Saturday, December 14, 2019

திருக்குறளும் திராவிடர் இயக்கமும்- நாவலர் நெடுஞ்செழியன்



திருவள்ளுவர் பிறந்தது கி.மு. 31 ஆம் ஆண்டு என்று  அறிஞர் பெரு மக்களெல்லாம் அறுதியிட்டு உறுதியாகக் கூறியிருக்கிறார்கள்எனவே திருக்குறளை அவர் கி.முமுதல் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலிருந்து கி.பிமுதல் நூற்றாண்டின் முதல் கட்டத்திற்குள்ளாகத்தான் எழுதி யிருக்க வேண்டும்திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில் இதைப் புரிந்து கொள்ளுகின்ற ஆற்றல் அறிவு தெளிவு எல்லோருக்கும்  இருந்திருக்கக் கூடும்ஆனால்அதற்குப் பின்னால் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு சில பல குறளுக்கு விளக்கங்கள் தருகின்ற அவசியம் ஏற்பட்டதுஎனவே கி.பி. 7,8 நூற்றாண்டுக்குப் பிறகு 9,10,11 ஆம் நூற்றாண்டுகளில்தான் உரையாசிரியர்கள் வந்தார்கள்.

திருக்குறளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உரை எழுதியவர்கள் ஒரு பத்துப் பேர் என்று கணக்கிடப்படுகிறார்கள்தருமர்மணக்குடவர்தாமதத்தர்நச்சர்பரிதிதிருமலையர்மல்லர்பரிப்பெருமாள்காளிங்கர்பரிமேலழகர் ஆகிய பத்துப்பேர் உண்டுஅதிலும் நமக்குக் கிடைத்திருப்பது ஐந்து பேரின் உரைகள் மட்டுமே.

மணக்குடவர்பரிதிபரிப்பெருமாள்காளிங்கர்பரிமேலழகர் ஆகிய ஐவருடைய உரைகள் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கின்றனஇதிலே கடைசியாக வந்தவர் பரிமேலழகர் ஆகவேதான் அவர் தமக்கு முன்னர் எழுதியவர் உரைகளைப் படித்து ஆய்ந்து அறிந்து எழுதியதால் மற்ற உரைகளில் இருக்கின்ற அழுத்தம் வலிவைவிட பரிமேலழகர் உரையில் அழுத்தம் வலிமை மிக அதிகம்.

தமிழர்களுடைய இலக்கியங்களையெல்லாம் பார்த்தால் குடிப்பது தவறு என்று அகநானூறுபுறநானூறுகலித்தொகையிலே சொல்லப் படவில்லைபுலால் உண்ணக்கூடாது என்றும் கூறவில்லை.

சிறுகட் பெறின் எமக்கு ஈவன்ன பெருகட்
பெறின் யாம் உண்ணுவ

என்று சொல்லியிருக்கிறார் அவ்வையார்கொஞ்சம் கள் கிடைத்தால் எனக்கு மட்டும் தருவான்/ஏராளமாக கள் கிடைத்தால் அனைவரும் பங்கிட்டுக் கொள்வோம் என்று அதியமானைப் பற்றிக் குறிப்பிடு கின்றார்புலால் உண்ணக்கூடாது என்ற கருத்து  சமணபௌத்த மதங்களிலிருந்து வந்த கருத்துதான்.

புலால் உண்ணக்கூடாது/பொய்சொல்லக் கூடாது சூதாடக்கூடாது/கொலை செய்யக்கூடாது திருடக் கூடாது என்ற பஞ்சசீலக் கருத்து களைக்கொண்டுவந்தது சமண பௌத்த மதங்கள்தான்அதைத் தழுவித் தான் வள்ளுவர் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

புத்தருடைய இயற்பெயர் சித்தார்த்தன் என்பதாகும்அவர் புத்தி யோடு கருத்துகளைக் கூறியதால்தான் புத்தன் என்றார்கள்புத்தன் என்றால் தமிழில் அறிவன்வள்ளுவர் குறளிலே எங்கெங்கு அறிவன்/அறிவன் என்று குறிப்பிடுகின்றாரோ அது புத்தரை மனதில் வைத்து தான் அறிவன்  அறிவன் என்று சொல்லிக் கொண்டு வருகின்றார்.

.வெஇராமசாமி என்று பெயர் இருந்தாலும் நாம் பெரியார் என்று சொன்னதைப் போல் அண்ணாதுரை என்று பெயர் இருந்தாலும் அறிஞர் என்று சொன்னதைப் போல் புத்தியோடு கருத்துகளை எடுத்து வைத்ததால் தான் சித்தார்தன் புத்தன் ஆனார்.

1330 குறளிலும் ஒரு இடத்தில் கூட கடவுள் என்ற வார்த்தை இல்லைகடவுள் வாழ்த்து என்பதில் கூட கடவுள் இல்லை.  ஒரு பாடலிலே கூட கடவுளை வாழ்த்தவில்லை/வழிபடவும் இல்லைஇருக்கிற நிலைமையைத் தெளிவுபட எடுத்துச் சொல்லியிருக்கின்றார்எனவே புத்தருடைய கொள்கைகளை அடிப்படையாக வைத்துத்தான் அறிவுக்கு ஆற்றலுக்கு உலகியலுக்கு உண்மைகளை ஒத்து வருகின்ற காரணத்தினால்தான் வள்ளுவரை குறளை ஆதரித்து சுயமரியாதை இயக்கத்தையும் பகுத்தறிவு இயக்கத்தையும் திராவிட இயக்கத்தையும் கட்டிக்காத்து வளர்த்த தந்தை பெரியார் அவர்கள் வேறு எந்த நூலுக்கும் தராத மதிப்பைத் திருக் குறளுக்குத் தந்தார்ஏனெனில் அது வகுத்தறிவுக் கருத்துகளுக்கு ஒத்து வந்ததுதான்.

அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

என்றுதான் வள்ளுவர் குறிப்பிட்டாரே தவிரபக்தியுடையார் எல்லாம் உடையவர் பக்தி இல்லாதவர்கள் என்னுடையரேனும் இலர் என்று சொல்லவில்லைஇதைத்தான் சென்ற நூற்றாண்டிலே பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எடுத்துக் கூறினார்திருக்குறளைப் பற்றிச் சொல்லு கின்றபோது ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுஅற நன்குணர்ந் தோர்கள் உள்ளுவரோ/மனு ஆதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்று அவர்தான் ஆரம்பித்து வைத்தார்வள்ளுவர் செய் திருக்குறளை மறு அற என்றால் மறு எங்கே இருக்கின்றதுகுறளிலா என்றால் இல்லைகுறளுக்குப் பலர் பொருள் சொன்னார்களே அவற்றில்தான்அத்தகைய குற்றங்கள் நீங்கும் படியாகப் படித்துஅதற்குப் பொருள் சொன்னார் கள்அதில் ஏற்றிய கருத்துகளையெல்லாம் மாற்றிமறு அற நன்கு உணர்ந்தோர்கள் அப்படி வள்ளுவர் செய் திருக்குறளை அறநெறியைக் கடைப்பிடிப்பவர்கள் மனு போன்றவர்கள் சொல்கின்ற கருத்துக்களை யாரும் பின்பற்றுவார்களாஎன்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை எடுத்துரைத்தார்.

உலகத்திலே எத்தனையோ பேர் நூல்களை எழுதியிருக்கின்றார்கள்ஆண்டவன் பெயரால்/சமயத்தின் பெயரால்/சம்பிரதாயத்தின் பெயரால்/சாத்திரத்தின் பெயரால் பலவற்றையும் எழுதிவிட்டு இறுதியாக இதை நம்பு என்று எழுதுவார்கள்பகவத் கீதையின் கடைசி வரி கூட அதுதான்இதை நம்பாவிட்டால் நரகத்திற்கு போவீர்கள் என்று சொல்லுவார்கள்இதை ஏற்றுக் கொள்/மறுத்துரைக்காதே என்றுதான் அனைத்து மதங்களும் சொல்கின்றனசங்கராச்சாரியாரே கூட எழுதியிருக்கின்ற புத்தகத்தில நாத்திகன் யார் என்பதற்கு வேதத்தை மறுப்பவன்தான் நாத்திகன் என்று சொல்லுகின்றார்.

மதத் தலைவர்கள் அனைவரும் நம்பச் சொன்னார்கள்ஆனால் வள்ளுவர் ஒருவர்தான் புத்தரைப் பின்பற்றி,

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று சொன்னார்அதே போல் மற்றொரு குறளில்,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு  

என்றும் சொன்னார்அதுமட்டுமல்ல ‘சிறப்பெனும் செம்பொருள் காண்பதறிவு’ என்றும் சொன்னார்.      

சென்றஇடத்தாற் செலவிடாதீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

உன்னுடைய மனம் போன போக்கிலெல்லாம் விட்டுவிடாமல் உள்ளபடியே உலகத்துக்கு மக்களுக்கு நாட்டுக்கு சமுதாயத்திற்கு தனிப்பட்ட மனிதனுக்கு தீமை விளைவிப்பதிற் செலுத்தாமல் எது எது மக்களுக்கு நன்மை விளைவிக்குமோ அதில் உன்னுடைய அறிவைச் செலுத்துவதுதான் உண்மையான அறிவு என்றார். ‘நுண் பொருள் காண் பறிவு;  அறிவுதான் அற்றங் காக்கும் கருவி : கற்பவை கசடற கற்ககுணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றும் மிகை நாடி மிக்க கொளல்தேறற்க தேறும் பொருள் நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த தன்மையால் ஆளப்படும் எதுவாயினும் அதிலிருக்கின்ற நன்மை/தீமைகளை ஆராய்ந்து பார் / தீமையை விலக்கி நன்மையை ஏற்றுக் கொள்உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்/நினைப்பதை உயர்வாக நினை/தாழ்வாக நினைக்காதே/சிறந்த எண்ணங்களை நினை/உலகத்து இயற்கையை அறிந்து செய்இயற்கைக்கு மாறுபட்ட எதையும் ஒத்துக் கொள்ளாதேசெல்லும் வாய் நோக்கிச் செய்/ செயல்புரிஇருந்ததீர எண்ணிச் செய்அறியாமை நீங்கும்படி எதையும் எண்ணி அதன் படிச்செய்பயன்பாடு பார்த்துச் செய்.இவ்வளவையும் சொன்னவர் உலத்திலேயே வள்ளுவர் மட்டும்தான்

வள்ளுவர் தோன்றுவதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த புத்தர்தான் கடவுளைப் பற்றிய கருத்துகளை அழகாக எடுத்துச் சொன்னார்.

ஆத்மா என்று ஒன்று இல்லைஅறிவுக்கு எட்டாதஅறிவுக்கு அகப் படாத கடவுள் என்று ஒன்று சர்வ வல்லமை படைத்தாகவோஎங்கும் நிறைந்து விளங்குவதாகவோ கருதிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லைஅதற்கு ஆதாரம் எதுவும் அறிவு நிறைவான வழியில் தென்படவில்லைஅறிவு ஆராய்ச்சிக்கு உட்பட்டு வராத கற்பனைப் பொருளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லைஎல்லா உயிர் களிடத்திலும் அன்பாக இருப்பது என்பதுதான் பலன் தருகின்ற செயல்மறந்தும் ஒருவருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பது நலம் பயப்பது

இவைதான் புத்தருடைய கொள்கைகள்இதைத்தான் முழுக்க முழுக்க ஆதரித்து புத்தருடைய கொள்கைகளையும் ஆதரித்து பெரியார் அவர்கள் கருத்துகளைச் சொன்னார்கள்/ அதையே சொன்ன வள்ளுவரையும் ஆதரித்தார்கள்.

வள்ளுவர் மனித  சமுதாயம் வாழ/ஒன்று சேர்ந்து வாழ/ உலகில் வாழ்வதற்காக அன்புடைமைஅறிவுடைமைஅறமுடைமை அருளு டைமைஅடக்கமுடைமைஆள்வினையுடைமைஇன்சொல் உடைமைஈகை உடைமைஊக்க உடைமைஒழுக்க முடைமைகண்ணோட்ட முடைமைகல்வியுடைமைகுடிமையுடைமைகேள்வியுடைமைசால்புடைமைசொல்வன்மை உடைமைதவமுடைமைதுறவுடைமைநன்புடைமைநாண் உடைமைபண்புடைமைபழகுடைமைபெரியார் துணை உடைமைபெருமை உடைமைபொறையுடைமைமானமுடைமைமெய்யுணர் வுடைமைவலியுடைமை வாய்மையுடைமைவாழ்க்கைத் துணையுடைமைவினைத் தூய்மையுடைமை என்று இத்தனையும் சொன்னார்.

ஆனால் அன்புடைமை எனக்கு இருப்பதுஅறிவுடைமை நான் கொள்ள வேண்டியதுஉடைமை உடைமை என்று சொல்வதெல்லாம் அவரவர் தங்களுக்கு உரிமையாக்க கொள்ள வேண்டியதுவீரமும் அறிவும் விலைகொடுத்து வாங்க முடியாது.
இப்படி திருக்கிறளின் சிறப்பான கொள்கைகள் என்ன என்பதை யெல்லாம் இந்த நூலில் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார்கள்.

ஆரியவைதீகக் கொள்கைகளை அடியோடு திருக்குறள் ஏற்றுக் கொள்ளவில்லைஆரிய வேதங்களான ரிக்யஜஷர்சாமஅதர்வண வேதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆரிய கடவுளர்களான  இந்திரன்பிரம்மாவிஷ்ணுருத்திரன் போன்ற கடவுளர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆரிய வர்ணாசிரம தர்மமான பிராமணர்சத்திரியர்வைசியர்சூத்திரர் என்ற நான்கு வர்ண வேறுபாட்டையும் வள்ளுவர் எந்த ஒரு இடத்திலும் ஏற்றுக் கொள்ளவில்லை.
பிரம்மசர்யம்கிருகஸ்தம்வானபிரஸ்தம்சன்னியாசம் என்ற நான்கு நிலைகளை ஒப்புக்கொள்ளவில்லைஇல்லறம்துறவறம்இவற்றுடன் அறம் பொருள் இன்பம் என்பதை ஏற்றுக்கொண்டார். ‘பிறப் பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்றார்ஏன் இதைச் சொல்ல வேண்டிய அவசியம் வந்தது என்றால் மனதர்மம் மனிதனின் பிறப்பை நான்கு வகையாகப் பிரித்ததினால்தான்.

வள்ளுவர் யாகத்தை ஒப்புக் கொள்ளவில்லையாகம் செய்வது ஆரியர்களுடைய பண்புநமக்கு அது அவசியமேயில்லைகுளிர் பிரதேசங்களேயிருந்து வந்த ஆரியர்கள் நெருப்பை வளர்த்து அதில் குளிர் காய்ந்தார்கள்அப்படியே அதில் மாமிசத்தை வதக்கி உண்டார் கள்ஆகவேதான் அவர்கள் நெருப்பை அக்கினிதேவன் என்று பாராட்டி னார்கள்ஆனால் ஒரு இடத்திலும் வள்ளுவர் 1330 குறளிலும் அக்கினிக்கு மதிப்புத் தரவில்லையாகத்தையும் பாராட்டவில்லை.

ஆடுமாடுகளை யாகத்தீயில் போட்டு உயிரக்கொலை செய்வதை விட / ஆயிரம் யாகங்கள் செய்வதை விட ஒரு உயிரைக் கொல்லாமல் நீ அறத்தைக் காப்பாயானால் அதுவே மேல் என்று சொன்னார்வேதங்கள் சோம பானம்சுரா பானம் குடிப்பதையும் அதை இந்திரனுக்கு படைப்பதையும் குறிப்பிடுகின்றனஆனால் வள்ளுவர் ஒரு இடத்தில்கூட அதைக் குறிப்பிடவில்லை.

அது மட்டுமல்ல கள்ளுண்ணாமை என்று அதற்கே ஒரு அதிகாரத்தை ஒதுக்கியிருக்கின்றார்சூதாடுதலை வெறுத்தார்கடவுள் என்ற கற்பனைப் பொருளுக்கும் மோட்சம்சரகம் என்ற கற்பனைப் பொருளுக்கும் மதிப்பே அளிக்கவில்லைபாவம் புண்ணியம் ஆகியவற்றின் பலாபலன்களைப் பற்றிப் பேசவில்லை.
நல்வினைதீவினை என்கின்றார்நல்வினை என்றால் நன்மை விளைவிக்கும் செயல் என்பதுதான் பொருள்பாவ புண்ணியம் என்பதல்ல.

தந்தை பெரியார் அவர்கள் வள்ளுவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது வள்ளுவர் ஆரியத்தை எதிர்ப்பவர்ஆரீய வைதீகக் கருத்துகளைக் கண்டிப்பவர்எந்த மதத்தையும் சார்ந்தவரல்லஎந்த மத்தையும் முழுக்க முழுக்க ஆதரிக்கவில்லைபெரியார்குறள்தான் திராவிட மக்களுக்கு ஒழுக்க நூல் என்று சொல்லுகிறார்.

ஒரு மனிதன் உண்மையான குறள் பக்தனாக இருப்பானேயானால் எந்தக் கருத்தைக் குறள் எதிர்க்கின்றதோ அந்தக் கருத்தைத்தானும் உடன் நின்று எதிர்த்து ஒழிக்கப்பாடுபடுபவனாக இருப்பான்.

வள்ளுவர் ஒரு நாத்திகராகவே காணப்படுகின்றார்புத்தருக்குப் பிறகு வள்ளுவரைத்தான் ஒரு நாத்திகராக கூற வேண்டும்திருவள்ளு வர் எந்த ஒரு இடத்திலும் தன்னை மனிதத் தன்மைக்கு மேற்பட்டவராகக் காட்டிக் கொண்டதேயில்லைஅவர் தன்னை ஒரு அறிவியல்வாதி என்று காட்டிக் கொள்கின்றார்தன்னை ஒரு கடவுள் நம்பிக்கை வாதியாக எங்கும் காட்டிக் கொள்ளவில்லை

மக்கட்பேறு’ என்ற இருந்த குறள் அதிகாரத்தைப் பரிமேலழகர் ‘புதல்வரைப் பெறுதல்’ என்று மாற்றிவிட்டார்ஏனெனில் அவருடைய கொள்கைப்படி ஆணுக்குத் தான் உரிமைபெண்கள் படிக்கக் கூடாது என்பது கொள்கைஆகையினால் பெண்ணைச் சேர்க்கக் கூடாது என்பதற்காகவே பரிமேலழகர் மக்கட்பேறு என்ற அதிகாரத்தை எடுத்து விட்டு புதல்வரைப் பெறுதல் என்று மாற்றிவிட்டார்.

திருக்குறளின் வரிசை கூட மாறுகின்றதுஇந்தக் குறளுக்குப் பின்னர் இந்தக் குறள் என்பதில் ஒவ்வொருவரும் வேறுபடுகின்றார்கள்.

 ஆனால் பெரியார் ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்திற்கு என்ன பெயர் வைத்தார் என்றால் `பண்பு சிறப்பு’ என்பதாகும்புரட்சிக் கவிஞரோ `உலகத்தின் தோற்றம்’ என்று சொன்னார்உலகம் என்றால் உயர்ந்தோர் மாட்டு என்பார் தொல்காப்பியனார்உயர்ந்தவர்களைப் பாராட்டு கின்ற ஒன்றுபுலவர் குழந்தை ‘இறைநலம் / தலைவனை வாழ்த்தல்’. நான் சொன்னது ‘அறிவன் சிறப்பு/அறிவன் என்றுதான் வருகின்றது /வாலறிவன் என அடுத்தடுத்து வருவதைப் பார்த்தாலும் ஆதி பகவன்/பகவு என்றால் அறிவுபகவன் என்றால் அறிவன்புத்தன் என்றால் அறிவன்ஆதி என்றால் அதற்குக் காரணமான ‘தி’ என்பது தொழிற் பெயர் விகுதி.
உலகம் ஆவதற்குக் காரணமான அறிவன்அடுத்ததில் வாலறிவன் மலர்மிசை இதயத்தில் இடம் பெற்ற அறிவன்வேண்டுதல் வேண்டாமை இஅலான்/நன்மை தீமை விருப்பும் வெறுப்பும் இல்லாத அறிவன் /தலைவனாக விளங்கும் அறிவன்/ஐந்தவித் தான்ஐந்து புலன்களையும் அடிக்கியாளுகின்ற அறிவன்/ தனக்கு உவமை இல்லாதான் /ஒப்புவை அற்ற அறிவன் / அற ஆழி அந்தணன்அறக்கடலாகிய செந்தண்மை பூண்ட  அறிவன் /எண்குணத்தான்,

எண் என்றால் அறிவு என்று பொருள் எண் என்பதை சிலர் எண்டு என்று வைத்துக் கொண்டார்கள்சிவபெருமானக்கு எட்டு குணங்கள் என்று சொல்லி சைவர்கள் வள்ளுவர் எங்களைச் சேர்ந்தவர் என்று சொன்னார்கள்எண் என்பதற்கும் அறிவு என்று பொருள்சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்டிருக்கின்ற அகராதியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தெய்வம் தொழாள்  கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

பரிமேலழகர் இதற்கு என்ற சொல்கிறார் என்றால் தெய்வத்தைத் தொழாதவளாய் தன்னுடைய கணவனையே தொழுது வழிபடுகின்றவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்மற்ற உரை யாசிரியர்களும் பெரும்பாலும் பரிமேலழகரையே தழுவித் தழுவி எழுதி யிருக்கிறார்கள்.

கடவுளை வணங்காமல் கணவனை மட்டுமே வணங்குபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்பது இந்தக் காலத்துக்கு எப்படிப் பொருந்தும்ஒரு பெண் வேறெந்த  தெய்வத்தையும் கும்பிடாமல் வீட்டுக் குள்ளேயே இருந்த தினமும் கணவனை மட்டுமே நான் முழுக்கதொழுது நான் கற்புக்கரசி என கணவனை நினைக்க வைத்து  அவளும் கற்புக் கரசியாய் இருந்து வருகிறாள்ஒரு நாள் கணவன் அவளிடம் இராம நாதபுரம் திருநெல்வேலி அங்கேயெல்லாம் மழையில்லைநீ கொஞ்சம் வெளியே வா நீ பெய்யென்று சொன்னால் மழை பெய்யுமாம்கற்புக் கரசி  சொன்னவுடன் மழை பெய்யும்னு பரிமேலழகர் சொல்லி யிருக்கிறார் என்று கணவன் கூறும்போது எந்தப் பெண் தாங்குவாள்?
இப்படித்தான் பரிமேலழகரின் உரையைத் தழுவிய எல்லோரும் சொன்னார்கள்புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் நானும்தான் வேறு விதமாக சொன்னோம்தொழுதல் என்றால் பின்பற்றுதல் தொழுது எழுதல் . ஒரு பெண் தன் கணவனின் நோக்கப்படி அவனை பின்பற்றி அதன்படியே நடப்பானானால் /பெய்யெனப் பெய்யும் மழை அதாவது பெய்ய வேண்டுமென விரும்புகின்றபோது பெய்கின்ற மழைக்குச் சமமானவாளாக இருப்பாள்.

கெடுப்பதூஉம் கெட்டார்கக்குச் சார்பாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

மழை கெடுக்கவும் செய்யும் எடுக்கவும் செய்யும் கிராமப்புறங்களில் விவசாயிகள் சொல்லக் கேட்டிருக்கலாம்ஒருரெண்டு மழை பெஞ்ச துன்னா என் கொள்ளு வெளைஞ்சிடும்ஒரு மூணு மழை போதும் என் நிலக்கடலை வளர்ந்துடும்ஒரு நாலு மழையிலே நெல்லு வளர்ந்துடும் என்பார்கள் விவசாயிகள்.அறுவடை செய்யும் போது மழை வந்த தென்றால் இந்த பொல்லாத மழை ஏன் வந்ததுஎன்னைக் கெடுத்து விட்டது என்பார்கள் விவசாயிகள்இரண்டு மழை மூணுமழை பெய் தால் பயிர் விளைந்து விடும் என்பது வேண்டும்போது விருப்புகின்ற மழை.

கணவனுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி அவனைப் பின்பற்றி நடப்பதன் காரணமாகத்தான்  பெய்யென பெய்யும் மழை என்றார் வள்ளுவர். ( சங்கொலி 2 .5. 1997)
 (ஏடு/19)


No comments: