Wednesday, March 22, 2023

சீமானை அம்பலப் படுத்துவது ஏன்?

 சீமானை அம்பலப்படுத்துவதாக சொல்கிறீர்களே ஏன்?

சீமானை விமர்சிக்க நிறைய விடயங்கள் முன்பிலிருந்தே இருந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் அமைதியாகத் தான் இருந்தோம். நமது சண்டை எதிரியுடன் தான் இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்களுடன் அல்ல என்ற காரணத்திற்காக பொதுவெளியில் அவற்றை பேசுவதைத் தவிர்த்தோம். திருமுருகன் காந்தி சிறையிலிருந்து வெளியே வந்த அன்றே அவரை தெலுங்கன் என்று தம்பிகளை வைத்து பேச விட்டார்கள். அப்போதும் அதை கண்டு கொள்ளாமல் தவிர்த்தோம். திருமுருகன் காந்தி டீக்கடையில் மீண்டும் கைது செய்யப்பட்ட போது “மீண்டும் ஓய்வெடுக்க செல்கிறார் திருமுருகன்” என்று கிண்டலடித்தார்கள். அப்போதும் இவற்றை எழுதவில்லை. 

ஆனால் ஈழப்படுகொலை நடைபெற்று 9 ஆண்டுகள் கடக்க இருக்கிற இந்த சூழலில் இனப்படுகொலை குறித்த விவாதம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றரை லட்சம் தமிழரின் படுகொலை என்பது 9 ஆண்டுகளில் மறக்கடிக்கப்படக் கூடிய விடயம் அல்ல. எனவே அந்த விவாதத்தை அரசியல் களத்தின் முக்கிய விவாதமாக மீண்டும் மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் கடினப்பட்டு, தோழர்களின் ஓய்வில்லாத உழைப்பினைக் கொட்டி ”வெல்லும் தமிழீழம்” மாநாட்டினை ஏற்பாடு செய்தோம். 

ஈழ இனப்படுகொலையை விளக்கும் 1 லட்சம் துண்டறிக்கைகள் அளவுக்கு சென்னை முழுதும் விநியோகம் செய்து, தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகளை கொண்டு சென்றோம். இரண்டே வாரங்களில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து முடித்தோம். மாநாட்டிற்கான செலவுக்கான பணத் தேடலே பாதி நேரத்தை பிடித்தது. ஆனால் பிரச்சாரங்களின் போது சாதாரண மக்கள் அனைவரும் கேட்டவுடன் மறுக்காது 10, 20, 50, 100 என்று பணத்தினைக் கொடுத்தார்கள். அவர்களின் பணம்  இல்லையென்றால் இந்த மாநாட்டின் கடன் சுமை எங்களின் கழுத்தை நெறித்திருக்கும்.

நாங்கள் எதிர்பார்த்தபடியே மாநாட்டு அரங்கம் நிரம்பியது. அரங்கு முழுதும் இளைஞர்கள் குவிந்திருந்தார்கள். அவர்கள் முன் தமிழீழ விடுதலையின் அத்தனை பரிமாணங்களையும் விளக்குவது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது.

 அதனால் 

”தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமூக நீதி”

”முற்போக்கு ஜனநாயக அரசியலை வென்றெடுத்த தமிழீழ அரசியல் சாசனம்” 

”தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் விரிவாதிக்கக் கொள்கை மற்றும் தமிழீழ விடுதலையின் முக்கியத்துவம்”

என்று இதுவரை தமிழ்நாட்டில் விவாதிக்கப்படாத தலைப்புகளை முன்வைத்து மாநாட்டு அமர்வுகளை உருவாக்கினோம். 

விடுதலைப் புலிகளின் சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதி குறித்து இதுவரை தமிழ்நாட்டில் பெரிதாக விவாதங்கள் நடத்தப்பட்டதே இல்லை. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த மாநாடு இருந்தது.

இந்த மாநாட்டின் தீர்மானங்களை விரிவாக “சென்னைப் பிரகடனம்” என்ற பெயரில் வடிவமைத்தோம். இந்த சென்னைப் பிரகடனம் தமிழீழ விடுதலையின் அனைத்து சிக்கல்களையும், அதன் தீர்வுகளையும் பேசுவதாய் இருக்கிறது. மாநாட்டின் முடிவில் இந்த சென்னைப் பிரகடனம் தமிழ்நாட்டின் விவாதப் பொருளாய் மாறியிருக்க வேண்டிய நேரத்தில் தான் சீமானும், அவரது தம்பிகளும் குழப்பத்தினை உருவாக்கினர்.

சீமானை ஏன் அழைக்கவில்லை என்பதை மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக மாற்றினர். மாநாட்டின் மொத்த நோக்கத்தையும் திசை திருப்பினர். மொத்த உழைப்பையும் வீணடித்தனர். தமிழீழ இனப்படுகொலை குறித்தோ, விடுதலைக்கான விவாதங்களோ மீண்டும் எழாமல் தடுத்தனர். கல்யாணமாக இருந்தால் நானே மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், கருமாதியாக இருந்தால் நானே பிணமாக இருக்க வேண்டும் என சீமானை மட்டுமே விவாதப் பொருளாக மாற்றினர். இது எதேச்சையாக நடைபெறவில்லை. திட்டமிட்டு இந்த மாநாட்டின் விவாதம் திசை திருப்பப்பட்டிருக்கிறது. தமிழீழ தேசியத் தலைவரின் படத்தைக் காட்டி காட்டி கூட்டம் சேர்த்து, அவருடைய எந்த அரசியலையும் பேசாமல், ஈழ இனப்படுகொலையின் மீதான எந்த செயல்திட்டமும், போராட்டமும் இல்லாமல் இளைஞர்களை மழுங்கடித்த எச்சை ஓட்டுப் பொறுக்கி கும்பல் தங்களை limelightல் வைத்திருக்கும் அரசியலுக்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வினை திசை திருப்பியிருக்கிறது.

தமிழீழம் என்ற விவாதத்தினை விட, சீமான் உண்டா இல்லையா என்பதுதான் அந்த ஓட்டுப் பொறுக்கி கும்பலுக்கு முக்கியமானதாக இருக்கிறது. வெல்லும் தமிழீழம் என்ற முழக்கம் வெளிவராமல் ”சீமான்” விவாதப் பொருளாக மாற்றப்பட்டதன் பின்னணியில் இந்திய உளவுத்துறை இல்லாமல் இல்லை. தமிழீழ இனப்படுகொலையைப் பற்றிக் கத்திப் பேசியதால்தான் சீமானின் பின்னால் இளைஞர்கள் வந்தார்கள். இன்று அந்த அரசியலையே தன் முக்கியத்துவத்திற்காக திசை திரும்ப தம்பிகளை தூண்டி விட்டு “ஒன்றும் அறியாத பச்சைப் பிள்ளை” போல் நடிக்கிறார் என்றால் அவர் யாருக்காக யாரிடம் வேலை செய்கிறார் என்பதுதான் கேள்விக்குரியாக இருக்கிறது.

மாநாடு முடிந்த இரவு முதலே நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்கள் முழுவதிலும் இந்த மாநாட்டினையும், மே பதினேழு இயக்கத்தினையும் எதிர்த்து அவதூறுகளையும் பொய்களையும் பரப்பி வருகிறார்கள். மாநாட்டை நடத்தியது மே பதினேழு இயக்கம். அதில் யாரை அழைக்க வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் தான் முடிவு செய்யும். இத்தனை ஆண்டுகளில் எங்கள் போராட்டங்களிலும், எந்த கூட்டமைப்பின் போராட்டங்களிலும் பங்கேற்காத நபரை மாநாட்டிற்கு அழைக்க முடியாது. தங்களை மாநாட்டிற்கு அழைக்கவில்லை என்பதற்காக, இந்த மாநாட்டிற்கு போட்டியாக இதைவிட பெரிய மாநாட்டினை தமிழீழ விடுதலைக்காக நாம் தமிழர் கட்சியினர் நடத்தியிருந்தால் அவர்களை மனமுவந்து பாராட்டியிருக்கலாம். ஆனால் தமிழீழ இனப்படுகொலை விவாதமாவதை தடுக்கும் பொறுக்கித் தனத்தை அவர்கள் செய்வார்கள் என்றால் இதற்கு மேலும் அமைதிகாக்க முடியாது. அந்த அயோக்கியர்களை இதற்கு மேலும் அம்பலப்படுத்தாவிட்டால் அது சரியானதாகவும் இருக்காது. 

தமிழீழ தேசிய தலைவர் தான் வருவதற்கு முன்பு வரை தீவிரவாதியாகத் தான் இருந்தார் என சொல்லிய போதே அந்த கும்பலின் ஆணவத்தை அடக்கியிருந்தால் இவ்வளவு தலைக்கணம் அவர்களுக்கு வந்திருக்காது. 234-தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாத ஓட்டுப் பொறுக்கிகளுக்கு இவ்வளவு நாட்டாமைத்தனமும், ஆணவமும் இருக்கக் கூடாது. அது அனைத்து போராட்டத்தினையும் சிதைக்கத் துணியும். அதனால் தான் சீமானை அம்பலப்படுத்துகிறேன். 

Vivekanandan Ramadoss, 24 பிப்ரவரி, 2018 பதிவு....