Saturday, December 14, 2019

காவிரியை மீட்போம்




காவிரி சிக்கல்

கர்நாடகத்திலுள்ள குடகு மாவட்டத்தில் பிரம்மகிரிமலையில் தலைக்காவிரி என்னுமிடத்தில் உற்பத்தியாகும் காவிரியின் மொத்த நீளம் 800 கி.மீகர்நாடகத்தில் 320 கி.மீட்டரும் தமிழகத்தில்  416 கி.மீட்டரும் இருமாநில எல்லைகளில் 64 கி.மீட்டரும் பாய்ந்து ஓடுகின்றது.
காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்துக் கிடையே சிக்கல் ஏற்பட்டது. 1892 ஆம் ஆண்டு ஓர் உடன்பாடும் 1924 இல் ஓர் உடன்பாடும் சென்னை மற்றும் மைசூர் மாகாணங்களிடையே ஏற்பட்டது. 1924 ஆம் ஆண்டு உடன்பாட்டில் சில விதிகளை 50 ஆண்டு களுக்குப் பிறகு மறுஆய்வு செய்யலாம் என்று ஆலோசனைக் கூறப்பட்டி ருந்ததுஇதையே காரணங்காட்டி இந்த உடன்பாடு 1974 இல் காலாவதி யாகிவிட்டது என்று கர்நாடக அரசு வாதிடுவதோடு காவிரியின் துணை நதிகளின் குறுக்கே பல அணைகளைக் கட்டி தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுத்துவிட்டது. 1968 இலிருந்து 1990 வரை 27 முறை தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்தும் கர்நாடகாவின் பிடிவாதத்தால் எந்த உடன்பாடும் பயனளிக்காமல் போய்விட்டதுஇதனால் தஞ்சை விவசாயிகள் தொடுத்த வழக்கில் நடுவர் மன்றம் அமைக்க  உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

நடுவர் மன்றம்

1990 ஆம் ஆண்டு சூன் 2 ஆம் நாள் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991 சூன் 25 இல் தனது இடைக்காலத் தீர்ப்பை அளித்ததுஅதில் கர் நாடகம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டுமெனவும் 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் நீர்ப் பாசனப் பரப்பை விரிவாக்கக் கூடாது எனவும் ஆணையிட்டது.  1971 இல் கர்நாடகத்தில் 4.42 இலட்சம் ஏக்கராக இருந்த காவிரி நீர்ப்பாசனப் பரப்பு 1991 இல் 11.2 இலட்சம் ஏக்கராக விரிவடைந்துள்ளதை இங்கு கவனிக்க வேண்டும்.

நடுவர் மன்ற இடைக்கால ஆணையைச் செயல்படுத்த வழக்கு

நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த 1956 நதிநீர்த் தாவாச்சட்டம் பிரிவு 6 `இன் படி விதிமுறைகளை உருவாக்க தமிழக அரசு 1992 இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததுகாவிரி நதி நீர் ஆணையம் அமைப்பது இதிலுள்ள முக்கியமான கோரிக்கையாகும்வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் இடைக்கால ஆணையை நடைமுறைப் படுத்த ஒரு திட்டம்  வரையப்பட்டுள்ளதாக மைய அரசு (குஜ்ரால்/பிரதமர்) 9.4.97 இல் உச்ச நீதிமன்றத்தில் கூறியதுஇதை தொடர்ந்து அத்திட்டத்தை கர்நாடகம்தமிழகம்கேரளம் மற்றும் புதுவை அரசுகளுக்கு அனுப்பி அவர்களின் கருத்துக்களைக் கேட்டதுஇப்படி செய்ய வேண்டிய அவசியமே இல்லைஆனால் இப்படி மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டதால் இத் திட்டத்தை கர்நாடக அரசு ஏற்க மறுத்துவிட்டதுகுஜ்ரால் அரசு திட்டத்தின்படி மாநிலங்களுக்கிடையே காவிரி நதி நீர் சிக்கல் ஏற்படும் போது காவிரி துணை நதிகளின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணை களின் கட்டுப் பாட்டை தனது அதிகாரத்தின் கீழ் எடுத்துக் கொள்ளும் உரிமை காவிரி ஆணையத் துக்கு வழங்கப்பட்டிருந்ததுஎனவே இத்திட்டத்தை கர்நாடகம் ஏற்க மறுத்ததுஇந்திலையில் குஜ்ரால் அரசு கவிழ்ந்தது.

வாஜ்பேய் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம்

1998 இல் பொறுப்பேற்ற வாஜ்பாய் அரசுஅணைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் ஆணையத்தின் அதிகாரத்தையும் இன்னும் பிற முக்கியமான தமிழகத்துக்குச் சாதகமானகர்நாடகத்திற்கு எதிரான விதிகளை நீக்கிபுதிய திருத்தப் பட்ட வரைவு திட்டத்தை தயார் செய்து தமிழகத்தின் ஒப்புதலையும் பெற்று புதிய உடன்பாட்டையும் ஏற்படுத்தியதுஇதனால் உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கு செயல் இழந்தது.

காவிரி நதிநீர் ஆணையத்தின் முதல் செயல்பாடு

புதிய திட்டத்தின் படி நதிநீர் ஆணையத்துக்கு தலைவர் பிரதமர். 1999 இல் சூன் முதல் செப்டம்பர் வரை  தமிழகத்துக்குத் தர வேண்டிய 137 டிஎம்.சி நீரில் (செப்டம்பர் 18 வரை 126 டி.எம்.சி) 95 டி.எம்.சி நீரைத்தான் கர்நாடகம் வழங்கியுள்ள நிலையில் மீதமுள்ள 30 டி.எம்.சி நீரை வழங்க அறிவுரை வழங்கும்படி தமிழகம் பிரதமரைக் கேட்டுக்கொண்டதுஅப்போது கர்நாடகத்தில் 130 டி.எம்.சி நீர் இருந்தது.
இந்த விபரத்தை அப்போதைய தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்சூலையில் 42.36 டி.எம்.சிக்கு 23.97 டி.எம்.சி நீரும்ஆகஸ்டில் வர வேண்டிய 54.72 டி.எம்.சி நீரில் முழுமையும் செப்டம்பர் 18 வரை வரவேண்டிய 17.43 டி.எம்.சி நீரில் 6.10 டி.எம்.சி நீரும் வந்துள்ளதுசூலையில் வரவேண்டிய நிலுவை 18.79 டி.எம்.சி.யும் செப்டம்பர் மாதத்தில் 18ஆம் நாள் வரையுள்ள நீரில் நிலுவை 11.37 டி.எம்.சி.யும் ஆக கூடுதல் 30 டி.எம்.சி நீரை கர்நாடகம் தர வேண்டி யுள்ளது என்று கூறினார்
(தினமணி 21.9.1997). ஆனால் மைய அரசுஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகா 2 டி.எம்.சி அதிகமாக வழங்கியுள்ளதாக கூறியதுஅதாவது தமிழகத்துக்கு வழங்கப்படும் நீரின் அளவை கர்நாடக எல்லையிலுள்ள பிலிகுண்டுலு பகுதியிலிருந்து அளக்க வேண்டும் என்று கர்நாடகம் கூறி வருகிறது. (இதனைக் கணக்கிடும் இடமாக தர்மபுரி மாவட்டத்திலுள்ள மேகேபட்டி என்ற இடம் தான் இருந்தது). அதன்படியே மைய அரசும் கூறுவது கவனிக்கத்தக்கதுஇதனைத் தொடர்ந்து காவிரிக் கண்காணிப்புக் குழு தமிழக கர்நாடக மாநிலங் களுக்கு அணைகளில் உள்ள நீர் இருப்பை ஆராய பிரதமரால் அனுப்பப் பட்டதுகண்காணிப்புக்குழு வழங்கும் பரிந்துரையை ஏற்போம் என கர்நாடக முதல்வர் பட்டேல் கூறினார்இது கர்நாடக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என வாட்டாள் நாகராஜ் கூறினார்தமிழகத்துக்கு தண்ணீர் விட்டால் பந்த நடத்துவோம் என எச்சரித்தார். (தினமணி 24.9.1999)

காவிரி நதிநீர் ஆணையத்தின் முடிவை கர்நாடகம் அலட்சியம் செய்தல்

கர்நாடக தமிழக அணைகளின் நீர் இருப்பை ஆராய்ந்த காவிரிக் கண்காணிப்புக் குழு 9 டி.எம்.சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. (கர்நாடகம் தர வேண்டியது 30 டி.எம்.சி என்பதையும் அங்குள்ள அணைகளில் 130 டி.எம்.சி தண்ணீர் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ககாவிரிக் கண் காணிப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது என கர்நாடக முதல்வர் பட்டேல் அறிவித்தார். (காவிரிக் கண்காணிப்புக்குழு அணைகளில் உள்ள நீர் இருப்பை ஆராய கர்நாடகம் வந்தபோது குழுவின் பரிந்துரையை ஏற்போம் என்று பட்டேல் அறிவித்ததையும் நினைவில் கொள்க).

பெங்களூர் மான்டியா பகுதியில் விவசாயிகள்மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது எனக்கூறி ஊர்வலம் சென்றனர்பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுஇந்நிலையே 2000/2001 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்ததுஇதுவரை காவிரி நதிநீர் ஆணையம் 3 முறையும் கண் காணிப்புக்குழு 12 முறையும் கூடியுள்ளதுஇதனால் ஒரு பயனும் தமிழகத்துக்குக் கிடைக்கவில்லைஇப்போது தமிழக முதல்வர் காவிரி ஆணையத்தைப் புறக்கணிப்பதாக வும் நடுவர் மன்ற இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்த புதிய வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடரவும் முடிவு செய்துள்ளார்இது வரவேற்கத் தகுந்த முடிவாகும்தமிழக முதல்வரின் இத்தகைய நடவடிக்கைக்குப் பின்னால் தான் பிரதமர் 3 டி.எம்.சி தண்ணீர் வழங்க கர்நாடகத்துக்கு அறிவுரை கூறியுள்ளார்இதையும் ஏற்க முடியாது என கர்நாடக முதல்வர் கிரூணா கூறியுள்ளார்மேலும், `தமிழகம் எந்த நீதிமன்றத்துக்கு வேண்டுமானாலும் செல்லட்டும்’ என்று அறைகூவல் விடுத்துள்ளார்இவ்வாறு கர்நாடகம் ஆணையத்தின் தலைவர்பிரதமரின் ஆணையை உதாசீனப் படுத்தி வருகின்றதுகர்நாடகத்தின் இத்தகையப் போக்கை கட்டுப்படுத்த மைய அரசு ஒன்றும் செய்வதில்லை.

கர்நாடகத்துக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டும்

அமெரிக்காவில் அட்லாண்டா மாகாணத்தில் ஒரு பள்ளியில் கறுப்பர்களைச் சேர்க்க அம் மாகாண ஆளுநர் மறுத்தார்அப்போது  அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடி இராணுவத்தை அனுப்பி கறுப்பர்களைப் பள்ளியில் சேர்த்தார்அதேபோல் கர்நாடகத்திற்கு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடவேண்டுமென முன்னாள் தமிழக அமைச்சர் பண்ருட்டி இராமச் சந்திரன் கூறினார்மேலும் அவர், ‘சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் சீனிவாச ஐயர் 1969/70 களில் ஒரு கருத்தைச் சொன்னார்தஞ்சை/திருச்சி விவசாயிகள் கடப்பாரைமண்வெட்டி வெடிமருந்து கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு போய் கர்நாடக அணையை உடைக்க வேண்டும்’ என்ற ஒரு வரலாற்றுச் செய்தியையும் மேற்கோள் காட்டினார்.

அணையைத் திறப்போம்

`மொழிவழி மாநிலம்’ அமையும் முன் கவர்னர் bஜனரலாக இருந்த இராஜ கோபாலாச்சாரிகுறுவைக்கு கண்ணம்பாடி (கிரூணராஜ சாகர் அணைஅணையிலிருந்து நீர் விட மறுத்த தன் சீடனான திவான் அனுமந்தையாவையே ‘நீர் விடுகிறீராஅல்லது கவர்னர் bஜனரல் என்ற முறையில் படையை அனுப்பி அணையை நான் திறக்கவா?’ என்றார்மறுகணமே கண்ணம்பாடியிலிருந்து கிழக்கு நோக்கி நீர் பாய்ந்தது என்று காவிரிக் காப்புக் குழு தலைவர் %ர் பூ.அரகுப்புசாமி அவர்கள் 15.7.98 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்இத்தகைய ஒரு நிலைக்கு நாம் , தமிழர்களை நம் மக்களைத் தயார் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
(ஏடு/18)


No comments: