதுஅதன் பயனாகப் பெயர்ப் பலகைகளில் தமிழை முதல் வரிசையிற் காண்கிறோம்திருக்குறளைப் பலவுரைகளோடு நன்கு பயின்றவர் பெரியார்சென்னையில் 1949 இல் திருக்குறள் மாநாட்டைக் கூட்டிய பெருமை அவருக்கே உரியது’. (விடுதலை/பெரியார் மலர் 1.9.1956).

தெலுங்கிலும் வடமொழியிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதை எதிர்த்து தமிழிசை இயக்கம் நடத்திய தந்தை பெரியார் இவ்வாறு எழுதினார்..

தமிழன் தான் நுகரும் இசையைத் தமிழில் / இசைத்தமிழில் பாடுதமிழர்களைப் பற்றி தமிழர்களுக்கு ஏற்றத்தைத் தமிழர்களுக்குப் பயன் படுமாறு பாடு’ என்கிறார்கள்.

இதை யார்தான் ஆகட்டும் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்இது மிக மிக அதிசயமானதும் தமிழனால் மிக மிக வருந்தத் தக்கதுமாகும்தமிழன்/தமிழ் மக்கள்தமிழில் பாட்டுக்கேட்டு வேண்டுமென்று ஆசைப் படுகிறார்கள்பணம் கொடுப்பவன்தனக்குத் தமிழ்ப் பாட்டுப்பாடப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறான்இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவோ குறை கூறவோ குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள்என்று கேட்கிறேன்தமிழனுக்குத் தெரியாதபுரியாத மொழியில் தமிழன் பாட்டுக் கேட்க வேண்டும்இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம்மற்றும் தமிழனுக்குத் தமிழ் வேண்டும்தமிழ் இசை வேண்டும் என்பது தேசத் துரோகமாகவும்கலைத்துரோகம்வகுப்புத் துவேஷம் என்பதாகவும் ஆகிவிடுகிறதுகாரணம் பெண்களுக்கு ஆண்கள் ஒழுக்க நூலும்,  கற்புநூலும் எழுதுவது போல் தமிழனுக்கு தமிழனல்லாதவன்/தமிழரை அடிமை கொண்டு அடக்கி ஆண்டு சுரண்டிக் கொண்டிருப்பவன் தேசாபிமானம்மொழி யபிமானம்கலையபிமானம் முதலியவை கற்பிப்பவனாய்ப் போய் விட்டதேயாகும்தமிழ் நாடும் தமிழ்மொழியும் தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால்தமிழன் காரியத் தில் தமிழனல்லாதவன்/அவன் எப்படிப்பட்டவனானாலும் தலை யிடுவது முதலில் ஒழித்தாக வேண்டும்இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்க வேண்டும் குடியரசு 19.2.1944) என்று உணர்வு பூர்வமாக எழுதினார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் நடத்திய இயக்கம் தான்/தமிழ் மொழிக்கே இந்த நாட்டில் ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தந்தது என்பதை யார்தான் மறுக்க முடியும்?
(ஏடு-4)


No comments: