Saturday, July 25, 2015

கவியின் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை / இறுதி பகுதி

மலாயா தமிழர்களின் முக்கிய தலைவரான உ.இராமசாமி நாடார் தமது சொந்த வீட்டை தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்கு கொடுத்திருக்கிறார். அந்த படத்தையெல்லாம் இதில் போட்டிருக்கிறார். மீண்டும் அ.சி.சுப்பய்யா 74 வது பிறந்த நாள் வருகிறது. கேட்கிறார். கட்டிடம் பழுதாகி இருக்கிறது. உடனே கூறுகிறார்: “கவலைப் படாதீர்கள். ரிப்பேர் செய்ய நான் பணம் தருகிறேன். முழுச்செலவையும் தான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்கிறார். உடனே அதை முழுமையாகச் சரி செய்கிறார்கள். 
பெரியாரை கஞ்சன் கஞ்சன் என்று சொல்லுவார்கள். அப்படி சொல்லித்தான் நமக்கு பழக்கம். கோவையில் மருத்துவக் கல்லூரி வருகிறது. தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வந்தவுடன் கல்லூரியின் மருத்துவமனையாக மாற்றப்பட்டுவிடுகிறது. மாவட்ட மருத்துவமனையை எங்கு கொண்டு செல்வது என்று பிரச்சனை வருகிறது.  திருப்பூருக்காஈரோட்டுக்காஇரண்டு ஊரும் ஒரே மாவட்டம். யார் ஒரு இலட்சம் தருகிறார்களோ, அப்போது 1964இல் அது பெரிய தொகை. அந்த ஊருக்கு கொண்டு போவோம் என்று சொல்லுகிறார்கள். அப்போது எல்லாரும் பெரிய நோட்டை எடுத்துகிட்டு பெரியாரிடம் பெரிய பணக்காரங்களெல்லாம் வர்றாங்க.  ‘அய்யா நாம 100 பேரு ஆளுக்கு 1000 ருபாய் போட்டுஒரு இலட்சம் ருபாய்  கொடுத்திடலாம்’ என்று சொல்லுகிறார்கள். பெரியார் சொல்கிறார், ‘நீங்க ஒருத்தரே ஒரு இலட்சம் கொடுக்கலாமே’ என்று முன்னாலே உட்கார்ந்து இருக்கிற முதலாளியைப் பார்த்து சொல்கிறார்.   ‘முடியல்லன்னா சொல்லுங்க. நான் கொடுத்துடுறேன்’ என்று சொல்கிறார். அவர் அமைதியாக இருக்கிறார். ‘நான் ஒரு இலட்சம் கொடுக்கிறேன். கொண்டு போய் கட்டிடுங்க என்கிறார். அப்படித்தான் ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமை மருத்துவமனை வந்தது. பெரியார் பெயர் போட்டிருக்காங்க. சும்மா பெயர் போடல. அவர் தான் பணம் கொடுத்தார்.
    ஈ.வெ.ரா கல்லூரிக்கு ஐந்தரை இலட்சம் கொடுத்தால் கல்லூரி வரும் என்றார்கள். அப்போது திருச்சியில் அரசுக் கல்லூரி இல்லை. நேசனல் கல்லூரிசெட்டியார் கட்டினதுதான். ஆனால் அது பார்ப்பனர் கல்லூரியாக மாறி விட்டது. பணம் வேண்டுமானால் செட்டியார் போட்டிருக்கலாம். பாப்பான் பிடிச்சுகிட்டான் அதை. ஐமால் முகமது கல்லூரி இஸ்லாமியர்களுக்கென்று ஆகிவிட்டது. செயிண்ட் ஜோசப் கல்லூரி கிருத்துவர்களுக்கு என்று ஆகிவிட்டது. அரசு கல்லூரி என்று ஒன்று இல்லை.
   எங்க ஊர்ல ஒருத்தர் இருந்தாரு. ‘மாமனிதர் என்று பட்டமெல்லாம் அவருக்கு கொடுத்தார்கள். அவர்தான் பொள்ளாச்சி மகாலிங்கம். அவர் அரசு கல்லூரி வராம பார்த்துக்கிட்டார். அந்த ஊர்ல அவர் கல்லூரி மட்டும்தான் இருக்கும். வேற எந்தக் கல்லூரியையும் விடமாட்டார். அதுபோல் இருந்த திருச்சியில் ‘ஐந்தரை இலட்சம் கொடுத்தால் கல்லூரி கட்டுகிறேன்’ என்றவுடனே ஐந்தரை இலட்சம் ரூபாயை கொடுத்தார் பெரியார். அதுதான் ‘ஈ.வெ.ரா. கல்லூரி’. ‘எனக்கெல்லாம் காலேஜ் நடத்துற வேலை வேண்டாம். நீ நடத்திக்க’ என்று அரசுக்கு ஐந்தரை இலட்சம் கொடுத்தார். அவரைத்தான் நம்பாளு கஞ்சன் என்பான். அதனால்தான் பெரியார் தொண்டனா வாழ்ந்து சிக்கனமாக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்தாலும் தமிழர் நலனுக்காக ஒரு அலுவலகம்கட்டடம்நூலகம் என்று வருகின்ற போது கவலைப்படாமல் பணத்தை கொடுப்பவர்களாக நமது முன்னோடிகள் இருந்திருக்கிறார்கள்.
    நமக்கு வழிகாட்டியாகப் பார்க்க வேண்டிய பல அரிய செய்திகளை தொகுத்து கொடுத்திருக்க, நம்முடைய தோழர் கவி அவர்கள்ஏராளமான நூல்களை கொடுத்திருக்கிறார்பெரியாரின் மொழிக் கொள்கை பற்றி அருமையான தகவல் அடங்கிய ஒரு நூலை கொடுத்திருக்கிறார். சிறுநூல்தான். ஆனால் பெரியாரின் மொழிக் கொள்கை மீது திறனாய்வு செய்கிறவர்களுக்கு நல்ல விளக்கம் தரும் நூல் என்றார் கொளத்தூர் மணி.

    விழாவில் மலாயாப் பெரியார் அ.சி.சுப்பய்யா, தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆகியோரின் வழித் தோன்றல்களுக்கு மலேசிய சிலாங்கூர் மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிறப்பு செய்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு அரிமா.அருண் சிறப்பு செய்தார். நூலாசிரியர் கவி அவர்களுக்கு ஜவகர் சிறப்பு செய்தார். நிகழ்ச்சியினை பேராசிரியர் முனைவர் தெ.வெற்றிச் செல்வன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட தி.வி.க. செயலாளர் காளிதாசுநாகை மாவட்டச் செயலாளர் மகேசு, தலைமைக் குழு உறுப்பினர் இளையராசா ஆகியோர் ஒத்துழைப்பு நல்கினர். இரவு 9.30 மணிக்கு நிகழ்வு நிறைவடைந்தது.

No comments: