தமிழ்
உயர்தனிச் செம்மொழி தமிழ்
- பரிமாற்
கலைஞர்
இது இந்திய அரசுக்குத் தெரியாது.
பார்ப்பனர்களுக்குப்
புரியாது. அவர்களுக்குப்புரியும்
வகையில் பரிதிமாற்கலைஞர் எனத் தமிழ்ப் பெயர் மாற்றம் செய்து கொண்ட சூரிய நாராயண சாஸ்திரி
என்னும்
பார்ப்பனர் கூறுகிறார்,
`வடமொழி,
இலத்தின்,
கீரீக்கு
முதலியன போலத் தமிழ் மொழியும் `உயர்
தனிச்செம்மொழி’ யாமாறு
சிறிது காட்டுவோம்.’
`தான்
வழங்கும் நாட்டின்கணுள்ள பல மொழிகட்குந் தலைமையும் அவற்றினும் மிக்கமே தகவுடமையுமுள்ள
மொழியே `உயர்
மொழி’.
‘இவ்விலக்கணத்தான்
ஆராயுமிடத்துத் தமிழ், தெலுங்கு
முதலியவற் றிற்கெல்லாந் தலைமையும் அவற்றினும் மிக்கமே தகவும் உடைமையால் தானும் உயர்மொழியேயென்க’.
‘தான்
வழங்கும் நாட்டிற் பயிலும் மற்றைய மொழிகளின் உதவி யின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல்
சான்றதே `தனிமொழி’
என்னப்
படும். தான்
பிறமொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே
வழக்காறு’.
‘தமிழ்
மொழியினுதவி களையப்படின், தெலுங்கு
முதலிய இயங்குத லொல்லா; மற்றுத்தமிழ்
மொழி அவற்றினுதவியில்லாமலே சிறிது யிடர்ப்படுத்தலின்றித் தனித்து இனிமையின் இயங்கவல்லது.
இஃது
இந்திய மொழி நூற்புலவர்கள் பலர்க்கும் ஒப்ப முடிந்தது.
ஆதலின்
தமிழ் தனிமொழியே யென்க’.
இனிச் செம்மொழியாவது யாது?
`திருந்திய
பண்புஞ் சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி புகல்
`செம்மொழி யாம்’
என்பது
இலக்கணம்.
இம்மொழி நூலிலக்கணம் தமிழ்மொழியின் கண்ணும்
அமைந்திருத் தல் தேற்றம். என்னை?
இடர்ப்பட்ட சொன் முடிவுகளும் பொருண்
முடிபுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதின் உணர வல்ல தாய்ப் பழையன
கழிந்து புதியன புகுந்து திருத்த மெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது.
இது
தமிழ் மொழியின் கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க.
நாட்டின் நாகரிக முதிர்ச்சிக்கேற்ப சொற்களும்
ஏற்பட்டு, மொழிக்
கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு
சொற்களேற்படு மிடத்துப் பிறமொழிச் சொற்களன்றித் தன் சொற்களே மிகுதல் வேண்டும்.
இவையும்
உயர் தனித் தமிழ் மொழிக்குப் பொருந்துவன வாம்.
எனவே
தமிழ் செம்மொழியென்பது திண்ணம்.
இதுபற்றியன்றே தொன்றுதொட்டுத் தமிழ்
மொழி `செம்மொழி’
என
நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று.
ஆகவே
தென் னாட்டின்கட் சிறந்தொளிரா நின்ற அமிழ்த்தினுமினிய தமிழ் மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த
வழியும் `உயர்
தனிச் செம்மொழி’யேயாம்
என்பது நிச்சயம்’. (குறள்
நெறி 1.7.65 இதழில்).
இது
அவாள்களுக்குப் புரியும்.
No comments:
Post a Comment