Thursday, January 27, 2011

யாகங்கள் ஏன்? கூலி எவ்வளவு?

யாகங்களின் பட்டியல். பிராமணர்களுக்கு யாகங்களுக்கான‌ சம்பளம் என்னென்ன?

அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்



பாவம் என்றால் என்ன? நாம் ஒரு பதார்த்ததை வாங்கி சாப்பிடுகிறோம் என்றால்... அந்த பதார்த்தம் வேறு எவனோ வாங்கி சாப்பிட வேண்டியது. அதை அவனுக்கு கிடைக்காமல் நாம் சாப்பிட்டு விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.

நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்று... வேறு யாருக்கோ கிடைக்க வேண்டியது. அதை நாம் சுவாசித்து விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.

இந்த லோகத்தில்.. நீங்கள் பஸ் பிரயாணம் மேற்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்து பயணம் செய்கிறீர்கள். இது ஒருவகை பாவம்தான்.பக்கத்தில் பலபேர் நின்று கொண்டிருக்கும்போது நீங்கள் உட்கார்ந்திருப்பது பாவம்தானே. நின்று கொண்டே வந்தாலும் அதுவும் பாவம்தான். ஏனென்றால் நீங்கள் இன்னொருவர் நிற்க இருந்த இடத்தில்தானே நிற்கிறீர்கள்?

பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், பிராமணன் இடத்தில் போய் யாகம் செய் என்கிறது வேதம்


இந்து மதம் எங்கே போகிறது ?  பகுதி 62 – 63 – 64.

பகுதி – 62. பதினாறும் (ஆயுதங்களும்) பெற்று பெருவாழ்வு வாழ்ந்து வரும் பகவானின்... ஆயுதப்பட்டியலை தரிசித்தோம்.

எல்லாம் வல்லவனான அன்பால் ஆகப்பெற்ற... வேதத்திலேயே சாந்தவடிவம் கொண்டவன் என சொல்லப்பட்ட விஷ்ணுவுக்கு ஏன் இத்தனை ஆயுதங்கள்?

விஷ்ணுவை விடுங்கள்... மற்ற எல்லா தெய்வங்களும் அன்பை போதிக்கின்றன என்றால் ஏன் ஆயுதங்களுடன் சேவை சாதிக்கின்றன.

இங்கேயும் Humanistic Worship தான் காரணமாகிறது. அதாவது... முதன் முதலில் பயம் வந்த பிறகுதான் மனிதன் கடவுளை நம்பினான். நம்மை யாராவது அழித்து விடுவார்களோ என இருதயத்துக்குள் துடித்த அந்த முதல் படபடப்புதான் கடவுளைப் படைத்தது. ஏனென்றால் Primitive Culture அதாவது காட்டுமிராண்டி காலத்துக்கு, நாகரிகத்துக்கு முந்தைய மனிதர்கள் idol worship உருவ வழிபாடு செய்யும் போது வெறும் உருவத்தோடு கடவுளை விட்டுவிடவில்லை.

நம்மை பாதுகாக்க வேண்டும் என்றால்... இவர் வெறும் கையோடு இருந்து என்ன பயன்? அதனால் அவர் கையில் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களைக் கொடுப்போம். அதை அவர் வைத்திருந்தால் நம்மை பாதுகாப்பார் என்று நினைத்தார்கள்.

சக்கராயுதம் வேதத்தில் அக்னியாக சொல்லப்பட்டிருக்கிறது. சங்கு முதலான மற்ற எல்லா ஆயுதங்களுமே மக்கள் பயன் படுத்தியவைதான். கடவுளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தவர்கள் நாகரிகமடையாத Primitive காலத்து மனிதர்களே.

புராணங்களில் இந்த ஆயுதங்கள் அதிக அந்தஸ்து பெற்றன. தீயவர்களை அழிப்பதற்காக பகவான் பற்பல ஆயுதங்களைப் பயன்படுத்துவார். இந்த இடத்தில் இன்னொரு முக்கிய விஷயத்தை உங்களுக்குச் சொல்லவேண்டும்.ஆரம்பகால ஆயுதங்கள் எல்லாமே தங்கத்தினால் செய்யப்பட்டவை. தங்கம் அன்று தங்கு தடையின்றி கிடைத்ததாம்.

வேதத்திலேயே தங்கத்தின் முக்கியத்துவம் நிறைய சொல்லப் பட்டிருக்கிறது. `வேதத்தில் பெண்கள்’ பகுதியிலேயே... பெண்கள் உடல் முழுவதும் தங்க நகைகள் தகதகக்க வந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

அதேபோல... வேதத்தில் தங்கம் இன்னொரு பெரிய விஷயத்துக்கும் பயன்படுத்தப்பட்டது.என்ன விஷயம்? அதற்கு முன்...

வேதத்தில் யாகங்கள் முக்கியமானவை. இந்த யாகங்களை பிராமணர்கள் பண்ணி வைக்கவேண்டும். பிராமணர்கள் Manthra labours. அதாவது மந்திரத் தொழிலாளர்கள்.

வேதத்தில் 6 அங்கங்கள் இருக்கின்றன.

வேத சொற்களின் உச்சரிப்பைப்பற்றி சொல்லும் சிக்ஷா என்பது முதல் அங்கம். மொழியியலைப் பற்றி சொல்வது வ்யாகரண அங்கம். யாப்பு இலக்கணம்பற்றி கூறுகிறது சந்தஸு அங்கம். சொற்பிறப்பு பற்றி சொல்வது நிருப்தம். ஜோதிஷம் பற்றி சொல்லாது ஜோதிஷ அங்கம். வேதத்தில் கூறப்பட்ட யாகங்களை எப்படி எப்படி செய்யவேண்டும் என்று சொல்வது கல்பம் என்னும் அங்கம்.

இப்படியாக யாகங்களை அனல் முன் நின்று மந்த்ரங்களை ஓதி சும்மாவா சொல்லிக் கொடுப்பார்கள். அதற்கு Charge வேண்டாமா? Fees வேண்டாமா? சம்பளம் கொடுக்கவேண்டும் அல்லவா? இதற்குப் பெயர்தான் தட்சணை. அதாவது யாகங்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம்தான் தட்சணை!

அசுவமேத யாகம் பற்றி இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியில் நான் சொல்லியிருந்தேன். அதில் மன்னர்களுக்காக அஸ்வமேத யாகம் நடத்திவிட்டு... அதன் பின்னர் மன்னர் வீட்டுப் பெண்களான ராணிகளையும், ராஜகுமாரிகளையும் தங்களோடு அழைத்துச் சென்று விடுவார்கள். ராஜ பெண்களோடு ராஜ சுகம் அனுபவித்து விட்டு திரும்ப அரண்மனைக்கு அனுப்புவார்கள் யாகம் நடத்துபவர்கள்.
******
இப்படியாக...ஒவ்வொரு யாகத்துக்கும் தட்சணை இன்னது என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்... வித்தியாசமான யாகம் சத்திரயாகம்.அதென்ன சத்திரயாகம்?

பலர் கூடிப் பல நாள்கள், பல வருடங்கள் லோக சேமத்துக்காக செய்யப்படுகிற வேள்வி. ஒவ்வொரு யாகத்துக்கும் அக்னி குண்டம் வளர்த்து அதில் பல பொருள்களை ஆகுதி செய்வார்கள். அதுபோல... இந்த யாகம் பண்ணும் எஜமானர்கள் என்னென்ன பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும்?

வீடு, ஆஸ்ரமம், இருப்பிடம் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும். யாகம் பண்ணுபவருக்கு கொடுக்கும் தட்சணையையும், நன்கொடையையும் யாகத்துக்கே அர்ப்பணிக்கவேண்டும்.

இந்த யாகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட வீடுகள், ஆஸ்ரமங்கள், மாளிகைகள்தான் எல்லோராலும் உபயோகப்படுத்தப்படும். யார் வேண்டுமானாலும் அங்கு வசிக்கலாம். சத்திர யாகத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட வீடுகள், இருப்பிடங்கள், ஆஸ்ரமங்கள்தான் சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த சத்திர யாகத்துக்கு மட்டும்தான் தட்சணை கிடையாது.

சரி... தங்கம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்... எதற்கு திடீரென்று தட்சணைபற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என நீங்கள் நினைக்கலாம்.சம்பந்தம் இருக்கிறது. வேதத்தில் தங்கத்தின் முக்கியத்துவம்பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா?

யாகங்களுக்கும் அந்த முக்கியத்துவம் உண்டு. யாகம் செய்பவர்களுக்குத் தட்சணையாக தங்கம் மட்டும்தான் கொடுக்கவேண்டும். மற்ற உலோகங்களை கொடுக்கக் கூடாது.

விலை மதிப்பற்ற... தங்கம்தான் தட்சணைக்கு தகுந்தது என `சொர்ண’த்தை மட்டுமே தட்சணையாக வரையறுத்திருக்கிறது வேதம்.அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பிரம்மா ருத்ரனை படைத்தபோது....

முதன் முதலில் உலகத்துக்குப் பிரவேசித்த அந்தக் குழந்தை `ங்ஙே...’ என அழுததாம். சாதாரண அழுகையல்ல. பயங்கரமான அழுகை. ரோதனம் என்றால் அழுவது. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் அவனுக்கு ருத்ரன் என பெயர்.

அந்த ருத்ரனின் கண்ணீர் இருக்கிறதே...

பகுதி – 63. ருத்ரன் பிறந்ததிலிருந்தே அழுது கொண்டிருப்பதை பற்றி சொன்னேன். யஜூர் வேதத்தின் முதல் காண்டத்தின் 5-ஆம் பட்சத்தில்தான் ருத்ரனின் கண்ணீர்த் துளிகள் காட்டப்பட்டிருக்கின்றன.

ருத்ரன் அழுதால் என்ன சிரித்தால் என்ன என சும்மா விட்டுவிட்டு போய்விட முடியாது. தட்சணையைப்பற்றி சொன்னீர்கள். பிறகு தங்கத்தைப்பற்றி சொன்னீர்கள்? இப்போது திடீரென ருத்ரனின் கண்ணீர் எதற்கு...? என்று நீங்கள் கேட்கலாம். ருத்ரன் அழுதது ஒரு வகையில் பிராமணர்கள் சிரிக்கத்தான்.

ஏன்...? எப்படி...?    ருத்ரன் அழுது அந்த கண்ணீர் வருகிறது இல்லையா...? அது அப்படியே உறைந்து உலோகமாக மாறிவிட்டது. என்ன உலோகம்...? வெள்ளியாக மாறிவிட்டது. அதாவது ருத்ரனின் கண்ணீர் தான் வெள்ளி.

ருத்ரன் எப்படிப்பட்டவன் என்பதை நாம் முதலிலேயே பார்த்தோம். `கொடூரமானவன், வம்புகள் செய்பவன், வதம் பண்ணுபவன், ஆக அவன் அயோக்கியன்’ என்று சொன்ன வேதம்.

ருத்ரனின் கண்ணீர்தான் வெள்ளி. அதனால் அந்த வெள்ளியை யாகம் செய்து வைக்கும் பிராமணர்களுக்கு தட்சணையாக கொடுக்கக் கூடாது. வெள்ளியை தட்சணையாக வாங்கவும் கூடாது. அதனால் தங்கத்தை மட்டுமே தட்சணையாக வாங்குவது என்றது வேதம்.

இன்றும் யாக, ஹோமங்களுக்கு வெள்ளிப் பொருள்களை பிராமணர்கள் தட்சணையாக வாங்குவதில்லை. பணம் அல்லது தங்கம். இப்போது புரிகிறதா... ருத்ரனின் அழுகை யாகம் செய்யும் பிராமணர்களை சிரிக்க வைத்தது எப்படி என்று.

வெள்ளியை விட தங்கத்தின் மதிப்பு அதிகம் என்று அறிந்தே வேதக்காரர்கள் தங்கத்தை தாங்கிப் பிடித்து வெள்ளியை ஓரங்கட்டினார்கள். வெள்ளி கொடுக்காதே, தங்கம் மட்டுமே கொடு என சும்மா சொன்னால் கேட்பார்களா? அதனால்தான் ருத்ரனை அழ வைத்தார்கள். அப்போது விழிகளில் இருந்து கண்ணீரை வெள்ளியாக விழ வைத்தார்கள்.

தட்சணைக்கு இன்னும் ஒரு அந்தஸ்து உண்டு... பாகவதத்தில் ஒரு மேற்கோள் சொல்லப்படுகிறது.

அதாவது பகவான் யக்ஞயம் என்றால் தட்சணை என்பது பகவானின் பத்தினி போன்றது. இன்னும் சொல்லப் போனால்... யாகம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த யாகம் தான் பகவான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் பகவானின் பத்தினி இருக்கிறாளே அவள்தான் தட்சணை.

இன்னும் விஸ்தாரமாக சொல்லப்போனால்... பத்தினியின்றி பகவான் எப்படியோ, அதுபோல்தான் தட்சணை இல்லாத யாகம். தட்சணையை எப்படியாவது வாங்கியே தீரவேண்டும் என்பதால்... `பகவானின் பத்தினி’ என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

இதைத்தான் ப்ரம்ம சூத்திரக்காரர்.... யாகத்தின் சம்பளம் என்று குறிப்பிட்டார். யாகம் முடிந்துதான் தட்சணை கொடுக்கவேண்டும். ஆனால், நான் தட்சணை பற்றிய தகவல்களை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன்.

யாகங்களின் முக்கியத்துவம் என்ன? பிராமணர்கள் ஆயுள் முழுதும் செய்து கொண்டே இருக்கவேண்டிய தொழில்தான் யாகம். யாக சாலையில்தான் பிராமணர்கள் நடந்து செல்லவேண்டும்.

நாட்டின் ராஜாவிலிருந்து... அன்று கடையனாக மதிக்கப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் வரை அனைவருக்காகவும் பிராமணன் தட்சணை வாங்கிக் கொண்டு யாகம் செய்வான்.

யாகத்தின்போது ராஜாவே, ப்ராம்மணனைப் பார்த்து பணிந்து அமர்ந்திருப்பான். ஏன் என்றால்...

``தஸ்மாது சோமராஜா னாஹா
ப்ராம்மணாஹா...’’ இப்படியென்றால் என்ன?

``உங்களுக்கெல்லாம் என்று ஒரு ராஜா இருப்பான். அவன் உங்களை கட்டியாண்டு வருவான். ஆனால்... எங்களுக்கு ராஜா இவன் அல்ல. இந்த க்ஷத்ரிய ராஜாவுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் ப்ராமணர்கள். இந்த ராஜாவை விட மேலானவர்கள்.

அதனால் உங்கள் ராஜா எங்களுக்கு கீழே தான். எங்கள் ராஜா, சோமராஜா தான்’’ என்றுதான் அந்த சின்ன மந்த்ர வாக்கியத்துக்கு அர்த்தம்.

இப்படியாக ராஜாவே கீழ்ப்படிந்தவன் என்றால்... மற்றவர்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள்.

யாகம் நடத்தும்போது என்ன எதிர்பார்க்கிறார்கள்? உலக நன்மைக்காக நடத்துவார்கள். புத்ர பாக்யம் வேண்டுமென்று சில யாகங்கள் உண்டு.

யாகங்களின் பெரும்பாலான முக்கியத்துவம்... நமது பாவங்களை தொலைக்கத்தான். (பாவங்களை பற்றி உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டியுள்ளது. அடுத்து சொல்கிறேன்).

அக்னி ஹோத்ரம் என்னும் யாகம் தனக்காக பண்ணிக் கொள்வது. இதற்கு தட்சணை தனக்குத்தானே கொடுத்துக் கொள்வதுதான்.

தர்ஷம்பூர்ணமாசம் எனப்படும் ஒரு யாகம் அமாவாசை, பவுர்ணமியை அடிப்படையாக வைத்து செய்யவேண்டிய ஒரு யாகம்.

தர்ஷம் என்பது அமாவாசை. பூர்ணம் என்றால் பவுர்ணமி. இந்த யாகத்து தட்சணை என்ன தெரியுமா?

அன்வாஹார்யம். அதாவது சாப்பாடு தான் தட்சணை.
இதுபோல் இன்னும் பல யாகங்கள். இன்னும் பல தட்சணைகள்.

யாகங்களை ஒரே ஒரு ஆள் மட்டும் நடத்த முடியாது. குழுக்குழுவாய் தான் நடத்துவார்கள். அதனால் தட்சணையும் ‘க்ஷரடம’ ஆகத்தான் இருக்கும்.

100 பசுக்கள், 1000 பசுக்கள், 100 கன்றுக்குட்டிகள், 1000 கன்றுக்குட்டிகள் என தட்சணைகள் தங்கத்தைத் தவிரவும் நிறைய உண்டு.யாகம் முடிந்ததா...? அவருக்கு 1000 நிஷ்கத்தை கொடப்பா. நிஷ்கம் என்றால்...

பகுதி – 64.   நிஷ்கம் என்றால்?
நாணயம் தங்க நாணயம் Vedic மற்றும் Post Vedic கால கட்டங்களில் புழக்கத்திலிருந்த தங்க நாணயத்துக்கு பெயர் தான் நிஷ்கம்

யாகம் முடிந்த உடன் தங்கத்தாலான பொருள்களை மட்டுமல்ல.. இதேபோன்ற நிஷ்கங்களையும் வாங்குவார்கள்.

ஸ்வாமிக்கு 1000 நிஷ்கம் கொடுங்கோ என குரல் வரும் அரசர்கள் நடத்தும் யாகம் என்றால் நிறைய நிஷ்கம்கள் கிடைக்கும். மற்றவர்களின் யாகம் என்றால்... நிஷ்கத்தை கூட்டிக் குறைத்துக் கொள்வார்கள்.

சரி... யாகங்கள் பாவத்தை தொலைக்க நடைபெறுகின்றன என்று சொல்லி இதைப்பற்றி விரிவாகவே பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன்.

பாவம் என்றால் என்ன? பகவானை போல இதுவும் நம்மை சூழ்ந்திருக்கிறது. அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே பாவம்தான்.


நாம் ஒரு பதார்த்ததை வாங்கி சாப்பிடுகிறோம் என்றால்... அந்த பதார்த்தம் வேறு எவனோ வாங்கி சாப்பிட வேண்டியது. அதை அவனுக்கு கிடைக்காமல் நாம் சாப்பிட்டு விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.


நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கிற காற்று... வேறு யாருக்கோ கிடைக்க வேண்டியது. அதை நாம் சுவாசித்து விட்டோம். அதனால் அதுவும் பாவம்தான்.


இந்த லோகத்தில்.. நீங்கள் பஸ் பிரயாணம் மேற்கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்து பயணம் செய்கிறீர்கள்.


இது ஒருவகை பாவம்தான். பக்கத்தில் பலபேர் நின்று கொண்டிருக்கும்போது நீங்கள் உட்கார்ந்திருப்பது பாவம்தானே. நின்று கொண்டே வந்தாலும் அதுவும் பாவம்தான். ஏனென்றால் நீங்கள் இன்னொருவர் நிற்க இருந்த இடத்தில்தானே நிற்கிறீர்கள்?


இப்படி பாவம் பலவகைப்படும். நம்மை சுற்றி பாவசக்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த பாவத்தை போக்க நாம் யாகம் செய்யவேண்டும்.

யாகத்தை பிராமணர்கள் செய்யும்போது பாவம் அக்னியாகும் . அதில் யாகம் செய்கையில் பாவங்கள் எல்லாம் யாகம் செய்கின்ற பிராமணன் இடத்திலே வரும். கூடவே தட்சணை வாங்குகிறார்களல்லவா, அதுவும் பாவம்தான். இப்படிப்பட்ட பாவங்கள் எல்லாம் வேத மந்தரங்களை உச்சரிக்கும்போது அழிந்துவிடும்.

அதனால்தான்... பாவத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமானால், பிராமணன் இடத்தில் போய் யாகம் செய் என்கிறது வேதம்.

கிறிஸ்தவமும் கிட்டத்தட்ட இப்படித்தான். கிறிஸ்தவத்துக்கு பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே வேதம் பாவ மன்னிப்பை பாவ நிவர்த்தியை வழங்கியிருக்கிறது. இந்த விஷயம் தெரியாமல் இப்போதைய பெரியவர் ஜெயேந்திரர்....

கிறிஸ்தவம் என்ன கிறிஸ்தவம்?... பாவத்தை செய்துவிட்டு என்ன பாவத்தை வேண்டுமானாலும் செய்துவிட்டு, அதை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொல்கிறது. அப்படியென்றால் பாவம் செய்யலாம் என சொல்கிறதா? என்று கேள்வி கேட்டவர்.

பிராமணர்கள் சந்தியா வந்தனம் என்று ஒரு சடங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று முன்பு பிராமணர்களின் தொழில்பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். ஞாபகம் இருக்கிறதா? அதற்கு யாகங்களுக்கும் பெரிய தொடர்பு உண்டு. சந்தியா வந்தனம் காலை மதியம் மாலை 3 வேளையும் செய்யவேண்டும் என்பது பிராமணர்களின் அனுஷ்டானம்.

காலையில் செய்கிறார்கள். பிறகு மாலையில் தான் செய்கிறார்கள். அப்போது மதியம்? அதை காலையிலேயே சேர்த்துச் செய்துவிடுகிறார்கள். ஏனென்றால் மதியம் அவர்கள் ஆபிஸ் போய்விடுகிறார்கள். அல்லது வேலை நிமித்தம் இருந்து விடுகிறார்கள். இதில் காலையில் `அஸ்னம்’ எனப்படும் மந்த்ரத்தை கவனியுங்கள்.

`ஸுர்யச்ச மாமன்யுச்ச மன்யு
பதயச்ச மன்யுக்ரு தேப்ய:
பாபேப்யோ ரக்ஷந்தாம்
யத்ராத்ரியா பாபம் அகார்ஷம்
மனஸா வாசா
ஹஸ்தாப்யாம் பதப்யாம்
உதரேண சிச்ஞாராத்திரி
ஸ்த தவலும்பது யத்கிஞ்ச துரிதம்மயி
இதமஹம் மாம் அம்ருதயோனௌ
ஸுர்யே ஜ்யோதிஷி ஜுஹோபி ஸ்வாஹா...’’
இதிலே காலையிலே விரைவில் எழுந்து சூரிய உதயத்துக்கு முன் சூரியனை வேண்டும் காட்சி.

அப்படி என்ன வேண்டுகிறார்கள்...
சூர்ய தேவனே நான் உலகத்தின் சட்டதிட்ட சம்ப்ரதாயங்களை மீறி செய்த பாவங்களை நீதான் ரட்சிக்க வேண்டும்.

ராத்திரி பொழுது போயிற்று. அந்த போதிலே நான் நிறைய பாவங்கள் செய்திருக்கலாம். மனஸா மனதால் பிறருக்கு தீங்கு நினைத்திருந்தால் அறுவும் பாவம். வாசா வாக்குகளால் பிறரை புண்படுத்தி பாவம் செய்திருக்கேன். ஹஸ்தாப்யாம் கைகளால் அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுத்து பாவம் செய்திருக்கலாம். பத்ப்யாம் கால்களால் உயிர்களை மிதித்து வயது முதிர்ந்தவர்களை தீண்டி பாவம் இழைத்திருக்கலாம்.

உதரேண ராத்திரி வேறு யாராவது சாப்பிட வேண்டிய சாப்பாட்டை நான் அபகரித்து வயிற்றால் பாவம் செய்திருக்கலாம்.

சிச்ஞா என்னுடைய ஆணுறுப்பால் ஸ்திரிகளுக்கு ஏதாவது இடைஞ்சல்கள் கொடுத்து, ஒழுக்கத்தை மீறி தேக ஸம்பந்தம் வைத்துக் கொண்டு அதனால் பாவம் செய்திருக்கலாம். கடந்துபோன ராத்திரியில் நான் இத்தனை பாவங்களை செய்திருக்கலாம். அப்படி செய்த பாவங்களை நீ ரட்சித்து எனக்கு பாவ நிவர்த்தியை தரவேண்டும்.

இதுதான்... காலையில் எழுந்ததும் சூர்ய தேவனிடத்தில் பிராமணன் வைக்கும் முதல் விண்ணப்பம்.


No comments: