Monday, August 30, 2010



கீழ் வெண்மணிக் கொடுமைகளைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன?

கீழ் வெண்மணிக் கொடுமைகளைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன? என்று பெரியார் தலைப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம் பல கீழ்வெண்மணி கிராமங்கள் இருக்கின்றன என்று கூறுகிறார். பழைய தஞ்சை மாவட்டப்பகுதிகளில் பெரியாரின் போரட்ட களும் மிகப்பெரியது. கீழ் வெண்மணி படுகொலை கொடூரத்தை பற்றி எழுத தோழர் தியாகு அவர்கள் திருவாரூர் வந்த போது அவருடன் தமிழ்ச்சான்றோர் பேரவை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. செந்தில் குமார் அவர்களும் சென்றிருக்கிறார்கள். தியாகுவுடன் தான் இணைந்துகொண்ட கள ஆய்வு பணிகளில் கிடைத்த தகவல்களில் சில... பண்ணையார்களின் வீடுகளில் தங்கி பெரியார் மூடநம்பிக்கை பயிற்சி வகுப்புகளும் நடத்தியிருக்கிறார். எனவே அவர் பண்ணையார்களுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார் என்ற கருத்து தவறானது. பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பண்ணையார்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது பஞ்சாயத்து செய்து தீர்த்து வைத்திருக்கிறார். விடயபுரத்தில் உள்e ஒரு மிகப்பெரிய பண்ணையார் வீட்டிலிருந்துதான் 15 நாட்கள் பயிற்சி பட்டறையை நடத்தி விட்டுதான் கடவுள் மறுப்பு முழக்கங்களும் வெளியிடுகிறார். பண்ணையாளர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்ட போது காவல்துறையை உள்ளே வரவிட மக்கள் மறுத்த போது அவர்களை உள்ளே வரவழைத்து முற்றுகை யிட்டிருக்கிறார் பெரியார். எனவேதான் கீழ்வெண்மணிக்கொடுமைகள் என்று தலைப்பிடுகிறார். அவர் வெளியிட்ட அறிக்கை இதோ....

ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான். அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் கற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்eவரை நாடு‡ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது. காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்கçe சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டிவிட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது! சட்டம் மீறுதல் மூலமும் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலமும் காரியத்தை சாதித்துக்கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் முந்திவிட்டார்கள். புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக் கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆக வேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது. எந்த மனிதனும் அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத நிலை ஏற்படுவிட்டது. சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்திரியாகவும் மற்றும் மந்திரிகளாகவும், பெரும் பதவியாeர்களாகவும் ஆக முடியும் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது.

அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது. இந்த நிலைமையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்று கூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அeவுக்கு வeர்ந்தன என்றால் 1. காந்தியார் கொல்லப்பட்டார். 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன. 3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர். 4. நீதி ஸ்தலங்கள் , ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப் பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன.
5.கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டி விட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வeவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாச வேலைகளாக காரியங்கçeச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காரியங்களாகும். இவைகளை அடக்கப்பயன் படும்படியான போதிய சட்டமில்லை. சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது. சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன.

சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க‡பழி வாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100-க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள். அமைச்சர்களும், ஆட்சியாeர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் - அமைச்சர்கள் நாங்கள் செய்வதையயல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் எங்களுக்கு மேலாக இருப்பதால் - எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள். மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றதன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள். அவற்றைக் கட்டு பிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக- எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள். பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அது போல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால்‡ஆட்சியையே பாழ் பண்ணக்கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விeங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ஜனநாயக ஆட்சி தர்மம் இருந்து வருகிறது.

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால் , ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, அரச நாயகம் ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ் நாடு தனி முழு சுதந்திரமுள்e நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது இந்தியர்கள் ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநுதர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனித தர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும். அதுவும் ரஷ்ய ஆட்சி - அதாவது ரஷ்யரால் ஆeப்படும் ஆட்சிதான் வரவேண்டும். அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையன் ஆட்சிதான் வேண்டும்.

அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆeப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்று போலத்தான் இருக்கும். இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும். எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது -
1.காங்கிரஸ்-திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல்ஆக்கிவிட வேண்டும். 2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில் , நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையயன்று உறுதி மொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.
3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஓரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும்.சமுதாய- பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்காலம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும்.

பத்திரிகைகளைப் பெரும்அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக் கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையயன்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக்கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும். இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நிலையில் எப்படி இருந்தாலும் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

"Patriotism is the last refuge of a scoundrel" தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் ‡ஜான்சன் (விடுதலை 28.12.1968)

Saturday, August 14, 2010

தமிழ்வழிக்கல்வி - தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்டமும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்!


தமிழ்வழிக்கல்வி - தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்டமும் உச்சநீதிமன்ற தீர்ப்பும்!

இளவேனில்

தமிழ்ச்சான்றோர் பேரவை 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டவுடன் வருடந்தோறும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகப் பெருவிழாவை நடத்தி வருகிறது. மாதாந்திர கூட்டங்கள், தமிழகமெங்கும் கிளைகள் தொடங்கப் பெற்றன.

1999 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஐந்தாம் வகுப்புவரை தமிழ் கட்டாயப்பாடம் என்பதை வலியுறுத்தி 100 தமிழ் உணர்வாளர்கள் சாகும்வரை உண்ணாநோன்பு இருந்து உயிர் துறப்பது என்று தீர்மானித்தது. அவற்றின் விளைவாக பேரவையின் தொடர் பிரச்சாரம், உண்ணாநிலை அறப்போர், அரசு நிலை, தமிழக அரசின் மோகன் குழு, அரசு ஆணை, அதைத் தொடர்ந்து தமிழ் நாடு மெட்ரிக்குலேசன் சங்கம் தொடுத்த உயர்நீதிமன்ற வழக்கு, அதன் தீர்ப்பு, அதைத் தொடர்ந்து தமிழக அரசும், தமிழ்ச் சான்றோர் பேரவையும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீடு ஆகியவற்றை காண்போம்.

நூறு தமிழ் உணர்வாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தை மிக சீரிய முறையில் தொடங்கியது. தமிழகமெங்கும் பரவிய பிரச்சாரக் கூட்டங்களுக்கு இடையே இன்தாம் இணையமும் - தாகம் இதழும் இணைந்து தமிழ்வழிக் கல்வி ஆதரவு மாநாடு ஒன்றை 21-3-1999 ஆம் நாள் சென்னைத் தொலைக்காட்சி அருகில் உள்ள அண்ணா அரங்கில் நடத்துகின்றன. மாநாட்டில் மிக முக்கியமான தமிழறிஞர்களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டு அரங்கில் நிறைந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழுணர்வாளர்களிடம் 23-3-1999 ஆம் நாள் நடைபெறவுள்ள நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பட்டினிப் போரைப் பற்றியும் தமிழ் வழிக் கல்வி பற்றியும் விரிவாக எழுச்சியோடு எடுத்துரைக்கின்றனர்.

மாநாட்டிற்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், முதன் முதலாக நாள் குறிப்பிடப்படுகிறது. 1999 ஏப்ரல் 25 ஆம் நாள் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி நூறு தமிழுணர்வாளர்கள் சாகும்வரை பட்டினிப் போரை மேற்கொள்வர் என அறிவிக்கப்படுகிறது. அம்மாநாட்டிலும், அதற்கு முன்னதாகவும் 23-3-1999 ஆம் நாள் நாடுதழுவிய அளவில் பல்வேறு ஊர்களில் நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போரில் சிறப்புரையாளர்களாகப் பங்குபெற வேண்டியவர்களின் பட்டியல், ஊர் விவரங்கள் உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் உரிய ஊர்களின் களப்பணியாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் அடையாளப் பட்டினிப்போர் குறித்த அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதுடன் அவை தமிழ்ச் சான்றோர் பேரவை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

23-3-1999 ஆம் நாள் தமிழ்நாட்டின் 74 முக்கிய ஊர்களில் ஒவ்வொரு ஊரிலும் சராசரி நூறு தமிழுணர்வாளர்கள் பங்கேற்க ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போர் மாநிலத்தையே குலுக்கும் வகையில் நடைபெறுகிறது. சென்னையில் குறளகம் அருகில் நடந்த பட்டினிப் போரில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திரண்டிருக்கிறார்கள். பேரவையின் கூட்டங்களில் சென்னையில் வழக்கமாகக் கலந்து கொள்ளும் முக்கியமான தமிழுணர்வாளர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையிலும் சென்னையில் அடையாளப் பட்டினிப் போர் பேரெழுச்சியுடன் நடைபெறுகிறது.

சென்னை சட்டக் கல்லூரி, கிறித்தவக் கல்லூரி மாநிலக் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் அடையாளப் பட்டினிப் போரிலும், அதற்கு முந்தைய பிந்தைய போராட்டச் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை விடுகின்றனர். த.மா.கா., பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் சென்னையில் அடையாளப் பட்டினிப் போர்ப் பந்தலுக்கு வந்து ஆதரவு தெரிவித்து உரையாற்றுகின்றனர்.

தவிர, ஏப்ரல் 9 ஆம் நாள் பட்டினிப் போர் மறவர்கள் நூற்றுவரின் பெயர்ப் பட்டியலைப் பத்திரிகைகளுக்கு வெளியிடுவதென்றும், ஏப்ரல் 10 ஆம் நாள் தமிழகமெங்கும் மிதிவண்டிப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளச் செய்வதென்றும், ஏப்ரல் 17 ஆம் நாள் தமிழகம் தழுவிய வாகனப் பிரச்சாரத்திற்குத் திட்டமிட வேண்டுமென்றும் தீர்மானித்த அக்கூட்டம், ஏப்ரல் 4 ஆம் நாள் நடவடிக்கைக் குழு கூடிப் பட்டினிப் போராளிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்கிறது.

ஏப்ரல் 4 ஆம் நாள், சென்னை தேனாம்பேட்டை, மாணவர் கணினி அலுவலகத்தில் நடவடிக்கைக் குழுக் கூட்டம் கூடுகிறது. அதன் உறுப்பினர்கள் ஒன்பது பேர்களும் அதில் கலந்து கொள்கிறார்கள். தமிழ் வழிக் கல்விக்காகச் சாகும்வரை பட்டினிப் போரில் பங்கேற்க விரும்பி தமிழ்ச் சான்றோர் பேரவைக்கு எழுதப்பட்ட நூற்று எழுபதுக்கும் மேற்பட்ட கடிதங்களில் இருந்து நூற்று ஆறு தமிழுணர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். போடி, திருமரைக்காடு, குற்றாலம் ஆகிய ஊர்களில் இருந்து 17-4-1999 ஆம் நாள் தொடங்க உள்ள வாகனப் பிரச்சாரத்திற்கு வழித்தட ஊர்களும் பிரச்சாரத் திட்டங்களும் வரையறுக்கப் படுகின்றன.

கோரிக்கைகள் நிறைவேறினாலன்றி எக்காரணத்தை முன்னிட்டும் பட்டினிப் போரைக் கைவிடுவதில்லை என்று மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. அடுத்ததாக 9-4-1999ஆம் நாள் போராட்ட உயர்நிலைக் குழுக் கூட்டமும் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்துவதென முடிவெடுக்கப்படுகிறது. 9-4-1999 ஆம் நாள் போராட்ட உயர்நிலைக் குழுக் கூட்டம், தமிழ் வழிக் கல்விப் போராட்டம் பற்றி நாடு முழுவதும் பல்வேறு தமிழ் அமைப்புகள் வாயிலாக மிகப் பரவலாகக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் போராட்டக் களங்களை மேலும் மேலும் வலுப்படுத்தும் நிலையில் கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன. மாலை 4 மணியளவில் கூட்டப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பட்டினிப் போரில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட நூற்று ஆறு தமிழுணர்வாளர்களின் பெயர்ப் பட்டியல் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

10-4-1999 ஆம் நாளிதழ்களில் நூறு தமிழுணர்வாளர்கள் தமிழ் வழிக் கல்விக்காகப் பட்டினிப் போர் மேற்கொள்ள இருக்கும் செய்தி வெளியாகிறது. அதே நாளில் (10-4-1999) தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகளும், தமிழுணர்வாளர்களும் அவரவர் பகுதிகளில் மிதிவண்டிப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கின்றனர். நூற்றுக்கணக்கான மிதிவண்டிக் குழுக்கள், ஆயிரக்கணக்கான மிதிவண்டிகளில் தமிழகம் முழுவதும் செய்த பிரச்சாரம் தமிழர்களிடையே பெரும் எழுச்சியைத் தோற்றுவிக்கிறது.

17-4-1999 ஆம் நாள், குற்றாலம், திருமரைக்காடு, போடி ஆகிய ஊர்களில் இருந்து பல லட்சக்கணக்கான துண்டறிக்கைகளுடன் மூன்று வாகனங்களில் பிரச்சாரப் பயணம் தொடங்குகிறது. வாகனப் பிரச்சாரக் குழுவினர்களுக்கு உற்சாகமான வரவேற்பையும் ஆதரவையும் அளிக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள். ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பிரச்சார வாகனங்களில் செல்லும் ஊர்களில் எல்லாம் கூட்டம் நடத்தித் துண்டறிக்கைகளை விநியோகம் செய்கிறார்கள் வாகனப் பிரச்சாரக் குழுவினர்.
அதற்கு முன்னதாக 13-4-1999 ஆம் நாள் உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தைச் சார்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கன்னியாகுமரியிலிருந்து சென்னையை நோக்கி தமிழ் வழிக் கல்விப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கின்றனர். வழக்குரைஞர் சேவியர் அருள் ராசு, திரு. ச.மெல்கியோர் போன்ற அவ்வியக்கத் தலைவர்களின் முன் முயற்சியால் திட்டமிடப்பட்ட அந்த மிதிவண்டிப் பிரச்சாரப் பயணத்தை, தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா நா.அருணாசலம் அவர்கள் கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கிறார். பேராசிரியர் பெரியார்தாசன் சிறப்புரையாற்றுகிறார். மிதிவண்டிப் பிரச்சாரப் பயணம் ஆயிரக்கணக்கான கிராமங்களின் வழியாகச் சென்னை வரும்போது முப்பது நகரங்களில் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களும் அறிஞர்களும் மிதிவண்டிப் பிரச்சாரப் பயணப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். பாவலர் பல்லவன் தலைமையில் மாமல்லபுரத்திலிருந்து திருக்கழுக்குன்றம் வரை நடைபெற்ற மிதிவண்டிப் பயணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். கிறித்துவக் கல்லூரி மாணவர் பாரதி பிரபு தலைமையில் ஆங்காங்கே தெருமுனை நாடகங்களும் சிறப்புடன் நடத்தப் பெற்றன. வழக்கறிஞர் ஓ.சுந்தரம் தலைமையில் சென்னையிலும் மிதிவண்டிப் பயணம் சிறப்புடன் நடைபெறுகிறது.

இறுதிப் போருக்கு முன்பாக...
போராட்ட நாளான ஏப்ரல் 25 ஆம் நாள் மிகவும் நெருங்கி விட்ட சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் தமிழ் வழிக் கல்விக்காகத் தமிழ்ச் சான்றோர் பேரவை நடத்த இருக்கும் தமிழுணர்வாளர்களின் சாகும்வரைப் பட்டினிப் போரைப் பற்றி மிகப் பரவலாகப் பேசப்படுகிறது. மிதிவண்டி, மற்றும் வாகனப் பிரச்சாரக் குழுக்கள் நாடு முழுவதும் ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
24-4-1999 ஆம் நாள் காலை 10-00 மணிக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ‘குட்ஷெப்பர்டு’ கல்யாண மண்டபத்தில் பட்டினிப் போராளிகள் ஒன்று சேர்க்கப்படுகின்றனர். போராளிகள் அனைவரும் கூடியிருந்தவர்களுக்கும், சக போராளிகளுக்கும் வலுவான கையொலிக்கிடையில் அறிமுகம் செய்யப்படுகின்றனர். பட்டினிப் போராளிகளின் கூட்டத்திற்குப் பேராசிரியர் தமிழண்ணன் தலைமை தாங்குகிறார். அன்றைய கூட்டத்திலும் பல புதிய தமிழுணர்வாளர்கள் பட்டினிப் போரில் தம்மையும் இணைத்துக் கொள்ளும்படி ஒப்புதல் கடிதங்களைத் தருகிறார்கள். ஆயினும், இறுதியாகத் தேர்வு பெற்றவர்களின் பட்டியலில் அனைவருமே பங்கு பெற உறுதியாக இருந்ததால் போரில் பங்கு பெறும் வாய்ப்பின்றிப் போய்விடுகிறது.

அன்றயை நாளிதழ்களில், தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான வழி வகை குறித்து அரசு சட்டப்பூர்வமாக ஆராய்ந்து வருவதால் தமிழ்ச் சான்றோர் பேரவையினர் தமது பட்டினிப் போரை ஒரு நாள் அடையாள பட்டினிப் போராக முடித்துக் கொள்ள வேண்டுமெனக் கோரும் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் வேண்டுகோள் வெளியாகிறது.
25-4-1999 ஆம் நாள் காலை 10 மணிக்கு, சென்னை சைதை கலைஞர் கருணாநிதி வளைவின் அருகில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் பேரணியாகப் புறப்படத் தயாராகத் தத்தமது பதாகைகள், மற்றும் தாம் சார்ந்த இயக்கக் கொடிகளுடன் அணி திரள்கின்றனர். பட்டினிப் போரில் ஈடுபடவுள்ள நூறு தமிழ் உணர்வாளர்கள் இரண்டு வாகனங்களில் முன்னே செல்ல அதைத் தொடர்ந்து அய்யா அருணாசலம், பழ.நெடுமாறன், தமிழண்ணல், மானமிகு ஆனூர் செகதீசன், வே.ஆனைமுத்து, திரைப்பட இயக்குநர் வி.சேகர் போன்ற தமிழுணர்வாளர்கள் தலைமையில் பேரணி புறப்படுகிறது. பட்டுக்கோட்டையில் இருந்து அஞ்சாநெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரி சுடர் ஏந்தி வந்த தமிழ்வழிக் கல்வி பிரச்சார வாகனம் பேரணியின் முகப்பில் செல்கிறது.

நாடறிந்த கல்வியாளர்களும், தமிழறிஞர்களும் பெருவாரியாகப் பங்கு பெற்ற அப்பேரணி கட்டுப்பாடும், தூய்மையும், உறுதியும் நிறைந்ததாக ஒரு நதியைப் போல நகர்ந்து செல்கிறது. பேரணியின் பயணப் பாதையான அண்ணாசாலை, வெங்கட நாராயணா சாலை, திருமலைப் பிள்ளைத் தெரு போன்ற சாலைகள் நெடுகிலும் காவல் துறையினர் பேரணிக்கு உரிய பாதுகாப்பு வழங்குகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலைத் துச்சமென நினைத்துத் தளராமல் நடக்கின்றன தமிழர்களின் கால்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு தெரிந்த பேரணியில் உயர்த்திப் பிடிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான இயக்கங்களின் பல்வேறு வகையான கொடிகளும், பதாகைகளும் அந்த வெயிலிலும் வாடா மலர்களாகத் தமிழ் வழிக் கல்வி கோரி அசைகின்றன.

பெரும் எழுச்சியுடன் நகரமே குலுங்கும் வண்ணம் நடைபெற்ற பேரணி வள்ளுவர் கோட்டத்தை அடையும்போது பகல் பதினொன்றரை மணியாகிறது. வள்ளுவர் கோட்டத்தின் வலப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த நீண்ட பந்தலில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் பட்டினிப் போராளிகள் அமர்கிறார்கள். பட்டுக்கோட்டையில் இருந்து கொண்டுவரப்பட்ட அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி சுடர், போராட்டத் தலைவர் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களிடம் வழங்கப்படுகிறது. பட்டினிப் போராளிகளுக்கு நெஞ்சார்ந்த ஆதரவை அளிக்கும் விதமாகப் பல்லாயிரக்கணக்கான தமிழுணர்வாளர்கள் உணர்ச்சிகரமாகத் திரண்டு நின்று தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தியும் தமிழ்ச் சான்றோர் பேரவையை வாழ்த்தியும் முழக்கமிடுகின்றனர்.

பேரணி யில் பங்கு பெறுவதற்காக வெளியூர்களில் இருந்து உணர்வாளர்கள் வந்த வாகனங்கள் வள்ளுவர் கோட்டப் பகுதியைச் சுற்றி உரிய இடங்களில் நிறுத்தப்படுகின்றன. போராட்டப் பந்தலில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் பட்டினிப் போராளிகளை இடியென முழங்கும் கையொலிக்கிடையே ஒவ்வொருவராக அறிமுகம் செய்கிறார் தோழர் பெ.மணியரசன். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா உணர்ச்சிகரமான தமிழுணர்வுப் பாடல்கள் சிலவற்றை இசைக் கருவிகள் ஏதுமின்றி பார்வையாளர்களை நெகிழ வைப்பதுபோல் பாடுகின்றார்.

பட்டினிப் போராளிகளுக்குத் தமிழ்ச் சான்றோர் பேரவையின் அடையாள அட்டை அணிவிக்கப்படுகிறது. பட்டினிப் போராளிகள் நூறு பேர் என்று தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வந்தநிலையிலும் கூடுதலாகவே இரண்டு உணர்வாளர்கள் விடாப்பிடியுடன் போரில் இணைந்து விடுகின்றனர். போராளிகளின் எண்ணிக்கை 102 ஆக உயர்கிறது. பட்டினிப் போருக்கு ஆதரவாகத் திரண்டிருந்த கூட்டத்தினரிடையே அன்று முழுவதும் பல்வேறு தமிழறிஞர்கள் தமிழ்வழிக் கல்வி குறித்து எழுச்சிகரமாக உரையாற்றுகின்றனர்.
24 ஆம் நாளே போராளிகள் உண்ணாதிருந்தாலும் அவர்களின் முகங்களில் ஒரு துளிச் சோர்வும் தென்படவில்லை. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் கொதிக்கும் தார் சாலையிலேயே அமர்ந்து அறிஞர்களின் ஆவேச உரைகளைக் கேட்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான தமிழுணர்வாளர்கள். கருத்துக்கும், கண்ணுக்கம் விருந்தாக, கிறித்துவக் கல்லூரி மாணவர்களின் நாடகம், திரு. பாரதிப் பிரபுவின் முயற்சியால் அரங்கேறுகிறது.
மாலை சுமார் 6.30 மணிக்கு அரசு போராட்டக் குழுவினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. அதை ஏற்றுப் பேச்சுவார்த்தைக்குப் போன போராட்டக் குழுவினர் அமைச்சர் தமிழ்க்குடிமகன் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியபின் எந்தவிதமான மனநிறைவும், கோரிக்கை மீது வெற்றியும் கிட்டாமல் போராட்டத்தைத் தொடரும் உறுதியோடு போராட்டப் பந்தலுக்குத் திரும்புகின்றனர். அன்றைய இரவு புதிரும், பொருளும் நிறைந்ததாகக் காணப்படுகிறது. “வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் தமிழுணர்வாளர்கள் அவரவர் ஊருக்குத் திரும்பி ஆங்காங்கே சென்னையில் நடக்கும் இப்போராட்டத்தைப் பற்றி மக்களிடம் கருத்துப் பரப்பும் பணியை மேற்கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் உணர்வாளர்களைக் கொண்டு நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்’’ என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவிக்கிறார்.

கூட்டம் அசையவோ, கலையவோ இல்லை. என்ன நடந்தாலும் இருந்து சந்திப்பது என்ற முடிவுடன் அமர்ந்திருக்கிறார்கள் கூடியிருந்த தமிழுணர்வாளர்கள். இரவு 8.30 இரவு 9.30 மணிவரை களைத்துப் படுத்திருக்கும் போராளிகளுக்கும் அமர்ந்திருக்கும் தமிழுணர்வாளர்களுக்குமாக உரை நிகழ்த்திய வண்ணமிருக்கிறார்கள் பல்வேறு தமிழறிஞர்கள். அன்று இரவு (25-4-99) போராளிகள் உறங்கியபின் அவர்களுக்கு அரணாக ஏனைய தமிழுணர்வாளர்கள் சாலையிலேயே படுத்து விடுகின்றனர்.

26-4-1999 ஆம் நாள் காலை அமைச்சர் தமிழ்க்குடிமகன் போராட்டப் பந்தலுக்கு வந்து அரசின் நிலையை விளக்கியும், தமிழ்ச் சான்றோர் பேரவையின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்றும் உரையாற்றி தமிழ்ச் சான்றோர் பேரவை தனது போராட்ட முடிவை மறுபரிசீலனை செய்து தமக்குத் தெரிவித்தால் அதையறிந்து கொண்டு புறப்படுவதாக அறிவித்துவிட்டு உண்ணா நோன்புப் பந்தலிலேயே அமர்ந்து கொள்கிறார். போராட்டம் தொடர்பான முடிவுகளைப் போராட்டக் குழுவைக் கூட்டித்தான் அறிவிக்க முடியும். எனவே, போராட்டக் குழுவைக் கூட்டி எடுக்கப்படும் முடிவுடன் தங்களை வந்து சந்திக்கிறோம் என்று அமைச்ச் தமிழ்க்குடிமகனை வழியனுப்பி வைக்கிறார்கள் போராட்டக் குழுவினர்.
அரசு சார்பான 41,417 பள்ளிகளிலும் இப்போது தமிழே பயிற்று மொழியாகவும் பாட மொழியாகவும் உள்ளது. எஞ்சியுள்ள மெட்ரிகுலேஷன் முதலான 240 பள்ளிகளில் மட்டுமே இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒன்று முதல் ஐந்து வகுப்புக்குரிய தொடக்கப் பள்ளிகள், நாடு முழுவதும் பரவியுள்ள மழலையர் பள்ளிகள் தொடங்கி ‘தமிழ்’ மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென்ற கொள்கையில் தமிழ் அறிஞர்களுக்கும் - தமிழக அரசுக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது. இக் கொள்கையினை நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தவாறு ஏப்ரல் 30-க்குள் ஒரு குழு அமைக்கப்படும். மே 31-க்குள் அக்குழுவிடமிருந்து பரிந்துரை அறிக்கை பெற்று, வரும் கல்வியாண்டிலேயே அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தையும் அரசு செய்யும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியவாறு பட்டினியிருக்கும் தமிழ் அறிஞர்களோடு மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் அவர்கள் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவாகும் இது (ஒப்பம்) அமைச்சர் மு.தமிழ்க்குடிமகன்.
26-4-1999 ஆம் நாள் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பத்திரிகை நிருபர்களுக்குத் தெரிவித்த அறிவிப்புகளின் முக்கிய குறிப்புகள், விவரம் பின்வருமாறு:

1) தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 1991-லேயே எங்களுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். எனவே, எங்களுக்குக் கொள்கையில் வேறுபாடு கிடையாது. இதைச் செயற்படுத்துவதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பாக வேறொரு மாநிலத்தில் அரசாணை பிறப்பித்திருந்தாலும், நடைமுறைப்படுத்துவதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது நல்ல கொள்கை என்பதால் இதை எந்த வகையில் செயற்படுத்தலாம் என்பது குறித்து ஆழ்ந்து சிந்தித்து நடைமுறைப்படுத்த அரசு ஆவன செய்யும்.

2) பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரையில், ஏற்கனவே உள்ள வகுப்புகளுக்கு மேலாகக் கூடுதலாக மாணவர்களைச் சேர்ப்பதற்குக் கேட்கப்பட்டது. இத்திட்டத்தினை, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு மறுத்து விட்டது. என்றாலும் பேராசிரியர் அன்பழகன் அவர்களுடனும் என்னுடனும் போராட்டக் குழுவினர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கைக்குள்ளாகவே வருமாறு செய்தால், நாமே செய்துவிடலாமே? அல்லது தில்லியில் இசைவைக் கேட்கலாமா என்பது குறித்த கல்வி அமைச்சர் பேராசிரியர் மற்றும் உயர்கல்விச் செயலாளர் ஆகியோருடன் கலந்து பேசப்பட்டது.
இப்பாடத்திற்குரிய அனைத்து நூல்களும் தயாராக உள்ளன. மாணவர்களுடைய ஆர்வத்திற்கும் குறைவில்லை. வெகு விரைவில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக, உயர்கல்விச் செயலாளர் வரும் 29-4-99 அன்று தில்லிக்கு அனுப்பி வைக்கப்படுவார். இங்கும் உரிய அறிஞர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

3) போராட்டக் குழுவினரின் முக்கிய, முதலாவது கோரிக்கை 1 முதல் 5 வரை தமிழ், பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். அரசின் சார்புடைய பள்ளிகள் மொத்தம் 41,317 உள்ளன. இவற்றில் ஏற்கனவே தமிழ்பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்கிறது. நாம் முடிவெடுக்க வேண்டி யது மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் - 2,187; சி.பி.எஸ்.இ. - 194, ஆங்கிலோ இந்தியர்கள் பள்ளி - 41, ஆக மொத்தம் 2,422 பள்ளிகள் ஆகும்.

தமிழ் வழியில் பயிற்றுவிப்பது தொடர்பாக எங்களுக்கு இரண்டாவது கருத்தே கிடையாது. காந்தியடிகள் ஏற்கனவே நாம் தாய்மொழியில் படிக்காததால் அனைவரும் கோழைகள் ஆகிவிட்டோம். வீறார்ந்த உணர்வை இழந்து விட்டோம் என்று தெளிவாக ‘மாணவர்களுக்கு’ என்ற நூலில் தெரிவித்துள்ளார். இதிலும் சட்டச் சிக்கல் இருக்கின்றது. மொழிச் சிறுபான்மையினர்களுக்கான பள்ளிகள் மேற்கண்ட 242-இல் அடங்கும். தங்களுக்கு உரிமை உண்டு. மழலையர் பள்ளிகளில் 1 முதல் 5 வரை தமிழைப் பயிற்று மொழியாக்க ஆணையிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மெட்ரிகுலேசன் மற்றும் பிற பள்ளிகளுக்கு எடுத்துக் கொள்வோம், தமிழறிஞர்கள் இதையும் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

முதல்வர் அவர்கள் இந்த வாரத்திற்குள் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், இதில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், வழக்கறிஞர்கள், சான்றோர் பேரவையில் சில உறுப்பினர்கள், அமைச்சர்கள், செயலாளர்கள் அடங்குவர். குழு இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும். இந்தக் குழு முறையாகக் கூடி, ஆய்வு செய்து, சட்டப்படியான சிக்கல் என்ன என்பதையும் அந்தத் தரப்பினருடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கும்.

தலைவர்(கலைஞர்) அவர்களின் கருத்துப்படி வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கேதுவாக சூன் மாதத்திற்குள் சட்டப்படியான சிக்கல் தீர்க்கப்படுவதற்கு ஆவன செய்யப்படும். எனவே, மேற்கண்ட விளக்கங்களை ஏற்று அவர்கள், போராட்டத்தைக் கைவிடுவார்கள் என்று அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது. 1008 மொழிச் சிறுபான்மையர் பள்ளிகள் அனைத்திலும் தமிழாசிரியர் பணியிடங்கள் அமர்த்தப்பட்டால், அவர்கள் தங்கள் தாய்மொழியோடு ஆங்கிலத்துடன் தமிழையும் ஒரு பாடமாக நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

16-11-98 இல் கலைஞர் அவர்கள் அறிவித்த முடிவினை அனைவரும் (மொழிச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் - தெலுங்கு, கேரள சமாஜம், உருது மொழி ஆசிரியர் கூட்டமைப்பு போன்றவர்கள்) வரவேற்றுள்ளனர். மேற்கண்ட அமைப்பினர் தமிழாசிரியர் பணியிடம் தந்தால், தமிழ்ப்பாடம் நடத்துவதாகக் கூறியுள்ளனர். தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக வெகு விரைவில் முடிவெடுக்கப்படும். எனவே, பேராட்டக் குழுவினர் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என நம்புகிறோம் என்று அமைச்சர் தமிழ்க்குடிமகன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள வழக்குரைஞர் பொ.வெ.பக்தவச்சலம் அவர்களின் இல்லத்தில் போராட்ட உயர்நிலைக் குழுக் கூட்டம் கூட்டப்படுகிறது. ஆழமானதும், பொருள் பொதிந்ததுமான விவாதங்களுக்குப் பிறகு, முடிவாக –
“எங்கள் தமிழ்ச் சான்றோர் பேரவையின் சார்பாகப் போராட்டக் குழுவினர் முன் வைத்த மூன்று கோரிக்கைகளைப் பற்றி அரசு மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கும், மாண்புமிகு அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் நேரில் வந்து விளக்கியமைக்கும் நன்றி. நாங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளில், உயர்கல்வியில் தமிழ்வழி எனும் எமது இரண்டாவது கோரிக்கை குறித்தும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் எனும் மூன்றாவது கோரிக்கை குறித்தும் அரசின் சார்பில் விளக்கம் அளித்ததை ஏற்று அவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்படி இரண்டு கோரிக்கைகளில் உள்ள சட்டம் மற்றும் தொழில்நுட்பரீதியான சிக்கல்களை ஆய்வு செய்து படிப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்த ஆவன செய்வதாக அரசு உறுதியளித்திருந்தது. எங்களது முதற்கோரிக்கையாகிய குழந்தைகளுக்குத் தமிழ்வழிக் கல்வி தமிழுலகு தழுவிய மிக உயிரான கோரிக்கை என்று நாங்கள் கருதுகிறோம். ஒன்று முதல் ஐந்து வகுப்புக்கு உரிய தொடக்கப் பள்ளிகள், நாடு முழுவதும் பரவியுள்ள நர்சரி பள்ளிகள் தொடங்கி மெட்ரிகுலேசன் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒன்றே மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அக்கொள்கையினை நிறைவேற்றும் வகையில் அரசு எங்களிடம் தெரிவித்ததுபோல் ஏப்ரல் 30-க்குள் குழு அமைக்க வேண்டும் என்றும் மே 31-க்குள் அக்குழுவிடமிருந்து அறிக்கை பெற வேண்டும் என்றும், அவ்வறிக்கையின் அடிப்படையில் ஆணை பிறப்பித்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் விழைந்து வேண்டுகிறோம். இதனை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் - என்று தீர்மானம் செய்யப்படுகிறது.

போராட்டக் குழுவினரின் தீர்மானிக்கப்பட்ட, சமரசமற்ற கோரிக்கைகளுடன் போராட்டக் குழு உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் தமிழ்க்குடிமகனைச் சந்திக்கின்றனர். முதல்வரைக் கலந்து ஆலோசித்துவிட்டுப் போராட்டக் குழுவினருடன் கோரிக்கைகள் குறித்து உரையாடுகிறார் அமைச்சர் தமிழ்க்குடிமகன். “தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதில், தமிழ்வழிக் கல்விக் கொள்கையில் தமிழ்ச் சான்றோர் பேரவைக்கும், தமிழக அரசுக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. தமிழ் வழிக் கல்வி நடைமுறைக்கு வருவது குறித்த சாத்தியக் கூறுகள் அனைத்தையும் ஆராய்வோம்’’ என்று தமது உணர்வைத் தெளிவுப்படுத்திய அமைச்சர் தமிழ்க்குடிமகன், தமிழக முதல்வர் கலைஞருடன் கலந்தாலோசித்துத் தயாரித்திருந்த தமிழ் வழிக் கல்வி குறித்த அறிக்கையைப் போராட்டக் குழுவினரிடம் வழங்குகிறார்.

அரசு அறிவிப்பும் போர் நிறுத்தமும்


அரசுச் சார்பான 41,417 பள்ளிகளிலும் இப்போது தமிழே பயிற்று மொழியாகவும் பாட மொழியாகவும் உள்ளது. எஞ்சியுள்ள மெட்ரிகுலேசன் முதலான 2,402 பள்ளிகளில் மட்டுமே இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒன்று முதல் ஐந்து வகுப்புக்குரிய தொடக்கப்பள்ளிகள், நாடு முழுதும் பரவியுள்ள மழலையர் பள்ளிகள் தொடங்கி மெட்ரிகுலேசன் பள்ளிகள் வரையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ‘தமிழ்’ ஒன்றே மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென்ற கொள்கையில் தமிழ் அறிஞர்களுக்கும் - தமிழக அரசுக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது. இக்கொள்கையினை நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தவாறு ஏப்ரல் 30-க்குள் ஒரு குழு அமைக்கப்படும். மே 31-க்குள் அக்குழுவிடமிருந்து பரிந்துரை அறிக்கை பெற்று வரும் கல்வியாண்டிலேயே அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தையும் அரசு செய்யும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியவாறு உண்ணா நோன்பிருக்கும் தமிழ் அறிஞர்களோடு மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் அவர்கள் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவாகும் இது. அரசின் அறிக்கையை எடுத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக் குழுவினர் போராட்டப் பந்தலுக்குத் திரும்புகின்றனர். போராட்டப் பந்தலில் பட்டினிப் போராளிகளுக்கும், தமிழ்வழிக் கல்விப் போருக்கும் ஆதரவாகவும், அரணாகவும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் திரண்டிருந்த தமிழுணர்வாளர்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டப் பந்தலுக்குத் திரும்பிய போராட்டக் குழுவினரைக் கண்டதும் பெரும் பரபரப்படைகின்றனர். அரசின் முடிவு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வம் கொண்டு அலைமோதுகின்றனர்.

போராட்டத் தலைவர் தமிழண்ணல் ஒலிபெருக்கி முன்பாக வந்து நின்றவுடன் அவரது வார்த்தைகளின் வருகைக்காக மிகவும் ஆழ்ந்த அமைதி தோற்றுவிக்கப்படுகிறது. “என் நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் உணர்வுப் பூர்வமாக இங்கே திரண்டிருக்கும் தமிழுணர்வாளர்களே! பட்டினிப் போராளிகளே! உன்னதமான உங்கள் தமிழுணர்வுக்கும், எழுச்சிமிக்க உங்கள் போராட்டத்திற்கும் வெற்றி கிடைத்திருக்கிறது’’ என்று சொல்ல, போராட்டப் பந்தல் வெகு நேரக் கரவொலியால் அதிர்கிறது.

தொடர்ந்து, தாம் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களைச் சொன்ன பேராசிரியர் தமிழண்ணல் அரசு போராட்டக் குழுவினருக்கு எழுத்துப் பூர்வமாக அமைச்சர் தமிழ்க்குடிமகன் கையொப்பத்துடன் அளித்த அறிக்கையை அனைவரும் கேட்கும் வண்ணம் படிக்கிறார். கையொலியாலும், வெற்றியுணர்வாலும் போராட்டப் பந்தல் திணறிக் கொண்டிருந்த அவ்வேளையில் அமைச்சர் தமிழ்க்குடிமகன் பட்டினிப் போரை முடித்து வைக்கும் பொருட்டு அங்கே வருகை தருகிறார். வலுவான கையொலி எழுப்பி அவரை வரவேற் கிறார்கள், அங்கு திரண்டிருக்கும் தமிழுணர்வாளர்கள்.

போராட்டம் குறித்து அரசு எடுத்துள்ள உடன்பாடான முடிவுகளை விளக்கிச் சில நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர், போராட்டத் தலைவர் தமிழண்ணல் அவர்களுக்குப் பழச்சாறு தந்து பட்டினிப் போரை முடித்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து பட்டினிப் போராளிகள் அனைவருக்கும் பழச்சாறு வழங்கப்படுகிறது. நிறைவான மனதுடனும் வெற்றிப் பெருமிதத்தோடும் கைகுலுக்கி, வணக்கம் சொல்லி விடைபெறுகிறார்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரண்ட 102 பட்டினிப் போராளிகளும், ஆயிரக்கணக்கான தமிழுணர்வாளர்களும்.

28-4-1999 ஆம் நாள் தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்ட உயர்நிலைக் குழு தேனாம்பேட்டை மாணவர் கணினி அலுவலகத்தில் பேராசிரியர் தமிழண்ணல் தலைமையில் தமிழ்வழிக் கல்விப் போராட்டத்திற்கு ஆதரவளித்து, அரணாக நின்று பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தும், அரசு அமைக்க இருக்கும் குழுவில் அரசு அறிவித்துள்ளபடி தமிழ்ச் சான்றோர் பேரவையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலரையும் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதன்படி பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் இளவரசு, புலவர் த.சுந்தரராசன், தோழர் தியாகு, பேராசிரியர் சோ.விருத்தாசலம், வழக்குரைஞர் சேவியர் அருள்ராசு, புலவர் கி.த.பச்சையப்பன் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் எனும் கோரிக்கையுடன் முனைவர் தமிழண்ணல் தலைமையில் போராட்டக் குழுவின் சில உறுப்பினர்கள் அமைச்சர் தமிழ்க்குடி மகனைச் சந்தித்துக் கோரிக்கையை அவரிடம் அளிக்கின்றனர்.

அரசின் ஆய்வுக்குழு

30-4-1999 ஆம் நாள் தமிழ்வழிக் கல்வியை நடை முறைப்படுத்திட ஏதுவாக அது குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு, நீதிபதி மோகன் தலைமையில், முனைவர் தமிழண்ணல், புலவர் இரா.இளங்குமரனார், பேராசிரியர் ச.முத்துக்குமரன், பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவை அமைத்துச் செயல்படப் பணிக்கிறது அரசு. 13-4-1999 ஆம் நாள் அனைத்து முன்னிலை நாளிதழ்களிலும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வாயிலாக அறிவிப்பு ஒன்று இவ்வாறு வெளியாகிறது.

தமிழ்நாடு அரசு அறிவிக்கை

பள்ளிக்கல்வித் துறை 3-5-1999 நாளிட்ட அரசாணை எண் 117-இன்படி, மழலையர் பள்ளிகள் முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வி வரையில் தமிழ் மொழி வழி கற்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்திட உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் மோகன் அவர்களைத் தலைவராகவும் அறிஞர்கள் நால்வரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்று அரசால் அமைக்கப்பட் டுள்ளது.

மேற்படி குழு தமிழ்வழிக் கல்வி குறித்து, பொதுமக்கள் கருத்துக்களை நேரில் கேட்டறியக் கருதியுள்ளதால், மே 18, 19, 20 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு நாளும் மாலை 3-00 மணி முதலாக சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் உள்ள கல்வி இயக்குனர் வளாகத்தில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்ட மாளிகை மாநாட்டுக் கூடத்தில் அந்தக் குழுவைப் பொதுமக்கள் நேர்முகமாகக் காணலாம். பொதுமக்கள் நேரில் வந்து வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்காணும் அறிக்கை தமிழறிஞர்களையும், தமிழுணர்வாளர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. தமிழ் வழிக் கல்வி என்பது தமிழர்களின் உரிமை. இந்த உரிமையை அளிப்பதற்குக் கருத்துக் கணிப்பு நடத்துவது அதையும் தமிழ்நாட்டில் தமிழர்களிடமே நடத்துவது என்பது நமது நியாயமான உரிமையின்மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்றே பலரும் உணர்ந்தனர்.

இந்நிலையில் 14-5-1999 ஆம் நாள் போராட்ட நடவடிக்கைக் குழுக் கூட்டம் தேனாம்பேட்டை மாணவர் கணினி அலுவலகத்தில் கூட்டப்பட்டது. பேராசிரியர் தமிழண்ணல் தலைமையில் நடந்த அக்கூட்டத்தில் நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அரசு நடத்த முயலும் கருத்துக் கணிப்புப் பற்றி விவாதிக்கப்பட்டது. இத்தகைய அறிவிப்புக் குறித்த நீதிபதி மோகன் குழுவில் பிற உறுப்பினர்களுடன் தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டதாகவும், கருத்துக் கணிப்பு 18, 19, 20-5-99 ஆகிய நாள்களில் நடைபெறுவது தள்ளி வைக்கப்பட்டு 20, 21, 22-5-99 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது என்றும் பேராசிரியர் தமிழண்ணல் தெரிவித்தார்.

கருத்துக்கணிப்பு பற்றிய அரசு விளம்பரம் ஆங்கிலப் பள்ளிகள் நிறைந்த சென்னை நகரில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதால் அதில் பொதிந்துள்ள உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அனைத்துத் தமிழ் உணர்வாளர்களுக்கும் இந் நிகழ்வைத் தெரிவித்து அவர்களையும் கருத்துக் கணிப்பில் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்க ப்படுகிறது.

அதன்படி கருத்துக் கணிப்புப் பற்றிய சுற்றறிக்கையைத் தமிழகம் முழுவதுமுள்ள உணர்வாளர்களுக்கு அனுப்பி வைக்கிறது தமிழ்ச் சான்றோர் பேரவை. 20, 21, 22-5-99 ஆகிய நாள்களில் தமிழ் வழிக்கல்வி பற்றிய கருத்துக் கணிப்பு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் என்று அரசு, நாளிதழ்களில் விளம்பரம் செய்கிறது. அரசு அறிவித்தபடி மே மாதம் 20, 21, 22 ஆகிய நாள்களில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை புரிந்த பல்லாயிரக்கணக்கான தமிழுணர்வாளர்கள் கலந்து கொண்டு தமிழ்நாட்டுப் பள்ளிகளில், பிள்ளைகளுக்குத் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற தமது கருத்துக்களை உறுதியாகப் பதிவு செய்கின்றனர். ஆங்கில வழிக் கல்வி ஆதரவாளர்களாக வந்த சிலரும் சில ஆங்கிலப் பள்ளி நிர்வாகிகளும் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டாலும் தொண்ணூறு விழக்காடு கருத்துக்கள் தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவாகவே பதிவாகின்றன.

மறுநாள் 23-5-99 ஆம் நாள் தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்ட நடவடிக்கைக் குழுக் கூட்டம் தேனாம்பேட்டை மாணவர் கணினி அலுவலகத்தில் கூட்டப்படுகிறது. முந்தைய மூன்று நாள்களில் நடந்த கருத்துக் கணிப்பு பற்றி அக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. தமிழ் வழிக் கல்வியைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் எனும் எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களிடையேயும் நிலவுகிறது. அரசு என்ன செய்யப்போகிறது எனும் எதிர்பார்ப்பு, கடிதங்களாக உருப்பெற்று தமிழ்ச்சான்றோர் பேரவை அலுவலகத்திற்கு வந்து குவிகின்றன.
இந்நிலையில் 12-6-99 ஆம் நாள் மீண்டும் போராட்ட நடவடிக்கைக் குழுக் கூட்டம் தேனாம்பேட்டையில் கூடிக் கலந்தாய்வு செய்கிறது. அடுத்ததாக 21-6-99 ஆம் நாள் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட உள்ள தமிழ் வழிக் கல்வி குறித்த மோகன் குழு அறிக்கையைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்திக் கடிதம் எழுதுமாறு நானூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கம், உணர்வாளர்களுக்கும் கடிதம் அனுப்புகிறது தமிழ்ச் சான்றோர் பேரவை. அதன்படி பல நூற்றுக்கணக்கான கடிதங்களைத் தமிழக அரசுக்கும், அதன் நகல்களைத் தமிழ்ச் சான்றோர் பேரவைக்கும் அனுப்புகின்றனர் தமிழகம் முழுவதிலுள்ள தமிழுணர்வாளர்கள்.

21-6-99 ஆம் நாள் காலை 9-30 மணிக்குப் பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொலைக்காட்சி நிறுவனத்தினர் சூழ, தமிழ்வழிக் கல்வி குறித்த நீதிபதி மோகன் குழு அறிக்கையைப் பெற்றுக் கொள்கிறார் தமிழக முதல்வர் கலைஞர். 6-7-99 ஆம் நாள் தமிழ்வழிக் கல்வி குறித்த நீதிபதி மோகன் குழு அறிக்கையை வெளியீடுமாறும், நடைமுறைப்படுத்துமாறும் அரசுக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் எழுதப்படுகின்றன. அவற்றின் நகல்கள் தமிழ்ச் சான்றோர் பேரவைக்கு அனுப்பப்படகின்றன. அதன்படி 15-7-99 ஆம் நாள் தமிழ்வழிக் கல்வி குறித்த நீதிபதி மோகன் குழு அறிக்கையை வெளியிட்ட முதல்வர், பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் இது குறித்து அமைச்சரவையைக் கூட்டி விவாதித்து முடிவு செய்து அறிவிப்பேன் என்று அறிவிக்கிறார்.
15-8-99 ஆம் நாள் தேனாம்பேட்டை மாணவர் கணினி அலுவலகத்தில் போராட்ட உயர்நிலைக் குழுக் கூட்டம் கூட்டப்படுகிறது. பெரும்பாலான உறுப்பினர்களுடன் சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி, தமிழ்ச் சான்றோர் பேரவை நடத்திய நூற்றியிரண்டு தமிழுணர்வார்களின் சாகும்வரை உண்ணாநோன்பு அறப்போரின் முடிவில் தமிழக அரசு அளித்த உறுதிமொழிகளின்படி தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயக் குறிப்பிட்ட நாளில் நீதிபதி மோகன் தலைமையில் குழு அமைத்ததற்கும், குறிப்பிட்டபடி அக்குழு பரிந்துரைகளைப் பெற்றுக் கொண்டு வெளியிட்டமைக்கும் தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்டக் குழு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இந்தக் கல்வி ஆண்டிலேயே (1999-2000) குழுவினது அறிக்கையை நிறைவேற்றி, அரசு கொடுத்த உறுதிமொழியின்படி, ஓர் அவசரச் சட்டம் இயற்றித் தமிழ்வழிக் கல்வியை நிலை பெறச் செய்ய வேண்டும் என்று தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்டக் குழு அரசைக் கேட்டுக் கொள்கிறது. தமிழ்ச் சான்றோர் பேரவையின் தமிழ்வழிக் கல்விப் போராட்டத்திற்கு ஆதரவு தந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கூட்டம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது - எனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thursday, August 12, 2010



பெரியாரைச் சந்தித்தேன் - தி.வ. மெய்கண்டார்

1959 ஆம் ஆண்டு. ஆகஸ்ட் 13 ஆம் நாள்.

நான் பெரியாரைச் சந்தித்துப் பேசினேன். அதற்கு முன் பெரியாரைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் சொற்பொழிவுகளைப் பல மணி நேரம் கேட்டிருக்கிறேன். ஆனால் நேரிடையாகச் சந்தித்துப் பேசியது அன்றுதான்.

அப்பொழுது நான் சிதம்பரம் காசிம்கான் பேட்டைத் தெருவில் வசித்து வந்தேன். எங்கள் தெருக்கோடியில் தெற்கு வடக்காக நீண்டு கிடந்த தெரு பழஞ்சாலியத் தெருவாகும். அத்தெருவில் 26 ஆம் எண் இல்லத்தில் தென் ஆர்க்காடு மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் திரு.கு.கிருஷ்ணசாமி குடி இருந்தார். சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தை ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் திராவிடர் கழகத் தலைவர்கள், பிரமுகர்கள் பெரியார், குத்தூசி குருசாமி, எம்.ஆர்.இராதா, வேதாச்சலம், திருவாரூர் கே.தங்கராசு, கடலூர் கி.வீரமணி முதலியவர்கள் அவர் இல்லத்தில் தங்குவார்கள். திராவிடர் கழக ஊர்வலங்கள் அனைத்தும் கு.கிருஷ்ணசாமி இல்லத்திருந்தே புறப்படும்.

திரு.கு.கிருஷ்ணசாமி அவர்கள் வசித்து வந்த அதே தெருவில் இன்னொரு வீட்டில் என் குடும்ப நண்பர் திரு.அ.சிவசிதம்பரம் வசித்து வந்தார். அவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) படித்துக் கொண்டிருந்தார். (பின்னர் பி.எல். படித்து முடித்து இப்போது சென்னையில் பெரிய அலுவலில் பணிபுரிந்த படி பெசண்டு நகரில் வசித்து வருகிறார். குமரி ஆனந்தனின் வகுப்புத் தோழர்) இவர் காங்கிரசிடம் பற்றுள்ள குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தார். எனினும் தந்தை பெரியாரிடம் இவருக்கு அலாதியான பற்று இருந்து வந்தது. இந்த காலத்தில் பெரியாரும் காங்கிரசை-காமராசரை- தீவிரமாக ஆதரித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் பெரியாரிடத்தில் எனக்குள்ள ஈடுபாட்டையும், மதிப்பையும், அன்பையும் உணர்ந்து, அப்பொழுது Out of print -ஆக இருந்த எங்கும் கிடைக்காத சேஷா அய்யங்கார் Ancient Dravidians எழுதிய என்ற நூலின் இரண்டு பகுதிகளை என்னிடம் தந்து, நூலின் பெருமையையும் எனக்கு உணர்த்தி, பெரியார் அவர்களிடம் அளிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

நான் சிவசிதம்பரம் அளித்த புத்தகங்களோடு ஒரு ஓவல்டின் டப்பா ஒன்றையும் வாங்கி எடுத்துக் கொண்டு, 31.8.59 அன்று காலை 7.15 மணி அளவில் பெரியார் இருப்பிடத்திற்கு சென்று சந்தித்தேன். போகும் போது பெரியார் எழுதித் தொகுத்த ‘இராமாயணப் பாத்திரங்கள்’ என்னும் புத்தகத்தையும் எடுத்துச் சொன்றிருந்தேன்.

திராவிடர் கழகத் தோழர்களை வீட்டு வாசலில் குழுமிப் பேசிக் கொண்டருந்தனர்.
போனவுடன் மாவட்டத் தலைவர் கு.கிருஷ்ணசாமி உள்ளே அழைத்துச் சென்று பெரியாரிடம் முறையாக அறிமுகம் செய்து வைத்து விட்டு உள்ளே போய் விட்டார்.

பெரியார் அவருக்கென போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் நடுநாயகமாக இன்னொருவர் அமர இடமில்லையோ என்று எண்ணும்படி காலை மடித்து, ‘சப்பமாங்கால்’ போட்ட நிலையில் அமர்ந்து கொண்டிருந்தார். எதிரே ஸ்டுலில் உள்ள தட்டில் ஆப்பிள் திராட்சை முதலிய பழ வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

காலை நேரத்தின் அமைதியான சூழ்நிலையில் சாந்த நிலையில் அமர்ந்து கனிவகைகள் அடங்கிய பழத் தட்டைப் பார்த்தபடியே திராட்சைப் பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து வாயிலிட்டு சுவைத்தப்படி, சிந்தனை வயப்பட்டவராய் அமர்ந்திருந்த தந்தை பெரியார் நிமிர்ந்து பார்த்தார்.

புதியவனான என் வருகையை அவர் உணர்ந்த போது முகத்தில் அரும்பிய புன்னகை அவர் வெண்தாடியையே ஒளிரச் செய்தது.

‘வாங்க, வாங்க’ என்று உற்சாகத்தோடு 20 வயது இளைஞனான என்னை வரவேற்று உட்காருங்க, உட்காருங்க என்று பக்கத்திலிருந்த நாற்காலியைக் காட்டினார். உட்கார்ந்தவுடன் ‘நீங்க என்ன செய்யறீங்க’ என்று கேட்டு விசாரித்து தெரிந்து கொண்டார்.
நான் இண்டர் மீடியட் வரை படித்து முடித்திருப்பதைத் தெரிவித்து விட்டு, அச்சமும், தயக்கமுமுற்ற நிலையில் திடீரென எழுந்து நின்று, கொண்டு சென்றிருந்த இரண்டு புத்தகங்களை அவர் கையில் தந்தேன்.

என்ன இது? என்றார் பெரியார்.

‘நீங்கள் இதுவரை பார்த்திருக்க முடியாத இரண்டு புத்தகங்கள் இவை. சேஷா அங்யங்கார் எழுதிய ஏன்ஷியட் டிராவிடியன்ஸ் இரண்டு பகுதிகள். இது அவுட் ஆப் பிரிண்ட். எங்கும் கிடைக்காது’ என்று (சிவசிதம்பரம் ஓதியதை அப்படியே) சொன்னேன்.

‘அது என்னங்க அது? இதுவரை நான் பார்க்காத புத்தகம். இப்படி கொண்டாங்க!’ என்று பெரியார் ‘ஆங்கார’மாக கூறி கையிலிருந்து வேகமாகப் பற்றி விரைவாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.

சில நிமிடங்கள் நடுநடுவே படித்துப் பார்த்து விட்டு, மீண்டும் ஆசிரியர் பெயரருந்த முதல் பக்கத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டுப் பொறுமையுடன் அமைதியாக, ‘ஆமாங்க! இந்தப் புத்தகத்தை நான் இதுவரைப் பார்த்ததில்லை’ என்று ஒப்புக் கொண்டார்.
நான் எடுத்துச் சென்றிருந்த பெரியார் தொகுத்து எழுதிய இராமாயணப் பாத்திரங்கள் என்னும் புத்தகத்தை நாலணா நாணயத்துடன்(கால் ரூபாய்) கையில் கொடுத்து, ‘புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள்’ என்று கேட்டேன்.

அப்பொழுது பெரியார் ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘ரேட்’ வைத்திருந்தார். திருமண விழாவில் தலைமை ஏற்பதற்கு, கூட்டத்துக்கு, விருந்துக்கு, புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு, கையெழுத்துக்கு என்று தனித்தனியாக ‘ரேட்’ உண்டு.

அந்த முறையில்தான் கையெழுத்துக்கு ‘நாலணா’ கொடுத்தேன்.

‘இது எதுக்குங்க. வேண்டாங்க’ என்று காசைத் திருப்பித் தந்தார்.

நான் மறுத்து , அந்தக் காசை அவரிடமே தந்து, இல்லை இல்லை. நீங்கள் ஒரு முறையை வைத்திருக்கிறீர்கள். இதை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று மீண்டும் அவரிடமே கொடுத்தேன்.

‘சரி! காலங்காத்தாலே வந்து கொடுக்கறீங்க! இதை வுடப்பாடாது‘’ என்று வாங்கி, தம்முடைய உள் சட்டைப் பையில் , குழந்தை மாதிரி கையை நுழைத்துப் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

பிறகு பையிலிருந்து, வழக்கத்துக்கு விரோதமான பெரிய அளவில் (சைசில்) உள்ள தடித்த பேனாவை எடுத்து, ‘ஈவே.ராமசாமி’ என்று கையெழுத்திட்டு 31.5.59 என்று தேதியையும் எழுதிப் புத்தகத்தை என்னிடம் திருப்பித் தந்தார்.

பெரியாருக்கு வணக்கத்தைக் கூறிவிட்டு, அவரைப் பற்றிய நினைவுகளோடும், மன நிறைவோடும் வெளியே வந்தேன்.

பெரியாரை நான் சந்தித்த நாளன்று இரவு சிதம்பரத்திற்கு ஒரு மைல் தொலைவிலுள்ள ‘கண்ணங்குடி’ என்ற சிற்றூரில் பொதுக்கூட்டம் இருந்தது. பொதுக் கூட்டத்திற்கு செல்லுமுன்பும் பொதுக் கூட்டத்திலிருந்து திரும்பிய பிறகும் மிக நீண்ட நேரம் நான் கொடுத்த புத்தகங்களை பெரியார் படித்ததாகவும், காலையில் வேறு ஊருக்குப் பயணமாகும் போது ‘பார்ப்பானைப் பற்றி ஒரு பார்ப்பானே நன்றாகத் தாக்கி எழுதி இருக்கிறான்’ என்று சந்தோஷப்பட்டுச் சொல்லிவிட்டு புறப்பட்டுப் போகும் போது அந்தப் புத்தகங்களைக் கையிலேயே பத்திரமாக எடுத்துச் சென்று விட்டதாகவும் தென் ஆர்க்காடு மாவட்டத் திராவிட கழகத்தலைவர் திரு.கு.கிருஷ்ணசாமி யின் மகன் திருநாவுக்கரசு மறுநாள் என்னிடம் தெரிவித்தார்.

நான் 1959 இக்கு முன்னும் பல தலைவர்களைச் சந்தித்திருக்கிறேன். பார்த்திருக்கிறேன் என்றாலும் என்னுடைய பொது வாழ்க்கையின் தொடக்கத்திலேயே முதன் முதலில் சந்தித்து சமமாக உட்கார்ந்து பேசிய முதல் தலைவர் தந்தை பெரியார் அவர்கள தான்!.

இத்தனைக்கும் நான் பெரியாரைச் சந்தித்த போது அவருடைய திராவிடர் கழகத்துகாரர் என்ற முறையிலல்ல. அவரால் வெறுத்து மேடைகளில் கடுமையாக அந்தக் காலகட்டத்தில் விமர்சிக்கப்பட்ட க.து கட்சிக் காரன்(கண்ணீர் துளிகள்=தி.மு.க) என்ற நிலையில்தான். அவர் அன்போடு பேசி, பண்போடு அனுப்பி வைத்ததை இன்றைக்கு நினைத்தாலும் என் நெஞ்சில் இன்பம் ஏற்படுகிறது.(இளந்தமிழன் சனவரி 1990).

Friday, August 6, 2010

நாமக்கல் கவிஞரின் என் கதை


நாமக்கல் கவிஞரின் ‘என் கதை‘

தி.வ.மெய்கண்டார்

பாரதியார் காரைக்குடியில்- கானாடுகாத்தனில் தங்கியிருந்த போது அவரைத் தரிசிக்க நாமக்கல் கவிஞர் சென்றார். சென்ற இடத்தில் ‘ஓவியக் கவிஞர்’ என்று பாரதியாருக்கு இவரை அறிமுகப்படுத்தினார்கள்.

‘ஓ ஓவியக் கலைஞரா! வருக கலைஞரே! தமிழ் நாட்டின் அழகே கலையழகுதான்’ என்று பாரதியார் சொன்ன போது கவிஞர் அவருக்கு முன்னால் வந்து வணங்கினார். அவரது கால்களைத் தொடப் போன நாமக்கல்லாரின் கையைப் பிடித்துக் கொண்டு, அருகில் அருகில் அமர்த்தி, ‘பிள்ளைவாள் நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும். நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்’ என்று பாரதியார் சொல்லி விட்டுக் கலகலவென்று சிரித்தார்.
அப்போது ‘ராமலிங்கம் பிள்ளை கூடப் பாட்டுகள் சொல்வார்’ என்றாராம் அவரை அழைத்துப் போனவர்.

உடனே பாரதி ‘அப்படியா? ஓவியக் கலைஞர், காவியக் கலைஞருமா? எதைப் பற்றிப் பாடி இருக்கிறீர்? எங்கே ஒன்று பாடும். கேட்போம்’ என்றார்.
கூசிக் குன்றிக் குலைந்து, வெட்கித்தவராய் நாணத்துடன் ‘தம் மரசைப் பிறர் ஆள விட்டு விட்டுத் தாம் வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்’ என்ற முதலடியைக் கூறி முடிப்தற்குள் பாரதியார் துள்ளித் துடிக்க ஆரம்பித்துவிட்டார்! கழுத்தை நீட்டிக் காதைக் காட்டி கவனத்தோடு கேட்டார்.

பாட்டை முடித்த போது, பலே பாண்டியா! பிள்ளை! நீர் புலவன்! அய்யமில்லை! தம் மரசைப் பிறர் ஆள - விட்டு விட்டுத்- தாம் வணங்கி- கை கட்டி- நின்ற பேர்கள்- பலே! பலே! இந்த ஒரு அடியே போதும்’ என்று கூறிப் பாராட்டினார்.

வெள்ளையரிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியா அவர் நினைவில் தோன்றி இருக்க வேண்டும்.
பிற்காலத்தில் திரு.வி.க. பெரியார், டாக்டர் ராஜன், மதுரை வரதராஜுலு நாயுடு மதுரை வைத்தியநாதையர் முதலான பெருந்தலைவர்கள் கவிஞரை எங்கே கண்டாலும் வெகு குதூகலத்துடன் வரவேற்று அவருடைய பாட்டுக்களுக்கு முதன்மை கொடுத்துப் போற்றிப் புகழ்ந்தனராம். ‘அந்தப் புகழ்ச்சியில் நான் மெய் மறந்து உழைக்கலானேன்’ என்று கூறுகிறார் கவிஞர்

1906 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையால் உண்டான தேசியக் கிளர்ச்சியே இவருடைய தேசாபிமான உணர்ச்சிகளின் ஆரம்பம்.

அரவிந்தர் தன்னுடைய மனைவி மிருணாலினிக்கு எழுதிய கடிதம் ஒன்று, கவிஞருடைய கடிதம் ஒன்று கவிஞருடைய வாலிப உள்ளத்தில் ஊசி கொண்டு தைத்தது போலப் பதிந்தது. அது இது; ‘உன்னுடன் இருந்தது ஊட்டக் கூடிய நிலையில் நான் இல்லையே! ஊட்டக் கூடிய நிலையில் நான் இல்லையே! என் செய்வேன்! மிருணாலினி! என்னுடைய அன்னையை ஒரு ராட்சசன் கீழே தள்ளி அவருடைய மார்பின் மீது படுத்துக் கொண்டு அவருடைய ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறான், அதைப் பார்க்கிற நான். என்னுடைய அன்னையை மீட்க வழிதேடாமல் உன்னுடன் இருந்து காதல் பேசிக் களித்திருக்க என் மனம் இடம் கொடுக்க வில்லையே!’

இவரைக் காந்திஜியின் பக்கம் இழுத்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சி இது.
காந்திஜி காசியில் இந்து சர்வகலாசாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது, அங்கு குழுமி இருந்த அந்தக் கலாசாலைக்கு பெருமளவுக்கு நன்கொடைகள் வழங்கியிருந்த மகா ராஜாக்களைப் பாராட்டமல், கோடானு கோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்கக் கந்தையும் இல்லாமல் தவிக்கும் இந்த நாட்டில் இன்னும் உங்களில் பலர், கோடிக்கணக்கான ஆபரணங்களை அணிந்து கொள்ளும் ஆடம்பரத்தில் வாழ்வது பாபமல்லவா’ என்று பேசியதாகும்.

இதுவே காந்திஜி ஒரு ‘மகா புருஷர்’ என்ற எண்ணத்தைக் கவிஞருக்கு உண்டாக்கியது.
கரூரின் அமராவதி ஆற்றங்கரையில் அவர் நடத்திய பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத தலைவர்களே அந்த நாளில் கிடையாதாம்.

இரண்டாவது முறையாக காந்தி அடிகள் தமிழ் நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்த போது கரூருக்கு வருவதாகத் தமிழகத் தினசரிகளில் விளம்பரப்படுத்தி ரூ 3000 -க்குப் பண முடிப்பு தர வசூல் செய்தார்கள். காந்தி வருவதாக விளம்பரப்படுத்தப்பட்ட மூன்று தினங்களுக்கு முன்னர் ‘ராஜாஜி, காந்தியடிகளின் உடல் நலத்தைக் கருதி, கரூருக்கு வருவது ரத்தாகி விட்டது. ஏமாற்றத்திற்கு மன்னிக்க வேண்டும்’ என்று எழுதி விட்டார். ஏற்பாடு செய்தவர்களுக்கு இடி விழுந்தாற்போலாகி விட்டது.

உடனே சில பிரபலஸ்தர்களை கலந்து கொண்டு கோயமுத்தூரில் திரு. ஆர்.கே. சுண்முகம் செட்டியார் வீட்டில் தங்கியிருந்த அடிகளாரை நேரிடையாகக் கேட்டனர். அதில் கவிஞரும் ஒருவர்.

சுமார் பத்துப் பேராக முன்னறிவிப்பு ஏதுமின்றி, மத்தியானத்திற்கு மேல், காந்திஜி நூற்றுக் கொண்டிருந்த தருணத்தில் உள்ளே நுழைந்து, முறையிட்டனர்.

பிரயாணத் திட்டங்களுக்கு அதிகாரியான ராஜாஜியை அழைப்பித்து, காந்தி இது சம்பந்தமாக கேட்டார்.

அதற்கு ராஜாஜி ‘தங்கள் உடல் நலத்தை முன்னிட்டும் மற்றும் புது ஊர்களுக்குப் போக வேண்டி இருப்பதை உத்தேசித்தும் சில இடங்களை நீக்க வேண்டி இருந்தது’ என்றார்.
‘அது சரியல்ல. வாக்குறுதி என்றால், வாக்குறுதியாகததான் இருக்க வேண்டும். கொடுத வாக்கைக் காப்பாற்றியே தீர வேண்டும். எதிரபாராத இடையூறுகள், ஏற்பட்டால் அல்லாமல் வாக்குத் தவறக் கூடாது’ என்று கூறி பிரயாணத்தை திட்டத்தை வாங்கிப் பார்த்தார். அடுத்த இரு நாட்களுக்கு காந்திஜிக்கு கோயமுத்தூரிலே ஓய்வு நாட்களாகக் குறிக்கப்பட்டிருந்தது. காந்திஜி அந்த நாளில் ‘கரூருக்கும் கோபிச்செட்டிப் பாளையத்திற்கும் வர ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்’ என்று கூறி விட்டார்.

அப்பொழுது தயங்கித் தயங்கி வெளியே வந்து ராஜாஜியிடம் விடை பெற்றுக் கொண்ட நாமக்கல்லாரின் முகத்தைத் தடவிக் கொடுத்து ‘உங்கள் வெற்றியை நான் மிகவும் பாராட்டுகிறேன்’ என்று கூறினார் ராஜாஜி.

வ.உ.சி. பற்றிய உணர்ச்சி கரமான குறிப்பொன்றும் இந்நூலில் உள்ளது.

தமிழறிஞர் பா.வெ. மாணிக்க நாயக்கர் நாமக்கல் கவிஞருக்கு மிக நெருக்கமான நண்பர். அவரைக் காண வரும் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அதைக் கவிஞரே கூறுகிறார்,
‘நானும் ஸ்ரீ ராமசாமி நாய்க்கரும் பல முறை மாணிக்கம் நாயக்கருடைய வீட்டில் சந்தித்திருக்கிறோம். மாணிக்கம் நாயக்கருடைய கட்சி அபிப்ராயங்கள் எப்படியிருப்பினும் என்னிடம் மிகவும் அன்புடையவர். வெகு சரசமானவர். மிகவும் விருபத்தக்க நண்பர். தன்னிடத்திலுள்ள எதையும் பிறருக்குக் கொடுத்து இன்புறக் கூடியவர். கட்சி வாதத்துக்காக எவ்வளவு கர்ண கடூரமாகப் பேசினாலும் மனிதனுக்கு மனிதன் வெகு மரியாதை உள்ளவர். நான் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அடிக்கடி மாணிக்க நாய்க்கரிடம் போவேன். அங்கே ஸ்ரீ ராமசாமி நாய்க்கர் அறிமுகமானார். அந்தக் காலங்களில் மாணிக்க நாய்க்கர் தன்னுடைய ‘ராவணாயாணத்தைப் பற்றி‘ அடிக்கடி பேசுவார். ராமசாமி நாய்க்கரும் நானும் கேட்டுக் கொண்டிருப்போம். சில சமயங்களில் எனக்கும் மாணிக்கம் நாய்க்கருக்கும் அபிப்ராய பேதம் உண்டாகும். அந்த சமயங்களில் ராமசாமி நாயக்கர் இரண்டு கட்சிகளிலும் சேராமல் வெகு சாமர்த்தியமாக நடுநிலை வகிப்பார்’
பேரறிஞர் அண்ணா அவர்களாலே புரட்சித் தந்தை என வர்ணிக்கப்பட்ட நீதிக்கட்சியின் தலைவர் டி.எம்.நாயர் அவரகளிடத்திலே காந்தியக் கவிஞர் காது வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார்.

காது வைத்தியம் செய்து கொண்டதை கவினுறு எழுதியுள்ளார் கவிஞர். இது இந்தச் சித்திர எழுத்தாளர் மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் அழ கொழுக வர்ணித்து எழுதிக் காட்டுவதில் வல்லவர் என்பதற்கு ஒரு சான்றாகும்.

1908-1909 இல் திருச்சி எஸ்.பி.ஜி காலேஜில் எப்.ஏ.இன்டர் மீடியேட் படித்தேன். 1909 இல் எனக்கு விவாகம் நடந்தது. அதே வருஷத்தில் எனக்குக் கடுமையான காதுவலி ஏற்பட்டது,
எப்.ஏ. பரீட்சைக்குச் சில நாட்களுக்கு முன்னால் காதுவலி அதிகப்பட்டு வீட்டுக்கு வந்து விட்டேன். காது வைத்தியம் செய்து கொள்ள சென்னைக்குப் போனேன். பரங்கிமலையில் அய்யாக்கண்ணுப்பிள்ளை வீட்டில் ஜாகை வைத்துக் கொண்டு பட்டணத்தில் டாக்டர் டி.எம்.நாயரிடத்தில் காது வைத்தியம் தீக்ஷீ பார்த்து கொண்டேன். பிற்காலத்தில் சர்.தியாகராஜச் செட்டியாருடன் சேர்ந்து. பிராமணரல்லாதார் இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் நாயர் இவர் தான். நாயர் காது, மூக்கு, தொண்டை இவற்றைப் பற்றிய வியாதிகளுக்கு நிபுணர் என்று பெயர்.

அவருடைய தகப்பனார் கோபாலன் நாயர் என்பவர் நாமக்கல்லில் டெபுடி கலெக்டராக இருந்தவர். என் தகப்பனாருக்கு ரொம்பவும் வேண்டியவர். அந்த உறவை என் தகப்பனார் சொல்லிக் கொண்டதற்காக டாக்டர் நாயர் சிங்கம் போன்ற அவருடைய முகத்தில் சிரிப்பைக் கூட்டி என்னைச் செல்லமாக கவனித்து வைத்தியம் செய்தார். .....காது வலியெல்லாம் தொண்டையின் கோளாறு என்று என்னுடைய தொண்டையை மின்சாரம் ஏற்றிக் கட்டையினால் சுட்டுப் பொசுக்கினார். அதுதான் வைத்தியத்தின் ஆரம்பம். காது வலியும் குறைந்தது. ஆனால் அதுவரையிலும் வலியினால் கொஞ்சம் மந்தமாக மட்டும் இருந்த என் காது செவிடாகிவிட்டது. தொண்டையிலிருந்த சங்கீத குரலும் கெட்டுவிட்டது. நாலு மாதம் வைத்தியம் நடந்தது. தினந்தினம் பரங்கிமலை யிலிருந்து பட்டணம் போய் வருவேன். நாலாவது மாதக் கடைசியில் நாயர் கோடை காலத்துக்காக நீலகிரிக்குப் புறப்பட்டார்.
வைத்தியக் குறிப்புகளை எழுதிக் கொடுத்துவிட்டு நீலகிரியிலிருந்து திரும்பி வந்த பிறகு
மறுபடியும் வரச் சொன்னார்.

‘மறுபடியும் வந்தால் என் செவிடாகிப் போனதைச் சரி செய்து விடுவீர்களா?’ என்று கேட்டேன். அவருக்கு கோபம் வந்து விட்டது. இங்கிலீஷில் தன் தொழிலை அறிந்த எந்த டாக்டரு எந்த ஒரு நோயையும் செஸ்தப்படுத்தி விடுவேன் என்று வாக்குறுதி கொடுக்க மாட்டான். என்னால் முடிந்ததைச் செய்வேன். இல்லாவிட்டால் அக்கறை இல்லை’ என்று அவருடைய கத்தை மீசை என்னைக் குத்திவிடும் போல் என் காதுக்கருகில் கத்தினார். வருத்தத்தோடு வெளியில் வந்து விட்டேன்.

நான் அவருடைய பங்களாவின் வெளிக்கதவை தாண்டியதும் அவருடைய பியூன் ஓடிவந்து கூப்பிட்டான். போனேன். டாக்டர் நாயர் ‘ ராமலிங்கம் நீ மறுபடி வா. கவனித்து வைத்தியம் செய்கிறேன். உன்னுடைய காது சரியாகிவிடும். பயப்படாதே’ என்று உட்காரச் சொல்லி கேக்கும். பிஸ்கோத்தும். பழமும் கொண்டுவரச் செய்து என்னைத் தின்னச் செய்தார். தன் பங்களாவில் எப்போதும் வைத்திருக்கிற ‘ஸ்பென்சர் கலர்’ ஒன்றையும் குடிக்கச் செய்து என்னுடைய முதுகைத் தட்டிக் கொடுத்து இன்மொழிகள் பேசி அனுப்பினார்.

இலுப்ப மரப்பிசாசு. கவிஞரின் வறுமையைக் கண்டு உதவ வந்த வள்ளல்கள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உதவ இயலாமற் போனதை விளக்கும் ‘புலமையும் வறுமையும்’, ‘நம்புவீர்களா?’, ‘விபரீதம்’ ஆகிய தலைப்பிலமைந்த கட்டுரைகள், சுவையான சிறுகதைகாளக விளங்கிப்படிக்கச் சுவையூட்டு கின்றன.
இந்நூலில் உள்ள ‘புலமையும் வறுமையும்‘ என்னும் பகுதியைப் பற்றிக் கல்கி குறிப்பிடும் போது ‘நாமக்கல் கவிஞர் தமக்குப் பொருளுதவி செய்து தம்முடைய பணக்கஷ்டத்தைத் தீர்ப்பதற்கு முயன்ற நண்பர்களுக்கு நேர்ந்த கதியைப் பற்றிச் சாங்கோபாங்கமாக, உணர்ச்சி பொங்கித் ததும்ப, ரோமம் சிலிர்க்கும் படி யான நடையில் எழுதியிருக்கிறார்’ என்று புகழ்ந்துள்ளார்.

மாணிக்க நாய்க்கருடன் ‘டில்லிப்பயணம்’ என்னும் தலைப்பிலமைந்த கட்டுரை, படிப்பவரின் ஆர்வத்தை ஈர்க்க கூடியது. சிரார்த்தம் செய்த போது தராறு செய்த பண்டாக்களிடம் மாணிக்க நாய்க்கர் கோபம் கொண்டு தகராறு செய்த நிகழ்ச்சியையும், வட இந்தியா பெஷாவருக்கருகில் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில்-பிரிட்டிஷாருடன் பகைமை கொண்ட-எல்லைப்புற சாதியாரிடம் கைதியாக ஒருநாள் அவர்கள் குகையில் தங்கி இருந்த நிகழ்ச்சியையும், படித்தவர்கள் மறக்கவே முடியாது.

1912 இல் எல்லைப் புற சாதியாரிடம் பொ.வே.மாணிக்கவேலு நாயக்கருடன் கவிஞர் சிகிய அனுபவமே பிற்காலத்தில் 1932-இல் சிறையிலிருத போது அவர் மலைக்கள்ளன் நாவல் எழுதுவதற்குக் கருவாக அமைந்துவிட்டது.

நாமக்கல் கவிஞர் பரிமேலழகர் உரையைப் பல இடங்களில் மறுத்துப் பு உரை ஒன்று எழுதியிருக்கிறாரல்லவா? அதைப் பற்றியும் இந்நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

உண்ணாமையுள்ள துயிர் நிலை ஊனுண்ண
அண்ணாததல் செய்யா நன்று

என்னும் குறளுக்கு தமிழாசிரியர் பிச்சை இப்ரகிம் புலவர் கூறிய உரை அவர் மனத்துக்குத் திருதி அளிக்கவில்லை. அது போன்றே ‘குன்றேறி யானைப் போர் கண்டற்றால்’ என்னும் குறளுக்கும் பரிமேலழகர் உரை திருதி அளிக்கவில்லை. அவர் பிற்காலத்தில் புத்துரை காணத்தூண்டுகோலாக அமைந்தவை இவ்வுரைகளே.

திருக்குறள் புது உரையைப் படித்துவிட்டு ராஜாஜிநாமக்கல்லாருக்கு எழுதிய கடிதத்தில் இந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதுவது என்ற வீண் பெருமையை விரும்பவில்லை. இந்த விஷயத்தைல் என்னைவிட அறிவுடைய நீங்கள் எழுதிய நூலுக்கு முன்னுரை எழுத நான் யார்?’ என்று கடிதமெழுதினார்.

‘கவிஞரை ஈன்ற மணிவயற்றின் தவமே தவம்’ எனப் புகழ்ந்தார் தமிழ் முனிவர் திரு.வி.க.
நாமக்கல் கவிஞர் என் கதையில் தன் வாழ்வில் நடந்த அந்தரங்கமான நிகழ்ச்சிகளைக் கூடக் கூசாமல் சொல்லியிருக்கிறார்.

பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் அவர் தன்னுடைய பால்ய நண்பனான வெங்கிட வரதன் இல்லத்திற்குச் சென்று ஓவியம் தீட்டியபடி உல்லாசமாகக் காலம் கழிப்பாராம். அவருடைய முறைப்பெண்ணான சீதா, கவிஞரிடத்தில் பேரன்பும் பெரு மதிப்பும் உடையவளாம்.

ஒரு நாள் கவிஞர் படம் தீட்டிக் கொண்டிருக்கும் போது இளம் பெண் சீதா பின்புறமாக வந்து அவர் கண்களைப் பொத்தினாள். இளைஞரான இவரும் வளையல்களோடு கைகளைச் சேர்த்துப் பிடித்தப்படி சற்று மெய்மறந்திருந்தார். தற்செயலாக வந்துவிட்ட சீதாவின் தாயார் இதைக் கண்டு விட்டு, சித்திரம் எழுதும் சாயக்கோல்களையும், டிராயிங் நோட்டையும் தூக்கியெறிந்து விட்டுப் பெரிதும் அவமானப் படுத்தி அனுப்பிவிட்டாள்.

அதற்கு பிறகு சீதாவிற்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நடந்ததாம்.
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்-
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பேரும் புகழும் பெற்ற நிலையில் , கரூர் செல்வதற்காகத் திருச்சி புகைவண்டி நிலையத்தில் கவிஞர் உலாவிக் கொண்டிருந்த போது சீதாவைச் சந்தித்தார். எந்த நிலையில்?

மூன்று இளம் குழந்தைகளுடன் கைம் பெண்ணாக, ‘ராமலிங்கம் மாமா! என்னைத் தெரியவில்லையா? என்ற நிலையில்....! சீதாவின் அமங்கல உருவத்தைக் கண்டு இராமலிங்கனார் அழுதே விட்டாராம்.

நாமக்கல்லார் மெட்ரிகுலேஷன் படிப்பதற்கு முன்பே அவரது தந்தையார் அவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். அதற்காக முத்தம்மாள் என்ற உறவினர் சிறுமியையும் கொண்டு வந்து வீட்டிலேயே வைத்திருந்தார். நாமக்கல்லாருக்கு அந்தப் பெண்ணைக் கண்டால் ஓர் இனம் தெரியாத வெறுப்பு. கண்ட போதெல்லாம் உறுமுவார், வெறுப்பார், அருவருப்புக் காட்டுவார். அப்படி இருந்தும் அவர் தந்தை கட்டாயப்படுத்தி, அப் பெண்ணைக் கவிஞருக்கு மணமுடித்து, வைத்தார். ஆனால் கவிஞரோ, ‘அவளைத் தீண்டினால் ஒரு நீலகண்டம்’ என்ற மாதிரியில் ஒரு நாளல்ல, இரு நாளல்ல, ஒன்பது மாதம் ஓட்டி விட்டார். ஆம், அவள் உணர்ச்சிகளை அவர் மதிக்கவே இல்லை. எனினும் அந்தப் பெண் இந்தச் செய்தியை வெளியில் ஒருவருக்குமே தெரிவிக்கவில்லை.

ஒரு நாள் நாடகம் பார்த்து விட்டு நள்ளிரவில் வந்த கவிஞரை அந்தப் பெண், ‘அத்தான் பேசவே மாட்டேன்கிறீர்களே! நான் என்ன தப்பு செய்தேன்?’ என்று கேட்டே விட்டாள்.
கால்களைப் பற்றிய வண்ணம் தரையில் அமர்ந்து அண்ணாந்து பார்த்தபடி அவள் கேட்ட போது ‘டிட்மார்’ விளக்கின் வெளிச்சம் அவளுடைய முகத்தில் படர்ந்தது. அந் நிலையில் அந்தப் பெண்ணின் முகம் கவிஞரின் நெஞ்சறதிலிருந்த , ‘ஆரவாரப் பேய்களை ’எல்லாம் அடித்துத் துரத்தியது. கவிஞர் அன்றுதான் அந்தப் பெண்ணின் பெருமையைக் கண்டார். ‘இகழ்வாரைத் தாங்கும் நிலம் போல அவளை இகழ்ந்த அவரை ஏற்றுக் கெண்ட இனிய தன்மையயை உணர்ந்தார். அதற்குப் பிறகு பதினான்கு ஆண்டுகள் அவளுடன் இன்பமாக வாழ்ந்தார்.

நாமக்கல்லாருக்கு மக்கட் செல்வம் கிட்டவே இல்லை. அதற்காக இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தப்பட்டார். கவிஞர் இசையவே இல்லை. மனைவி முத்தம்மாள் பலவாறு வற்புறுத்தினார்.

‘நீ இருக்க இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்வதா? கனவிலும் நினைக்காதே’ என்றார்.
‘நான் இருக்கும் போது இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டீர்கள். நான் செத்தாவது போகிறேன். அவளைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள்’ என்றாள் துணைவியார்.

கவிஞர் கோபித்துக் கொண்டார். மிக்க அன்போடும் மகிழ்ச்சியோடும் பேசிக் கவிஞரின் சினத்தை மாற்றினாள் முத்தம்மாள்!.

மறுநாள் முத்தம்மாள் செத்தே போனாள்....!

கவிஞர் மூர்ச்சையானார். மறைந்த மனைவியின் உத்தரவாக அவளது கடைசித் தங்கை சவுந்தரத்தையே மணந்து கொண்டார்.

- இந்நிகழ்ச்சிகளையெல்லாம் ‘காந்தியக் கவிஞரான’ இராமலிங்கம் பிள்ளையவர்கள் எழுதிய ‘என் கதை’ காந்தியடிகளின் ‘சத்திய சோதனை’ யோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகின்றன.

இந்நூலில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் ஊர்களையும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த பெரிய மனிதர்களையும் வரலாற்றுச் சிறப்புப் பெறாத சாதாரண மனிதர்களையும் காண முடிகிறது.

கல்கி அவர்கள் இந்நூலை ‘அற்புதமான வசன புத்தகம்’ என்று கூறியுள்ளார்.
இலக்கியத் திறனாய்வாளர் என்று சொல்லப்படுகிற திரு.க.நா. சுப்ரமணியம் அவர்கள் , ‘தன் சொந்த அனுபவங்களை எடுத்து பிறரும் அனுபவிக்கும் படிச் சொல்வது மிகவும் சிறப்பான கலை. இந்தக் கலையை மிகவும் சிறப்பான முறையில் நம்தலைமுறையில் இரண்டொருவர் கையாண்டுள்ளார்கள். அவர்களின் முதன்மையானவர் என்று நாமக்கல் கவிஞரைச் சொல்லலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திரு.க.நா.சு. அவர்களுடைய திறனாய்வுக் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதில் பொதுவாக நமக்குத் தயக்கம் உண்டு என்றாலும் மேற்குறிப்பிட்ட வரிகளில் அவர் தம் உண்மை உணர்ச்சி பளிச்சிடக் காணுகிறோம். - தி.வ. மெய்கண்டார். (இளந்தமிழன் டிசம்பர் 1987)

வெண்பாபுலி வேலுசாமிப் பிள்ளை

திராவிடன் 1.6.1917 முதல் இதழில் வெளிவந்தது

(மகாகனம் பொருந்திய திவான்பகதூர் சாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் வரவு நிமித்தமியற்றிய நேரிசை ஆசிரியப்பா

எல்.டி.சாமிகண்ணுப்பிள்ளை ஆங்கிலப் பேராசிரியரா விளங்கி, பிறகு அரசு அலுவலில் சேர்ந்து 1897 இல் கர்னூரில் டெபுடி கலெக்டராகவும்,1917 இல் நெல்லூர் கலெக்டராகவும் பணியாற்றி 1920 இல் அரசாங்கச் செயலாளராகப் பணிபுரிந்தார்.

இவர் 1905 இல் ராவ்பகதூர் பட்டமும் 1909 இல் திவான்பகதூர் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.எல். பட்டமும் பெற்றதோடு 1910 இல் லண்டனில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றார்.

சென்னை மாகாணத்தில் முதல் தேர்தல் முடித்ததும் புதிதாக உருவாகி வெற்றியடைந்த ஜஸ்டிஸ் கட்சி 1920 இல் மந்திரி சபையை அமைத்தது.

சர்.பி.தியாகராயச் செட்டியாரை கவர்னர் மந்திரி சபை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் மறுத்து, கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதல்வராகக் கொண்ட மந்திரி சபையை நிறுவினார். பனகால் அரசர், கே.வி.ரெட்டி ஆகியோர் மந்திரியாக இருந்தனர்.
புகழ் வாய்ந்த சென்னை மாகாண முதல் சட்ட சபைக்குச் செயலாளராக எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளை நியமிக்கப்பட்டார். பின்னர் சர்.பி. இராஜகோபாலாச்சாரியர் சட்ட சபைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய போது 1924 பிப்ரவரி 5 இல் சாமிக்கண்ணுப்பிள்ளை சட்ட சபைத் தலைவராக நியமனம் செய்யப் பெற்றார்.
கிறித்துவரான இவர் 1903 இல் ஐரோப்பிய யாத்திரையை மேற்கொண்டபோது ‘வத்திகானில்’ போப் ஆண்டவரைச் சந்தித்து அவருடன் பிரெஞ்சு, இலத்தீன், இத்தாலி ஆகிய மொழிகளில் பேசி அவரை வியப்பிலாழ்த்தினார்.

எல்,டி,.சாமிக்கண்ணுப்பிள்ளை இந்தியக் காலக் கணிதத்தைக் கணித்து ‘இந்திய எபிமெரிஸ்’ என்னும் பெயிரல் நூல் எழுதியுள்ளார். இந்நூல் 1922 இல் சென்னை அரசாங்கம் எட்டுப் பெரிய தொகுதிகளாக மூவாயிரம் முழுஅளவுப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ‘வி.ர.சுமித்தம் பண்டைய இந்தியா’ என்னும் நூலிலே இதைப் புகழ்ந்து போற்றியுள்ளார். 1300 வருட பஞ்சாங்கமாக இந்நூல் விளங்குகிறது.

வெண்பாபுலி வேலுசாமிப் பிள்ளை (1850/1923)

‘புலியூர் வெண்பா’,‘ சிதம்பரேசுவரர் விறலிவிடு தூது’ முதலிய இயற்றமிழ்நூல்களையும், இவர் தம் பெயரால் இக்காலத்து, ‘தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை கீர்த்தனங்கள்’ என வழங்கும் இசைப் பாடல்கள் முதலிய இசைத்தமிழ் நூல்களையும் ஐயனார் நொண்டி, வருணாபுரிக் குறவஞ்சி, அநீதி நாடகம் முதலிய நாடகத் தமிழ் நூல்களையும் இயற்றி முத்தமிழ் வேந்தராய் விளங்கிய மாரிமுத்தாபிள்ளையின் ஐந்தாம் தலைமுறையினராக விளங்குகிறார் வெண்பாப்புலி வேலுசாமிப் பிள்ளை.

இவர் பாடுவதில் கடினம் எனக் கூறப்படும் வெண்பா பாடுவதில் வல்லவர். தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதையருடன் ஒரு சாலை மாணக்கராக திருவாடுதுறை ஆதீனத்தில் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் ஐந்தாண்டு காலம் பயின்றவர். ஆசிரியரால் ‘வெண்பாப்புலி’ என அழைக்கப் பெற்றவர்.

கந்தபுராணத்தை 5663 வெண்பாக்களில் பாடி முடித்தவர். மேலும், திருக்கச்சூர் ஆலக்கோயிற் புராணம், திருவேட்டக்குடிப்புராணம், தில்லைவிடங்கன் புராணம், இலம் பயங் கோட்டூர்ப் புராணம், கச்சி குமரகோட்டத் தலப்புராணம் என்னும் புராணங்களை இயற்றியதுடன் 85 க்கும் மேற்பட்ட சிறு நூல்களை எழுதியவர். கந்தபுராணம் 22.5.1907 இல் காஞ்சி குமரகோட்டத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இச் செய்தி சுதேசமித்திரனில் வெளிவந்துள்ளது.

இவரியற்றிய `திருத்தில்லை நிரோட்டகயமக அந்தாதி’ என்னும் நூலுக்கு இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகம் பூ.முருகேச பண்டிதர் உரை எழுதியுள்ளார். அவர் மாணவரும் நம்பியகப் பொருள் உரையாசிரியருமான சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவர் சாற்றுக் கவி வழங்கி உள்ளார்.

திரு.வி.க.வின் ஆசிரியரான யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளை இவருடைய நண்பர். கதிரைவேற்பிள்ளையின் தமிழ் அகராதி 1899 இல் வெளிவந்த போது வெண்பாப்புலியார் சாற்றுக் கவி வழங்கியுள்ளார்.

கதிரைவேற்பிள்ளை வள்ளலாரின் அருட்பாவை மருட்பா எனக் கூறி இரண்டாங் கட்டமாகத் தமிழகத்தில் எதிர்ப்புப் போர் நடத்தினார். இதன் காரணமாக வெண்பாப்புலியார் மறைமலை அடிகளாருடன் சேர்ந்து இவரை எதிர்க்க வேண்டி நேரிட்டது.

முப்பதாண்டு காலம் (1890-1920) காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளித் தலைமைத் தமிழாசிரியராக விளங்கினார். இவர் 1923 இல் காலமானார்.

வெண்பாப்புலியார் காஞ்சிபுரம் ஸ்ரீ கச்சபேஸ்வர ஐக்கிய நாணய சங்கத்திற்கு எல்.டி. சாமிக்கண்ணு¢பபிள்ளை 1916 இல் வருகை தந்த போது இயற்றி அளித்த வரவேற்பு இதழ், திராவிடன் மதல் இதழ் 3 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

வெண்பாப்புலி வேலுசாமிப்பிள்ளை என்னுடைய பாட்டனார் (தாத்தா- தந்தையின் தந்தை) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.- தி.வ.மெய்கண்டார்.)

மகாகனம் பொருந்திய திவான்பகதூர் சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள் வரவு நிமித்த மியற்றிய நேரிசை ஆசிரியப்பா

சீர்தரும் வளங்கள் செறிகோ யம்பத்
தூர்தரு சில்லா விலோர்தரு சோமனூ
ரென்னும் பதியி லினிதுறை சீர்த்தி
மன்னு சாமிக் கண்ணு மகிப!
அமிழ்தினு மினிய தமிழ்நனி யுணர்ந்தோய்!
சொற்றிடும் பல்கலை கற்றுணர் மாண்பினோய்!
செப்பரு மாங்கிலத் தொப்பில் நிபுண!
எம்.ஏ.,பி.எல்., எல்.எல்.பி.யெனும்
செமமையார் பட்டம் திகழ்தரப் பெற்றோய்!
வான சாஸ்திர ஞானமிக் குடையோய்!
சர்வகலா சாலைச் சங்கத் தொருவ!
பாரதிற் சனோப கார மாக
எண்ணிலாச் சங்கம் நண்ணிட வமைத்தவ!
சொல்லரும் புகழுடைச் சில்லா கலெக்ட
ரோதா வுடைய மேதா வியனே!
பங்கமி லிலக்கியச் சங்கம் பதிப்பவ!
அகமகிழ் தருதிவான் பகதூர ரபிதானம்
விளங்கப் பெற்ற களங்கமில் பெரியோய்!
எளியவர்க் கருள்செ யளிதரு குணத்தோய்!
பரோப கார கிருபா கரனே!
துன்னரு மாயிரத்துத் தொள்ளா யிரத்துப்
பதினா றாண்டிற் பதிகளுட் சிறந்த,
கச்சிப் பதியில் மெச்சிட வோங்கும்
பிள்ளையார் பாளையத் தெள்ளளில் சீர்சால்
முத்தி முடிவெனும் சித்தி நூல் செய்தருள்
சரவண தேசிகர் கிருக மதனில்
பொங்குசீ ரைக்கியச் சங்க மொன்று
செப்பரும் புகழ்சால் சுப்பிர மணிய
ஐயரால் ரிஜிஸ்தர் செய்யப் பெற்றது,
நெய்தற் றொழிலினோ ருய்தரும் பொருட்டே
யேற்படும் நூற்சங் கவேற்பா டுதன்னைப்
பதிவு புரிந்ததால் நிதிகோ டிதந்த
பரிசு போலும் பரிசு போலும்
கார்செயு முதவிக்கு நேருப கார
மார்செய வல்லவ ரன்ன
மாண்புடை நின்தனக் கென்புகல் வதுவே.
நேரிசை வெண்பா
பூமிக்கண் ணல்ல புகழுடைய சற்குணனாம்
சாமிக் கண் ணென்னுமபி தானத்தான்- தேமிக்க
தாருடையான் சோமூர்த் தி........
பேருடையான் வாழ்க பெரிது.

காஞ்சிரம் பிள்ளையார் பாளையம் ஸ்ரீகச்சபேஸ்வர ஐக்கிய நாணய சங்கத்தின் நிர்வாகக் கமிட்டியார்அவர்களாற் பிரசுரஞ் செய்யப் பெற்றது.

இவை யியற்றியவர் — யூர் பச்சையப்பன் ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் வெண்பாப்புலி தி.சு. வேலுசாமிப்பிள்ளை சென்னை-பிங்கள வருடம் வைகாசி மாதம் 1917 ஜுன் 1 மலர் 1 இதழ் 1 (திராவிடன் முதல் இதழில் வெளிவந்தது)

திராவிடன் முதல் இதழ்

திராவிடன் முதல் இதழ் தலையங்கப் பகுதி (1.6.1917)

சென்னைப் பட்டணம் 1917 வருடம் ஜுன் மாதம் 1 ஆம் நாள்



(Ourselves) நமது பத்திரிகையின் நோக்கங்கள்

இந்துக்களிற் பெரும்பாலோர் பிராமணரல்லாதவர்களாயிருக்கிறார்கள். தென்னிந்தியாவின் ஜனத்தொகை சுமார் நான்கு கோடியில் பிராமணரல்லாத இந்துக்களின் தொகை மூன்றரை கோடிக்க அதிகமாகிறது. இவ்வளவு பெருந்தொகையினராகிய நம்மவர்களுடைய குறைபாடுகளையும் முறைபாடுகளையும் ராஜாங்கத்தாருக்குத் தக்கபடி தெரிவித்து இவர்களுடைய செல்வாக்கை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு, இதுவரைக்கும் இயலாமல் போயிற்று. பொதுவாக, இந்துக்கள் என்கிற மொத்தப் பெயரை வைத்து கொண்டே, இந்துக்களுள் மிக மிகச் சிறிய பிரிவினராசிய சிலரே எல்லா நலன்களையும் எல்லாப் பலன்களையும் இதுவரைக்கும் அனுபவித்து வந்திருக்கிறார்கள். இப்பொழுதும் அனுபவித்து வருகிறார்கள். முக்கியமாய் இதற்குக் காரணம் பத்திரிகை என்கிற பலமுள்ள ஆயுதங்கள் அவர்களிடம் மிருப்பதுதான்.

இவ்வறாக, பிராமணரல்லாத இதர இந்துக்கள் வரவரத் தமது செல்வாக்கையிழந்து ஈனஸ்திதிக்கு இறங்கிக் கொண்டிருப்பது நாளுக்கு நாள் பொறுக்க முடியாததாயிற்று. இந்தக் கொடிய நிலைமையினின்றும் தங்களைத் தப்புவித்துக் கொள்ளவும் இனிமேலாயினும் தாங்கள் அபிவிர்த்தியடைய வழகளைத்தேடிக் கொள்ளவும் வேண்டிய பிரயத்தனங்கள் செய்ய வேண்டும் என்கிற எண்ணமாவது மெள்ள மெள்ள அவர்களது உள்ளந்தன்னில் உதயமாய்க் வந்தது. தம்மைத்தாம் காத்துக் கொண்டு தம்முடைய விடா முயற்சியினாலும் தளராத உழைப்பினாலும் தம்மைத்தாம் முன்னுக்குக் கொண்டு வர வேண்டுமென்னும் நியாயமான கோரிக்கை பிராமணரல்லாத இந்துக்களின் மனதில் திடமான வேறூன்றிப் பேலமான நோக்கமாய் விளங்க ஆரம்பித்து விட்டது. இவ்விதமான எண்ணம் கண் மூடித்தனமான ஆத்திரத்தாலாவது யோசனையில்லாத ஆவேசத்தினாலாவது உண்டானதன்று. நீர்க்குமிழி போலும் மின்னல் போலும் க்ஷணத்தில் தோன்றி க்ஷணத்தில் மறைந்து போகும் ஏற்றமில்லாத தோற்றமென்று இதனைக ª£கள்ள எள்ளளவும் முடியாது. மிக நிதானமாகவும் வெகு சரவதானமாகவும் ஆரத்தீர யோசித்து தென்னிந்தியர்கள் பெரும்பாலோர் கொண்ட ஆலோசனையின் முதிர்ச்சியினாலேயே இவ்வகையான எண்ணம் ஒவ்வொருவர் மனத்திலும் உண்டாயிருக்கிறதென்று உறுதியாய்க் கொள்ளலாம்.

மேற் கூறியவைகள் காரணமாக, தென் இந்திய தேசிய மகாஜன சபை ஒன்று சென்னையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்பதையும், அச் சங்கத் தாராலேயே, ஜஸ்டிஸ் என்கிற ஆங்கில பத்திரிகையன்று நடத்தப்பட்டு வருகிற தென்பதையும் நம்மவர்கள் அனேகர் அறிந்திருக்கலாம். மேற்படி, சபையாராலேயே, மேலே விசாரித்துள்ள நோக்கங்களைச் சாதித்ததற்கு, இன்று ‘திராவிடன்’ என்கிற இத் தமிழ் தினசரி பத்திரிகையும், ஆந்திரப்பிரகாசிகா என்கிற தெலுங்குத் தினசரிப் பத்திரிகையும் ஆரம்பிக்கப்படுகின்றன.

முன் சொன்னபடி தென்னிந்தியாவில் பெருமபாலோர் பிராமணரல்லா தாராகிய இந்துக்களே யாவர். பிராமண ரென்பவர்கள் மிகக் குறைந்த எண்ணினர். ஆகவே பிராமணர். பிராமணரல்லாதார் என்கிற இரு வகுப்பினருள், பிராமணரல்லாதாராகிய திராவிடர்களே தென்னிந்திய ‘மஹா ஜனங்கள்’ என்று திருத்தமாய் நாம் கூறலாம். இத்தனை நாள் இவர்கள் காலாட்டித் தூங்க வைக்கப்பட்டிருந்து இப்பொழுதுதான் இவர்கள் உடம்பை உதறித் திடம் பெற்று எழுந்திருப்பதைக் கண்டு மனம் பொறாத சிலர், இவர்களுடைய நோக்கங்களைப் பூர்த்தியாய் ஆராய்ந்து பாராமல், மேல் வாரியாய் தோஷம் கூறத் தொடங்குவது போல் வேஷம் போட்டு மேல் நாம் கூறியுள்ள அபிப்பிராயங்கள் சில தந்திரசாலிகளின் பேராசையையோ? அல்லது ஏமாற்றமடைந்த சில உத்தியோகஸ்தர்களின் விருப்பங்களையோ குறிப்பதாக கொள்ளக் கூடும். அது சிறிதும் உண்மையன்று. முற்றிலும் பிசகானதென்றே முடிவாக கூறுவோம். ஆகவே, தேசீய திராவிடர்களாகிய நம்மனோர் முன்னுக்கு வருவதற்குத் தடையாயுள்ள தப்பபிப்ராயங்களையும் விபரீதக் கொள்கைகளையும் பேதித்தெறிந்து உண்மையைச் சாதித்து நிலை நிறுத்துவதே திராவிடனாகிய இப்பத்திரிகையின் திருத்தமுள்ளதொரு நோக்கமாகும். கண்ணைக் கட்டி காட்டில் விடுவது போற்செய்யும் குருமார்களுடைய அதிகாரம் வெகுவாகப் பிரதிபலித்திருந்த காலங்களிலும் தேசங்களிலும் அவர்கள் சொல்லுவதே ஞாயம் அவர்கள் புகல்வதே போத நவநீதமென்று கொள்ளுவது சகஜமாயிருந்து சங்கடம் விளைத்து வந்தது. அந்தக் கண்மூடி அகற்றப்பட்டவுடனே அந்தகாரமும் தொலைந்தது. சூரிய வெளிச்சமும் தெரிந்தது.

மாட்சிமை தங்கிய ஆங்கில அரசாட்சி மாண்புடனே நம் தேசத்திற்கு எட்டினவுடன் இருட்டு எண்ணங்களும், குருட்டுக் கொள்கைகளும் இடம்விட்டே எழுந்தோடிவிட்டன. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை யிடந்திற் போலவும், செய்ததையே செய்யும் வழக்க வேலைக்காரனிடத்திற் போலவும் நிலைமை பெற்று தலைமையுற்றிருந்த கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக, அறிவும் பிரகாசித்தது. ஒழுக்க முறையும் விசாலித்தது. சுயேச்சையாய்ப் பிரவர்த்திப்பதற்குச் சமயமும் வாய்த்தது. சுயேச்¬யாய்ப் பிரவர்த்திப்பதற்குச் சமயமும் வாய்த்தது. எவ்வளவோ அணியமாய் போலிக் குரு பீடங்கள் நம்மை நடத்தியும் எல்லா வல்ல இறைவனது மகத்துவம் பொருந்திய கட்டளை போல் பாவித்து அதற்கு உட்பட்டு வந்த அடிமைத்தனமும் தொலைந்தது. இவ்விதமாக நமக்கு எவ்வளவோ நன்மை தந்து உதவிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் மீது இடையறாத அன்பையும் தளர்வுறாத விஸ்வாஸத்தையும் என்றென்றும் காட்டிச் செல்வதே இணையில்லாத நமது நோக்கமாயிருக்கும். ஆயினும் துரைத்தனத்தாருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும், அவர்கள் கொண்ட கோட்பாட்டையும் அனுசரிக்கும் ஏற்பாட்டையும் துரைத்தனத்திலுள்ள கீழ் உத்தியோகஸ்தர்கள் நடத்தும் சகல நடவடிக்கை முதலியவைகளையும், விரோதப் பான்மையின்றியும் நேச விஸ்வாஸசமானது சிறிதும் குறைவுபடாமலும், அவமதித்து கேலி செய்யும் அகந்தையான எண்ணமில்லாமலும், எடுத்தெடுத்துக் கூறி, நல்லவை கட்டவைகளை நன்றாக விளக்கி, துரைத்தனத்தாருடைய வேலையைச் சுலபப்படுத்தவும், தேசத்திலுள்ளவர்களுக்கு முன்னிலும் நன்மை அதிகமாக உண்டாக்கவும் நம்மாலான வரைக்கும் நன்றாக உழைப்போம். பொதுவாக இவ்வுலகத்திலுள்ள பற்பல மனிதர்களைப் பற்றியும் விஷயங்களைப் பற்றியும் ஸ்தாபனங்களைப் பற்றியும் சரியான அபிப்ராயங்கள் பரவும்படி செய்வதற்கு நம்மாலான முயற்சிகள் நன்றாகச் செய்வோம்.

இப்பொழுது நடந்துவரும் மஹாயுத்தத்தில் நமது மாட்சியமை தங்கிய அரசாங்கத்தினரும் நேச ராஜ்யங்களும் சம்பூர்ண ஜயமடைந்து, வெற்றி மாலை பூண்பதற்கு வேண்டிய பிரயத்தனங்கள் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். அந்த வெற்றியை அரசாங்கத்தினர் துரிதமாகவும் பூரணமாகவும் அடைவதற்குப் பொருளாதாரங்களையும் மனித உதவிகளையும் ஏராளமாய்க் கொடுக்க வேண்டும், ஆனால் பொதுவாய் ஏகாதிபத்தியத்தைப் பாதிக்காமல் முழுவதும் ஸ்வதேச சம்பந்தமாகவே ஏற்படும் அவசரத் தன்மையான விஷயங்களை இம்மஹா யுத்தத்தின் காரணமாக ஆலோசிக்காமல் நிறுத்தி வைக்க முடியாது. ஆன போதிலும் அப்படிப்பட்ட விஷயங்கள் இந்திய பொது ஜனங்களின் சகல வகுப்பினருடைய நிரந்தரமான பிரயோசனத்தை உத்தேசித்தை முடிவு செய்யப்பட வேண்டுமேயன்றி, பொது ஜனங்கள் பேரால் ஒரு சிறு வகுப்பினரே எல்லா லாபங்களையும் எடுத்துப் போகும்படி விடுதல் கூடாது. இந்தியாவில் ஜாதிப் பிரிவுகள் அனேகமிருக்கின்றன. ஜாதி பேதங்கள் முற்றிலும் ஒழிந்து சீர்படுகிற வரைக்கும் சகல வகுப்பாருக்கும் நியாயம் கிடைப்பதற்கு ஒவ்வொரு ஜாதியாரும் இனத்தாரும் சமயத்தாரும் தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாகவும் தேசத்தில் தங்கள் தங்களுக்குரிய மேன்மையையும் அந்தஸ்தையும், ஜனத்தொகையையும் அனுசரித்தும் விஷயங்கள் செம்மைப் படுத்தப்பட வேண்டும். துரைத் தனத்தார் ஒவ்வொரு வகுப்பையும் ஒவ்வொரு ஜாதியையும் ஒவ்வொரு பிரிவையும் சேர்த்து பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளுடனும் விவேக முள்ள வர்களுடனும் கலந்து யோசித்து ஒரு ஏற்பாடு தயார் செய்வதே உசிதமானது. இல்லாவிட்டால் காரியத்திலேயே சுயலாபமடைய நேரிடும்.
மேலும் ராஜ்ய பரிபாலன சம்பந்தமான விஷயங்களைப் பற்றிய மாத்திரமே எழுதுவது நம்முடைய நோக்கமன்று. முன் சொன்ன படி பிராமணரல்லாத இந்துக்கள் பெரிய ஜனசமூகத்தவராயிருக்கின்றவர்கள். இவர்களும் நம்முடைய நேசப் பான்மைக்குரிய கிறிஸ்துவர்களும், முஹம்மதியர்களும் இந்தியாவின் செல்வ நிலையைப் பெரிதும் வளர்த்தவர்களாயிருக்கிறார்கள். ஜனத் தொகையாலும் நில உரிமையாலும் வியாபார ரீதியாலும் மிக்க மேம்பாடடைந்த நமது திராவிடர்கள் துரைத்தனத்தாருடைய ஆதரவினால், தாங்கள் நியாயமாகப் பெறக் கூடிய ராஜிய அதிகார பாகத்தை தங்களுக்குக் கொடுக்கும்படிக் கேட்பதற்கு உரித்தாரனவர்கள், துரைத்தனத்தாருடைய வசத்திலுள்ள உத்தியோகங்களிலும் பெரும்பாலும் அடையப் பாத்திய முடையவர் நம் தேசீய திராவிடரே. இவர்களுக்குச் சேர வேண்டிய ராஜீய அதிகாரத்தை இவர்கள் செலுத்தக் கூடியவர்களா யிருக்கிற பட்சத்திலே, இவர்களுக்கு நன்மை விளைவதுமல்லாமல், இவர்கள் இடைவிடாமல் பூர்த்தியான விஸ்வாஸத்துடன் சதா பணிந்துவரும் துரைத்தனத்தாருக்குங் கூட ஒரே மாதிரியான நன்மை உண்டாகும். ஏனென்றால், ஆற்காட்டிலும் பிளாஸியிலும் போர் புரிந்தவர் இந்த ஜனங்களைச் சேர்ந்தவர்களே. ஹைதராலியும் திப்பு சுல்தானும் பிரிட்டீஷாருடன் பயங்கரமான கடும்போம் விளைத்த காலத்திலும் பிராமண ரல்லாத இந்துக்களே உடன் நின்று மிகவும் உதவி புரிந்து ஜயங்கொடி நாட்டி அஸ்திவாரக்கல் அமைத்தவர்கள், நாளது வரைக்கும் ராணுவத்தில் ஏராளமாய்ச் சேவகம் புரிபவர்களும் இவர்களே. பிரான்ஸிலும் மேஸோ படாவியிலும் இவர்களால் உண்டாகிய வெற்றிகளும் எல்லோரும் வியக்கத் தக்கவையாய் இருக்கின்றன. இவர்களுடைய மாதிரியைப் பின்பற்றி இவர்களுடைய சந்ததியார்களும் எக்காலத்திலும் இராஜ விஸ்வாஸ முடையவர்களாய் சேவகம் புய சித்தமாயிருக்கிறார்கள். இவ்விதமான பாத்தியதை உடையவர்கள் பால் இந்தியாவிலுள்ள சர்க்கார் உத்தியோகங்கள் விஷயமாய் துரைத்தனத்தார் தங்கள் நோக்கத்தை செலுத்தும் படி மிகவும் வினயமாய்க் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு துரைத்தனத்தார் கண்ணோக்கம் செலுத்து வதனாலே சரித்திரப் பிரசித்தியாய்ப் பூர்விக மேன்மை வாய்ந்தவர்களாக இருக்கும் ஜன சமூகங்களின் உரிமைகளையும், சுதந்திரங் களையும் துரைத்தனத்தார் கவனித்தவர்களாவார்கள். ஆயினும் இந்த ஜனசமூகங்கள் மேலும் மேலும் விருத்திடைவதற்கும் இவர்கள் பிற்கால நிலைமை மேலும் மேலும் உன்னதமடைவதற்கும் தாங்களே கவனிக்க வேண்டிய விஷயங்களும் அனேகமிருக்கின்றன. விவசாய விஷயத்திலும் அதிக ஊக்கத்துடனும் மிக்க உற்சாகத்துடனும் அவர்கள் அதிகமாய் முயன்று வர வேண்டும்.

சைன்ஸ்களாகிற நவீன சாஸ்திரங்களின் ஆராய்ச்சிகளினாலும் அமெரிக்கா, ஜப்பான் முதலிய தேசத்தவர்கள் மேற்படி விஷயங்களில் அபிவிருத்திய டைந்திருக்கிற மாதிரிகளைப் பின்பற்றியும் நாமும் அபிவிருத்தியடையப் பிரயத்தனப்பட வேண்டும். பிரதம கல்வி, மத்தியத்தரக் கல்வி, உயர்தரக் கல்வி, இவைகளிலும் நாம் முன்னுக்கு வர முயல வேண்டும். முக்கியமான இடங்களிலேல்லாம் சங்கங்கள் ஸ்தாபித்து இளைஞர்களுடைய கல்வி விஷயத்திலும் கைத்தொழில் விஷயத்திலும் இடைவிடாத கவனத்தைச் செலுத்த வேண்டும். இங்குக் கூறிய இந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் இந்தப் பத்திரிகை அவ்வப்போது விவரித்துப் பேசும். பற்பல கலைகளையும் சாஸ்திரங்களையும் நம்மில் அநேகர் கற்பது வெகு அவசியமும் உபயோக கரமாயிருப்பதோடுங்கூட, அறிவையும் வளர்த்து தேக சுகத்தையும் அது ஏராளமாய்க் கொடுக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்ததேசத்தினுள் ஒவ்வொரு ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையையும் அவர்களுக்கு மாத்திரமேயில்லாமல் பொது ஜனங்களுக்கும் தேசத்துக்கும் ஒரே மாதிரி உபயோகப் படக்கூடிய ஒரு தொழில் அல்லது வியாபாரத்தில் பழக்க வேண்டும்.இவைகளைப் பற்றி ஏற்றபடி வற்புறுத்திப் பேசுவதும் இப்பத்திரிகை யினுடைய இயைந்ததோரு நோக்கமாகும். இவ்விதமான பற்பல நோக்கங்களைக் கொண்டு, இப்பத்திரிகை இன்று தொடங்கி உலாவ ஆரம்பிக்கின்றது. பொதுவாக இந்தியர்களுடைய நன்மையை உத்தேசித்தும் முக்கியமாக பிராமணரல்லாத மூன்றரை கோடி ஜனத்தொகையுள்ள இந்துககளின் நன்மையை உத்தேசித்தும் ஆரம்பிக்கப்படும் இப்பத்திரிகையானது அவர்களிற் பிரமுகர்களா யுள்ளவர்களுடைய அங்கீகாரத்தைப் பெற்று, இப்புதிய முயற்சி சித்தி பெறச் செய்யும் எனக் கோருகின்றோம். இதனால் உண்டாகும் பிரயோஜனமானது மேலும் மேலும் பெருகி, தேசத்துக்கு நன்மை விளைத்து, ஜனங்களுக்கு «க்ஷமத்தைக் கொடுத்து, பிரிட்டிஷ் அரசாட்சிக்கும் மேன்மையைத் தருமென்பதில் சந்தேகமில்லை. (இளந்தமிழன் சூன், சூலை 1990)

பாரதியார் பற்றி பரலி சு.நெல்லையப்பர்

பாரதியார் - பரலி சு. நெல்லையப்பர்

செந்தமிழ் நாட்டிலே தோன்றிச் சிறந்த பாடல்களினால் தாஞ்நாட்டுக்குப் புத்துயிர ளித்த தற்காலப் பெருமக்களில் காலஞ் சென்ற சுப்ரமணிய பாரதியார் ஒப்பற்றவராவர். சென்ற சில ஆண்டுகளுக்கிடையில் தமிழ் மொழியில் உயிருள்ள பாடல்கள் பாடிய ஒப்பற்ற புலவர் பாரதியார் ஒருவரென்றே சொல்ல வேண்டும். தமிழ் உலகத்திலே பாரதியார் ஒரு மின்னல் போலத் தோன்றி மறைந்தார்.

காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதியாரின் சரித்திரத்தை அவருடன் இளமை முதல் பழகிய அறிஞர் சோமசுந்தர பாரதியாரின் எழுத்தால் அறியலாம். ஆனால் பாரதியாரது பூரணமான ஜீவிய சரித்திரம் இனித்தான் வெளியாதல் வேண்டும்.

1906 அல்லது 1907 ஆம் ஆண்டாயிருக்கலாம். வங்காளத்தில் சுதேசியக் கிளர்ச்சி மும்முரமாயிருந்த பொழுது தென்னாட்டில் சுதேசிய ஊக்கம் உயர்நிலையிலிருந்த காலத்தில் தூத்துக்குடியில் திரு.சிதம்பரம்பிள்ளை திரு.சுப்பிரமணிய சிவம் முதலியவர்கள் மீது வழக்கு ஏற்பட்ட பொழுது திரு.பிள்ளையவர்கள் வீட்டில் ஒரு நாள் மாலையில் நான் பாரதியாரை முதல் முதலாகக் கண்டேன்.

அப்பொழுதுதான் நான் அவர் பெயரைக் கூடக் கேள்விப்பட்டிருக்க வில்லை. என்னுடன் நெடுநாள் பழகிய ஒருவர் போல அவர் எனது கையைப் பிடித்து இழுத்து உலாவுவதற்காக அழைத்துச் சென்றார். அன்று தான் அவர் திருநெல்வேலி யிலிருந்து தூத்துக்குடிக்கு வந்திருந்தார். ஊருக்குப் புதிது. வெளியே உலாவுவதற்காக என்னைத் துணையாக அழைத்துச் சென்றார். அப்பொழுது அவர் சென்னையில் நடந்த ‘இந்தியா’ பத்திரிக்கைக்கு ஆசிரியராயிருந்தார். கல கலப்பான பேச்சு. குதூகலமான நடை. குங்குமப்பொட்டு. ஓயாது பாடும் வாய். ரோஜா நிறப்பட்டு அங்கவஸ்திரம் இவற்றை நான் என்றும் மறக்க முடியாது.

பாரதியார் பாடிய
வந்தே மாதரம் என்போம்- எங்கள்
மானிலத் தாயை வணங்குதும் என்போம்
எந்தையுந் தாயும் மகிழ்ந்து குலா
யிருந்ததும் இந்நாடே

என்ற தொடக்கத்து இரண்டு பாடல்களையும் காலஞ்சென்ற சென்னைப் பேராசிரியரான வி.கிருஷ்ணசாமி அய்யர் ஆயிரக் கணக்காக அச்சிட்டு ப் பள்ளி ப் பிள்ளைகளுக்குக் கொடுக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார். இந்தத் துண்டுப் பிரசுரங்களும் பாரதியார் சுதேச கீதப் புத்தகங்களும் சிதம்பரம் பிள்ளையவர்கள் வீட்டில்¢ஏராளமாய் கிடந்தன. அவற்றைப் படித்த பின்னரே அவற்றின் ஆசிரியர் பெருமையை ஒருவாறு உணர்ந்தேன். நான் அதுவரை படித்திருந்த பல பாடல்களிலும் காணாத புதுவையைப் பாரதியார் பாடலில் கண்டேன். அக்காலத்தில் மக்கள் உள்ளத்தில் தோன்றிப் பொங்கியெழுந்த தேச பக்தி வெள்ளமே பாரதியாரின் சுதேச கீதமாக வெளியாயிற்றென்று சொல்லலாம்.

பின்னர் சுமார் மூன்று ஆண்டுகள் சென்ற பிறகு தேச பக்தர் களுக்கு அடைக்கலாமாக விளங்கிய புதுச்சேரியில் சலவை பங்களாவில் நான் பாரதியாரை இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். அப்பொழுது பாரதியாரை ஆசிரியராகப் பெற்றிருந்த ‘சூரியோதயம்’ என்று வாரப்பத்திரிகையில் உப பத்திராசிரியராக இருக்குமாறு நான் அங்கே சென்றிருந்தேன். பாரதியார் அது காலை பார்த்த பொழுது என்னை அவர் கூர்மையாக உற்று நோக்கினார். ஊக்க மற்று, உணர்ச்சியற்று, உயிரற்று அடிமைப் பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டிலிருந்து வரும் இவனிடம் ஏதேனும் உணர்ச்சி, ஊக்கம், உயிர் இருக்கிறதா என்று அவர் சிந்தித்தது போலத் தோன்றியது. நான் புதுவையில் இருந்த காலத்தில் பாதி நாள் இராக்காலத்தைப் பாரதியாருடனேயே கழித்தேன். அப்பொழுது பாரதியார் வறுமையில் வாழ்ந்திருந்த போதிலும் வந்தவர்களுக்கெல்லாம் அவர் வீடு சத்திரமாகவே விளங்கியது.

புதுவையில் அவர் வறுமையிலேதான் வாழ்ந்திருந்தார். ஆயினும் எல்லோரையும் வருத்தும் வறுமை அவர் உள்ளத்தை வருத்தவில்லை. இரவெல்லாம் அவர் பாடிக் கொண்டு ஆனந்தக் களிப்பிலேயிருப்பார். தாயுமானவர் பராபரக்கண்ணியை அவர் ஓயாமல் பாடுவார். அவர் பேச்செல்லாம் தேசப் பேச்சாயும் தெய்வப் பேச்சாயுமே யிருந்தன. இயற்கைக் காட்சியில் அவ்ர பெரிதும் ஈடுபட்டிருந்தார். அதிகாலையில் அவர் புதுவை நகரிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்திலுள்ள மடுவுக்கு நீராடச் செல்வார். அப்பொழுது பூபாள ராகத்தில் திருப்பள்ளியெழுச்சி பாடிக்கொண்டு செல்வார்.

‘பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்’ என்ற தொடக்கத்து ஐந்து பாடல்களடங்கிய பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியைப் பாடிய பொழுது நான் அவருடன் இருந்தேன். அல்லும் பகலும்அவர் தெய்வ சிந்தனையிலும் தேச சிந்தனையிலுமே ஈடுபட்டிருந்தார். சுதேச கீதங்களில் ஒரு பகுதியைத் தவிர்த்துப் பாரதியார் பாடல்களிலும் எழுத்துக்களிலும் பல புதுச்சேரியிலேயே இயற்றப்பட்டவையாகும்.

சுமார் பத்து ஆண்டுகள் புதுவையில் வாழ்ந்திருந்த பின்னர் பாரதியார் சென்னைக்கு வந்தார். அவர் புதுவையிலிருந்த காலத்தில் அவரது வியாசங்களை ஏற்று அவரை ஆதரித்து வந்த ‘சுதேசமித்திரன்’ அவரை மீண்டும் ஓர் உப பத்திராசிரியராகக் கொண்டது. (காலஞ்சென்ற சுப்பிரமணிய அய்யர் காலத்தில் சில காலம் பாரதியார் ‘மித்திரனில்’ உப பத்திராசிரியராக இருந்தார்).

ஆனால் அவரை ஓர் உப பத்திராசிரியராகக் கொண்டிருக்கும் பாக்கியத்தைச் ‘சுதேசமித்திரன்’ நீண்ட காலம் பெற்றிருக்க வில்லை. புதுவையில் அவர் வறுமையில் வாழ்ந்திருந்த பொழுது கஞ்சாப் பழக்கம் எவ்வாறோ அவரைப் பற்றி விட்டது. அவர் தமிழ் நாட்டிற்குத் திரும்பி வந்த பின்னரும் அத்தீய வழக்கம் அவரை விடாமற்பற்றி முடிவில் அவர் வாணாள் விரைவில் முடிவதற்கும் காரணமாய் நின்றது. நண்பர்கள் சொல்லியும் கேளாமல் சென்னைக்கு வந்த பின்னரும் அவர் கஞ்சாவை அதிகமாக உட்கொள்ளத் தொடங்கி விட்டார். அவர் வாழ்நாளில் பிற்காலத்தில் அவர் பாடிய பாடல்களிலும் கஞ்சா வெறியன் பயனை ஒருவாறு காணலாமென்றே நான் சொல்வேன்.

சென்னை-திருவல்லிக்கேணியில் துளசிங்கம் பெருமாள் கோயில் வீதியில் ஒரு வீட்டில் 1921-ஆம் ஆண்டு அவ்ர உயிர் துறந்தார். அன்று இரவு முழுமையும் நான் அவருடன் இருந்தேன். மற்ற நாட்களில் இருந்த கஞ்சா மயக்கத்துடன் அன்றிரவு அவரிடம் சாவு மயக்கமுஞ் சேர்ந்திருந்தது. நண்பர்களுக்குச் சாவாமை உபதேசஞ் செய்த பாரதியார் சாக நேர்ந்தது. பாண்டி நாட்டில் எட்டையபுரத்தில் தோன்றிய உடல் தொண்டை நாட்டில் சென்னை-திருவல்லிக்கேணியில் சாம்பலாகிக் கடலிலே கலந்தது.

நான் மேலே கூறியவாறு, பாரதியார் தமிழுலகில் மின்னல் போலத்தோன்றி மறைந்தார். அவர் தமது அற்புதப் பாடல்களாலும், அதிசயமான கட்டுரைகளாலும் தமிழ் மக்களுக்குப் புத்துயிர் அளித்தார். எளிய நடையில் அரிய கருத்துக்களை ஏற்றி இன்பமான பாடல்கள் பாடுவதில் பாரதியார் இணையற்ற புலவராக விளங்கினார். அவர் பாட்டிலும் உரையிலும் தமிழ் மாது புதுமையும், இளமையும், இனிமையும், எழிலும், ஒளியும், உயர்வும் கொண்டு விளங்குகின்றாள். பழந்தமிழன்னைக்கு இளமை யளித்த புலவர் பெரு மக்களில் பாரதியார் ஒருவரென்று நான் போற்றுகிறேன். தென்றலின் இனிமையையும் கடலின் பெருமையையும் வானத்தின் உயர்வையும், மலையின் மாட்சியையும் பாரதியார் தமிழிலே ஏற்றியிருக்கிறார். பாப நாசத்து அருவியின் தெளிவைப் பாரதியார் பாடலிலே காணலாம். அவர் பாடல்களிலும் கட்டுரைகளிலும் பல தமிழ் இலக்கியத்தில் நிலையான இடம் பெறும் என்பதில் அய்யமில்லை.

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு

என்பன போன்ற நாட்டுப் பாடல்களைப் படிக்கும் எவர் உள்ளந்தான் தேசபக்தியுடன் எழுச்சி பெறாது?

அவர் பாடிய கண்ணன் பாட்டை அரவிந்தர் போற்றுகிறார். பாஞ்சாலிச பதம் வீர ரசம் நிறைந்து விளங்குகிறது. வீரத் தமிழ்ச் சொலின் சாரத்தை அதிலே காணலாம். ஞானரதம் இன்பக் கதை. அவரது கட்டுரைகளெல்லாம் இனிய, எளிய, தெளிய, அழகிய நடை. எல்லோருக்கும் விளங்கும் இன்பத் தமிழ். அவர் பிற்காலத்தில் பாடிய பாடல்களிலும் எழுதிய உரைகளிலும் வீரச்சுவை அதிகமில்லை.

தமிழ் நாடடின் தீவினைப்பயனால் கஞ்சா நோய் பாரதியாரைப் பற்றாதிருந்தால் அவர் நெடுநாள் வாழ்ந்திருந்து தமிழில் இன்னும் எத்தனையோ பாடல்களையும் எழுதியிருத்தல் கூடும். ஆனால் அவர் வறுமையின் கொடுமையால் மேற்கொண்ட கஞ்சா அவரைக் கொண்று விட்டது. அதற்குக் காரணம் தமிழ்ச் செல்வர்களேயாவர். தமிழ் நாட்டுச் செல்வர்கள் அவர் பெருமையை அறிந்து அவரை வறுமையில் வாட விடாமல் ஆதரித்திருந்தால், அவர் வறுமையில் வருந்திக் கஞ்சாவை நாட நேர்ந்திராது. ஆயினும் விதியின் கதி அவ்வாறாயிற்று. புலவர் வறுமை புலவரைக் கொன்றது. ஆனால் இனியேனும் தமிழ்நாட்டில் தோன்றி வரும் அறிஞர்களை புலவர்களை, கவிகளை ஆதரிக்குமாறு நமது செல்வர்களுக்குப் பாரதியாரின் கதி ஓர் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

பாரதியார் மக்கள் மீது அளவற்ற ஆர்வம் உடையவர். தமிழ் மீது தனியாக் காதல் கொண்டவர். இதனைக் கீழ்வரும் அவரது பாடலில் காண்க.

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனி தாவதெங்கும் காணோம்’

தேச விடுதலையில் அவர் அல்லும் பகலும் சிந்தனை கொண்டிருந்தார். தெய்வத்தின் மீது உறுதியான பக்தி கொண்டவர். ஜாதி வேற்றுமையற்றவர். சமயத்திலே பெரும் பற்றுள்ளவர். சொல்லும் செயலும் ஒன்று பட்டவர். பெண் விடுதலையில் பேரார்வம் கொண்டவர்.
பாரதியார் காலஞ்சென்ற பின்னரே அவரது பாடல்களின் பெருமையைத் தமிழ் நாடு பெரிதும் அறியத் தொடங்கியிருக்கிறது. ஆயினும் தமிழ் மக்கள் இன்னும் பாரதியாரைப் பூரணமாக அறிய வில்லை. பாரதியார் தமது நூல்களை ப் பதினாயிரக் கணக்காக அச்சிட்டு நாடெங்கும் பரப்ப வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்தார். ஆனால் அவர் விருப்பம் அவர் நாளில் நிறைவேறவில்லை. பாரதியார் பாடல்களை லட்சக்கணக்காகப் பல முறைகளில் அச்சிட்டு நாடெங்கும் பரப்ப வேண்டும். பாரதியார் பாடலை வாயுள்ள மக்களெல்லாம் பாட வேண்டும். செவியுள்ள மக்களெல்லாம் கேட்க வேண்டும். அதனால் தமிழ் நாடு பல வகைக் கட்டுகளினின்றும் விடுதலை பெற்றுப் புது வாழ்வும் பெரு வாழ்வும் பெற வேண்டுமென்பதே பாரதியாரின் கனவகா இருந்தது. அவர் கனவை நனவாகச் செய்வதற்கு அவர் பாடிய பாடல்கள் பெரிதும் துணைபுரியுமென்பது எனது கருத்து. பாரதி வாழ்க! வந்தே மாதரம்!
தமிழரசு 1933, பக்கம் 212-216)(இளந்தமிழன் டிசம்பர் 1987 இதழில்)

பாரதியார் பற்றி வ.உ.சிதம்பரனார்

கடைசியாகக் கண்டது - வ.உ.சிதம்பரனார்

பின்னர் பல வருஷங்களுக்குப் பிறகு சென்னையைச் சேர்ந்த பெரம்பூரில் நான் வசித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் நான் திருவல்லிக்கேணி முதலான இடங்களுக்கு ப் போய் விட்டு இரவு சுமார் பத்து மணிக்கு என் வீடு வந்து சேர்ந்தேன். என் வீட்டுத் தார்சா (வராந்தா) வில் இருவர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். வந்தவுடன் நான் கை, கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் சென்றேன். சாப்பாடு போடும் படி என் மனைவி மீனாட்சியிடம் கூறினேன். அவள் இலை போட்டுப் பறிமாறியதும் நான் சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பொழுது தார்சாவில் தூங்குபவர்கள் யார் என விசாரித்தேன்.

‘உங்கள் மாமனார் பாரதியாரும் அவருடன் வந்துள்ள யாரோ ஒரு சாமியாரும்’ என்றனள் என் மனையாள்.

‘எப்போது வந்தார்கள்?’ என்றேன்.

‘இரவு எட்டு மணிக்கு வந்தார்கள். வரும் போதே மாமா உங்களைத் தேடிக் கொண்டு வந்தார்?’ என்றாள்.

‘இருவரும் சாப்பிட்டார்களா? விசாரித்தாயா?’ என்று வினவினேன்.

‘வந்ததும் உங்களை எங்கே யென்றும், எப்பொழுது வருவீர்கள் என்றும் கேட்டார்கள். பட்டிணம் போயிருக்கிறார்கள் என்றேன். நான் சொல்வதற்குள்ளாக எப்பொழுது சிதம்பரம் விள்ளை வருவார், மீனாட்சி என்று மீண்டும் கேட்டார். 10 மணிக்கு வருவார்கள் என்றேன். எங்களுக்குப் பசிக்கிறது. முதலில் சோறு போடு என்றார்கள். போட்டேன். இருவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்தவுடன் அவர்களை எழுப்பும்படி சொல்லிவிட்டு நீங்கள் வந்தவுடன் அவர்களை எழுப்பும்படி சொல்லிவிட்டுப் பாயும் தலையணையும் கேட்டார்கள். படுக்கையை எடுத்துக் கொடுத்தேன். வாங்கி கொண்டு தார்சாவிற்குச் சென்று விட்டார்கள்’ என்றாள்.

நான் அவசர அவசரமாக எனது சாப்பாட்டை முடித்து கொண்டு தார்சாவுக்கு வந்து மாமா மாமா என உரக்க எழுப்பினேன். இருவரும் எழுந்துவிட்டனர்.

«க்ஷமம் விசாரித்தேன். «க்ஷமத்தையும் தாம் வந்த வரலாறு பற்றியும் கூறினார் மாமா. புதுச்சேரியில் வசித்து வந்த பல இந்திய நண்பர்களின் «க்ஷமத்தையும் விசாரித்தேன். மாமா பதில் அளித்துக் கொண்டே வந்தார்.

‘சுவாமிகள் யாரோ’ என்றேன்.

ஒரு பெரியவர் என்றார் மாமா. அதற்கு மேல் துளாவிக் கேட்க நான் விரும்பவில்லை. பேசாதிருந்துவிட்டேன். ஆனாலும் என் மனச்சாட்சி அந்த மனிதனைப் பற்றி என் மனதில் ஏதோ ஒரு பீதியை எழுப்பியது. இதற்கு மாற்றம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. பழைய உத்ஸாகத்தையும், முக மலர்ச்சியையும், கண்களின் வீரப்பொலிவையும் கண்டிலேன். பேச்சும் ஒருபுது மாதிரியாக இருந்தது. சம்பந்தா சம்பந்த மில்லாமல் அவர் பேசுவதாகவும் எனக்குப் பட்டது. ஆனால் காரணம் தெரிந்திலேன். பொது விஷயங்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பின் துயின்றோம்.

மாமாவின் மாற்றம் சாமியாரின் தோற்றம்

மறுநாட் காலையில் நாங்கள் எழுந்ததும் மாமா தம்முடன் வந்திருந்த சாமியாருக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து வைத்து வேறு வேஷ்டி கொடுக்க வேண்டுமென எனக்குக் கட்டளையிட்டார். அந்த சாமியாரின் கீல் எண்ணெய் மேனியில் கால் அங்குலக் கனம் அழுக்குப் படிந்திருப்பதைக் கண்டேன். சாமியாரைக் குளிக்கக் கூப்பிட்டேன். சாப்பாடான பிறகு குளிக்கலாம் என்றார். மாமாவும் அதை ஒப்புக் கொண்டுவிட்டார்.

காலைக் காப்பி சாப்பாடு முடிந்ததும் சாமியார் குளிப்பதற்காக வானவெளிக்குச் சென்றார். பக்கத்தில் ஒரு செப்புப் பானையில் வெந்நீர் இருந்தது. இரு வேலைக்காரர்களும் சாமியாரைக் குளிப்பாட்டுவதற்குத் தயாராயிருந்தனர். நான் மேல் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.
சாமியார் அழுக்கேறிய தனது வேஷ்டியைக் களைந்து வைத்தார். அவரது அரைஞானில் பல பல துணி முடிச்சுகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் ரூபாய் இருந்தது.

அவற்றை அவிழ்த்துவிடும் படி நான் வேலைக்காரர்களிடம் கூறிய போது சாமியார் ஏதோ மறுத்தார். பயப்படவேண்டாம் என்றும் அவர் பணத்தை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் முன்னயே வைத்திருந்து குளித்துவிட்டு வந்ததும் அவரிடம் நானே கொடுத்துவிடுவதாகவும் நான் கோபத்துடன் கூறவே சாமியார் அடங்கிவிட்டார்.
பின்னர் வேலையாட்கள் அவருக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து வைத்தனர். கடையிலிருந்து ஏற்கனவே வாங்கிவந்து வைத்திருந்த ஒரு ஜோடிப் புது வேஷ்டிகளையும் சாமியாரது பணமுடிச்சுகளையும் நான் அவரிடம் கொடுத்ததும் சாமியாருக்குப் பரமானந்தம்!
மூவரும் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்து உறங்கினோம்.

மாலை சுமார் 3 மணிக்கு அவர்களிருவரும் பேயிரைச்லிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பததைக் கேட்டு நான் விழித்துகொண்டேன். ஒரு சிறு ‘அமிருதாஞ்சன்’ டப்பாவிலிருந்து ஏதோ ஒருலேகியத்தை எடுத்து ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு வாயில் போட்டுக் கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று.

‘அது என்ன மாமா?’ எனக் கேட்டேன்.

‘அதுவா மோஷ லோகத்திற்குக் கொண்டு போகும் ஜீவாம்ருதம்’ என்றார் மாமா. எனக்கு விஷயம் விளங்கி விட்டது.

‘அட பாபிகளா! எலும்மிச்சங்காய் அளவா? நீங்கள் நாசமா.....’

‘எல்லாம் உனக்குப் பயந்துதான் இந்தச் சிறிய அளவு. இல்லாவிட்டால்... ’ என்று சாமியார் முதுகில் ஒரு அடி கொடுத்துக் கொண்டே மாமா வெறிபிடித்தவன் மாதிரிச் சிரித்தார்.
மாமாவின் மாற்றத்திற்கு இம்மருந்துதான் காரணம் என்று நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது. இருந்தும் பலவாறு பேசியும் பாடியும் அன்று மாலையையும் என் வீட்டில் பொழுது போக்கிக் கழித்தோம்.

சாமியார் சரீர கனத்திலும் லேகியம் தின்பதிலும் தவிர மற்றபடி பேச்சு முதலியவற்றில் மக்காகவே இருந்தார். அறிவின் சிகரமான மாமாவுக்கு இந்த மக்கினிடத்தில் எவ்வாறு பற்று உண்டாயிற்று என்று அதிசயித்தேன்.

மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு பாரதியாரின் அத்தியந்த நண்பரும் என் நண்பருமான ஜார்ஜ் டவுன் வக்கில் எஸ். துரைசாமி ஐயர் வீட்டிற்குச் சென்றோம். ஐயர் வீட்டில் இல்லை. எனவே நாங்கள் மூவரும் ஐயர் வீட்டு மாடிக்குச் சென்று அங்கிருந்த கட்டில்களில் படுத்துக் கொண்டு கண்துயின்றோம்.

மாலை சுமார் மூன்று மணி சுமாருக்கு முதல் நாளைப் போலவே சாமியாரும், மாமாவும் உல்லாசமாகச் சப்தமிடுவதைக் கேட்டு நான் விழித்தேன். முந்திய தினத்தைப் போலவே தகர டப்பாவிலிருந்த லேகியம் அவ்விருவரது வயிற்றிலுமாகச் ‘சமாப்தி’ யாகியது. தலையில் அடித்துக் கொண்டு பேசாதிருந்துவிட்டேன்.

இதற்குள்ளாக வக்கீல் ஐயரும் வந்து சேர்ந்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு நான் அம்மூவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு பெரம்பூரில் உள்ள என் வீடு போய்ச் சேர்ந்தேன்.

பின்னர் அவ்வப்போது சென்னையில் நான் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை ஆபிசுக்குப் போயிருந்த சமயங்களிலெல்லாம் அங்கு உதவி ஆசிரியராக இருந்த மாமாவைக் கண்டு பேசியிருக்கிறேன். அருமை மாமாவின் எழுத்துக்கள் ‘மித்திரன்‘ வாயிலாக எனக்கு ஆனந்தம் ஊட்டி வந்தன.

மாமா மறைந்தார்: மாண்பு மணத்தது!

கொஞ்ச நாளில் மாமா காலஞ் சென்ற செய்தி கேட்டுத் திடுக்கிட்டேன். துக்கக்கடலில் ஆழ்ந்து தத்தளித்தேன். ‘நல்லார்க்கு அதிக காலம் இல்லை போலும்’ என நினைத்தேன்.
மாமா இவ்வுலகைவிட்டு மறைந்து விட்டாலும் அவரது தேசீய கீதங்களும் மற்றைய பாடல்களும், கதை-கட்டுரைகளும் இவ்வுலகம் உள்ளளவும் நிலைத்துப் புகழ் வீசும் என்பதில் அய்யமில்லை. அவருடைய பெயர் தேசாபிமானிகளுடைய சரிதத்தில் மட்டுமல்லாமல் கவிதா-மேதைகளின் சரிதத்திலும் வைரம் என ஒளிவிடும்.

அவருடைய பாடல்களின் அருமை பெருமையையும் சிறிது இயம்ப வேண்டும் என நினைத்தேன். ஆனால் எனக்கு ஆற்றலின்மையாலும், அவகாச மின்மையாலும் அவ்வேலையில் புகாது நின்று, கவிச் சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களையே நம் தேசத்து மக்கள் என்றென்றும் படித்து வர வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

வந்தே மாதரம் வாழ்க பாரதி

(இக்கட்டுரை வ.உ.சி. சுப்பிரமணியம் 17.11.46 இல் வெளியிட்ட வி.ஓ.சி. கண்ட பாரதி என்றும் நூலின் இறுதிப் பகுதியாகும். ஆயினும் வ.உ.சி இக்கட்டுரையைப் பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளார்- தி.வ. மெய்கண்டார்- இளந்தமிழன் டிசம்பர் 1987இதழில்)