Saturday, December 14, 2019

பத்மஸ்ரீ நெ.து. சுந்தரவடிவேலு எழுதி தமிழக அரசிடம் வழங்கிய பெரியார் வரலாறு எங்கே? - - பேராசிரியர் தி.வ. மெய்கண்டார்



பேராசிரியர் தி.. மெய்கண்டார் ஆவேச உரை

2.3.2002/இல் திருகோகுல் காந்திநாத் அவர்கள் எழுதிய ‘கருப்பு மலர்களின் நெருப்புப் பயணம்’ நூல் வெளியிட்டு விழா புதுச்சேரி கிளாசிக் அரங்கத்தில் நடைபெற்றதுமக்கள் உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோசுகுமாறன் தலைமைத் தாங்கினார்.
நூலை ‘பெரியார் பார்வை’ சிறப்பாசிரியர் கவி வெளியிட முதல் படியை திருகுழந்தைவேலு (நாளிதழ்கள்மாத இதழ்கள் முகவர்அவர்கள் ரூ 500/ செலுத்திப் பெற்றுக்கொண்டார்கள்.

பின்பு வாழ்த்துரை வழங்கி முபாலகுரு (அமைப்புச் செயலாளர்தந்தை பெரியார் திராவிடர் கழகம்), பேராதி.மெய்கண்டார் (சிறப்பாசிரியர்/இளந்தமிழன்திராவிட இயக்க ஆய்வாளர்மற்றும் விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர்/தந்தை பெரியார் திராவிடர் கழகம்ஆகியோர் உரையாற்றினாரகள்.

பேராதி. மெய்கண்டார் அவர்கள் முன்னாள் துணைவேந்தர் மந்றும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பெரியார் அவர்களின் பரிந்துரையினால் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்ட திருநெ.துசுந்தர வடிவேலு அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்திருநெ.துசுந்தர வடிவேலு அவர்கள் ‘நினைவு அலைகள்’ என்னும் தன்னுடைய வாழ்கை வரலாற்று நூலை எழுதும் போது உடன் இருந்து உதவி செய்தவர் பேராதிமெய்கண்டார் அவர்கள்அவர் பேசும்போதுதிருநெ.துசுந்தர வடிவேலு அவர்கள் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி அதை தமிழக அரசிடம் அளித்துள்ளதாக கூறினார்அந்த பேச்சு விவரம் இதோ.. ..

கருப்பு மலர்களின் நெருப்புப் பயணம்’ என்ற நூலினை ஆசிரியர் கோகுல் காந்திநாத் அவர்கள் அரும்பாடுபட்டு எழுதியிருக்கிறார்நான் ஒரு 40, 50 ஆண்டு காலமாக திராவிட இயக்க வரலாறுகளைப் பற்றிய  ஆய்வுகளையும் தேசிய இயக்கங்கள் பற்றிய ஆய்வுகளையும் அவைப் பற்றியக் குறிப்புகளை எழுதுவதையும் கொண்டிருக்கிறேன்.
கோகுல் காந்தி நாத் அவர்கள்கருப்பு மலர்களின் நெருப்புப் பயணம் நூலில் எவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்திருக்கிறார் என்பதை நான் கடந்த கால நிகழ்ச்சிகளைச் சொல்லும் போது நீங்களாகவே புரிந்து கொள்வீர்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள், ‘அறிஞர் அண்ணா கண்ட தியாகராயர்’ என்ற பேச்சில், 1949/இல் திருவல்லிக்கேணியில் ஒரு படிப்பகத்தைத் திறந்து வைத்து பேசினார்கள்பேச்சை முடிக்கும் போது ,‘தியாகராயரைப் பற்றி இந்த அமைப்பை நடத்தக் கூடிய தோழர்கள் அவருடைய கருத்துகளையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக ஆக்கித் தந்தால் நான் மன மகிழ்ச்சி அடைவேன்’ என்று சொன்னார்.

 நான் அப்போது நினைத்துக் கொண்டேன்,‘ இதையெல்லாம் செய்ய வேண்டிய வேலை அவருக்கல்லவாஇதை யாராவது செய்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறுகின்றாரே’ என்று எண்ணினேன்.

1949/இக்கும் 1925/இக்கும் இடையில் 24 வருடங்கள்தான் வித்தியாசம்அந்த காலத்தில் முயற்சி செய்திருந்தால் பல அரிய தகவல்கள் எல்லாம் கிடைத்திருக்கும்என்னவோ யாரோ செய்ய வேண்டும் என்று கருதினார்கள்தமிழ்நாட்டின் வரலாறு அந்த மாதிரிதான் போய்க் கொண்டிருக்கிறது.

1967/இல் அண்ணா ஆட்சிக்கு வந்த பின்என் நண்பர் பரமசிவம் அவர்கள், ‘நீதிக் கட்சி’ என்ற ஓர் இயக்கத்தைத் துவக்கினார்கள்அவர் பெரியார் பிறந்த நாள் விழாக்களையெல்லாம் வெற்றிகராமாக நடத்திக்காட்டியவர்.

தி..வுக்கும்தி.மு..வுக்கும் நல்ல உறவு இல்லாத நிலையில் கூட எம்.ஜி.ஆர் அவர்களை அழைத்து சிறப்பாக விழா நடத்தியவர்.

அவர் திடீரென்று 1969/இல் ஜஸ்டிஸ் கட்சி என்ற ஒன்றைத் துவக்கினார்நான் கூட சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டேன்ஜி.டி.நாயுடுகி..பெவிஸ்வநாதன் போன்றவர்களெல்லாம் வந்தார்கள்.

பழைய திராவிடர் கழக உறுப்பினர் சீட்டின் அடியில் பார்த்தீர்களேயானால்ஒரு வாசகம் இருக்கும்அதாவது, ‘ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகத்துடன் இணைக்கப்பட்டது’ என்று இருக்கும்இது ரொம்ப நாளாக அச்சடிக்கப்பட்டு வந்ததுஏனென்றால்திடீரென்று யாராவது ஜஸ்டிஸ் கட்சி என்று ஆரம்பித்துவிடுவார்களோ என்ற அச்சம் அய்யாவுக்கு இருந்தது.
இவ்வியக்கத்தை பரமசிவம் இரண்டாண்டு காலம் நடத்தினார்அதன் விளைவு என்னவென்றால், ‘நீதிக்கட்சி மலர்’ என்று ஒன்று வெளியிட்டோம். 1949/இல் அண்ணா சொன்னாரல்லவாதியாகராயரைப் பற்றி ஏதாவது தொகுத்துப் போட்டால் சிறப்பாக இருக்குமென்று. 1925/இக்கும் 1969/இக்கும் இடையில் உள்ள வித்தியாசம் 44 வருடங்கள்கிடைப்பதற்கரிய புகைப்படங்கள் எல்லாம் கிடைத்தனபல தரப்பட்ட இடங்களிலிருந்து ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றிய செய்திகளைபடங்களை திரட்டினோம்எல்லாமே புகைப்படங்கள்எல்லா போட்டோக்களையும் ஆர்ட் பேப்பரில் போட்டோம்மொத்தம் 200 பக்கங்கள்பலர் வியந்தனர்விலை 15 ரூபாய்தான்இதை நான் சொல்லுவதற்கு காரணம் வரலாறு என்பதை யார்யார் உருவாக்க வேண்டுமோ அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருந்து வருவதால்தான்.

வரதராஜலு நாயுடு என்ற மாபெரும் தலைவர்அவர் ‘தமிழ்நாடு’ என்ற பத்திரிக்கையை நடத்தியவர்முதுபெரும் காங்கிரஸ் தலைவராக இருந்தார்சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தார்அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த போது .வே.சு அய்யரின் குருகுலத்தை எதிர்த்து முன்னின்று போராட்டம் நடத்தியவர்வடக்கேயிருந்துமாபெரும் தலைவர்களைகாந்தி உட்படபெரும் தலைவர்களெல்லாம் கலந்துகொள்ளும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்கினார்.
பெரியார் காங்கிரஸ் கட்சிக்கு வருவதற்கு முன்னதாககாந்தியார் வருவதற்கு முன்னதாகதமிழ்நாட்டில் 1918/இல் ஒரு மாபெரும் கிளர்ச்சியை நடத்திவெள்ளைக்காரர்களை எதிர்த்து வழக்காடி பெரிய சாதனைகளையெல்லாம் செய்தார். ‘தென்னாட்டு திலகர்’ என்றெல்லாம் அழைக்கப்பட்டார்சுயமரியாதை இயக்க வரலாற்றில் ஒரு மாபெரும் மகத்தான அத்தியாயமே அவருக்கு உண்டுஅந்த தலைவருக்கு வரலாறே கிடையாது.

தந்தை பெரியாருக்குதான் என்ன வரலாறு முறையாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று கருதுகிறீர்கள்? 1938/இல் சாமிசிதம்பரனார்இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அய்யா சிறையில் இருந்த நேரத்தில் அவசர அவசரமாக ஒரு மாத காலத்தில் ஒரு வரலாறு எழுதினார்இந்த தேதியில் ஆரம்பித்து இன்ன தேதியில் முடிந்தது என்று குறிப்பைக்கூட அவருடைய டைரியில் இருந்து குறித்து வைத்துள்ளேன்கடைசி அத்தியாயத்தை குத்தூசி குருசாமி எழுதி முடித்தார்இதை நான் ‘இளந்தமிழன்’ என்னும் இதழில் 73/இல் எழுதினேன்.

சாமிசிதம்பரனார் மனைவி சிவகாமி அம்மையார்இது குறித்து என்னிடத்தில் கோபித்துக் கொண்டார்நான் ‘இல்லையம்மாஅவர் நடை வேறுஇவருடைய நடை வேறுகுத்தூசி குருசாமிதான் எழுதி  முடித்தார்நீங்கள் வேண்டுமானால் கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்ஆக அத்துடன் அவருடைய வரலாறு முடிந்து விட்டது.

1979/இல் பெரியாருடைய நூற்றாண்டு விழாவையொட்டிஒரு குழுவை எம்.ஜி.ஆர் அரசு அமைத்து பெரியார் வரலாற்றை எழுதச் சொன்னதுபத்மஸ்ரீ நெ.துசுந்தரவடிவேலு அவர்கள் பெரியார் வாழ்க்கை வரலாற்றை மூன்று பாகமாக எழுதி அரசுக்கு கொடுத்து விட்டார்.
(நெ.துசுந்தரவடிவேலு வாழ்க்கை வரலாறு 2300 பக்கங்களில் மூன்று பாகமாக வந்திருக்கிறதுஏழாண்டு காலம் உழைத்தார்நானும் அவருக்கு உறுதுணையாக ஏழாண்டு காலம் உடனிருந்து உழைத்தேன்அதனால் அவர் மன நிறைவு பெற்றார்)
பெரியார் வாழ்க்கை வரலாறு அரசாங்கத்திடம் கொடுத்து கொடுத்தபடிதான் உள்ளதுஅவர் மறைகின்ற நேரத்தில்என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு அழுதார். ‘என்னுடைய வரலாறு 2300 பக்கங்களில் வந்துவிட்டதுஅய்யா தந்தை பெரியாருடைய வரலாறு வரலில்லையேநான் எனது வாழ்நாளில் காண்பேனா?’ என்றார்.

நானும் இப்போது கூறுகிறேன், ‘என்னுடைய வாழ்நாளில் காண்பேனா?’
எழுதிக் கொடுத்த வரலாறு என்னவாயிற்றுபல இலட்ச ரூபாய் கொடுத்தார்களேவரலாறு இருக்கும் இடம் தெரியவில்லைநான் பல அதிகாரிகளிடம் கேட்டபோது ‘நீங்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் எழுதினீர்கள்இப்போது வேறு இதைக் கிளப்புகிறீர்கள்இந்த பிரச்சனை எங்கே போய் முடியுமோநான் உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன்வரலாறும் வரப் போவதில்லைஎங்களையும் நீங்கள் வம்பில் மாட்டி விடுகிறீர்கள்’ என்றார்நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் என்றேன்.

பெரியாருடைய வரலாற்றை நெ.துசுந்தரவடிவேலுவை விட இன்னொருவர் சிறப்பாக எழுத முடியுமா?

இந்தப் பின்னணியில் கோகுல் காந்திநாத் எழுதியுள்ள நூலை எண்ணிப் பாருங்கள்அவர் இளைஞர் பாட்டாளி படிப்பாளி அல்லஎன்ன தொழில் செய்கிறார் என்பதை எனக்கு முன்னாள் பேசியவர்கள் எடுத்துச் சொன்னார்கள்அதை நான் கவனித்தேன்இப்படிப்பட்ட வருக்கே இவ்வளவு பெரிய ஆர்வம் வந்து பாண்டிச்சேரியில் இருக்கும் சுயமரியாதைக்காரர்களையும் திராவிடர் கழகக்காரர்களையும் எடுத்துக் காட்டி இருக்கிறார்அதை என்ன சாதாரண வேலையென்றா நினைக்கிறீர்கள்? SSLC கூட தாண்டியிருப்பாரா என்பது அய்யப்பாடுஎழுதுவதில் கூட அவருக்கு சங்கடங்கள் இருந்ததாகச் சொன்னார்கள்.
இதற்காக எவ்வளவு பாடுபட்டிருப்பார் என்பது எனக்கு புரியும்இந்த நூலுக்காக அவர் என்னிடத்திலும் வந்தார்நோயல் பற்றி ஏதாவது நூல் கிடைக்குமாபல இடங்களில் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை’ என்றார்என்னுடைய நூல் சேமிப்பிலிருந்து கொடுத்தேன்அதைக் கூட நூலின் முன்னுரையில் அரைப்பக்கத்திற்கு மேல் எழுதி நன்றி உணர் வோடு குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நூல் சாதாரண நூல் அல்லஇந்த நூலைப் பற்றி ஏதாவது குறிப் பிட்டு தீர வேண்டும்இரண்டு விஷயங்கள்முதலாவது ‘புதுவை முரசு’ பத்திரிக்கைப் பற்றி.
ஈரோடு ‘குடியரசு’ பத்திரிக்கை தமிழ்நாட்டில் என்னென்ன வேலை செய்ததோ அதை ‘புதுவை முரசு’ பாண்டிச்சேரியில் செய்ததுஓராண்டு காலம் நான்கு மாதம் இப்பத்திரிக்கை வெளிவந்தது என்று கருதுகிறேன்இதை முழுவதுமாக நான் பார்த்திருக்கிறேன்குத்தூசி குருசாமி வரலாற்றை எழுதுகின்ற காலத்தில் குருவிக்கரம்பை வேலு வுக்கு ஓராண்டு காலம் உறுதுணையாக இருந்த அந்த காலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக ‘குடியரசு’ இதழ் அத்தனையும் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை முழுவதும் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததுபடித்து பார்த்திருக்கிறேன்அது எங்கிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். Revolt, குடியரசு புரட்சிபகுத்தறிவு போன்ற இதழ்களை பார்க்கும் வாய்ப்பு எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்தது.

கோகுல் காந்தி நாத் இந்த மாதிரி சிரமப்பட்டு இந்த தகவல்களை யெல்லாம் திரட்டி வந்து எழுதியிருக்கிறார் என்றால் இது சாதாரண விசயமல்ல.

பொதுவாக திராவிட இயக்கத்தாரைப் பற்றிச் சொல்லும் போது அவர்கள் இந்துக்களை மட்டும் குறைச் சொல்லுகிறார்கள்கிருத்துவர்களைப் பற்றி ஒன்றும் சொல்லுவதில்லை என்று சொல்லுவார்கள்ஆனால் புதுவையில் ‘புதுவை முரசு’, அவரே  (.நோயல்ஒரு கிருத்துவராக இருக்கின்ற காரணத்தால் இங்கே இருக்கக் கூடிய கத்தோலிக்கக் கிருத்துவர்களுடன் மோதல் ஏற்பட்டதுஅதற்காக அவர்கள் வழக்குத் தொடுத்தார்கள்சிறைக்குச் செல்லக் கூடிய வாய்ப்பெல்லாம் அவருக்கு ஏற்பட்டதுதாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டார்அவர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார்நோயல் என்னென்ன சாதனைகளைச் செய்தாரோ அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் அழகாகத் தொகுத்துள்ளார்.நோயலைப் பற்றிய முழுத் தகவல்களையும் தந்திருக்கிறார்.

அவர் நடத்திய ‘புதுவை முரசு’ பற்றிக் கூட இதழாசிரியர் என்ற முறையில் மிக அழகாக அந்தப் பத்திரிக்கையைப் போட்டு அது என்னென்ன போராட்டங்களை நடத்தியது என்பதோடல்லாமல் யார் யாரை எல்லாம் வளர்த்து விட்டது என்பதையெல்லாம் கூறியுள்ளார்.

குத்தூசி குருசாமிபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மற்றும் நோயல் என்ற முக்கூட்டுமூன்று தலைவர்கள் இணைந்து நடத்திய பத்திரிக்கை அதுஅப்போது எழுத்துத்துறையில் ஈடுபட்டு பரபரப்பாக எழுதி வந்த குருசாமி கடலூருக்கு மாற்றி வந்த சமயம்அவர் உற்சாகமாக எழுது வதற்கு வாய்ப்பு கிடைத்ததுஆர்வம் இருக்கலாம்எழுதுவதற்கு பத்திரிக்கை வேண்டுமல்லவா?
தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டுசஞ்சிவி பர்வதத்தின் சாரல் மற்றும் சுயமரியாதைச் சுடர் ஆகிய மூன்று நூல்களை .நோயல் தனது சொந்த செலவில் மிகச் சிறியசிறிய புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்நான் அதைப் பார்த்திருக்கிறேன்பழைய வாய்ப்பாடு மாதிரி சிறிய நூல்களாக 32 பக்கங்களில் 24 பக்கங்களில் மற்றும் 20 பக்கங்களில் இருக்கும்இவ்வாறு இவற்றையெல்லாம் வெளியிட்டு (பாவேந்தருக்குஅவருக்குப் பெருந்துணையாக இருந்து வளர்த்து கொடுத்தார்அவர் கவிஞர் என்பதை மக்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்வதற்கு உறு துணையாக இருந்திருக்கிறார்இப்படி மூன்று தலைவர்களும் கலந்து இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியவற்றைப் பதிவு செய்திருக்கிறார்இங்கு குறிப்பிடப்பட வேண்டியவர் பொன்இராமலிங்கம்அவர் பெருமாள் கோயிலுக்கும் சிவன் கோயிலுக்கும் தாழ்த்தப்பட்டவர்களை ஆலய பிரவேசத்திற்காக 1947/இல் அழைத்து நடத்திச் சென்றிருக்கிறார் என்ற குறிப்பு இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறதுஅது மட்டுமல்ல பாரதிதாசனின் ‘இரணியன்’ நாடகத்திலும் இரணியன் வேடமேற்று நடித்திருக்கும் படமெல்லாம் இந்த நூலில் காணப்படுகிறது.

இந்த நூலைப் பற்றி குறிப்பாக முடிவாக சொல்ல வேண்டுமெனில்குத்தூசி குருசாமிபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மற்றும் நோயல் ஆகியோரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கும் திராவிட இயக்க வளர்ச்சிக்கும் பாடுபட்ட கிட்டத்தட்ட 40 பேர்களின் தகவல்களைத் தொகுத்து தந்திருக்கிறார்சிலரை விட்டுவிட்டதாகச் சொன்னார்கள்நல்ல வேளையாக இதை பகுதி-என்று போட்டிருக்கிறார்எனவே மேலும் எழுதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்த புத்தகத்தை கல்லூரியில் பாடத்திட்டத்திற்கு வைத்தால் ஆராய்ச்சித்துறையில் M.Phil பட்டம் கொடுப்பார்கள்அதற்கு தகுதி வாய்ந்த நூலாக இருக்கிறது என்பதை கல்லூரி ஆசிரியன் என்ற முறையில் சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

(ஏடு /17)


No comments: