Saturday, January 18, 2025

இரண்டாவது பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இரண்டாவது பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா? அங்கு நாம் செல்ல எவ்வளவு வருடங்கள் ஆகும். நாம் அங்கு செல்ல சாத்தியமா என்பது பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

கெப்ளர் என்பது ஒரு செயற்கை விண்வெளி தொலைநோக்கி. இந்த தொலைநோக்கியின் வேலை பல ஒளிஆண்டுகள் தொலைவில் இருக்கும் வேற்று கிரகங்களை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்வதுதான். அப்படி இந்த தொலைநோக்கி கண்டுபிடித்தது ஒரு வேற்று கிரகம். ஆம் இதன் பெயர்தான் Keplar - 452 b. 

சரி Keplar - 452 b இடம் செல்லலாமா? அப்படி அங்கு செல்ல ஒளியின் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஒரு விண்கலம் வேண்டும். அப்படி ஒளியின் வேகத்தில் சென்றாலும் இந்த நட்சத்திரத்திடம் செல்ல 1402 வருடங்கள் ஆகும்.1402 வருடங்கள் சென்ற பின்பு நம் சூரியனை போல அச்சு அசலாக ஒரு சூரியன் தெரியும். இதன் நிறை மற்றும் ஒளிரும் தன்மை ஏறக்குறைய நம் சூரியனை போன்று இருக்கும். ஆனால் நம் சூரியனை விட வயதில் மூத்தது. நம் சூரியன் உருவாகி ஏறக்குறைய 460 கோடி வருடங்கள் ஆகியுள்ளது. Keplar - 452  நட்சத்திரத்தின் வயது ஏறத்தாழ 600 கோடி. நம் சூரியனை விட  140 கோடி வருடம் முன்பே Keplar - 452  உருவாகிவிட்டது. இந்த நட்சத்திரமும் நம் சூரியனை போன்ற முதன்மை நட்சத்திரம்தான். 


நம் சூரியனின் வெப்பநிலை எந்த அளவிற்கு உள்ளதோ கிட்டத்தட்ட இந்த Keplar - 452 நட்சத்திரம் அதே அளவு வெப்பநிலையை கொண்டுள்ளது. ஆனால் ஒளிரும் தன்மை நம் சூரியனை விட 20% அதிகம். அதேபோல 3.7% பெரிய நட்சத்திரம். இதனாலதான் Keplar - 452  நட்சத்திரம் நம் சூரியனின் இரட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒரு நட்சத்திரத்தின் வயது அதிகரித்து கொண்டே போனால் அதன் ஒளிரும் தன்மையில் மாற்றம் ஏற்படும். அதாவது வெளிச்சம் மற்றும் வெப்பநிலை இரண்டுமே குறையும். நம் சூரியனின் தற்போதைய வெப்பநிலை 5778 கெல்வின். Keplar - 452  நட்சத்திரத்தின் வெப்பநிலை 5757 கெல்வின். இந்த நட்சத்திரத்தை ஒரு கோள் சுற்றுகிறது. அந்த கோள்தான் Keplar - 452 b அதுவும் நம் பூமியை போன்றே பாறை கோள். இந்த Keplar - 452 b வாழத்தகுந்த தூரத்தில்தான் Keplar - 452 நட்சத்திரத்தை சுற்றுகிறது. அங்கு ஒரு வருடம் என்பது 385 நாட்கள் ஆகும். கிட்டத்தட்ட நம் பூமியின் ஒரு வருடத்திற்கான நாட்களே ஆகும். 


Keplar - 452 b யின் வெப்பநிலை தோராயமாக  265  கெல்வின். பூமியின் வெப்பநிலை 284 – 285 கெல்வின். வெப்பநிலையிலும் இவை ஒரே இணையாக உள்ளது என்பதுதான் ஆச்சர்யம். சூரியனிலிருந்து நம் பூமி பெரும் வெப்பநிலையை விட Keplar - 452 b அதன் சூரியனிலிருந்து கூடுதலாக  10%  வெப்பநிலையை பெறுகிறது. இது ஒன்றும் பெரிய வித்தியாசமே இல்லை. அதனால் இந்த கிரகம் super earth என்பதில் சந்தேகமேயில்லை. நிறை அடிப்படையில் Keplar - 452 b கிரகம் முறை நம் பூமியைவிட 5 மடங்கு நிறை அதிகம் கொண்டுள்ளது. இந்த கோள் தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது நம் பூமியை போல. நம் சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவை 1 AU என்பார்கள். இங்கு 1 AU என்பது 1 விண்வெளி அலகு(Astronomical Unit) ஆகும். Keplar - 452 b தன் சூரியனிலிருந்து 1.04 AU தொலைவில் உள்ளது. இதுவும் ஏறத்தாழ நம் பூமியை ஒத்துள்ளது. இதனால்தான் நம் பூமியையும் Keplar - 452 b யையும் இரட்டை என்கிறோம். இப்பொழுது நாம் அந்த கிரகத்திற்கு செல்ல நினைத்து New Horizon Space Craft வேகத்தில் அதாவது மணிக்கு 59,000 km வேகத்தில் சென்றால் நாம் Keplar 452 b இடம் செல்ல 2 கோடியே 60 லட்சம்(2,60,000,00) வருடங்கள் ஆகும். என்ன நண்பர்களே வியப்பாக உள்ளது அல்லவா? ஆம்  இது சாத்தியமே இல்லை. எவ்வளவுதான் பூமியை போன்று அந்த கிரகம் ஒத்துஇருந்தாலும் நாம் வாழ முடிந்தாலும் நாம் அங்கு செல்வதற்கான சாத்தியங்களே இல்லை என்பதுதான் உண்மை. 


என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? இதை பற்றிய உங்கள் கருத்தை எங்கள் பக்கத்தில் பதிவிடுங்கள்.


இப்படிக்கு, 

உங்கள் நடராஜ்

18.1.2021 வியப்பூட்டும் அறிவியல் முகநூல் பதிவு...


No comments: