Saturday, October 16, 2010

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்

பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்


(1) உருவம் - நிறம் : பார்ப்பனர் வடக்கேயுள்ள குளிர்நாட்டி னின்றும் வந்தவராதலின், தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில் மேனாட் டாரைப்போல் வெண்ணிறமாயிருந்தனர்; பின்பு வெயிலிற் காயக் காயச் சிறிது சிறிதாய் நிறமாறி வருகின்றனர்.

‘கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக் கூடாது’ என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளை யென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென் பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து.

குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்) குடுமி வைத்திருந் தனரேனும், பார்ப்பனரைப்போல மிகச் சிறிய உச்சிக்குடுமி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. பெண்டிர் இன்றுபோலத் தலைமயிர் முழுவதையும் வளரவிட்டனர். ஆடவர் சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும் பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சியென்றும் கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்தி லுள்ளதைக் குறிக்கும்.

அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்

பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்

குடுமித் தலைய மன்ற

நெடுமலை நாட னூர்ந்த மாவே (ஐங். 202)

என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளில், குதிரையின் தலையாட் டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறி யிருப்பது, அது தமிழ்ச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதா யிருந்தமைபற்றியே.

மீசை : மீசையைச் சிரைத்துக்கொள்ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர்.

(2) உடை : பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டுகின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்க மல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக்கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர்.

நூல் : பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, ‘நூலெனிலோ கோல்சாயும்’ என்னுஞ் செய்யுளும், ‘ஊர்கெட நூலைவிடு’ என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும்.

தமிழ்நாட்டு வணிகரும் ஐவகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும்.

ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமை யேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக் கும் திராவிடக் குலமுறைக்கும் இயையு இல்லாவிடினும், ஆரியரல்லா தவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழ ரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத் தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவதுடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலா மென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி - செட்டி) என்னும் ஆரியப் பெயர்களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றி யமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட் டில் ஊற்றமும் மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப்பட்டம் தந்தனர்.

ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவரணத்தார்க்கும் உரியதேனும், அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறு பட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (ஊயவேநசரெசல) அரசக் கண்காணியாளரைப் (ஹசஉhbiளாடியீ) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலா ளரை வைசியரென்றும், உழவரையும், கூலிக் காரரையும் சூத்திர ரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தா ரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராம ணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப் படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கே யுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரை யும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம்.

கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றன ரேயன்றி வேறன்று.

தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர்.

தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருது கின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயு மிருக்கின்றது.

நூல் என்பது புத்தகத்திற்கும் இழைக்கும் பொதுப் பெயராத லின், நூலோர் என்னும் பெயர் அறிஞரையும் பார்ப்பனரையுங் குறிக்கும் இடம் நோக்கி யறிந்து கொள்க.

(3) நடை : தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், 12ஆம் சூத்திர வுரையில், “தன்மையென்பது சாதித் தன்மை; அவையாவன பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும்” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இத் தன்மையை இன்றும் ஆங்கில நாகரிகம் நுழையாத சிற்றூர்களிற் காணலாம்.

(4) மொழி : பார்ப்பனரின் முன்னோர் பேசிய மொழி கிரேக்கத்தையும் பழம் பாரசீகத்தையும் வேத ஆரியத்தையும் ஒட்டியதாகும். வேத ஆரியர் மிகச் சிறுபான்மையரா யிருந்ததனாலேயே, கடல்போற் பரந்த வடஇந்தியப் பழந்திராவிட மக்களுடன் கலந்து தம் முன்னோர் மொழியைப் பேசும் ஆற்றலை இழந்தனர். அதனால், அவர் வழியினர் இன்று எம் மாநிலத்தில் உள்ளனரோ அம் மாநிலமொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆயினும் வேத ஆரிய மொழியுடன் அக்காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களைக் கலந்து செயற்கையாக அமைத்துக்கொண்ட சமற்கிருதம் என்னும் வடமொழிமீது வரையிறந்த பற்றும், தாம் பேசும் வட்டாரமொழிகளில் இயன்ற வரை சமற்கிருதத்தைக் கலப்பதும், அவரெல்லார்க்கும் பொது வியல்பாகும்.

வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், பிராமணரின் வழியின ரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியை மட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியே யன்றி வேறன்று.

பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர்.

மணிமேகலையில், ‘வடமொழியாளர்’ (5 : 40) என்று பார்ப்பனர்க் கும், ‘வடமொழி யாட்டி’ (13 : 78) என்று பார்ப்பனிக்கும் வந்திருத் தல் காண்க.

வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப் பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரி னின்று வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும் விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு ‘வடமொழி’ யென்றுபெயர்.

வடநாட்டில், ஆரியரும் ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க்கெல்லாம் பொதுவாக ‘வடவர்’ ‘ஆரியர்’ என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன.

ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் கேழ்வரகு தவிர வேறு ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத்திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளபடி கழைக் கூத்தன்று.

ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ் நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா.

வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றா யென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சியில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறுபட்டன வாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும் ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும்.

பார்ப்பனர் தமிழ்நூற்கன்றித் தமிழ்மொழிக் கதிகாரிக ளாகாமை

இப்போதுள்ள முறைப்படி, பார்ப்பனர் தமிழ்நூல்களைக் கற்றுச் சிறந்த புலவராகலாமேயொழியத் தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் அதிகாரிகளாக முடியாது. அதற்குக் காரணங் களாவன:

(1) ஆரிய மனப்பான்மை

ஒவ்வொரு நாட்டார்க்கும் ஒவ்வொரு மனப்பான்மை யுண்டு. அதனால் சில கருத்துகள் வேறுபடும். கருத்து வெளிப்பாடே மொழி. ஒவ்வொரு மொழியின் அமைதியும், இலக்கணம் (ழுசயஅஅயச), மரபு (ஐனiடிஅ) என இருவகைப்படும். ஒரு மொழியின் இலக்கணத்தையும் அதிலுள்ள நூல்களையும், எவரும் அம் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவுடன், தாமே கற்கலாம்; ஆனால், அம் மொழியின் மரபையும், அம் மொழியாரின் விதப்புக் கருத்துகளையும் தாமே அறியமுடியாது.

பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து பல நூற்றாண்டுகளாகியும், தமிழரோடு கலவாமல், தமித்தே யிருந்துவந்தமையின், தமிழ் மரபையும் தமிழ்க் கருத்துகளையும் முற்றும் அறிந்தாரில்லை.

பார்ப்பனர் எப்போதும் வடநாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், வடமொழியையும் தங்கள் முன்னோரின் மொழி யாகவும் கருதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழரோ எப் போதும் தென்னாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், தமிழையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக் கொண் டிருக்கின்றனர். இவ்வொரு வேறுபாடே இவ்விரு வகுப்பாரை யும் எவ்வளவோ பிரித்துக்காட்டும்.

நூல் என்னுஞ் சொல் முதலாவது, ஒரு சூத்திரத்தாலும் பல சூத்திரத்தாலும் ஆன இலக்கணத்தையும், இலக்கணம் போன்ற கலை (ளுஉநைnஉந)யையுங் குறித்ததாகும். இப்போது, அது புத்தகத் திற்கு வழங்கினும், புத்தகத்தின் பொருளைக் குறிக்குமேயன்றி, அதன் தாள்தொகுதியைக் குறிக்காது. புத்தகம் என்னும் பெயரே தாள் தொகுதியைக் குறிக்கும். இது பல பார்ப்பனருக்கு விளங்குவ தில்லை.

நண்டுக்குட்டி, கம்பவைக்கோல் என்பனபோன்ற மரபுவழு பார்ப்பனர்க்குள் மிகப்பொது.

(2) நாட்டுப்புறத்தாரோடு தொடர்பின்மை

ஒவ்வொரு மொழியிலும், சொற்கள் உலகவழக்கு, நூல் வழக்கு என இருபாற்படும். உலகவழக்கு பொதுமக்கட்கும், நூல்வழக்கு புலவர்க்கும் உரியனவாகும். பொதுமக்களிலும், நகர்ப்புறத் தாரினும் நாட்டுப்புறத்தாரே உலக வழக்கிற்குச் சிறந்தாராவர். உலகவழக்கு ஒரு மொழிக்கு உயிரும் நூல்வழக்கு அதற்கு உடம்புமாகும்.

பார்ப்பனர் தங்களை நிலத்தேவராக எண்ணிக்கொண்டு, குடியானவருடனும் தாழ்ந்தோருடனும் நெருங்கிப் பழகாமை யால், தமிழ்ச்சொற்கள் பலவற்றை அறிந்திலர்.

(3) வடமொழிப்பற்றும் தமிழ்ப்பற்றின்மையும்

வீணாக வடசொற்களை வழங்குவதினாலும், மணிப்பவள நடையிலும் தற்சம நடையையே பின்பற்றுவதாலும், ஆங்கிலச் சொற்கள் மொழிபெயர்க்காதே தமிழில் எழுதுவதாலும், ஒருகால் மொழிபெயர்ப்பினும் வடசொற்களாகவே பெயர்ப் பதாலும், தனித்தமிழை விலக்குவதாலும், தென்சொற்களை வடசொற்களென்று கூறுவதினாலும் பார்ப்பனருக்குத் தமிழ்ப் பற்றில்லையென்பது வெட்டவெளியாம்.

“ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரனது கிருபையால் ஸம்ஸாரி சேதநர்களின் உஜ்ஜீவனத்தின் பொருட்டு,” `யூநிவர்சிட்டி’ (பல்கலைக்கழகம்), லெக்சரர் (சொற்பொழிவாளர்), கமிட்டி (குழு), ஸ்கூல் பைனல் (பள்ளியிறுதி), ஆகர்ஷண சக்தி (இழுப் பாற்றல்), நிரக்ஷரேகை (நண்கோடு), மத்தியதரை (நண்ணிலம்), தசாம்சம் (பதின்கூறு), சதவீதம் (நூற்றுமேனி), வியாசம் (விட்டம்) முதலிய வழக்குகளால், தமிழ்ப்பற்றின்மை வெளியா தல் காண்க. (தேவநேயம் தொகுதி -10) (பக் 140-164)

No comments: